அத்தியாயம் 1
அங்காள அம்மா என்ன காப்பாற்று உன்ன நம்பித்தான் நான் இருக்கேன் அவன்கிட்ட இருந்து என்னை காப்பாற்று என்று தன் இரு கரங்கள் கூப்பி வேண்டி கொண்டு இருக்கிறாள் நம் கதையின் நாயகி இசை
திடீரென தன் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் தோன்ற சட்டென்று தன் கண்களை திறந்து பார்த்தால் யாரோ ஒருவன் அவளுக்கு மஞ்சள் தாலி கட்டி கொண்டு இருந்தான்…
அவளால் அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாரோ ஒருவன் தனக்கு புருஷன் என்று நினைக்கும் போதே அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை
வாழ்நாளில் திருமணம் வேண்டாம் என்று இருந்தவள் இன்று திடீர் திருமணம் அவளை திக்குமுக்காட செய்தது …
அவனை நேராக பார்த்தால் அவன் கண்கள் கோபத்தில் கனல் கக்கும் தீயைபோல் இருந்தது ..
அவன் எண்ணம் முழுவதும் அவள் பக்கத்தில் நிற்கும் மனோகர் மீதே இருந்தது ..
என்ன மாமா இப்போ என்ன பண்ணுவீங்க இனி அவ இந்த காட்டுமிராண்டி யோட பொண்டாட்டி .
அவ இங்கதான் இந்த கிராமத்தில் தான் வாழ்ந்து ஆகணும் என்று அழுத்தமாக கூறினான்
உங்க வீட்டு மகாராணி இனி என்வீட்டு வேலைக்காரி என்று கோபமாக கத்தினான் நம் கதையின் நாயகன் அன்பினியன்… பெயரில் மட்டுமே அன்பு, இனிமை கொண்டவன் செயலில் ருத்ராமூர்த்தியாக விளங்குபவன்…
இங்க பார் இனியா நீ நினைக்குற மாதிரி என்று பேச ஆரம்பித்த மனோகரின் குரலை பாதியில் நிறுத்தி ..
அப்பா வேண்டாம்பா…
நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்
இல்ல மா நா சொல்ல வருவதை கொஞ்சம் கேளு
இல்ல பா இனிமேல் இதுதான் என் வாழ்க்கை
மனோகர் சிறிது நேரம் யோசித்த பின் நீ எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும் ஆனால் எதுக்கும் இன்னோரு முறை ஆலோசித்து பார் இசை இது உன் வாழ்க்கை … பழிவாங்க உன்னை அவன் திருமணம் செய்து கொண்டான் வேண்டாமா ….
அப்பா இது கடவுள் போட்ட முடிச்சு இதை யாராலும் மாற்ற முடியாது … ஆம் இந்த முடிச்சு 13 வருடத்துக்கு முன்பே போட பட்டது..
இனி உன் இஷ்டம் மா என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த கோவிலை விட்டு அகன்றார் மனோகர்..
யாரும் இல்லாத தனி காட்டில் மாட்டி கொண்டது போல தோன்றியது இசைக்கு.
தன் அருகில் நின்று கொண்டு இருப்பவனை பார்த்தால் அவனோ எந்தஒரு உணர்ச்சியும் இல்லாமல் எதிரில் நிற்கும் மூன்று இளைஞர்களை பார்த்துக்கொண்டுஇருந்தான்
யார் இவர்கள் இவனுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது.. அதிலிருந்து ஒருவன்
அண்ணா ஏன் இப்படி பண்ண .ஆச்சிக்கு தெரிந்தால் என்ன ஆகும் கொஞ்ச கூட யோசிக்க மாட்டியா நீ இப்படி யாருமில்லாம கல்யாணம் பண்ணிக்குற அளவுக்கு என்ன அவசரம்.என்று கூறினான் தன்னை விட நான்கு வயது சிறியவனான கவிநேயன்
கவி நா சொல்றத கொஞ்சம் கேளு டா இவள் யாரென்று தெரியுமா நம்ம அம்மாவை கொன்ற மனோகரின் மகள் என்று கூறினான்
இவன் என்ன சொல்கிறான் மனோ அப்பா அத்தைய ஏன் கொல்ல வேண்டும் என்று யோசித்தால் ..
அய்யோ புலியிடம் இருந்து தப்பித்து சிங்கத்தின் குகையில் மாட்டி கொண்டனே
நான் நினைத்தால் இந்த தாலியை கழற்றி அவன் முகத்தில் வீசிவிட்டு செல்ல முடியும் ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுக்கிறது
இது தான் இசை எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று முடிவு எடுகமாட்டால் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பவள் .
மனோ அப்பாவுக்கும் இவனுக்கும் என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அவன் கண்களை கூர்ந்து கவனித்தால். அதில் அவள் கண்டது வாழ்நாளில் மறக்கவே முடியாத சோகம் அவன் கண்களில் தெரிந்தது
அண்ணா இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி அண்ணிய கூட்டிட்டு வீட்டுக்கு வா என்று சொல்லி அவர்கள் மூவரும் சென்றனர்.
வா என்று கூட சொல்லாமல் அவன் முன்னே செல்ல இனி இப்படி தான் என் வாழ்க்கை என்று நிதர்சனத்தை புரிந்து கொண்டு அவன் பின்னால் சென்றால்
அவன் தன்னுடைய வண்டியில் அமர்ந்து வண்டியின் கண்ணாடி வழியே அவளை பார்த்தான்…
நிலா போன்ற முகம். பால் நிறம் காதில் சிறிய சில்வர் தோடு.ஒரு கையில் வாட்ச் அந்த வாட்சை அவன் கவனித்து இருந்தால் அதன் மதிப்பு அவனுக்கு தெரிந்து இருக்கும் பட் அவன் கேட்ட நேரம் அவன் அதை கவனிக்கவில்லை.. கண்ணை உறுத்தாத லைட் சாக்கலேட் கலர் முழு கை சுடிதார் அணிந்து இருந்தால் .. ஏதோ ஒன்று குறை என்று தோன்றியது அவனுக்கு . ஆம் இசை எப்போதும் நெற்றியில் பொட்டு வைக்கமாட்டால் அது தான் குறை . சுற்றிலும் பார்த்தான் பின் தன் வண்டியில் இருந்து அவள் அருகில் சென்று கோவில் வாசலில் அனைவரும் கொட்டிவிட்டு செல்லும் குங்குமம் எடுத்து அவள் நெற்றியிலும் வகுட்டிலும் வைத்தான் அவன் செய்ததை அவள் கவனிக்கவில்லை அவள் கவனம் முழுவதும் அவன் வண்டியின் மேலே இருந்தது… ஏன்னா இசை ஒரு பைக் பைத்தியம் …
அவன் வைத்துஇருந்தது ஓல்ட் மாடல் டீசல் புல்லட் அதை இப்போதைய ட்ரெண்ட்க்கு ஏற்ப மாற்றியிருந்தான்.. வாவ் சூப்பர் இதுமாறி பைக் நான்P பார்த்ததே இல்ல என்று அவள் எண்ணி கொண்டு இருக்க
அவன் பைக்கில் ஏறி அமர்ந்து ஹாரன் அடித்தான் .. அதில் சுயநினைவு பெற்றவள் தானும் ஏறி அமர்ந்து கொண்டாள்
அவள் இரண்டு பக்கம் கால் போட்டுஉட்கார போக இவன் ஒருபக்கம் கால் போட்டு உட்கார்ந்து வா என்று கத்தினான்…
இருவரும் தங்கள் இல்லத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்
இந்த பயணம் தொடருமா இல்ல முடியுமா ??????????
Preformatted text