மெக்ஸ்சிகோவின் தெற்குப் பகுதியில் இருக்கிறது இந்த பொம்மைத் தீவு.இந்த தீவிற்கு இப்படி ஒரு பெயர் வர என்ன காரணம் தெரியுமா? இந்த தீவு முழுக்க பொம்மைகளால் நிரம்பி இருக்கும்.மனித நடமாட்டமே இல்லாமல் இரவு நேரத்தில் மரத்திலும்,சுவரிலும்,ஆறுகளிலும்,தெருக்களிலும் காணப்படும் இந்த பொம்மைகள் காண்பவர் நெஞ்சில் ஓர்வித பயத்தன்மையை ஏற்படுத்துக்கின்றன.
இந்த இடம் ஒரு காலத்தில் ஒரு நல்ல சுற்றுலாத் தலமாக இருந்து இருக்கிறது. ஒருநாள் ஜூலியன் என்பவர் அங்கிருந்த ஆற்றில் ஒரு குழந்தையின் சடலத்தையும் , அதற்கு அருகில் ஒரு பொம்மையையும் பார்த்து இருக்கிறார்.அன்று இரவு அவரால் தூங்கவே முடியவில்லை.பலவிதமான கனவுகளும்,சத்தங்களும்,அழுகுரல்களும் அவருக்கு கேட்ட வண்ணம் இருந்தது.
காலையில் விடிந்ததும் அவர் செய்த முதல் வேலை ஆற்றில் கிடைத்த அந்த பொம்மையை அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்டி இருக்கிறார்.அன்று மட்டும் அல்ல அதற்குப் பிறகு தொடர்ந்து 50 ஆண்டுகள் நிறைய பொம்மைகளை வாங்கி இதை அவர் செய்து வந்து இருக்கிறார்.அவ்வபொழுது அந்த பொம்மைகளில் இருந்து வினோத சத்தங்களும்,அவைகள் தங்களையே பார்ப்பதைப் போன்ற விசித்திர உணர்வும் பலருக்கு ஏற்படத் தொடங்கியது.
இப்படித் தன்னுடைய வாழ்நாள் முழுக்க அந்த இடத்தை பொம்மைகளால் அலங்கரித்த ஜூலியன் ஒருநாள் அதே ஆற்றில் இறந்து கிடந்தார்.அவருடைய மரணத்திற்கு பின்னால் என்ன காரணம் என்பது இன்றுவரை விளங்காத ஒன்று.
இதை அடுத்து அந்த இடம் மற்றவர்களை கவர்ந்து இழுக்கத் தொடங்கியது.அங்கு வந்து செல்வோரும் பொம்மைகளை வாங்கி மரத்தில் கட்டத் தொடங்கினார்கள்.இதுவே வாடிக்கையாகி இப்பொழுது அந்த தீவு முழுவதும் பொம்மைகளால் நிரம்பி இருக்கிறது.
அந்தத் தீவில் மனிதர்களின் நடமாட்டம் இல்லாததாலோ என்னவோ பகல் பொழுதுகளில் அந்த இடம் அளவுக்கு அதிகமான அமானுஷ்யம் நிறைந்த அமைதியை கொண்டு இருக்கிறது.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1