Theera Mayakkam Tharayo 23

0
712

ரகுவின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து புவி ஸ்ருதியுடன் பாராமுகமாகவே இருந்தான்,ஸ்ருதிக்கும் இது தெரிந்து தான் இருந்தது ஸ்ருதியே அவனை தேடி சென்றாலும் அவன் உண்மையை கூற முடியாமல் அவளை நெருங்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதற்கிணங்க.

புவிக்கோ உண்மையை கூற வேண்டும் என்றஎண்ணம் இருந்தாலும்,ரகுவை அவள் வெறுப்பதற்கான காரணம் அவனது அவசர புத்தியால் நடந்த விளைவின் காரணம் தான்..

புவியின் மனமோ ரிஷியின் நிலைமையும் ஸ்ருதியின் நிலைமையும் ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தது இந்த உண்மையை தெரியும் போது ஸ்ருதி எவ்வாறு எதிர்கொள்வாள் என்ற எண்ணமும் அவனை வெகுவாக வாட்டிக்கொண்டிருந்தது..

அதையும் இதையும் போட்டு மனதில் குழப்பிக்கொண்டிருந்தவன் பின்பு ஒருவாறாக தெளிந்து ஸ்ருதியிடம் விரைவில் உண்மையை தெரிவிக்க வேண்டும் என்ற முடிவெடுத்த பின்பே மனம் சற்று தெளிவானதை போல் உணர்ந்தான்..

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று விதி அவனை பார்த்து சிரித்துக்கொண்டது..

இதற்கிடையில் ரகுவின் தந்தையின் நிலை ஓரளவு சீரடைந்திருக்க மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தனர்…

ரிஷி மழலையர் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான் எப்பொழுதும் சஞ்சனாவே அவனை காலையில் பள்ளியில் விட்டுவிட்டு பணிக்கு சென்றுவிடுவாள் மதியம் ரகு அழைத்து வருவான்.

வழக்கம் போல் அவள் காலை செல்வதற்காக ஸ்கூட்டியை எடுக்க அது ஸ்டார்ட் ஆகவில்லை, சரி அவ்வப்போது சென்று வரும் ஆட்டோவிற்கு அழைத்தால் அவர் வேறு இடத்திற்கு சவாரி சென்றுவிட்டதாக சொல்ல சஞ்சனாவோ செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தாள்..

அந்த சமயம் ரகு வெளியே வர ரிஷி,”பப்பா” என்று அவனை தாவி அணைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க ரகு,”செல்லம் இப்போ ஸ்கூல் போவீங்களாம் அப்பா மதியம் வந்து கூப்டுக்குவனாம்” என்று சமாதானப்படுத்த ரிஷியோ தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தான்..

அவன் அழுது அடம்பிடிக்க அவனது அழுகை சத்தம் கேட்டு உள்ளே இருந்து அம்பிகை வர அவர் பின் ரகுவின் தந்தையும் வந்தார். இது ரகு வந்தபின் அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான் ரிஷி ஆரம்பத்தில் இருந்தே தந்தை பாசம் அறியாதவன் அதனால் ரகுவை அவர்கள் அப்பா என்று பழக்கபடுத்தியதால் ரகுவின் மீது அவனுக்கு பிணைப்பு சற்றே அதிகம்..

இந்த சூழலில் சஞ்சனா இன்னும் கிளம்பாதது வேறு ரகுவை எரிச்சல் படுத்த அனைவரின் முன்பும் எதுவும் கூறமுடியாமல் அவளை பார்த்து,”நீ ஏன் இன்னும் கிளம்பாம இருக்க” என்றான்.

சஞ்சனா கையை பிசைந்தவாரே,” வண்டி ரிப்பேர்” என்றாள்.

ரகுவோ ரிஷியை சமாதானபடுத்தும் பொருட்டு,”கண்ணா நீங்க அப்பா கூட கார்ல வரீங்களா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்”

ரிஷியோ ரகுவை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு,”போலாம் பப்பா”என்றான்.

