தம் தந்தையர்களிடம் பேச சென்றவர்கள், அவர்களுக்கு இந்த விசியத்தில் இருக்கும் தீவிரத்தை புரிய வைக்க எண்ணி அவர்கள் அறைக்குச் சென்றார்கள். உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நிர்பயா கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். இதை பார்த்த நிரஞ்சனாவுக்கும் இது அதிர்ச்சியே. இத்தனை வருடங்களாக தங்களை கடுஞ்சொல் கூட சொன்னது இல்லை அப்படி இருக்க இன்று தன் அன்பு தங்கையே தன் சித்தியே அடித்து இருப்பதைக் கண்டு கோபம் தலைக்கேற நின்றிருந்தாள்.
நிரஞ்சனா,” சித்தி என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அவ என்ன தப்பு பண்ணானு இப்ப அவள அடிச்சீங்க? இவ்வளவு வருஷத்துல அவள அடிச்சி இருக்கீங்களா? இப்ப மட்டும் எதுக்கு இப்பிடி?ஏன் இவ இதுக்கு முன்னாடி இந்த மாதிரி யாரையும் எதிர்த்தது இல்லையா? அப்ப எல்லாம் பெருமையா தானே பார்த்தீங்க?ஊர் நல்லா இருக்கனும்னு தானே இப்படி பண்ணும், இதுல நீங்களாம் என்ன தப்ப கண்டிங்க? உங்கள எல்லாம் கேக்காம நாங்க வக்கீல போய் பார்த்து பேசினது தப்பு தான் அதுக்காக இப்படியா?
சியாமளா, “இவ்வளவு நாளா நிர்பயாவை தேடி பிரச்சனைனு வந்து இருக்காங்களே தவிர இவளா போனது இல்ல அது தான் எங்க பயமே ஆசைப்பட்டானு படிக்க வச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப தோணுது.இங்க பாரு டீ இதே மாதிரி பேசிக்கிட்டு இருந்தேன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன், அளவாவது அடிச்சா நானா இருந்து இருந்தேன்னா உன்ன வெட்டி போட்டு இருப்பேன்.ஆனா, இப்ப உன்ன அடிக்க முடியாது ஏன்னா நீ இப்ப இன்னொருத்தருக்கு சொந்தமானவ அதனால தான் உன்ன எதுவும் பண்ணாம இருக்கோம். இரண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க, இந்த கூல்டிரிங்ஸ் கம்பெனி விவகாரமா நீங்க எங்கயும் போக கூடாது. இன்னியோட இந்த விசியதுக்கு தலைமுழுகுற வேலைய பாருங்க. என்ன புரியுதா?
நிரஞ்சனா, “அம்மா நீங்களும் நல்லா கேட்டுக்கோங்க, இந்த விசியத்தை நாங்க கைவிடுறதா இல்ல. இந்த ஊருக்கு எங்களால முடிஞ்ச நல்லத செய்யம விடமாட்டோம்.அட்லீஸ்ட் நான் விடமாட்டேன் என்ன புரியுதா? என்றாள் காட்டமாக.
கர்ணன்,” நிரஞ்சனா என்ன பேசுற நீ, இந்த ஊரு பெரியவங்க ஒண்ணும் முட்டாள் இல்ல, எடுத்தும், கவுத்தோம்னு முடிவு பண்ண, அவங்களாம் யோசிக்காம இதுக்கு சம்மதம் சொல்லி இருப்பாங்கன்னு நீ நினைக்கீறியா? , இவ்வளவு நாளா நம்ம நல்லதுக்கு தானே எல்லாம் பண்ணி இருக்காங்க. அப்ப இது கூட அப்படி தானே இருக்கும். அதனால இந்த விசயத்துல தலையிடாம இருக்கறது உனக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் நல்லது. திருவிழா முடிஞ்ச பிறகு உன்ன பத்துரமா ஊருக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கு.
