மந்திரம் -18
“துஜா…………… ” என்று அலறியபடி எழுந்து அமர்ந்த வசிக்கு சற்று நேரம் மூச்சே நின்று விட்டது.
ஏசியின் சில்லிப்பிலும் வியர்த்து வழிந்த முகத்தை, பூந்தூவலையால் அழுந்த துடைத்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தான் புரியவில்லை !!!!
அவனுடைய துஜா… அவளுக்கு…. கடவுளே…அவன் இதய துடிப்பு அவனுக்கே கேட்டது…. இத்தனை துலாபாரமாக கூட கனவுகள் தோன்றுமா? விந்தை தான்… ஆனாலும் எவ்வளவு பயங்கரமான கனவு…..
கடிகார முள் ஆரை தொட, ஒரு குக்கூ வெளி வந்து ஆறுமுறை கூவி சென்றது.
விதிர்விதிர்ப்பு நீங்காமல் எழுந்து பால்கனிக்குள் சென்றவன், வெளிவானத்தின் எழிலில் மனதை மாற்ற முயற்சித்தான்..
முடியவில்லை. !!!
அருகே இருந்த பிரம்பு ஊஞ்சலை பார்த்தவனின் உதடுகள் மெலிதாக நகைத்தன…
சற்றே பார்வையை தனது அறைப்பக்கம் அலசலில் மேயவிட்டவனுக்கு காட்சிகள் யாவும் கண்முன்னே படமாக விரிந்தன…
அந்த உணர்வுகளில் கட்டுண்டு அவன் கிடக்க, தீடிரென மூளையில் எச்சரிக்கை மணி ஒலித்தது.
மெல்லிய பயத்தோடு கூடிய படபடப்பு நாடிநரம்பெல்லாம் பாய…. குளியல் அறைக்குள் புயலாக புகுந்தான் வசீகரன்.
அடுத்த அரைமணி நேரத்தில் அட்டகாசமாக கிளம்பி மாடி படிகளில் விடலை பையனை போல அவன் துள்ளிக்கொண்டு இறங்க, அவனை ஆச்சிரியமாக பார்த்தனர் அவன் குடும்பத்தினர்.
அவர்களை பார்த்து அவசரமாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு அவன் தப்பிக்க முயல, “அண்ணா ” என்ற ரதியின் அழைப்பு அவனை தடுத்தது.
“ஐயோ இவள் வேற அவசரம் புரியாம ” என்று மனதோடு அவளை திட்டிக்கொண்டே,
“என்ன ரதி? ” என்று வினவினான்.
“எங்கண்ணா நீ மட்டும் அவசரமா போற? நாங்க வர வேண்டாமா? “
“என்னம்மா ஒளர? “
அவனுக்கு திக்திக் என்றிருந்தது.. நாம் செல்வது இவர்களுக்கு எப்படி தெரியும்? புரியாதபோதும் தன்னை வெளிகாட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே நின்றான்.
“மறந்துட்டியா அண்ணா… இன்னிக்கு புரட்டாசி முதல் சனி. எப்போவும் நாம கோவிலுக்கு போவோமே? அதுக்கு தானே நீயும் கிளம்பி இருக்க? “
அடக்கடவுளே !!!இதை மறந்து விட்டோமே? என்ன சொல்லி சமாளிப்பது? இவர்களை எப்படி சமாளித்து அனுப்பி, எப்போது துஜாவிடம் செல்வது?
“எனக்கு இன்னிக்கு அவசரமா ஒரு வேல இருக்குடா… நீங்கலாம் போங்க அம்மா…. ப்ளீஸ்…நான்.. இன்னிக்கு அவசியம் போயே ஆகணும் “
“வசி என்ன இது? புது பழக்கம்… இங்க இருந்து பத்து நிமிசத்துல கோவில்… அரைமணி நேரத்துல போயிரலாம்… மணி ஏழுகூட ஆகல… அதுக்குள்ள என்ன வேல வேலைனு பறக்கிற? “
“அம்மா… இல்லாம புரிஞ்சுக்கோ… இது அதைவிடவும் முக்கியம்.. நான் இப்போ போகலைனா…. ரொம்பவும் வருத்தப்படுவேண்மா “
“சரி போற வழியில எங்கள இறக்கியாச்சு விடு…. அப்பா கார் சர்வீஸ்க்கு போயிருக்கு “
“சரி வாங்க… “
காரை எடுத்த வசிக்கு உள்ளே உதறல் தான்… வீட்டில் இப்படி எல்லாம் பொய் சொல்லி அவள் வீட்டை அடைந்து அவன் நினைத்ததை முடிக்க வேறு வேண்டுமே !! எண்ணும் போதே கனவும் அவன் மனத்திரையில் ஓடியது…
அதை கஷ்டப்பட்டு புறந்தள்ளியவன்.. ‘இல்லை எல்லாம் நல்லபடியாகவே முடியும்’ என்று தன்னை தானே தேற்றிக்கொண்டான்.
