கண் விழிக்கையில் கண்ட உருவம் பானுவின் முகமாய் இருக்க அந்த காலை வேளையில் குளித்து அழகான கரும்பச்சை பட்டுடுத்தி தலைவாரிக் கொண்டு இருந்தாள். முகத்தில் தோன்றிய புன்னகையோடு குட் மானிங் பானு என கூற…
சிரித்தபடி பதில் கூறியவள் நீ இப்ப எழுந்திருக்கலன்னா நானே எழுப்பி இருப்பேன். அத்தை ரெண்டு தடவை வந்து பார்த்துவிட்டு போயிட்டாங்க. லேட்டா தூங்கினதால போனா போகுதுன்னு உன்னை எழுப்பாம விட்டேன்.
எழுந்தவன் ஐந்தே நிமிடம் இப்ப வந்துடறேன். சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வந்திருந்தான். ஏற்கனவே அவனுக்கான உடையை எடுத்து வைத்திருக்க எடுத்து அணிந்தவன் வேக வேகமாக ரெடி ஆனான்.
கதிர் நான் கீழே போய் சாப்பிட எடுத்து வைக்கிறேன். வந்துவிடு…
இரு பானு. ஒரு நிமிடம் நில்லு …
என்ன…
இந்தா இந்த சாரி கொசுவம் சரி பண்ணி விடறேன். இயல்பு போல குனிந்தவன் அவளது கொசுவ மடிப்புகளை இயல்பாய் சரி செய்து விட… அதே நேரம் அண்ணி என அழைத்தபடி உமா கதவை திறந்தாள். ஒரு நிமிடம் பார்த்தவள் ஸாரி தப்பான நேரத்தில் வந்திட்டேனோ.. திரும்பியபடி கூற…
ஏய் வாழு அதெல்லாம் இல்ல. இந்தா உன் அண்ணி கூப்பிட்டுட்டு போ. நான் பின்னாடியே வரேன். பானுவோடு உமா பேசியபடி நகர்ந்து சென்றனர்.
என்ன உமா. ஏதாவது செய்யணுமா…ஏன் தேடி வந்த…
இந்த டிரஸ்சுக்கு மேச்சா இருக்கறமாதிரி தலை வாரி விடணும். பூ புசுசா டிசைனா வாங்கி வந்து இரூக்கறாங்க. அதுல எது நல்லா இருக்குண்ணு சொல்லுங்க…வாங்க அண்ணி. அதே நேரம் போன் வர…
நீங்க உள்ள போங்க வந்திடறேன்…
ஹலோ ஈஸ்வர் அண்ணா எங்க இருக்கறிங்க. இன்னும் நீங்க இங்கே வரல. அண்ணா கூட வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்.
வந்துட்டேன்மா. இன்னும் அரைமணி நேரம் உன் முன்னாடி இருப்பேன். அப்புறம் அண்ணா அண்ணி என்ன சொல்லறாங்க…
நல்லா இருக்கறாங்க. அவங்க ரெண்டு பேரையுமே பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. இவங்களை பார்த்தா போதும் கல்யாணம் பண்ணாம இருக்கற எல்லோருக்கும் கல்யாணம் பண்ணிக்கற ஆசை வரும்.
கேட்கும் மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு.ஒரு மாதிரி படபடன்னு அடிச்சுகுதுமா. அவ்வளவு சந்தோஷம். மனதிற்குள் எப்படிடா இப்படி நடிக்க முடியுது ரெண்டு பேராலையும்….
என்னண்ணா பேசிட்டேதான் இருப்பிங்களா. எப்ப வருவீங்க.
வந்துட்டேன்டா ஐந்து நிமிடம். ….
சரிண்ணா வைக்கிறேன். அண்ணி அண்ணி என அழைத்தவாறு அறைக்குள் நுழைந்தாள். எடுத்துட்டிங்களா… இது நல்லா இருக்குமா…
பேசியபடி அவளுக்கு தேவையானதை எடுத்து தந்து கொண்டிருந்தாள் அவளுடைய அழங்காரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பெண்ணிடம்… சற்று நேரத்தில் அழங்காரம் முடிய தேவதையை போல் அவ்வளவு அழகாக இருந்தாள் உமா ..
அழகா இருக்கற உமா. என் கண்ணே பட்டுடும். அம்மாவை கூப்பிட்டு சுற்றி போட சொல்லணும். கோல்டன் பார்டரோடு உமா மின்ன பானுவோ பச்சை நிறத்தில் மின்னினாள்.
அப்போது உள்ளே வந்த மீனாவோ உமாவின் அழங்காரத்தையும் பானுவின் அழங்காரத்தையும் பார்த்தவர் திருப்தியோடு… பானு தட்டு மாத்திரத்துக்கு தேவையானதை எடுத்து வை. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க. கூறிவிட்டு செல்ல… பானுவோ உமா… எனக்கு புரியலை. எதை எடுத்து வைக்கணும்.
இருங்கண்ணி என்றவள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வெற்றிலை பாக்கு பூ பழம் இருந்த தட்டை எடுத்து தந்தவள் இத தான் எடுத்து வைக்க சொல்லறாங்க. கேட்டதும் எடுத்து குடுங்க.
சற்று நேரத்திற்குகெல்லாம் உறவினர்கள் ஒவ்வொருவராய் வர கலகலப்பு தொற்றிக் கொண்டது. பானு உமாவை விட்டு எங்கேயும் நகரவில்லை. ஆனாலும் வயதில் மூத்த ஒரு உறவினர் வந்து… என்ன உமா உன் அண்ணண் பொஞ்சாதிய எங்க கிட்ட காட்ட மாட்டியா. நீயே பக்கத்தில் வச்சிக்கற… நீ தானா அந்த பொண்ணு. அழகாதான் இருக்கற. கோவில் சிலையாட்டம். முன்னாடி வந்து பயப்படாமல் நில்லு …
திருஷ்டி எடுப்பது போல் நெட்டி எடுத்தவர் நல்லா இருக்கும் என்ற வாழ்த்தோடு கிளம்ப….
இங்கே அப்படிதான் அண்ணி. மனசுல எதையும் வச்சுக்க மாட்டாங்க . ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பாவோட அக்கா வருவாங்க. அவங்க கிட்ட இந்த மாதிரி வாழ்த்த கேட்க முடியாது…
ஏன் அப்படி….
அவங்களுக்கு அவங்க பொண்ண அண்ணா தலையில் கட்டணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. அத தான் நீங்க தடுத்துட்டிங்களே… கூடவே இருங்க. சொல்லாமல் எங்கேயும் போக கூடாது…
உமா சொன்னது போலவே சற்று நேரத்தில் வந்தவர் இவளோடு வம்பு இழுப்பது போல் பேச அங்கு வந்த மீனாவோ இந்தா பானு முன்னாடி கதிர் இருப்பான் அவன் கிட்ட இந்த சாவியை கொடுத்து அவன் கூட போய் தட்டுக்கு வைக்க பணம் எடுத்துட்டு வா …
நீயும் இந்த வீட்டுக்கு உரிமை உள்ளவள் தான் என்பதை சொல்லாமல் சொல்லி சென்றார் கதிரின் தாயார்.
கையில் தந்த சாவியை பார்த்தபடி நின்றிருந்தாள் பானு.
தொடரும்.