ஹேய்… அனு எழுந்தரு டி டைம் ஆகுது ..
அதெல்லாம் எழுந்துக்க முடியாது…
போடி நான் தூங்கணும்..
காலேஜ் டைம் ஆச்சி டி அனு பேபி எழுந்திரு…
போடி முடியாது நைட் புல்லா தூங்கவே விடல நீ ..
ஹேய் சீ… ஒழுங்கா பேசித்தொலை யாராச்சும் கேட்ட தப்பா எடுத்துக்க போறாங்க தலையில் அடித்துக்கொண்டாள்.
ஐய் .. தோடா நைட் எப்படில்லாம் கெஞ்சினேன் தூங்க விடுடி ப்ளீஸ் னு கேட்டியா டி.
என்னமோ வருஷகணக்கா பேசாத மாதிரி ஒரே ராத்திரி ல பேசி தொலைக்குற.. பக்கத்துல சின்ன பொண்ணு (அனு என்ன தான் வேற யாரும் சொல்லமாட்டாங்க அதான் நானே சொல்லிக்கிறேன் ) இருக்காளே னு கொஞ்சமாச்சும் யோசிச்சியா…
.என்னமா கடல போட்றாரு உன் ஆளு…. என் காது ஜவ்வே கிழிஞ்சது போ.
ஹேய் “சீ போடி வெக்கம் பட்டாள்… முகம் சிவந்து போய்விட்டது…
அய்யோடா .. அம்மணிக்கு வெக்கத்தை பாரேன் .. சும்மா சொல்லக்கூடாது வெக்கத்துல செமையா இருக்க டி கண்ணடித்தாள். ..
நான் மட்டும் பையான பொறந்தஇருந்தேன் வையு..
உன்ன அலேக்கா தூக்கிட்டு போய்டுவேன்.. எந்த முகிலன் வந்தாலும் போட்டு தள்ளிட்டு தான் மறுவேலை பாப்பேன்…
“ஹாஹா “சீ போடி லூசு போ குளிச்சிட்டு வா ..
“அனு “மயூ..
“என்னடி “
உண்மையிலேயே நீ செம்ம பிகர் டி சொல்லிவிட்டு குளியல் அறைக்குள்ள புகுந்து கொண்டாள்.
“கலகலவென சிரித்தாள்.
மயில் கலர் கோல்டன் பார்டர் போட்ட சாரி ல தேவதை மாதிரி இருந்தாள்.. தேவதை மாதிரி என்ன? தேவதையே தான்.
ரெண்டு பக்கமும் விழுந்து மல்லிகை பூ சரம்மும்
. அவளுடைய நீளமான கூந்தலும் … எல்லாம் ஆளையே அசர அடிக்க வைக்கும் அழகோட இருந்தவள் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லைனு நின்றுக்கொண்டிருந்தாள்.
“அனு “டிசைனர் சுடி போட்டு என்னதான் மாய்ஞ்சு மாய்ஞ்சு அலங்காரம் பண்ணினாலும் … மயூரிக்கு முன் இவள் அழகு எடுப்படவே இல்லை … இதுவே மயூ இல்லைனா அனு சூப்பரா இருப்பா… (அனு பாஷை ல சொன்ன சூப்பர் பிகர் )
.வெளியே வந்த அனு வாவ் ” மை டியர் ஏஞ்சல் யு லூக்கிங் பியூட்டிபுல் பேபி..
லேசாக வெக்கம் பட்டாள்..மயூரி சீ வாடி போகலாம் டைம் ஆச்சி.
ஹ்ம் போலாம் பேபி..
காலேஜ்குள்
நுழைந்துததும் மயூ காதில் கிசுகிசுத்தாள்… அனு “
ஹேய் பேபி இன்னைக்கு எல்லாம் காலேஜ் ல இருந்து பசங்க லாம் வருவானுக அவனுங்க முன்னாடி நான் சூப்பரா தெரியணும்.. பேபி .
அதுக்கு நான் என்னடி பண்ணனும்.
நீ எதுவும் பண்ணவேணாம் … என்ன விட்டு கொஞ்சம் தள்ளியே இரு .. அது போதும் …
அனு இப்படி சொன்னதும் மயூரிக்கு கஸ்ட்மாக இருந்தது.. சரி டி இங்க இருந்து போற வரை உங்கிட்ட வர மாட்டேன் சரியா .. நீ கவலை படாத நானே போறேன்.. சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
நாம சொன்னது மயூ கோச்சிக்கிட்டா போலயே.. இவளை எப்படி சமாதானம் படுத்தறது.. யோசிச்சாள்..
ஹ்ம் குட் ஐடி யா. ஹலோ மிஸ்.. மயூ பேபி முகிலன் கமிங்..
போய்க்கொண்டிருந்தவள் “சடார்னு நின்றுவிட்டாள்.
பார்ரா முகிலன் பேர சொன்னதும் அம்மணிக்கு தவுசன் வாட்ஸ் பல்பு எரிது முகத்துல…
“தேடுறா..தேடுறா.. “
ஹாஹாஹா… சிரித்துக்கொண்டே அருகில் வந்த அனு எங்கே தேடுவேன் என் இதயத்தை எங்கே தேடுவேன்.. நெத்தியில் கைவைத்து தேடுறமாதிரி ஆக்ட்டிங் குடுத்தாள்..
