டாக்டர்,”ஐயம் சாரி சிவா.. அவங்களுக்கு ஹெவியா பிளட் லாஸ் ஆயிருக்கு அண்ட் ஸ்பைன்ல வேற அடிபட்டுருக்கு அவங்களுக்கு நினைவும் இன்னும் திரும்பல.. அதுவுமில்லாம அவங்க ஸ்பைன் பிராப்ளேம் எவ்வளோ டைம் எடுக்கும்னு சொல்ல முடியாது” என்று தயங்கியவாறே உரைத்தார்..
டாக்டர் கூறும் போதே பார்வதி மயங்கி விழ ராஜா தான் அவரை தாங்கி பிடித்தார்… அவர் விழியில் உள்ள கலக்கம் சிவாவை ஏதோ செய்ய அவரை திடப்பொருத்தும் பொருட்டு சிவா பார்வதி அம்மாவை அருகில் உள்ள சேரில் அமர வைத்தவன் அங்கிருந்த வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை அவர் முகத்தில் அடிக்க ராஜா அவர் முகத்தில் தட்டி எழுப்பினார்..
அதில் கண்விழித்த பார்வதியோ அவர் கையை பற்றிக்கொண்டு,” என்னங்க நம்ம பொண்ணு எப்பிடி இருக்கானு பாருங்க.. துறுதுறுனு இருந்த நம்ம பொண்ணு பேச்சு மூச்சு இல்லமா படுத்து கிடக்கராங்க”என்று அவர் கதறிய கதறல் சிவாவின் காதில் எதிரொலித்துகொண்டே இருந்தது..
ராஜா,”பாரு.. நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகாது அவ நல்ல மனசுக்கு சீக்கிரமே குணமாகி வருவா.. அவளை பாத்துக்கறதுக்காகவாது நீ தெம்பா இருக்கணும்..”
அவரருகில் வந்த சிவா,”அங்கிள் நீங்க தைரியமா இருங்க.. தனுவுக்கு ஒன்னும் ஆகாது அவளுக்கு எதுவும் ஆகவும் விடமாட்டேன் ஆனா இப்போ இவ இங்க வந்து படுத்துகிடக்கறது என்னால தான்” என்றான் மனதை மறையாது
ராஜா பதட்டத்துடன் சிவாவை பார்க்க அவனோ,” அவளுக்கு யாரு அங்கிள் எதிரிங்க இருக்க போறாங்க”என ஆரம்பித்தவன் இருவருக்கும் இடையில் நடந்த காதல் போராட்டங்களை உரைத்தவன் என்னை பழிவாங்க நடந்த சதிதிட்டத்தில் தான் அவளுக்கு இப்படி நடந்தது என்று கூறிமுடித்தான்..
ராஜாவுக்கும் பார்வதிக்கும் பதில் கூற முடியாத நிலை.. தன் மகள் ஒரு ஆடவணை இந்த அளவுக்கு நேசித்திருக்கிறாளா?? என்ற எண்ணம் எழ அவன் கூறிய அனைத்தும் கண் முன் நிழலாட தன் மகள் படிப்பிற்காக அவளை ஒதுக்கி வைத்ததும்,உண்மையை மறைக்காமல் தன் மகளின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்று குற்றஉணர்வில் துடிப்பதும், தங்களை வரவைக்கும் சூழ்நிலையை அவன் கையாண்ட விதமும் ஆராவின் பெற்றோரை ப்ரமிக்க வைத்த்தது..
அதிலேயே அவர்களுக்கு தன் மகளின் தேர்வு சரிதான் என்ற எண்ணம் அவர்களுக்கு எழாமல் இல்லை..
பார்வதி தான் முதலில் பேச ஆரம்பித்திருந்தார்,”தம்பி எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. எங்க பொண்ணு நல்ல படியா திரும்பிவந்து உங்க கூட சந்தோஷமா இருந்தாலே போதும்”என கண்கலங்க அவரின் தோளை பற்றி சமாதான படுத்திய ராஜா அதை ஆமோதிப்பதாய் தலை அசைத்தார்..
சிவா,”என்னோட நிலைமை யாருக்கும் வந்திருக்காது.. எங்க நீங்க என்னை தப்பா நினைச்சுருவிங்களோன்னு பயந்துட்டே இருந்தேன்.. இந்த இடத்துல உங்களை தவிர வேற யாராவது இருந்திருந்தா என்ன பண்ணிருப்பாங்கனே தெரியாது”என்று ராஜாவின் கையை பற்றினான்..