ரகுவின் தந்தையோ சஞ்சானாவிடம்,” நீ ஆட்டோக்கு சொல்லிட்டயா??

சஞ்சனா தயங்கிவாறே,”அவரு வேற சவாரி போயிட்டாராம் அதான் என்ன பண்றதுன்னு தெரியல”

ரகுவின் தந்தை,”என்ன பொண்ணுமா நீ ரகு கார்ல தானே போறான்.. அவனே உன்னை ட்ராப் பண்ணுவான்.. ரகு சஞ்சானாவை ஹாஸ்பிடல்ல விட்டுடு அவளுக்கு டைம் ஆகுது”

தந்தையின் முன் எதுவும் காமிக்க முடியாமல் ரகு வெறும் தலையசைப்பை மட்டும் காட்டிவிட்டு அவளை வருமாறு சைகை செய்தவன் ரிஷியை முன்னிருக்கையில் அமர்த்தியவன் சஞ்சனாவை தீப்பார்வை பார்க்க அவளோ அமைதியாக பின்னிருக்கையில் அமர்ந்தாள்.

காரை வேகமாக ஒட்டிக்கொண்டு வந்தவன் பள்ளியின் வாயிலில் நிறுத்த ரிஷியை ரகு தூக்கிக்கொண்டு வர அவனுடன் படிக்கும் பிள்ளைகள் தாய் தந்தையுடன் வர ரிஷியோ ரகுவை பாத்து,”பப்பா அம்மாவையும் வர சொல்லுங்க” என்றான்..

ரிஷியின் ஏக்கம் அவன் கண்களில் தெரிய சஞ்சானவையும் வருமாறு பணித்தான். இருவரும் சேர்ந்தவாறு வர அந்த மழலைக்கோ மட்டில்லாத மகிழ்ச்சி..

ரிஷியுடன் இருக்கும் ஷாம் என்ற குழந்தை அவளது பெற்றோர் மற்றும் தங்கையுடன் வர, ஷாமை அழைத்த ரிஷி,”இது என் பப்பா மம்மா என்றான்”மழலை மொழியில்..

ஷாமும் ரிஷியிடம்,”இது எங்க மம்மி இது எங்க தாடி அப்பறம் இது எங்க குட்டி பாப்பா என்றான் மழலை மொழி கொஞ்ச.. அதை கேட்ட ரிஷி ரகுவை பார்த்து,”பப்பா எனக்கு எப்போ குட்டிபாப்பா வரும்”என்றான்..

ரகுவோ பதில் சொல்ல முடியாமல் திணற.. சஞ்சனாவோ ரிஷியிடம்,”ரிஷி கண்ணா இப்போ சமத்தா ஸ்கூல் போவீங்களமா அம்மாவுக்கு லேட் ஆச்சுடா கண்ணா நீங்க சமத்தா இருந்தா மம்மா உனக்கு ஈவினிங் டாய்ஸ் வாங்கிட்டு வருவேன்”என்க, ரிஷியோ ரகுவின் கழுத்தில் இருந்து எம்பி சஞ்சானாவிற்கு முத்தம் பதிக்க அந்த எதிர்பாராத நிகழ்வில் ரகு மேலோட்டமாக நின்றவன் ரிஷி இழுத்ததில் சஞ்சுவிடம் நெருங்கி போனான்..

அவளுடனான நெருக்கம் ரகுவுக்கு எதுவோ போல் உணர்வை எழுப்ப ஒரே நிமிடத்தில் தலையை சிலிப்பி மீண்டு வந்தான்..

ஒருவழியாக ரிஷியை இறக்கிவிட்டு கோபத்துடனே அவளை முன்னே அமருமாறு பணித்தவன்.. அவள் அமர்ந்தவுடன் காரை ஸ்டார்ட் செய்யும் முன்னே அவளுக்கான அர்ச்சனையை தொடங்கினான்..

ரகு,”இப்போ உனக்கு சந்தோஷமா??”