கோவில் வாசலில் கார் நிற்கவும், பொறுமையாக மற்றவர்கள் இறங்க…. பொறுமையின்றி தவித்து கொண்டிருந்த வசியின் கண்முன் துஜா தோன்றினால்.
நம்பமாட்டாமல் கண்ணை கசக்கிக்கொண்டு மீண்டும் அவன் பார்க்க.. அவளே தான்…
அவள் மட்டும் இல்லை… அவளது குடும்பமே வந்தனர்…
அவர்கள் ஏன் என்னை நோக்கி வருவது போல தோன்றிகிறது?
ப்ரம்மையா?
என்னவோ ஒன்று !!எப்படியோ கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல… இவளை இங்கேயே பார்த்தாகி விட்டது….
அவசரப்பட்டு வீட்டினரிடம் வேறு வாய் விட்டு விட்டோமே?
காரை ஒதுக்கி நிறுத்தியவன்… கீழிறங்கி “அம்மா ” என்று அழைத்தபடி தனது குடும்பத்திடம் சென்றான்.
மௌன சிரிப்பில் குலுங்கிய தங்கையை அதட்டிய அவரும்… கட்டுப்படுத்திய சிரிப்போடு “என்னப்பா? ” என்று வினவினார்.
“ஆபீஸ்ல இருந்து போன் பன்னங்கம்மா… மீட்டிங்க்கு ஆப்போசிட் பார்ட்டி இன்னிக்கு வரலையாம்.. வாங்க கோவிலுக்கு நானும் வரேன் ” என்று இயல்பாக சொல்லிக்கொண்டே அவர்களோடு அவன் இணைய…
“வாங்க சம்மந்தி ” என்று எதிர்பட்டார் துரை.
கண்கள் தெரித்துவிடும்போல அதிர்ச்சியில் வசி தன் பெற்றோரை நோக்க, குழப்பத்தோடு வசியையும் அவன் குடும்பத்தையும் ஏறிட்டாள் துஜா.
இந்த சொட்ட அங்கிளும் ஆயாவும் குடுத்த போட்டோல இவன் இல்லையே…. பேருக்கூட நந்தனு தானே சொன்னாங்க….. இந்த வசி எப்படி???
அதற்குள் இருக்குடும்பமும் கோவிலின் மண்டபத்தினுள் சென்று அமர்ந்துக்கொண்டனர்.
வசிக்கு எதுவுமே புரிபடவில்லை.
சாரு நாளை துஜாவிற்கு நிச்சயம் என்று சொல்லியதும்… அதே நினைவாக அடுத்த நாள் எப்படி அதை தடுப்பது என்ற சிந்தையாக உறங்கியவனுக்கு வந்த கனவுகள் தான் எத்தனை உண்மையானது போல இருந்தன…..
கனவிலேயே அவளை கட்டாய திருமணம் புரிவது போலவும்.. அவள் அவனை வெறுப்பது போலவும்.. அந்த காதல் மோதல்… கடைசியாக அந்த விபத்து… அப்பப்பா எத்தனை உணர்ச்சிகள்…. கனவு என்று இன்னும்கூட அவனால் முழுமையாக நம்பமுடியவில்லை….
