மயக்கமென்ன மங்கையே ? – 4

0
265

மாலையில் வசீகரனின் வரவுக்காக துஜா ஆவலாக காத்திருக்க , வசீயோ அவசரகதியாக மும்பை பயணமாகி கொண்டிருந்தான் . திடீரென கம்பெனி வேலையாக மும்பை செல்லவேண்டிய எம்டியின் காரியதரிசிக்கு உடல் நிலை சரியில்லாததால் , கம்பெனியின் பிரான்ச் மேனேஜரான வசீ உடன் செல்லவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது . அதுவும் மதியம் தான் இதுகுறித்து அவனுக்கு தகவல் வர , வேகமாக வீட்டிற்கு சென்று பெட்டி அடிக்கி , குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு ஏர்போர்ட் வருவதற்கு அவனுக்கு நேரம் சரியாக இருந்தது .

பிளைட்டில் ஏறி அமர்ந்த வசீயின் மனம் முழுக்க கலாகேந்திராவில் தான் இருந்தது . “நேற்று நடந்து கொண்டதிற்கும் இன்று அவன் அங்கு போகமுடியாததற்கும் , துஜா ஏதேனும் தப்பர்த்தம் கொள்வாளோ ? ஏதோ பயந்தோ இல்லை அவள் பின்னால் சுற்றும் பலர் போல இவனும் கோவம் காட்டியதும் ஓடி விட்டான் என்று அவள் நினைத்து கொண்டாள் ? கடவுளே …ஆரம்பத்தில இருந்தே அவளுக்கும் எனக்கும் முட்டிகிட்டே இருக்கே …இதுல அவள லவ் பண்ணி , அவ என்ன லவ் பண்ணி ..வீட்ல பெர்மிசன் வாங்கி .. ஹ்ம்ம் எப்படி இதுலா நடத்த போறனோ ” என்று தன்னையும் அறியாமல் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் .

கண்மூடி தலையை சீட்டில் சாய்த்தவனுக்கு ,அங்கேயும் துஜாவே வலம் வந்தாள் .

“மின்னல் பெண்ணே
என் காதல் வானின் ஒளி நீ !!

தென்றல் காற்றே
என்னை தாலாட்டும் மொழி நீ !!

கண்மூடும் நேரத்திலும்
கண்ணுள் தோன்றும் கண்மணி நீ !!
என் கருவிழி நீ …
கவிபாடும் இந்த கள்வனின் காதலி நீ !!

உன்னருகே என்னை அறிய ஆசை தான்
காதில் என்றும் உன் ஜதியின் ஓசை தான் ..

உன் பேச்செல்லாம் துவிஜாவந்தி ராகமோ
அதனால் தான் உன் பெயரிலும் அதன் கீதமோ

வேண்டாம் கண்மணி இந்த பிரிவு
நீ வரும் நாள் தான் எனக்கு நிறைவு ….”

மனதில் தோன்றிய கவிதையில் லயித்து கொண்டிருந்தவனுக்கு விக்கல் எடுக்க தொடங்கியது . தண்ணீரை எடுத்து அவன் பருக புரை ஏறியது ..”யாரோ உங்கள பலமா திட்டுறாங்க போல” என்று அவன் அருகே இருந்த சகபயணி கூற …வசீக்கு இதழோரம் புன்னகை அரும்பியது .

“வேற யாரு என்ன திட்டுவா ? எல்லாம் என் தேன்மிட்டாய் தான் ” என்று மனதுள் அவன் எண்ணிக்கொள்ள , அதே நேரம் அங்கே துஜா , சாருவிடம் தைய தக்கா என்று குதித்து கொண்டிருந்தாள் .

“பாத்தியா டி …அந்த இடியட்ட …நேத்து நான் கத்துனதுல பின்னங்கால் பிடரில பட ஓடிருச்சு …ஆனா அவனுக்காக நா இன்னிக்கு என்னன்ன வேலைலாம் பாத்தேன் …ச்சா ..காளான் கூட நா இன்னிக்கு சாப்பிடல தெரியுமா ? அவசர அவசரமா வந்து இந்த அரிப்பு செடிய இந்த பெஞ்ச் மேல வெச்சு …இவ்ளோ நேரம் அதுல வேற யாரும் ஒக்காராம பூதம் மாறி காவக்காத்து …இதுலா கூட பரவல… இன்னிக்கு ஏர்லி மார்னிங் எழுந்து கஷ்டப்பட்டு இந்த செடிய கண்டுபிடுச்சேன் …மார்னிங் பிரேக்பாஸ்ட் கூட சாப்பிடல …எல்லாம் அவனால தான் …பேர பாரு வசீயாம் வசீ …சரியான போந்தாக்கோழி …சரியான வாத்து முட்ட கண்ணு டி அவனுக்கு …மூஞ்சியா அது.. நல்லா மொழு மொழுனு தோல் உறிச்ச வெடக்கோழியாட்டம் ..அவன் வாய்ஸ் ….கருமம் ..கெட வெட்ட போற ஆடு மாறி …அதுலயும் அந்த மூக்கு இருக்கே …நல்லா நீளமா வெள்ளரிக்கா மாறி …” என்று சகட்டுமேனிக்கு அவள் அவனை கழுவி ஊத்த , சாருவிற்கு சிரிப்பு வந்தது .

