வைஷூ மும்பைக்கு மாற்றலாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது .
வானதி இங்கு வந்தது முதல் இரண்டு நாள் ஒரே சோகமயம் தான் தான்யாவை விட்டு வந்ததில்.
ஹைதராபாதிலிருந்து புறப்படட் சமயம் ஆரம்பித்த அழுகை ஏர்போர்ட் வரை நீடித்தது . தான்யா வசுதாவின் சமதானமோ அல்லது வைஷூ உஷாவின் சமதானமோ எடுபட வில்லை . அழுதழுது ஒருகட்டத்தில் உறங்கியே விட்டாள் . உறங்கிய மகளை தூக்கிக்கொண்டு தான்யாவின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் தோழியிடம் வந்தாள் அவளை அறியாமலே இருநீர் துளிகள் இமைகளை தாண்டியது .
“என்ன வைஷூ இது நீ எவ்வளவு Bold ஆ இருப்படி ! நீயே கலங்கலாமா” ? தோழியின் கண்ணீரைத் துடைத்தவள் அணைத்து ஆறுதல் கூறினாள்.
“இல்லை அங்க போகனும்மான்னு நெருடலா இருக்கு. ஆனாலும் ஒரு வைராக்கியமும் மனசுல இருக்கு. நான் எதற்கும் கலங்காதவள்னு எனக்கு நானே வச்சிக்கிற பரிட்சை இது . அதனாலதான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன் ” என்றவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே கூறினாள்.
“வைஷூ உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்னும் இல்லை உனக்கு தெரியாததும் ஒன்னும் இல்லை உனக்கு சரின்னு படுறத செய்” என்றவள் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தாள் .
பரந்து விரிந்த மும்பை மாநகரில் இறங்கியவளின் அழகிய பாதங்கள் ஒரு நிமிடம் தன் நிலை மறந்தது. நவ நாகரிக உடையை தழுவி இருந்த சற்று பூசிய அவள் தேகம் தன் உயிர் தீண்டியது போல் சிலிர்த்தது.அங்கும் இங்கும் அலைபாய்ந்த அகன்ற கருவண்டு விழிகள் இரண்டும்
இன்று பூத்த புது மலரைக் கண்டது போல் ஒளி நிறைந்து. பட்டுபோன்ற மென்மையான விரல்களின் தன் அணிந்து இருந்த சர்டின் மேல் புறம் காற்றில் பறந்த ஷாலின் நுனியை சுற்றுவதும் அவிழ்பதுமாக தன் கைகளின் நடுக்கத்தை குறைத்துக் கொண்டாள்.
“அம்மா வைஷூ என்னடா நின்னுட்ட? “உஷா
சுற்றுபுறத்தை நோக்கி பார்வையை சுழல விட்டவள் “அத்த லக்கேஜ் எடுக்கனும் குல்லுவ பாத்துக்கோங்க நீங்க அங்க வைட் பண்ணுங்க நான் இப்போ வந்துடுறேன்” அத்தையின் பார்வையை சந்திப்பதற்கு முன்னாள் தலையில் இருந்த கூலர்சை எடுத்து கண்களில் பொருத்தினாள்.
“சரிம்மா சீக்கிரமா வா குல்லு எழுந்தா திரும்பியும் ஆரம்பிச்சிடுவா ” உஷா
“இப்போ என்னை விட்டாதான் சீக்கிரம் வரமுடியும்”என்று கூறி சிரித்தவள் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாள்.
அலுவலகம் கொடுத்த வீட்டில் செட்டில் ஆவதற்கு ஒரு நாள் முழுவதும் பிடித்தது . பின் படிபடியாக வானதியின் கோபமும் குறைந்தது. இதனை கவனித்திருந்த உஷா வைஷூவிடம் குறைபட்டார்.
” குல்லுக்கு வரவர உன்னை போலவே கோபம் வருது . இது நல்லதுக்கு இல்லை பொம்பள பொண்ணு இப்படி இருக்கறது சரியா ?”.உஷா
“அத்த அவளுக்கு வந்தது கோபம் இல்ல அத்த வருத்தம் . அவளோட பிரண்ட விட்டு வந்ததால இந்த வருத்தம் .”வைஷூ
“அதானே உன்னை கேட்டா இப்படித்தான் சொல்லுவ “உஷா
“அத்த பொண்ணுங்களுக்கு ஏன் கோபம் வரக்கூடாது ? ஏன் ஆம்பளைங்கு மட்டும் தான் கோபம் வரணுமா? ஏன் இது எழுதாத சட்டமா? அழுகை சந்தோஷம் போல கோபம் ஒரு உணர்ச்சி …. அத்த கண்டிப்பா மனுஷனா பிறந்த கோபம் வரும் நாம எல்லோரும் புத்தரும் காந்தியும் இல்லை சாதரண மனுஷங்க “என்று கூறினாள்
“அவ சின்ன பொண்ணுமா அவளுக்கு இப்போ போய் கோபம் வரணுமா? இத கேக்காமா இருக்கனும்குறியா” என்றார் உஷா ஆதங்கத்துடன்.
“இந்த வயசுல கோபபடக் கூடாதுதான் அத்த. ஆனாலும் என் பொண்ணுக்கு இது எல்லாம் சொல்லி கொடுக்கனும். தப்புன்னு தெரிந்தா அந்த இடத்திலேயே ரியாக்ஷன காமிக்கனும் . என் பொண்ண தைரியசாலியாத வளர்க்க ஆசைபடுறேன் . அதனால இந்த கோபம் முதல் படியா இருக்கட்டும் . என்ன அத்த நீங்க என்ன சொல்றிங்க ?”