அவளுடைய செய்கையில் மயூ சிரித்து விட்டாள் ..
அப்பாடா… ” சிரிச்சிட்டியா…
போடி .. லூசு … எங்கே டி முகிலன்.. விழியால் சுத்திபுத்தி பாத்துகிட்டே கேட்டாள்..
அவள் விழி அசைவில் அனுவே மயங்குறா னா பசங்கள பத்தி சொல்லவேணாம் கிளீன் போல்ட்…..
மயூ …. நீ ஏண்டி இவளோ அழகா பொறந்துதுளைச்ச பாரு போற வரவன் எல்லாம் உன்னையே சைட் அடிக்குறானுக…
ஆரம்பிச்சிடியா… “
ஹேய் ” அனு பேபி நீயும் செம பிகர் தான் பேபி .
நான் அழகு தான் பட் உன் அளவுக்கு இல்லை உன்கூட நா வந்தா நான் டம்மி பீஸ் தான்.. சோகமா முகத்தை வச்சிட்டு சொன்னாள்.
“ஹாஹா … ” நான் என்ன பண்ணட்டும் அழகா பொறந்தது என் தப்பு இல்லையே பேபி..
“ஆமாமா……. “”
… நீ பொறந்தது உன் தப்பு இல்லை தான் ஒத்துகிறேன்….ஹாஹாசிரித்து கொண்டே நழுவினாள்…..
எதுக்கு சிரிக்குறா.. மயூரி யோசிச்சு பாத்தாள்..புரிந்ததும் ஹேய்..
அனு அவளை அடிக்க தொறத்தி கொண்டு ஓடினாள்.ஓடினவள் … எதிர் திசையில் வந்துகொண்டிருந்த கார்த்திக் மேல் மோதிக் கொண்டு விழ பார்த்தால்… கைத்தாங்களா மயூரியை விழாமல் கார்த்திக் பிடித்துக்கொண்டான்..முதல் .முதலில் பெண்ணின் பரிசம் பட்டதும் கார்த்திக்கின் மனது அவனை அறியாமல் மயூரியிடம் சென்றது ..
தான் ஒரு ஆடவன் கையில் இருக்கிறோம்னு உணர்ந்து சட்டெட்ன்று விலகினாள்.
சாரி … சார் என் பிரண்ட்ட பிடிக்க ஓடி வந்தேன் …. தெரியாமல் உங்க மேல மோதிட்டேன் சாரி.
அவள் முகம் கண்ணி சிவந்து போனது ச்ச இப்படி கண்மூடித்தனமா ஓடி வந்து மோதிட்டேனே … அவளுக்கே வெக்கமா இருந்தது அவன் முகத்தை பார்த்து பேச சங்கோஜ பட்டாள்.
கார்த்திக் “..
அவளின் தவிப்பைரசித்தான்… அப்பொழுது தான் அவளை தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இடமா ரசித்து பார்த்துகொண்டிருந்தான்.
….. பின்னாடியே ஓடிவந்தவளை காணோம்மே னு அனுவே , “
மயூரியை தேடிக்கொண்டு வந்தாள்.
மயூ” … இங்க என்ன பண்ணுற கார்த்திக்கிடம் பார்வையை பதித்து படியே மயூரியிடம் கேள்வி கேட்டாள்.
ஏனோ அனுவுக்கு கார்த்திக்கின் பார்வை மயூரியை பார்ப்பது சரியில்லைனு உணர்ந்து கொண்டாள்.
கேக்குறேன்ல சொல்லு.. இங்க என்ன பன்னிட்டு இருக்க.. கோவமாக கேட்டாள்..
அனு ஏன் கோவமா பேசுறன்னு மயூரிக்கு விளங்கவில்லை.. குழப்பத்தோடவே பதில் சொன்னாள் அது வந்து பேபி ..
“சொல்லித்தொலை “
அது வந்து . உன்ன புடிக்க ஓடிவந்தேன் ல ..
“ஆமா “அதுக்கும் நீ இங்க நிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்..
“முழுசா சொல்லவிடுடி..
“ஹ்ம் சொல்லு “
ஓடிவரும் போது இவர் மேல மோதிட்டேன்…
அப்படி சொல்லும் போதே சங்கோஜ பட்டாள் மயூரி..
“என்னது….?
ஆமா அனு அதான் சாரி கேட்டுட்டு இருந்தேன்..
ஹ்ம்ம்,.. சரி சாரி கேட்டுட்டே ல வா போலாம்…
“ஹ்ம் போலாம் டி “
. அனு, .. மயூரியை கைப்பிடித்து கூட்டிக்கொண்டு போனாள்.
அவர்கள் போகும் வரை கார்த்திக் மயூரியே பார்த்துக்கொண்டிருந்தான்..
கார்த்திக்கும் அக்ரிகல்ச்சர் படிக்கிறவன் தான்.. இந்த காலேஜில் கல்ஜுரல் போட்டியில் கலந்துக்க வந்தவன்.. போட்டியில் பங்கு பெற்றானோ இல்லையோ…. மயூரியின் விழி அழகில் மயங்கிவிட்டான்…. …. தொடரும்