இந்த நிமிடம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள் சுமி. அரைமயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை யோசிக்காது கைகளில் தூக்கி கொண்டு வரும் போது சற்றே பொறாமையாக தான் இருந்தது. அதுவும் கூட அவளது தந்தை அழைத்து சென்றபின் கூறியதை கேட்டவள் சற்றே மனம் சமாதானம் ஆகி இருந்தாள். இவள் கேட்காமலே கூற ஆரம்பித்தான் குரு…
அந்த பொண்ணுக்கு என் வீட்டுக்கு பக்கம் தான் வீடு இருக்கு. நிறைய படிக்கணும்ன்னு ஆசை. வீட்ல படிக்க வைக்க முடியாத சூழ்நிலை. அண்ணான்னு தான் கூப்பிடும். படிக்க காலேஜ் சேர்த்தி விடறேன்னு சொல்லும் போது மாட்டேன்னு சொல்லிட்டா. இங்கே வேலைக்கு சேர்த்தி விட்டு கரஸ்ல படிக்க ஜாயின் பண்ணி விட்டேன். இப்ப ரெண்டாவது வருசம் படிக்கறா. ரொம்ப நல்ல பொண்ணு. யார் வம்புக்கும் போக மாட்டா.
கேட்காமலே தகவல் சொன்னவன் அவளை பார்த்து ….சுமி நேரம் ஆயிடுச்சி. இனி ஆபீஸ் போய் வண்டியை எடுத்துட்டு போக வேண்டாம் .கேப்ஸ் புக் பண்ணிடறேன். அதுல போயிடு. நாளைக்கு வந்து வண்டியை எடுத்துக்கோ…
கேப்ஸ் புக் பண்ணி அனுப்பி விட்டவன் வண்டியில் ஏறும் போது அவனது விசிட்டிங் கார்டை கொடுத்தவன் வீட்டுக்கு போயிட்டேன்னு போன் பண்ணு . விருப்பம் இருந்தா….
அதுவே ஆயிரம் கதை சொல்ல தலையாட்டி நகர்ந்தாள். ஆனால் அவளது நம்பரை இந்த நிமிஷம் வரை கேட்க வில்லை. நம்ம மேல் விருப்பம் இருந்தா சொல்வாள் அந்த எண்ணம் தான். ஆனால் வீட்டுக்கு போனதும்
வீட்டுக்கு வந்துட்டேன் குரு என
அவளது மெசேஜ்ஜோடு நம்பர் தாங்கி வர குருவிற்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அந்த உற்சாகம் இரவு வீட்டுற்கு செல்லும் வரை சற்று கூட குறையவில்லை.
தனா தனா உற்சாகத்தோடு நுழைந்தவன் தனது தந்தை பின் புற கதவு திறந்து இருக்க படிக்கட்டில் அமர்ந்தபடி தோட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தார். அருகில் அமர்ந்தவன் என்ன தனா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கற. எங்கே உன் சிஷ்ய பிள்ளைங்க….
ஆறு டூ எட்டு தான் டியூசன் டைம். ஒன்பது மணிக்கு வந்து கேட்கிற….
நீ ஏன் லேட்டு….
அது அங்கே சின்ன அக்ஸிடென்ட்
ஹாஸ்பிடலுக்கு போயிட்டு அப்புறம் ஆபீஸ் போயிட்டு இவ்வளவு நேரம் ஆயிடுச்சி. இதுவரையில் எதையும் மறைக்காதவன் சுமியை பற்றி பார்த்தது முதல் இன்று வரை நடந்ததை கூற…. அவர் இவன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.
என்ன தனா அப்படி பார்க்கற …
என் பையன் முதல் முதலா ஒரு பொண்ண பற்றி சொல்லிட்டு இருக்கிறான். அதான் அப்படி பார்க்கிறேன்.
போ தனா. நான் போறேன். உள்ளறைக்கு நுழைய போனவன். நீயா கனவு கானத தனா . எனக்கே தெரியலை…. இது என்னன்னு…
ஆனால் எனக்கு தெரிஞ்சுடுச்சி நல்லவனே… ஒரு நாள் அந்த பொண்ண வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வாயேன்.
சொல்லறேன். சொல்லறேன்… உள் அறையில் இருந்து குரல் கொடுத்தான்.
அடுத்த நாள் காலையிலேயே ராகவ் வந்திருந்தான். சுமி எனக்கு உன்னோட உதவி வேண்டும் என்றபடி….
ஏன் புதுசா கேட்கிற. என்னன்னு சொல்லு.
எல்லா பர்னீச்சர்களையும் இறக்கியாச்சு. அழகா அரேன்ஜ் பண்ணனும் தனியா முடியாது. நீயும் என் கூட வா….என்னோட ப்ரெண்டுகளையும் வர சொல்லி இருக்கிறேன். முன்னதாக ரெண்டு முறை செய்தது தான். நேரம் போவதே தெரியாது. அரேன்ஜ் செய்து முடிக்கும் போது வரும் நிறைவு அதற்கு விலையே கிடையாது.
