காதல் மட்டும் புரிவதில்லை 1

0
432

அந்த கல்யாண மண்டபமே அதிர்ந்தது.. அப்புறம் ஒரு நிமிடமா? 2 நிமிடமா? கிட்டத்தட்ட 15 நிமிஷம் ‘சும்மா அதிருதில்ல’ என சிவாஜியின் ஸ்டைலில் சர வெடி வெடித்துக் கொண்டிருந்தது….

பெண் வீட்டில் அல்லது பெண் வீட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தும் பழக்கமுடைய ஊர் அது….இதனால் மாப்பிள்ளையை வரவேற்க கல்யாண மண்டபத்தில் அவர் நுழைந்து 15 நிமிடமாக சரவெடி வெடித்துக்கொண்டிருந்தது ……இது என்ன கல்யாண வீடா? இல்ல அரசியல் கூட்டமா? எதற்கு சரவெடி!! மனதில் வெடித்துக் கொண்டிருந்தான் நம் நாயகன்……

வெளியே நல்ல பிள்ளையாக சிரித்துக்கொண்டிருந்தான்… ஆளை மயக்கும் அந்த புன்சிரிப்பை ரசித்துக்கொண்டிருந்தன இரு கண்கள் மண்டபத்தின் மாடி அறையில் இருந்து…

வெள்ளை நிற பட்டுவேட்டி சட்டையில் பளீரென சிரித்துக் கொண்டிருக்கும் அவனை காண இரு கண்கள் போதாது என கேமரா கண்களில் துணையோடு க்ளிக்கிக் கொண்டிருந்தாள் ….வேற யாரு அவள் தான் நம் நாயகி

என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு ????

கல்யாணத்தன்று சிரிக்காம என்ன செய்வார்கள் என்றது மனசாட்சி….

கல்யாணம் நிச்சயம் ஆகி இந்த ஆறு மாசத்தில் என்னை ஒரு தடவையாது பார்த்து சிரித்து பேசி இருப்பாரா?

இல்லை!

சிரிக்க வேண்டாம்? பேசியிருப்பாரா ?

இல்லை !!

பேசுவது என்ன பார்த்து இருப்பாரா !?

இல்லை!!

ஆனா இவருக்கு இவ்வளவு பில்டப் கொடுத்து சரவெடி வெடிக்கச் சொல்லி என் பிரெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணி இருப்பேன்… இப்ப மட்டும் சிரிப்பு வருதா?. என பழிப்புக் காட்டி விட்டு மண்டபத்து
ஜன்னல் வழியாக வெடிவெடித்துக்கொண்டிருந்த வானரங்களுக்கு கை காட்டினாள்!!!

அந்நேரம் படீரென அறையின் கதவு திறந்து கொண்டது..சொத் என அவள் முதுகில் ஒன்று விழுந்தது…
Screenshot_2019-04-22-12-30-52-1702557125|639x500
இந்த காதல் மட்டும் புரிவதில்லை!!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here