சஞ்சனா,” நான் எதுவும் பண்ணல அவன் ஆரம்பத்துல இருந்தே குடும்பங்கிற அமைப்புல வளரல அதனால அந்த மாதிரி பாக்கும் போது அவனுக்குள்ள ஏக்கம் அதிகமாக ஆரம்பிச்சுடுது”

ரகு,”நான் இப்போ என்ன பண்ணனும்னு நினைக்கர”

சஞ்சனா,”ரிஷி எவ்ளோ நாள் அப்பா எங்கன்னு கேட்டு அழுதுருக்கான்.. அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியுமா தவிச்சப்ப கடவுள் மாதிரி உங்க குடும்பம் நின்னாங்க அப்போ அவங்க தான் உங்களை அப்பானு சொன்னாங்க.. இதெல்லாம் தெரிஞ்சும் நீங்க அவனுக்காக என்ன ஏத்துகிட்டதே பெரிய விஷயம்.. நீங்க முன்னமே சொன்ன மாதிரி உங்க கிட்ட வேற எதுவும் எதிர்பாக்கல”

சஞ்சனா பேசியதை கேட்டபின் ரகுவின் மனம் சற்றே தெளிந்தது.. அதற்கு பின் அவனின் மனதிலும் கடைசி வரை நாம எந்த பொண்ணையும் புரிஞ்சுக்கவே இல்லையோ அன்னிக்கு ஸ்ருதி இன்னிக்கு சஞ்சனா இரண்டு பேரிடமும் அவன் எங்கு தப்பானான் என்று யோசிக்க தொடங்கினான் ரகு..

யோசனையினூடே அவளை ட்ராப் செய்தவன் அவள் இறங்கும் போது,’ சஞ்சு’ என அழைத்தான்..

சஞ்சனாவிற்கோ அவனுடைய அழைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் அவனது முகத்தை பார்க்க ஈவினிங் பிக்கப் பண்ண வராணும்னா எனக்கு கால் பண்ணு என்றான்..

ரகு சஞ்சனாவிடம் நான் ரிஷிக்காக சில முடிவுகள் எடுத்துருக்கேன் அது என்னன்னா இனிமே நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஏன்னா நீயும் நானும் விலகி இருந்தா அது ரிஷியோட வளர்ச்சியை பாதிக்கும் அவன் இப்போவே சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ஏங்க ஆரம்பிச்சுட்டான்..

அப்பா அம்மாகிட்ட வளர்ந்த நானே எங்கே தடுமாறினேன்னு தெர்ல உனக்கு தெரியாதது ஏதும் இல்லை என்று ஸ்ருதியை பற்றிய அத்தனை தகவல்களையும் கூறினான்..
என்னோட அவசர புத்தினால தான் ஸ்ருதி அப்பா அம்மா இல்லாம நிக்கரா அவளோட வலி ரிஷிக்கும் வர வேணாம் ‘என் பையனுக்கு அந்த நிலைமையை வரவிடமாட்டேன்’ என்று ரகு கூறி முடிக்கும் போது அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது..

ஸ்டியரிங்கில் இருந்த அவனது கையை பற்றிய சஞ்சனா,” நீங்க பண்ணாத ஒரு தப்புக்காக கலங்காதிங்க அதே சமயம் ஸ்ருதியோட வாழ்க்கைல இனிமே உங்களால எந்த குழப்பமும் வராம பாத்துக்கோங்க அன்னிக்கு புவியை பாத்து நான் பயந்து நின்னதால நீங்க கேக்கும் போது தருணை பத்தி சொல்லிட்டேன் பட் தருணோட எந்த விஷயமும் ஸ்ருதிக்கு தெரியவேணாம் அது தெரிஞ்சா ஸ்ருதிக்கும் புவிக்கும் நடுவுல விரிசல் வந்துரும் இது என்னோட கருத்து அதுவும் நீங்க பிரண்ட்னு சொன்னதால சொன்னேன் மத்தபடி தப்பா இருந்தா சாரி…”என முடித்தாள் சஞ்சனா..