வரேண்டா என்ன கிளம்பி இருந்தாள். எதை பற்றியும் யோசிக்காது….அங்கே ஏற்கெனவே விநாயக் நிஷா இன்னும் சில நண்பர்கள் என்ன மும்பரமாய் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த முறை பெரிய அளவில் நடத்த நினைக்க எதிர் பார்த்ததற்கு அதிகமாக வந்து இரங்கி இருந்தது பர்னீச்சர்கள்… ஏற்கனவே ராகவின் நண்பர்கள் பெரும்பாலோர் இவளுக்கும் அறிமுகம் ஆகி இருக்க கலகலப்பாய் அந்த நாள் மட்டும் அல்ல அடுத்த நாளும் ஓடியது. இடையிடையே குருவின் ஞாபகம் வந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் நடந்து கொண்டு இருந்தாள். நிஷா மட்டும் ராகவை சுற்றி கொண்டு இருக்க அது கூட சுமிக்கு பெரிதாக தெரியவில்லை..
இதை பார்த்தவள் ராகவை அவளோடு இணைத்து கிண்டல் செய்ய அவனுமே சிரித்தபடி நகர்ந்திருந்தான.
மூன்றாவது நாள் அணைத்து வேலைகளும் மதியமே முடிந்து இருக்க கம்ப்யூட்டரில் ஏற்றி இருந்த விலைபட்டியலை செக் செய்தபடி அமர்ந்து இருந்தான் ராகவ். இப்போது அலங்கார வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. ஒரு புறம் பலூன்களை ஊதியபடி அவ்வப்போது வெடிக்கும் சத்தம் காதில் விழுந்து கொண்டிருந்தது. எதிரில் நிமிர்ந்து பார்க்க அங்கே காகித ஜிகினா மாலையை மொத்தமாக நிஷாவின் கழுத்தில் போட்டவள் அவளை நிற்க வைத்து வித விதமாக நிஷாவின் கை பேசியில் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தாள் சுமி …
ராகவ் மனதிற்குல் இந்த சுமி இருக்கறாலே வேலை செஞ்சா அப்படியே செய்ய வேண்டியது. விளையாட ஆரம்பிச்சா விளையாண்டுட்டே இருக்க வேண்டியது உதட்டில் தோன்றிய சிரிப்போடு…. சுமி அப்பா ஐந்து மணிக்கு வருவாங்க.. வேலைய பாரு விளையாடாத …
வெவ்வெவ்வே என்ன அழகு காட்டியவள் நிஷாவை கண் மறைவுக்கு அழைத்து சென்றாள்.
சிறிது நேரத்தில் கையில் பெரிய பலூனோடு வந்தவள் இவனின் பின்புறம் வந்து கையில் கொண்டு வந்திருந்த பின்னில் இவன் காதருகே வந்து பலூனை குத்தி விட டம் என்ற சத்தத்தோடு வெடித்தது. திகைத்தவன் இவளை பார்த்து எழுந்தபடி மாட்டினா காலிடி
விளையாடாதன்னா காதுகிட்ட வந்து பலூனை உடைக்கறயா….
முடிஞ்சா பிடிச்சிக்கோ… கூறியபடி ஓடியே இருந்தாள் கைக்கு எட்டாமல் ….. தூரமாக…..
எதுக்கு. … அப்பாகிட்ட மாட்டி விட பிளான் பண்ணறயா. மூன்று தாள் வேலை செஞ்சது தெரியாது. இப்ப விளையாடறது தான் தெரியும். பேசியே கொண்ணுடுவாங்க….ஓடிடு கிட்ட வராத… என்றபடி இருக்கையில் அமர…. அருகில் இருந்த சுமியின் பர்சில் இருந்து போன் அடிக்கும் சத்தம் கேட்டது. பர்சை திறந்து போனை எடுக்க அதில் முப்பத்தி எட்டு மிஸ்டு கால் காலையில் இருந்து….
குருவின் நம்பரிலிருந்து. … கடைசியாக
வந்த மெசேஜ் ஒன்று. … சுமி ஏதாவது பிரச்சனையா … ஏன் மூன்று நாளா ஆபீஸ் வரல.. என்ற கேள்வியோடு….
தன்னை அறியாமல் விசில் ஓன்று உற்பத்தி ஆனது ராகவ் உதட்டிலிருந்து…. பட்சி வலையில சீக்கிடுச்சி போலயே… இந்த சுமி ஏன் நம்பர் குடுத்தத சொல்லல…. தூரத்தில் பார்க்க இன்னும் நிஷாவோடு விளையாடி கொண்டு இருந்தாள். இப்போது விநாயக்கும் சேர்ந்து இருந்தான் அவர்களோடு…
குருவை பழிவாங்க நம்பியார் மாதிரி திட்டம் போட்டு கடைசியில் எம்ஜியார் மாதிரி அவனே அழப்போவதை உணரவில்லை அப்பொழுது….
தொடரும்.