ராஜா அவன் கையை தட்டிக்கொடுத்து , “எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு தான்பா.. அவ சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்… இதுக்கு மேல கடவுள் விட்ட வழி”
பார்வதி,”தம்பி எங்க பொண்ணு எங்களுக்கு திரும்பி கிடைச்சாலே போதும்”
சிவா,”மாமா, அத்தை என் தனு கண்டிப்பா நல்லபடியா வருவா.. நீங்க கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சுட்டு அவ கண்முழிக்கறதுக்கு முன்னாடி இங்க இருப்பேன்” என்று உரைத்துவிட்டு சென்றுவிட்டான்..
நேரே அலுவலகம் சென்றவன் ஆதவ் சேகரித்த தகவலை வைத்து தன் ஆட்டத்தை தொடங்கினான்…
அவன் ஆடிய ஆட்டம் முடிவுறும் நிலையில் அங்கே நிஷாந்த் கத்திக்கொண்டிருந்தான்..
நிஷாந்த்,”டேய் சிவா….”என கத்தியவன் அருகில் இருந்த பிளவர் வாஷை எடுத்து தன் எதிரே இருந்த நிலைகண்ணாடியின் மீது எறிந்தான்..
பின்னே சிவாவின் கைங்கர்யத்தால் அவன் முகத்தை அவனாலேயே பார்க்க முடியாமல் வெட்கினான்.. பாவம் இப்போது உடைந்து சிதறிய அத்தனை சில்லுகளிலும் அவன் முகம் பார்க்கும் போதெல்லாம் சிவாவின் எள்ளி நகையாடும் முகம் அவனை இம்சித்தது..
பொறுமையை காக்க முடியாமல் சிவாவிற்கு அழைக்க அதற்காகவே காத்திருந்த சிவா எடுத்தவுடன் கர்ஜனையுடன்,”என்ன நிஷாந்த்.. நீ எதுக்காக உன் அடையாளத்தை மறைச்சு இங்க வந்தயோ அதோட அஸ்திவாரம் இப்போ தான் சாய ஆரம்பிக்குது.. முடிஞ்சா போயி தடுத்துக்கோ.. இனி உன் சுப்ரமணியம் டெக்ஸ் மீண்டு வரது கடவுளால கூட முடியாது”
நிஷாந்த் திமிருடன்,”என்ன சிவா நான் என்ன என் டெக்ஸ்டைல் பிசினஸ் மட்டுமேவா நம்பி இருக்கேன்”
சிவா பலத்த சிரிப்பொலியுடன்,”எஸ் நீ அதை மட்டும் நம்பி இல்லை.. ஆனா உன் வேர் அங்க தான் இருக்கு.. இப்போ உன்னை வேரோட புடுங்க போறேன்..”
மறுமுனையில் சிவா என நிஷாந்த் அலற அவனை ஒற்றை குரலில் அடக்கிய சிவா,” நீ நல்லவனா இருந்தா என் கூட நேருக்கு நேர் மோதி இருக்கனும் இது வேற யாருக்கு நடந்து இருந்தாலும் உன்னை விட்ருக்க மாட்டேன், ஆனா நீ என் உசுரையே உரசிபாத்துட்ட இனி உன்னை சும்மா விடுவேன் நெவர்…”
நிஷாந்த் சற்றும் ஆணவம் குறையாமல்,”இன்னும் அவ மீண்டு வரல தெரியும்ல.. அதுக்குள்ள இந்த வீர வசனம் எல்லாம் உனக்கு தேவையா”
சிவா,” அதெல்லாம் நீ யாருன்னு எனக்கு தெரியாத வரைக்கும் தான்.. ஆனா இப்போ உன் ஜாதகம் என் கையில.. அண்ட் அவளை எப்படி திரும்ப கொண்டுவரணும்னு எனக்கு தெரியும்.. இனிமே இந்த ருத்ரா கூட சேந்து கேவலமா பிளான் போடாத.. ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் மை கேம் ப்ரோ”என்று அழைப்பை துண்டித்தான்..
அவனுடன் பேசி முடித்தவன் மடிக்கணினின் திரையை பார்க்க அதில் பிளாஷ் நியூஸ் “சுப்ரமணியம் டெக்சில் கஞ்சா விற்பனை.. நிறுவனர் தொழில் தொடர்பாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருப்பதால் அவர் வரும் வரை இந்த நிறுவனம் தற்காலிகமாக மூடப்படும்” என்ற தலைப்பு செய்தி ஓடிக்கொண்டிருந்தது…
அங்கோ நிஷாந்திற்கு ஐ எஸ் டி அழைப்பு அவன் அலைபேசியின் தொடுதிரையில்…. ஆனால் அவன் அழைப்பை ஏற்கவில்லை
அழைப்பின் பின்னணியில் யார்????