நிரஞ்சனா, “அப்பா நீங்க என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்லை, இல்ல திட்டினாலும் பரவாயில்லை. இந்த கம்பெனிய இங்க வர விடமாட்டேன் என்றாள் தீர்க்கமாக. வா நிர்பயா என்று அவளை அழைத்து கொண்டு ஊர் தலைவரிடம் சென்றார்கள். அவர்கள் அங்கு வருவதற்கும் நித்யன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
ஐயா இவங்க நித்யன், வக்கீல் நம்ம ஊர்ல கூல்டிரிங்ஸ் கம்பெனி வரக்கூடாதுன்னு கோர்ட்ல கேஸ் நடத்த போறாங்க.
ஊர்தலைவர்,”இங்க பாருங்க தம்பி உங்களுக்கு வேலை இல்ல நீங்க கெளம்பலாம். நாங்க எல்லாம் கலந்து பேசிதான் இந்த முடிவெடுத்திருக்கும். எங்களுக்கும் நல்லது கெட்டது தெரியும். நீங்க வந்த வழியே போகலாம். இந்த சின்ன பசங்க பேச்சைக்கேட்டு நீங்க ஏன் இங்க வந்தீங்க? உங்க நேரத்தை வீண் அடிக்காதீங்க.
நித்யன்,” ஐயா நீங்க தப்பா புரிஞ்சிருக்கிறீங்க இந்த கம்பெனி இங்கு வரப்போறது நால எவ்வளவு நல்லது இருக்குன்னு அவங்க சொல்லி இருப்பாங்க. ஆனால், அதுல உங்க ஊருக்கு எவ்வளவு தீமை இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா?
ஊர் தலைவர்,”தம்பி நாங்க படிக்காதவங்க தான் ஆனால் உலக தெரியாதவங்க இல்லை இந்த கம்பெனி இந்த வந்துச்சுன்னா எங்க ஊர்ல நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் வெளியில போய் வேலை செஞ்சுகிட்டு இருக்க எங்க ஊரு இளவட்டப் பசங்க இங்க திரும்பி வருவாங்க அப்பா அம்மா கூட இல்லாம, கல்யாணம் பண்ண பொண்ண விட்டுட்டு வெளியே போய் சம்பாதிக்கறதுல, தான் பெற்ற பசங்கள கூட வாரத்துக்கு ஒரு நாள் வந்து பார்க்குற வாழ்க்கை எவ்வளவு கொடுமை தெரியுமா? அந்த வாழ்க்கை எல்லாம் இந்த கம்பெனியால மாறும்னா அது நல்லதுதானே?
நித்யன்,”சரிங்க அய்யா நான் உங்க வழிக்கே வரேன் இந்த கம்பெனி இங்க வரத்துக்காக ஒரு பத்திரம் மாதிரி ஏதாவது கொடுத்தாங்களா?இல்ல அந்த மாதிரி நீங்க எதுலயாவது கையெழுத்து போட்டு கொடுத்தீங்களா?
ஊர் தலைவர்,” ஆமாம் தம்பி நாங்க எல்லாம் அத படிச்சு பார்க்கல ஆனால் அவங்கள அதில் இருக்கிறது எல்லாத்தையும் விளக்கி சொன்னாங்க அதுக்கு அப்புறமா தான் நான் மட்டும் இல்ல ஊருல இருக்க பெரியவங்க எல்லாருமே கையெழுத்து போட்டோம்.
நித்யன்,” பைன் அப்ப அதில் என்ன எழுதி இருந்ததுன்னு நீங்க பாக்கல அப்படித்தானே?
ஊர் தலைவர்,”பார்த்தோம் தம்பி ஆனால் எங்களுக்கு புரியல.
நித்யன், “உங்களுக்கு புரியல சரி, அந்த நேரம் ஊருக்குள்ள ஒரு படிச்சவங்க கூடவா இல்ல என்று நிர்பயாவை பார்த்து கொண்டே கேட்டான்.
நிர்பயா, “அது என்ன? என்னை மட்டும் பார்த்து கேக்குறீங்க? ஊருக்குள்ள வேற யாரும் இல்லையா?