ரகு,”ஸ்ருதி எனக்கு புடிக்கும் சின்ன வயசுல இருந்தே அதனாலேயே அவள காயப்படுத்திட்டேன்.. இனிமே என்னால அவளுக்கு எந்த தொந்தரவும் வராது… தேங்க்ஸ் ஒருவேளை உன் நட்பு முன்னாடியே கிடச்சுருந்தா ஸ்ருதியை கஷ்டப்படித்திருக்கமாட்டேனோ என்னவோ”என பெருமூச்சுவிட்டுவிட்டு இருவரும் விடைபெற்றுக்கொண்டனர்..

புவியின் வீட்டில் புவி அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்க அங்கு வந்த ஸ்ருதி,”புவி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

புவி,”ம்ம்.. சொல்லு ஸ்ருதி”

ஸ்ருதி,”அன்னிக்கு அத்தை மாமாவை பாக்க போகும் போது ரகு அத்தானோட வைப் பாத்தோமே அவங்கள உங்களுக்கு முன்னாடியே தெரியுமா??”

புவி மழுப்பலாக,”இது இப்போதைக்கு அவசரமில்லைன்னு நினைக்கறேன் ஸ்ருதி.. இப்போ கொஞ்சம் அவசர வேலையா போகணும்” என்று அவள் பதிலை எதிர்பாராமல் கூறிவிட்டு சென்றான்

இதற்கிடையில் முகுந்த் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருந்தான்..

முகுந்த்,”கார்த்திக்.. நான் கேட்டதெல்லாம் ரெடியா??”

கார்த்திக்,”எஸ் பாஸ்.. புவி தான் தருணை சுட்டான் அப்டிங்கிறதுக்கான எல்லா எவிடன்சும் அல்ரெடி உங்களுக்கு அனுப்பிட்டேன்”

முகுந்த் “ஸ்ருதி” என்று உச்சஸ்தாயில் கத்தியவன், “என்ன விட்டுட்டு நீ அவன் கூட எப்படி நல்லா வாழரனு பாக்கறேன்.. “என்று கர்ஜித்துக்கொண்டான்..

அங்கு புவியோ ஸ்ருதியிடம் சீக்கிரம் உண்மையை சொல்ல வேண்டுமென்று நினைக்க அதற்குள் ஸ்ருதியின் வாட்ஸப்பிற்கு புது எண்ணிலிருந்து வீடியோ மற்றும் போட்டோக்கள் வந்திருந்தது…

ஸ்ருதியோ அதை கவனிக்காமல் புவியின் மனதில் குழப்பம் மேலோங்கியிருக்கிறது அதனால் இனி மனைவி ஸ்தானத்தில் அவருக்கு துணையாய் இருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்க விடாமல் ஒலித்துக்கொண்டிருந்த மெசேஜ் டோனில் போனை திறந்தவள் அதில் வீடியோ மற்றும் தருணை பற்றிய போட்டோ கிளிப்பிங்குகள் அடங்கியிருந்தது..

அதை பார்த்த ஸ்ருதி முதலில் அதிர்ந்தாலும் பின்பு வந்த ஒவ்வொரு மெஸேஜையும் தெளிவாக பார்த்தவள் கூகுளிலும் அதை பற்றி தேட வந்த அனைத்து தகவல்களும் உண்மை என தெரிந்தபோது நிலைகுலைந்து போனாள்..

ரகுவையும் முகுந்தையும் எண்ணி வாழ்வில் அவசரமுடிவை எடுத்துவிட்டோமோ என எண்ணிக்கொண்டிருந்தாள்.. அவளது கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது வாழ்வில் அவள் நம்பிய ஒவ்வொரும் அவளுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டார்களோ என எண்ணுமளவிற்கு முன்பு ரகு அத்தான், முகுந்த்,இப்போது புவி அவளின் நிலையை எண்ணி..

