விழி மொழியாள்… பகுதி 5

0
637

விழி மொழியாள்… பகுதி,,5

அம்மா.. நா மாமி வீட்டுக்கு போய்ட்டு வரேன்.

ஹ்ம். சரி போய்ட்டு சீக்கிரமா வா.

சரிம்மா…. “

மாமி…
வாடி குழந்தை…. ஏண்டி முகமெல்லாம் வாட்டமா இருக்கு.

அண்ணா வந்திருக்கு.

ஆமா டி குழந்தை கோதை சொன்னா இப்போ என்ன அதுக்கு.

நாங்க எல்லாம் இந்த ஊரை விட்டு போறோம் மாமி.

என்னடி சொல்லுற….?

ஆமா மாமி அதான் அண்ணா வந்து இருக்கு.

ஓஹோ அதான் கோதை முகம் வாட்டமா இருந்துச்சா.

சரிடி குழந்தை …. அந்த புள்ளையாண்டான் நல்ல புள்ள தான் அம்மா கஷ்டப்பட்டது போதும்னு கூப்பிடுறான். நல்ல படியா ஷேமமா இருங்கோ… கண்கலங்கியபடி சொன்னாள் மாமி.

ஏண்டி குழந்தை உன் சிநேகிதி கிட்ட சொலிட்டியோ.

இல்ல மாமி நாளைக்கு ஸ்கூல் போகும் போது சொல்லிக்கிறேன்.

அதுவும் சரிதான் … குழந்தை நா ஒன்னு கேட்ட தப்பா எடுத்துபியா …

ஐயோ மாமி நீங்க கேட்டு என்னைக்கு நான் தப்பா எடுத்துட்டு இருக்கேன் என்ன பத்தி தெரிஞ்சிட்டே கேக்குறீங்களே… போங்க மாமி.

இல்லடி குழந்தை ..உன் சிநேகிதி அண்ணா வந்து இருக்காப்ல.

மாமி இத சொன்னதும் ….
கயல் முகம் சிவந்து விட்டது… ஹ்ம் ஆமா மாமி…

பாத்து பேசுனியா..

இல்ல… ” மாமி.

அந்த புள்ளையாண்டன பாத்தா நல்ல புள்ள மாதிரி தான் தெரியுது அப்பறம் ஏண்டி குழந்தை பயப்படுற.

அவர் நல்லவர் தான் மாமி. என்னமோ தெரில மனசுக்குள்ள ஒரு பயமா இருக்கு..மாமி .தப்பு பண்ணுறோமோனு.

அடி அசடு.. என்ன பயம் நோக்கு .அந்த புள்ள நீ படிச்சி முடிச்சதும் கட்டிக்கிறேன்னு தான சொன்னான்.. நான் பாத்த வர அவா குடும்பம் .. நல்ல குடும்பம்மா தெரியறது.

மாமி நான் படிக்கணும் இப்போ எதுக்கு இதெல்லாம் பேசணும் விடுங்க..மாமி .

இப்போ அது இல்ல மாமி பிரச்சனை.. நாளைக்கு நான் சந்தியா வீட்டுக்கு போறேன்… திலகம் ஆண்ட்டி வர சொன்னாங்கலாம்.

போய்ட்டு வாடீ குழந்தை….

போகலாம் தான்,
ஆனா அவர் இருப்பாரே….

இருந்தா என்ன நோக்கு…?

அது வந்து… மாமி

ஏதோ ஒரு தயக்கம்மா இருக்கு மாமி.

நாங்க .. ஊரைவிட்டு போறோம்னு சொன்ன
எப்படி எடுத்துப் பார்னு தெரிய ல மாமி அத விட என் தோழிய விட்டு எப்படி இருக்கபோறேன்னு தெரியல….. …

மாமி மனதிற்குள் சிரித்துக் கொண்டே கயல் விழியை பார்த்தாள்.

மலர் போல மென்மையான மனம் கொண்டவள் கயல்.
தான் அழகாக இருக்கிறோம் அதுவும் பேரழகுடன் இருக்கிறோம் என்பதை கூட … உணராமல் இருக்கும் வெள்ளை மனசு தான் கயல்விழியை இன்னும் அழகாக காட்டி கொண்டிருந்தது.

இந்த அழகால் தான் தன் வாழ்க்கை திசை மாற போகிறது என்று தெரிந்து இருந்தால் வரும் இன்னல்களை தவிர்த்து இருப்பாள்.

விதியை மாற்ற யாரால் முடியும்? விதியின் விளையாட்டு என்றால் எதிர் கொள்ள தான் வேண்டும்.இது சதியின் விளையாட்டுயல்லவா….. சூழ்ச்சியால் பின்னபடும் வலையில் சிக்கிக் கொண்டுதவிக்க போகிறாள்….. தொடரும்…….?FB_IMG_1550576435196|690x297 FB_IMG_1550576435196|690x297

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here