நித்யன், “சிரித்து கொண்டே, இருக்காங்க மிஸ் நிர்பயா. பி. ஏ. பி. எல்
பட் இதப்பத்தி உங்களுக்கு நல்லா தெரிஞ்சி இருக்கனுமே? நீங்க மேல்படிப்பு படிக்கீறீங்க ஒகே பட் நீங்க லாயரா பிராக்டிஸ் பண்ற ஆள் தானே? இந்த விசியம் இங்க வந்தவுடனே நீங்க டீடைல் கலக்ட் பண்ணி இருக்கனுமே? என்று அவன் கேட்ட தோரணையே ஏளனமாய் இருந்தது.
(அடிப்பாவி நிர்பயா, நீயே லாயரா சொல்லவே இல்ல)
நிர்பயா, “சாரி நான் ஊருக்கு வந்த பிறகு தான் இந்த விசியம் தெரிய வந்தது. அது இல்லாம நான் இந்த விசியத்தை பத்தி கேள்விப்பட்டவுடன் அந்த கம்பெனி சம்மந்தப்பட்டவங்கள தொடர்பு கொள்ள பார்த்தேன். ஆனால் அவங்க இப்ப ஊர்ல இல்ல நெக்ஸ்ட் வீக் தான் வருவாங்கனு சொல்லிடாங்க அண்ட் இங்க நான் தேடின வரைக்கும் அது சம்மந்தமான டாக்குமண்ட் கிடைக்கல. என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் உங்கள பத்தி சொன்னாங்க, உங்கள பத்தி கேள்விபட்டு இருக்கேனே தவிர பார்த்தது இல்ல அதனால தான் கன்பியூசன் ஆயிட்டிச்சி சாரி.
நித்யன், “உன்ன நான் என்ன கேட்டேன், இத பத்தி டீடைல் கலக்ட் பண்ணியானு தானே கேட்டேன், நீ என்னடான்னா எங்கயோ ஆரம்பிச்சி எங்கயோ முடிக்கிற. கொஞ்சம் தெளிவா இருங்க மேடம் மத்தவங்கன்னா புலி மாதிரி கோர்ட்ல பாயுறீங்க உங்களுக்குன்னு வந்தா மான் மாதிரி ஓடி ஒளிய சாக்கு தேடுறீங்க?, போங்க போய் இப்ப தேடுங்க என்று ஏவினான்.
அவன் சொன்னது அவளுக்கு கோபத்தை தூண்ட, சண்டைக்கு தயாரானவளை தர தரவென பைலை தேட இழுத்து சென்றாள் நிரஞ்சனா.
ஆபிஸ் ரூமுக்கு சென்றவர்கள் அனைத்து கோப்புகளையும் அலசினார்கள். எவ்வளவு தேடியும் கூல் ட்ரிங்ஸ் கம்பெனி கொடுத்த பத்திரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை குழம்பியபடி ஊர் தலைவரிடம் கேட்க சென்றார்கள்.
நிர்பயா,” ஐயா அவங்க குடுத்த அதாவது நீங்க எல்லாரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த அந்த பத்திரம் எங்க? உள்ள அந்தப் பத்திரத்தை எங்கு தேடியும் கிடைக்கல நீங்க எங்கேயாவது பத்திரப்படுத்தி வச்சிருக்கீங்களா?
ஊர் தலைவர்,” பத்திரம் இங்கே இருக்கேன்னு நான் எப்போ சொன்னேன்? அவங்கதான் கையெழுத்துப் போட்ட உடனே எடுத்துக்கிட்டு போயிட்டாங்களே நாங்க கூட கேட்டோம் என்று கேட்டதும் ஒரு ஜெராக்ஸ் இருக்கட்டுமேன்னு ஆனா, அவங்க நான் எங்கள நம்புங்க. இதெல்லாம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லிட்டு போயிட்டாங்க. அவங்க வந்து போய் ஒரு மூணு மாசம் இருக்கும் ஆனா இதுவரைக்கும் ஒரு செங்கல் கூட எழுப்பல?எங்களுக்கு அது தான் யோசனையா இருக்கு. இவ்வளவு நாள் ஆச்சி ஏன் இன்னும் கம்பெனி கட்ட ஆரம்பிக்கலன்னு தெரியல.