அப்போதே பணியின் காரணமாக புவி திருச்சி செல்ல வேண்டியிருந்ததால் அவளுக்கு கால் செய்ய அவள் எடுக்கவில்லை, புவியோ ஒரு வேளை அவள் பிசியாக இருப்பாள் என எண்ணியவன் மீண்டும் அழைத்துக்கொள்ளலாம் என நினைத்தவன் பணியில் மூழ்கி போனான் அதன் பின் அவளை தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு பணிச்சுமை அவனை எடுத்துக்கொண்டது..

ஸ்ருதிக்கோ தன் கணவனால் ஒரு குழந்தை தந்தையை இழந்ததை ஜீரணிக்க முடியவில்லை..
தனக்கு இத்தனை வயதில் வந்த துன்பம் அந்த பாலகனுக்கு இந்த சிறுவதிலேயா என்று துடித்துடித்து போனாள்..

அவள் மனசாட்சியோ அன்று ரகு செய்த அதே தவறை தான் இன்று புவியும் செய்துள்ளான் ரகுவை மன்னிக்கவில்லை இப்போது புவியை என்ன செய்யப்போகிறாய் என்று அவளை கேட்டுக்கொண்டிருந்தது…

ஸ்ருதிக்கோ ஒருவேளை போனில் வந்த தகவல்கள் பொய்யாக இருக்குமோ என யோசிக்க அதே சமயம் அன்று ஹாஸ்பிடலில் புவி மற்றும் சஞ்சனாவின் முகமாற்றத்தை பாத்திருந்ததினால் அவளுக்கும் ஒரு சந்தேகம்..உடனே புவிக்கு அழைக்க அவன் ஏற்கவில்லை நொடியும் தாமதிக்காமல் சஞ்சனவை தேடி சென்றாள்..

சஞ்சனாவை கேட்டு ரிசப்ஷனில் அமர்ந்திருந்தாள்..சற்று நேரத்தில் வெளியே வந்த சஞ்சனா ஸ்ருதியை பார்க்க அவளோ கொஞ்சம் பேசணும் என்றாள் தயங்கியவாறே எப்போதும் ரிஷி விளையாடும் பார்க்குக்கு அழைத்து சென்றாள்..

சஞ்சனா ஸ்ருதியை பார்த்து,”சொல்லுங்க என்ன விஷயமாக என்ன பாக்க வந்துருக்கீங்க..”

ஸ்ருதி,”இது உங்க பர்சனல் பட் இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு சோ நீங்க கொஞ்ச உண்மையை சொன்னா நல்லா இருக்கும்.. சொல்லுவீங்களா”

சஞ்சனாவோ,”கண்டிப்பா உண்மையை சொல்றேன் ஆனா எதைபத்தி”

ஸ்ருதி,”என் கணவரால உங்க கணவருக்கு என்ன நடந்துச்சுங்கரத பத்தி”

சஞ்சனாவோ மனதில் ரகுவிடம் எதை கூறவேண்டாம் என கூறினோமோ இப்போது அந்த விஷயத்திற்காக ஸ்ருதி வந்திருந்தது அவளுக்கு நெருடலாக பட தயங்கியபடியே அமர்ந்திருந்தாள்..

சஞ்சனாவின் தோளை பற்றிய ஸ்ருதி,”என்னைக்கு இருந்தாலும் இந்த உண்மை தெரியதான் போகுது.. நீங்க காலம் தாழ்த்தறதுல எந்த யூஸும் இல்ல..”என்று சொல்லும் போதே ஸ்ருதியின் குரல் கமரியது..

சஞ்சனா நடந்ததை ஸ்ருதியிடம் சொல்ல அதை கேட்டு உடைந்து போய்விட்டாள்.. எது பொய்யாக இருக்கவேண்டும் என்று கடவுளுக்கு வேண்டுதல் வைத்துகொண்டு வந்தாளோ அது பொய்த்துபோய்விட்டது???

விதியென்ற காட்டிலே திசைமாறும் வாழ்க்கையே!!!

ஸ்ருதியின் முடிவு என்ன????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here