காலையில் கூட என்ன செய்வது என்ற தெளிவில்லாமல் தான் துஜாவின் வீட்டிற்கு அவன் புறப்பட்டது…
இந்த இன்ப அதிர்ச்சி அவன் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று…
அவன் முகபாவனையை கவனித்துக்கொண்டிருந்த ரதி அவன் காதை கடித்தால்…
“என்னண்ணா இன்னும் நம்பமுடியலையா….? “
” எப்படி டி ரதி? “
“நீ அன்னிக்கு நாங்க இருக்கறது கூட தெரியாம லூசு மாரி ஒளறினியே… அப்போவே கண்டுபுடிச்சாச்சு… நான் தான் உன்ன பாலோவ் பண்ணி தகவல் தந்தேன்… அப்பா அம்மா விசாரிச்சுதுல தூரத்து சொந்தம்னு வேற தெரிஞ்சுது…. ஒடனே போய் பேசிட்டாங்க. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லல…. ” என்று சொல்லி கண்ணடித்தாள்…
“இன்னிக்கு தாண்டி அண்ணன் வாழ்க்கைக்காக உருப்படியா ஒன்னு பன்னிருக்க ” என்று குதூகலித்தான் வசி….
பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க….. நைசாக நகர்ந்து துஜா அருகே சென்று அமர்ந்துகொண்டாள் ரதி.
“அண்ணி ” என்று ஆசையாக அவள் துஜாவை அழைக்க, அந்த துறுதுறு பெண்ணின் அழைப்பில் திரும்பிய அவளும்
“சொல்லு டா? ” என்றாள்..
“நா ரதி.. ரதிமலர் அண்ணி…என் மொக்க அண்ணனோட சூப்பர் தங்கச்சி “
“நீ சொல்றது உண்மை தான் “
“என்ன அண்ணி? “
‘உங்க அண்ணன் மொக்க தான் ‘ என்று எண்ணியதை கூறாமல் “நீ சூப்பர் தான் ” என்று சொல்லி கண்ணடிக்க… அவள் விஷமத்தை புரிந்துகொண்டு ரதி சிரித்தாள்…
“கள்ளி “
“அண்ணி.. பாம்பின் கால் பாம்பறியும் “
“அது சரி…. உனக்கு வேற அண்ணா யாராச்சு இருக்காங்களா? “
“இவன் ஒருத்தனையே சமாளிக்க முடியல… இதுல இன்னோனு வேறயா? “
“அப்டினா இது யாரு? “
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் தனது கைபேசி உறையுனுள் வைத்திருந்த படத்தை எடுத்து காட்டினால் அவள்.
“ஓ.. இது தான் அம்மாவும் அப்பாவும் குடுத்தாங்களா உங்ககிட்ட? “
“ஆமா.. ஏன்? “
“ஐயோ… அண்ணி அண்ணி… இது ரெண்டு வருசத்துக்கு முந்தி எடுத்தது.. ஆனா அப்போ அண்ணா டோட்டலா வேற மாரி இருப்பான்… பெரிய மீசை தாடிலாம் வெச்சு ரவுடி மாறி… இப்போ தான் ஜென்டல்மேன் லுக் “
“அடப்பாவிகளா… “
“ஏன் அண்ணி புடிக்கலையா? “
அவளை முறைப்பாக பார்த்த துஜாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
அவர்கள் பேசிக்கொள்வதை புரியாமல் குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த வசியை ஏறிட்ட துஜாவிற்கு சிரிப்பு பீறிட்டது..
“போந்தாக்கோழி ” என்று மனதிற்குள் செல்லமாக அவனை வைதவள்…
யாதொன்றும் பேசாமல் பெரியவர்கள் பேசுவதை கேட்பது போல பாவ்லா செய்தால்.
கடைசியாக நிச்சியதட்டு மாற்றி கொள்வதற்கு முன்… தனது தாயின் காதில் ஏதோ கிசுகிசுத்தான் வசி….
சிரித்துக்கொண்டே அவர் சம்மந்தி அம்மாவிடம் ஏதோ சொல்ல.. அனைவரும் சாமி கும்பிட எழுந்து சென்றுவிட்டனர்..
இப்போது வசியும் துஜாவும் மட்டுமே தனியாக….
அமைதியை உடைத்தது வசித்தான்…
“தேனு.. நெஜமாவே என்ன பிடிச்சிருக்கா…. இல்ல பெரியவங்க சொன்னதால ஓகே சொன்னியா? “
அவனை கேலியாக ஏறிட்ட துஜா..
முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு..
“பிடிக்கல….. ” என்று சொல்ல…
வசியின் முகம் வாடிவிட்டது…
“இப்படி போந்தாக்கோழி மாறி இருக்கறது பிடிக்கல… இது தான் பிடுச்சுருக்கு… “
அவள் நீட்டிய போட்டோவை வாங்கி பார்த்த வசியின் முகம் ஒளி வீசியது.
“நிகழும் விகாரி வருடம் ஆவணி மாதம் எட்டாம் நாள் தஞ்சாவூர் மாவட்டம் தெய்வத்திரு சந்திரன் -தேவி ஆகியோரின் மகன் வயிற்று பேரனும் தேனி மாவட்டம் செந்தில் – கோமதி ஆகியோரின் மகள் வயிற்று பேரனுமான சுப்பிரமணி -மணிமேகலையின் மகனுமான திருநிறைசெல்வன் வசீகரனந்தனுக்கும் – தஞ்சாவூர் மாவட்டம் கிருஷ்ணசாமி – சின்னாயி ஆகியோரின் மகன் வயிற்று பேத்தியும் துடியலூர் வட்டம் ரங்கசாமி – ராசாத்தி ஆகியோரின் மகள் வயிற்று பேத்தியும் துரைராஜன் -பத்மா ஆகியோரின் மகளுமான திருநிறைச்செல்வி துஜாவந்திக்கும் திருமணம் நிச்சயிக்க படுகின்றது”
நிச்சயப்பத்திரிக்கை வசித்து முடிக்கவும்… துஜாவும் வசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…
“சீக்கிரம் பொண்ண அழைச்சுட்டு வாங்கோ ” அய்யர் அவசரப்படுத்த.. வசியின் கண்கள் ஆவலாக மணப்பெண் அறைப்பக்கம் சென்றது…
செந்தேன் நிற பட்டுடுத்தி அன்றலர்ந்த மலர் போன்று வந்தவளை கண்டவனின் கண்கள் மதுவுண்டு மந்திபோல மயங்கின.
அவனருகே வந்து அமர்ந்தவள் தேடலாக அவன் முகத்தை ஏறிட, முறுக்கு மீசையை வலதுகை கொண்டு மேலும் முறுக்கிவிட்ட வசி… ஓரக்கண்ணால் அவளை பார்த்து சிரிக்க… அந்திவானமாய் சிவந்தாள் துஜா.
கெட்டிமேளம் முழுங்க மந்திரத்தில் கட்டுண்டவன் போல் தாலியை அவள் கழுத்தில் கட்டிய வசிக்கு…. மகிழ்ச்சியில் கண்ணோரம் நீர் திரையிட்டது.
எனக்கே உரியவள் என்ற உரிமையோடு அவள் நெற்றியில் குங்குமம் இட்ட போதும் சரி… கைபிடித்து அக்னீ வலம் வந்தபோதும் சரி… அவன் ஒருவித மோன நிலையிலேயே சஞ்சரித்தான்…
சடங்குகள் அனைத்தும் முடிந்து அன்றைய நாளின் கடைசியாக முதலிரவு அறைக்குள் துஜா பிரவேசிக்க, தனது கனவின் நினைவோடு அமர்ந்திருந்த வசிக்கு சிரிப்பு வந்தது.
“அப்படி என்ன சிரிப்பு? சொன்னா நானும் சிரிப்பேன்ல ” என்று சிணுங்கினாள் துஜா.
அவளை தன் கைவளைவில் அமர்த்திக்கொண்டு முதலில் இருந்து அனைத்தையும் அவன் சொல்ல… அவனை காதலோடு ஏறிட்டாள் துஜா.
“இப்படி ஒரு கனவு என்றால்? எந்த அளவுக்கு அவன் தன்னை நேசித்திருக்க வேண்டும்…? அவனது பரிதவிப்பு தான் எத்தகையது? “
“என்ன தேனு? பயங்கர ரொமான்டிக்கா பாக்கற? “
அவனை பேசவிடாமல் உதடால் அவனுக்கு பதில் சொல்ல தொடங்கினாள் வசியின் துஜா…
-****************அன்பே சிவம் *********************-