நித்யன், ” நான் விசாரிச்ச வரைக்கும் அந்த கம்பெனி ஓனர்க்கு இந்த பிசினஸ் மட்டும் இல்ல, சில காலேஜ், இன்னும் சில ஊர்ல கூல்டிரிங்ஸ் கம்பெனி இருக்கு. சோ அதுக்கெல்லாம் ஒரு விசிட் போயிருக்காங்க” .
நிரஞ்சனா ,” போயிருக்காங்கனா? வேற யாராவது இருக்காங்களா?
நிர்பயா,” எக்ஸாக்ட்லி, மிஸ்டர். தசரதன், லீடிங் பிசினஸ் மேன், மனைவி இல்ல, அவங்களுக்கு ஒரே பையன் பட் அவரை பத்தின டீடைல் இதுவரைக்கும் யாருக்கும் தெரியல, வீட்ல வேலை செய்றவங்க கூட அவர பாத்தது இல்லன்னு சொல்றாங்க. அவரோட பர்மிஷனுக்காக தான் வெயிட்டிங், ஏன்னா அவங்க பிசினஸ் பத்தின டிசிஸன்லாம் அவர் தான் எடுக்குறாறாம். இவ்வளவு கலக்ட் பண்ண முடிஞ்ச என்னால அவரோட பேர கூட என்னன்னு கண்டுபிடிக்க முடியல என்று சொன்னாள் உண்மையான வருத்ததுடன்.
ஏய் நிர்பயா அவர் இந்த உலகத்துல தானே இருக்காரு? கண்டுபிடிப்போம், நம்ம நிலவரத்தை முதல்ல மிஸ்டர். தசரதன் கிட்ட சொல்லுவோம், ஒத்து வரலன்னா கண்டிப்பா கோர்ட் மூலம் இதை தடுக்கலாம் என்றாள் நிரஞ்சனா.
இவர்கள் பேசுவதை கேட்ட ஊர் தலைவர் உங்களுக்கு இது தேவையா? பெரிய இடத்துல பகையை வளர்த்துக்காதீங்க என்று எச்சரித்தார்.
இங்க பாருங்க ஐயா பெரிய இடம் சின்ன இடம்லாம் இங்க இல்ல, மக்களுக்கு நல்லது நடக்கும், உங்கள பொறுத்த வரைக்கும் இந்த ஊர்ல இருக்கவங்க சந்தோஷமா சொந்த ஊர்ல வாழனும் அது தானே..அது கண்டிப்பா நடக்கும். அது இந்த ஊர்ல கம்பெனி வரலன்னாலும் என்று சொன்ன நித்யனை பெருமையாக பார்த்தாள் நிர்பயா.
அதே நேரம் நித்யனும் அவளைப் பார்க்க இருவரின் கண்களும் ஏதோ ஒன்றை புரிய வைக்க போராடி கொண்டிருப்பதை கவனித்த நிரஞ்சனா தன்னுள் சிரித்து கொண்டாள்.
எவ்வளவு நேரம் அவர்கள் அந்த மோன நிலையில் இருந்தார்கள் என்பதை இருவரும் அறியவில்லை. நிர்பயாவின் கைபேசி சிணுங்கவும் தான் சுய நினைவை அடைந்தார்கள்.
அதற்குள் கால் கட்டாகி விட ப்ரைவேட் நம்பர் என்று இருக்கவே யோசிக்க ஆரம்பித்தாள் நிர்பயா, அவளை யோசிக்க விடாமல் மறுபடியும் அதிலிருந்தே கால் வந்தது.
எடுக்க நினைத்தவள் நித்யனை தேடினாள், அவன் யாருடானோ தன் கைபேசியில் பேசி கொண்டிருக்க, சரி யாரேன்று பார்ப்போம் என்று அட்டெண்ட் செய்தாள்.
எதிர்முனையில் பேசியதை கேட்டவள் முகம் சிவக்க காளியாய் நின்றிருந்தாள் நிர்பயா.
தொடரும்…
