ஒரே சீரான ரெயிலின் ஓசை தாலாட்டு பாட ஜன்னலோர இருக்கையில் சாய்ந்த படி கண் மூடி இருந்தாள் பானு. பக்கத்து இருக்கையில் கதிர் அமர்ந்திருக்க கண்மூடியவளின் கண்களில் கதிரை முதலில் பார்த்தது கண் முன்னே படமென
விரிந்தது. காலேஜ் துவங்கி சில நாட்கள் முடிந்திருக்க அவளது அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். காரிடாரில் ஒருவன் ஓரு பெண்ணை திட்டிக்கொண்டு
இருப்பது தெரிந்தது. முதுகு புறம் மட்டும் தெரிய அந்த பெண்ணிடம்….
அறிவு இருக்கா…. படிக்க தான் வர்ற .
இத்தனை பசங்க படிக்கிற இடத்துல இப்படி தான் டிரஸ் போட்டுட்டு வருவியா…இப்படி பார்த்தா என்ன மரியாதை வரும். இஷ்டம் போல அட்வைஸ் செய்து கொண்டு இருக்க….
தான்டி போக மனம் இன்றி அவனையே பார்க்க ஆரம்பித்தாள் பானு…
சரியான அட்வைஸ் பண்ணற ஆளு போல… மனதிற்குள் நினைத்தவள். தன்னை அறியாமல் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
அதே நேரம் அருகில் வந்திருந்த ஈஸ்வர்
இங்கே என்னடா பண்ணற. உள்ள போகலாம் வா. பானு நிற்பதை பார்த்தவன் இங்கே என்ன வித்தையா காட்டறாங்க. அப்படி பார்க்கிற…. போ கிளாஸ்சுக்கு…
சற்றே பின் தங்கி வந்த திவ்யாவோ ஏய்
ஏன் இங்கே நின்னுட்ட. .. வா போகலாம்.
ப்ரோ கொஞ்சம் வழி விடுங்க.. அப்போது
இவளின் சத்தம் கேட்டு திரும்ப முதல் முதலாய் அவனை பார்த்தாள். ஓரளவு உயரம் கண்டிப்பான கண்களோ… சிரித்த முகம் அடர்ந்த தலைமுடி என நட்பாய் பழக
அழைக்கும் தோற்றம். ..
ம்…ம் நகர்ந்து வழிவிட ஈஸ்வரோ திவ்யாவை பார்த்தபடி நீ எந்த டிப்பாட்மெண்ட்…
அடுத்தது என பானு சொல்ல…
உன் கிட்ட கேட்டனா… எந்த ஊரு உனக்கு…
ஈஸ்வரை பார்த்தபடி ஆந்திரா பக்கம் ஏன் கேட்டகற. அவனோ அவளது முகத்தை பார்க்க… தமிழ் நாட்டு காரங்கல தவிர வேற ஊர் காரங்க கிட்ட சார் பேச மாட்டாங்களோ….இவனை தெலுங்கில் திட்டியபடி பானு அழைத்து கொண்டு அடுத்து இருந்த அவர்களது கிளாஸ் ரூமிற்கு அழைத்து சென்றாள்.
போனவளையே பார்க்க… ஏண்டா அந்த பொண்ணு கிட்ட அப்படி கேட்ட…
பார்த்து பழகின முகமாக தெரிஞ்சுது. அது தான் யார்ன்னு கேட்டேன். வா போகலாம். இதை கேட்டபடி நடந்தவளோ….ஏன் உனக்கு பார்த்த மாதிரி தெரியாது. சின்ன வயசுல கையில் இருந்த எல்லாத்தையும் புடிங்கி சாப்பிட்டவன் தான நீ….
அன்று மட்டும் அல்ல அடுத்தடுத்த நாட்களிலுமே பானு பார்க்கும் போது கதிர் பெரும் பாலும் யாருக்காவது அட்வைஸ்
செய்து கொண்டு இருப்பதையே….