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? போதும்டியம்மா நீ எடுத்த பாடம்”என்றார் உஷா
கேளியாக
“அத்த நமக்கே அவங்கள விட்டு வர்றதுக்கு கஷ்டமா இருக்கும் போது பிறந்ததுல இருந்து கூடவே இருந்த அவள பிறியறது அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்”. என் பொண்ணு கோபபட்டா அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்றவள் . கண்களில் குறும்புடன் இதுக்கே வா இன்னும் இருக்கு அத்த அவளுக்கு நான் எடுக்கப் போற பாடம்” என்று சிரிப்புடன் கூறினாள் வைஷூ.
“சரி சரி உன் பொண்ணாச்சி நீயாச்சி எனக்கு எதுக்கு என்று தடையை நொடித்தவர் . இங்க பக்கத்துல இருக்க ஏதாவது கோயில காட்டு. நீ இல்லாத சமயம் நான் போய்ட்டு வரனும் இல்ல” என்றார் உஷா
அவர் கூறியதில் உஷாவின் கன்னத்தை கிள்ளி என் அத்தைக்கு கூட கோபம் வருதேம்மா ….என்று சிரித்தவள் . ஓகே..ஓகே… அத்தை சொல்ல நோ அப்பில் என்றவள் வீட்டின் அருகே இருக்கும் சிவன் கோவிலுக்கு கூட்டி சென்றாள்.
மும்பையில் High Class அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தனர் . கீழ் தளத்தில் சற்று தள்ளி departmental store மற்றும் பார்க் விளையாட்டு மைதானம் என சகல வசதிகளுடன் இருந்தது அந்த குடியிருப்பு.
மும்பையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொல்லாமல் இருக்க மெட்ரோ ரயில் பயணத்தை அமைத்து கொண்டாள் . இது புதுவித அனுபவமாக இருந்தது.
ஆரம்பத்தில் புது நண்பர்களுடன் பழக கொஞ்சம் காலம் வேண்டி இருந்தது . சின்ன சிரிப்பு ஹாய் ஹலோ என்றதோடு முடித்துக்கொண்டாள்.
தொடங்கிய பிராஜகட்களின் பைல்களை பார்த்து கொண்டிருந்த போது புது பிராஜக்டின் சைட்டை பார்க்க அந்த buildersன் மேனேஜர் வைஷூவை இன்டர்காமில் அழைத்தார்.
“மேம் நம்ம builders நீயூ பிராஜக்ட் ஆரம்பிக்க இருக்க சைட் போய் பார்த்தட்டு வரணும் . உங்களுக்கு இப்போ ஏதாச்சும் வொர்க் இருக்கா மேம்? ” என்றார் மேனேஜர்.
“ஹோ….. மிஸ்டர் ராய் இப்போவே போகனுமா கொஞ்சம் வோர்க் பெண்டிங் இருக்கு “என்றாள் ஃபைல்களை பார்த்துக் கொண்டே ஹிந்தியில் .
“ஓ அப்படியா மேம்….. இடத்தோட ஓனர் வரார் மேம் உங்களுக்கு இன்ட்ரோ பன்னலாமுன்னு… அப்படியே அவரோட திங்கிங்ல பில்டிங் எப்படி வேணும்னு தெரிஞ்சா உங்களுக்கு யூஸ்புல்ல இருக்கும் மேம் அதுக்குதான் இப்போ கேட்டேன் “மேனேஜர் ராய்.
” ஒகே …மிஸ்டர் ராய் 10 மினிட்ஸ் வைட் பண்ணுங்க வரேன்”என்றாள் நிமிர்வுடன்
“ஓகே மேம்…..நம்ம கம்பனி கார் யூஸ் பண்ணிக்கலாம் மேம் நான் அங்க வைட் பண்றேன் வாங்க ” மேனேஜர் ராய்.
நடையில் ஒரு வேகத்துடன் வந்தவள் “Shall we go மிஸ்டர் ராய்” என்று நின்றிருந்த காரில் பின் பக்க கதவை திறந்து கொண்டு ஏறினாள்.மறுபக்க கதவை திறந்து மேனேஜர் ராய் ஏறினார். பிராஜக்டின் பிளான்களை பற்றி பேசியபடி இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அது மும்பையில் மத்திய பகுதியில் இருந்து 20 நிமிட பயணத்தில் அமைந்த இடத்தில் NATTIONAL BUILDERS என்ற பெயர் பலகையை தாங்கி நின்றது
அதே நேரத்தில் பல கலவையான எண்ணங்களுடன் எதிர்காலத்தை நோக்கி பயணத்தை துவங்கி இருந்தான் கௌஷிக். தன் மனதிற்கு நெருக்கமானவளை சந்திக்கும் தருணம் அவள் எப்படி எடுத்தக் கொள்வாள் என சிந்தித்துக் கொண்டே காரை செலுத்தினான்.
வைஷூ வந்து சேர்ந்து 15 நிமிடங்கள் கழித்து இடத்தின் காம்பவுண்டுக்குள் நுழைந்து சீறி பாய்ந்து கொண்டு வந்தது அந்த வெளிநாட்டு விலை உயர்ந்தவகை கார்.
மேனேஜருடன் இடத்தினை பற்றிய டிடைல்ஸ் கேட்டுக்கொண்டிருந்தவளின் கவனத்தை ஈர்த்தது அந்த சத்தம் .