எல்லாம் வல்ல சதுரகிரி யானே!!!ஆண்டவா !!!மனசுக்குப் பிடிக்காமல் இந்த திருமண பந்தத்தில் நுழைகிறேன்.. இதனால் யாருடைய மனமும் காயப்படுவதை நான் விரும்பவில்லை ...என்னையே நம்பி என்னுடன் இந்த பந்தத்தில் இணையும் இந்தப் பெண்ணுக்கு என்னால் எந்த கஷ்டமும் வரக்கூடாது எங்களுடைய இந்த வாழ்க்கைப் பயணம் சிறக்க நான் உன்னை வேண்டுகிறேன் ,என கையில் தாலியோடு கண்மூடி உளமாற மனமார உருகி வேண்டிக் கொண்டிருந்தான் நமது நாயகன் அரவிந்தன்...ஆமாங்க நம்ம நாயகன் பேர் அரவிந்தன் ...
அவனது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரபாவதி…
ஊர் பெரியவர் அரவிந்தனின் கைகளில் பிரபாவின் கைகளை கொடுத்து பிடிக்கச் சொல்லி திருமண உறுதி மொழி எடுக்க கூறினார்…. எனக்கு இவனை பார்த்தாலே உதறுது.. இதுல கையை புடிச்சி கிட்டு தான் இந்த சடங்கெல்லாம் செய்யணுமா?????
அவனது ஆளுமையான கைகளில் தனது கைகளை வைத்ததும் தன்னை அறியாமல் அவளது கைகளில் சிறு நடுக்கம் ஏற்பட்டது …அவளது நடுக்கத்தை அறிந்து கொண்டும் அறியாதது போல் இருந்தான் அரவிந்தன்….
உறுதிமொழி எடுத்து திருமண சடங்கை நிறைவேற்றுவது அந்த ஊரில் வழக்கம்…..
கணேசன் – லலிதா ஆகியோரின் புதல்வனான அரவிந்தன் என்னும் நான் பழனிமலை – கவிதா ஆகியோரின் தவப்புதல்வி யான பிரபாவதி ஆகிய உன்னை எனது வாழ்க்கையின் சகல இன்ப துன்பங்களிலும் சரி சமமாக மதிப்பேன் …சரி சமமாக நடத்துவேன்… என கடவுள் சாட்சியாகவும் இந்த பெற்றோர் சுற்றத்தார் நிரம்பிய சபையிலும் உறுதி கூறுகிறேன் என்று கூற பிரபாவும் அவனைப் பின்பற்றி உறுதி கூறினாள்..
இருவரும் அழகிய வாசனையுடைய பன்னீர் ரோஜா மாலையுடன் கூடிய மல்லிகை மாலையை மூன்று முறை மாற்றிக்கொண்டார்கள் …பின்னர் ஊர் பெரியவர் மண்டபத்துக்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வரப்பட்ட தாம்பூலத் தட்டில் இருந்த தங்கத் தாலியை எடுத்து அரவிந்தன் கைகளில் கொடுத்தார்….தாலியை வாங்கியவுடன் தான் கண்மூடி மனதில் பிரார்த்தனை செய்தான்….. பிரார்த்தனை செய்வததைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரபாவதி….
ரொம்ப பலமான யோசனை யாயிருக்கும் போலிருக்கு!!! என்ன யோசனையாய் இருக்கும் இந்த நேரத்தில்??? பயபுள்ள நம்ம கூட எப்படி வாழுறது யோசிக்கிறோனோ????எப்பொழுதும் போல மைண்ட் வாய்ஸில் யோசித்துக் கொண்டே கண்களில் குறும்புடன் என்ன ??என ஒற்றை புருவம் தூக்கி வினவினாள்…
நான்கு விழிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன ….
மின்சாரம் என் மீது பாய்கின்றதே!!!!……………..
நமக்கு மட்டும்தான் மின்சாரம் பாயுதோ!!!ஒரு ரியாக்சன் கூட காட்ட மாட்டேங்கறானே!!!சரியான அமுங்கினி யா இருக்குமோ???
அவளின் கேள்விக்கு மறுமொழி ஏதும் தராமல் அந்த பொன் தாலியை பிரபாவின் அழகான கழுத்தில் சூட்டினான்…அரவிந்தன்…..வாசனை நிறைந்த மதுரை மீனாட்சியின் தாழம்பூ குங்குமத்தை எடுத்து அவளது நெற்றி வகிட்டில் வைத்தான் …வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர் ….
அவ்வளவு நேரம் குறும்புடன் கல்யாண நிகழ்வுகளை ரசித்துக்கொண்டு இருந்த பிரபாவதிக்கு கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்டியது…
அவள் கண்களில் கண்ணீரை கண்ட உடன் அவளது தம்பி அரவிந்தன் அவளிடம் வந்து ஒட்டி நின்று கொண்டான் …அவனது செய்கை தம்பி நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தியதை அறிந்ததும் கண்ணீரை கட்டுப்படுத்தினாள் பிரபாவதி…. அவள் சுதாரித்ததும் என்ன அக்கா ???டேங்க் லீக்ஆயிடுச்சா ????என்றான்… பதில் சொல்ல முடியாமல் முறைத்தாள் ….பயபுள்ள நம்மளையே போட்டு பார்க்குதே நேரங்காலம் தெரியாம …
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எதையும் பார்க்காதது போல நின்று கொண்டிருந்தான் அரவிந்தன்…
அரவிந்தன் எல்லாரும் பாக்குறாங்க கொஞ்சம் நேரம் ஒழுங்கா நிக்கிறாளா னு பாரு… எல்லாரும் நம்மள தான் பார்க்கிறாங்க..சின்னப்புள்ளத்தனமா பண்ணிக்கிட்டு இருக்கா என்றான் மனதினுள் தான்…
இங்கே ஒரு மனுஷி அழுகிறாளே!! என்னன்னு கேட்போம்.. சமாதானம் சொல்லுவோம்னு நினைக்கிறானா பாரு!!! அச்சச்சோ பழக்க தோசத்துல அவனே இவனே ன வருது.. தாலி கட்டியாச்சு அவர் இவரும் சொல்லணுமோ!!! ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே மரியாதை யா பேச..
பெரியவர்களிடம் திருநீறு பூசி ஆசீர்வாதம் வாங்கியதும் அரவிந்தனின் வீட்டுக்கு விளக்கேற்ற அழைத்துச் சென்றார்கள்… வீட்டுக்குள் நுழையும் முன் அங்கேயே நில்லுங்க!!! என்று ஒரு குரல் கேட்டது…. யாராய் இருக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்…
இந்த காதல் மட்டும் புரிவதில்லை!!!