சற்று தூரத்தில் நின்று கவனிப்பதோடு சரி. அதற்கு மேல் இவளாய் நெருங்கி பேசியது கிடையாது. ஆனால் திவ்யாவோ நேர் எதிராய் இருந்தாள் பார்க்கும் போது எல்லாம் ஈஸ்வரை வம்பிலுத்தபடி…
பெரும் பாலும் இருவரும் அருகில் இருந்தாலும் பேசிக் கொண்டது இல்லை.
ஈஸ்வருக்கு பதில் சொல்ல முடியாத தருணத்தில் தெலுங்கில் ஏதாவது பேசி அவனை கடுப்படித்து கொண்டிருந்தாள் திவ்யா . ஏதேதோ மனதில் ஓட தன்னை அறியாமல் தூங்கி இருந்தாள் பானு. ஒருபுறம் சரிய ஆரம்பிக்க இதை பார்த்தவன் தனது மடியில் சரிய விட்டு கைகளால் விழுந்திடாதபடி பிடித்தவன் அப்படியே அவனும் தூங்கி போனான்.
காலை ஐந்து மணியை நெருங்க முதலில் விழித்தவள் கண் திறந்து பார்க்க இன்னமும் தூங்கி கொண்டு இருந்தான். கைகளை மெல்ல நகர்த்தி கதிர் என லேசாக அசைக்க விழித்தவன்…
என்ன பானு ஏதாவது வேணுமா…
இன்னும் ஊர் போக எவ்வளவு நேரம் ஆகும். அங்கே யார் எல்லாம் இருக்கறாங்க…
எதுவுமே சொல்லலை.. ஸாரி இந்தா தனது மொபைலை எடுத்தவன் ஒவ்வொரு புகைபடமாக காட்டி முக்கியமானவர்களை அறிமுகம் செய்தான். இடையில் விடியோ காட்சி ஒன்று வர இவன் முகம் பார்த்தவள் பார்க்கலாமா என்ன கேட்க…
ஓ… பாரேன் என ஓட விட்டான் இது என்னோட தங்கச்சி உமா… அது ஓரு பெரிய வாய்க்கால் கீழே தண்ணீர் சென்று கொண்டிருக்க தாண்டுவதற்கு பனை மரத்தை இரண்டாய் பிளந்து தற்காலிக மரப்பாலம் அமைத்திருக்க தங்கையை நடக்க விடாமல் மரத்தை ஆட்டி பயமுறுத்தி கொண்டிருந்தான் கதிர். அவளோ ஆட்டும் போது நின்று மறுபடியும் ஒரு அடி நடக்க
பார்த்தவள் தன்னை அறியாமல் முகம் புன்னகையில் மலர்ந்தது.
ஊங்க தங்கையை ரொம்ப பிடிக்குமா…
ம்… நம்ம வீடு தாமிரபரணி கரையோரம் விவசாயம் தான் தொழிலே .. நம்ம வீட்டுக்கு பின்னாடி தோட்டத்து வழியா பெரிய வாய்க்கால் போகுது. அது தான் இது.
மிச்சம் அங்கே போனபிறகு தெரிஞ்சுக்கலாம்.
சற்று நேரத்தில் இறங்கும் இடம் வர லக்கேஜ்ஜை தூக்கியவன். அம்மாவுக்கு
அப்பாவை எதிர்த்து பேசினா சுத்தமா பிடிக்காது. ஏன் நான் இது வரைக்கும் அப்பா முன்னாடி உட்கார்ந்து பேசினது இல்ல. மொத டைம் அவங்க கிட்ட உன்னை கல்யாணம் பண்ண போறேன்னு சொன்னது தான். இப்ப போறோம். சரி ஆகிடும்ன்னு நினைக்கிறேன்.
பேசியபடி வீட்டின் முன்பு வந்திருக்க ஒரு கையில் லக்கேஜ்ஜோடு மறு கையில் லேசாக நட்ங்கிய இவளது கைகளை அழுத்தி பிடித்தபடி வாசலில் நின்றான் கதிர்.
தொடரும்.