“ஏண்டி துஜா ..எனக்கொரு டவுட் ? இப்போ உன் பிரச்சன அவன் வாராததா …இல்ல சோறு சாப்பிடாததா ? ” என்றவள் சீரியசாக கேட்க …”அய்யயோ கண்டுபுடுச்சுட்டாளே ” என்று நினைத்த போதும் , அதை வெளிக்காட்டாமல் ” ரெண்டும் தான் டி …” என்று கோவமாக கூறிய துஜா , ஒரு திருட்டுமுழி முழித்து வைக்க , இருவரும் சிரிக்க தொடங்கினர் .

தீடிரென சிரிப்பை நிறுத்திக்கொண்டவள் , முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு “சிரிச்சதுல ..எனக்கு எனர்ஜி வேஸ்ட் ஆயிருச்சு ..மரியாதையா எனக்கு ரெட் வெல்வெட் கேக்கும் காளானும் வாங்கி தர ” என்று கறாராக கூறி ,சாருவை இழுத்துச்செல்ல , “அடிப்பாவி ” என்று அலுத்துக்கொண்டபோதும் அவளோடு சென்றாள் சாருகேசி .

இருவருமாக உண்டுவிட்டு அபிநளினிக்கு பார்சல் வாங்கிக்கொண்ட பின் ,சாரு பில்லுக்கான பணத்தை எடுக்க , துஜாவும் தன் பங்கை அவள் கைகளில் குடுத்தாள் . சாருவிற்கு அவளை பற்றி தெரியும் ..இப்படி சொல்லி அழைத்துவந்தாலும் கடைசியில் அவள் அவளது பங்கை கொடுக்கத்தான் செய்வாள் . ஒருவேளை இவள் மறுத்துவிட்டாள் அதற்கு ஈடாக வேறு ஏதேனும் செய்துவிடுவாள் . சாருவிற்கும் துஜாவிற்கும் இதனால் ஆரம்பத்தில் அடிக்கடி சண்டை வரும் ..” நமக்குள் எதுக்கு டி இப்படி கணக்கு பாக்குற ?” என்று சாரு கேட்டால் , “பணம் அன்பை முறிக்கும் ” என்று பழமொழி பேச தொடங்கி விடுவாள் அவள் .

கொஞ்ச நாள் கழித்து சாருவும் அவள் குணம் உணர்ந்து , கேட்பதையே விட்டுவிட்டாள் . அதே போல அவளுக்காக துஜா ஏதேனும் செய்தால் , அவளை போலவே சாருவும் அதை கணக்காக திருப்பிக்கொடுத்துவிடுவாள் .

பேசிக்கொண்டே வந்த இருவரும் வண்டியில் ஏறினர் . துஜாவின் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் சாருவின் வீடு . ஒரே தெருவில் தான் சாருவின் பிறந்த வீடும் புகுந்த வீடும் ..இதை எண்ணி எண்ணி தோழிகள் இருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் . சமீப காலமாக துஜாவிற்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கவும் அவர்கள் இருவருக்குமே கவலை தொற்றி கொண்டது . சாருவிற்கு சிக்கியது போல ஒன்று அவளுக்கும் அதே தெருவில் …தெரு கூட வேண்டாம் ஒரே ஏரியாவிலாவது சிக்குமா ? அவள் தந்தை கொண்டு வந்த வரன்களை பார்த்தவள் , கடைசியில் ஒரே ஊரிலாவது சிக்குமா ? என்று எண்ண தொடங்கினாள் .

வழக்கம் போல வளவளத்துக்கொண்டே வந்தவள் , சாருவை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு , தன் வீட்டிற்குள் நுழைந்தாள் . ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு நிமிர்ந்தவள் ,வாசலில் இருந்த புது செருப்புகளை கண்டு யோசனையோடவே உள்ளே நுழைந்தாள் .

அங்கே யாரோ ஒரு தம்பதி அவள் தந்தையோடு அமர்ந்து உரையாடி கொண்டிருந்தனர் . அவளை கண்டதும் அவர்கள் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொள்ள , அதை எல்லாம் கண்டுகொள்ளாத துஜா ” வாங்க ” என்று மரியாதை நிமித்தமாக கைகூப்பி அவர்கள் வரவேற்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் .

பிரெஷ் அப் ஆகி வெளியே வந்த போதும் , அவர்கள் அங்கேயே இருக்க …நல்ல பிள்ளை போல கிட்சனுக்குள் புகுந்த துஜா சுடசுட அவள் தாய் சுட்டு எடுத்த வெங்காய பக்கோடாவை எடுத்து வாய்க்குள் திணித்துக்கொள்ள .” ஏய் சும்மா இருடி ..வந்துருக்கவங்களுக்கு போட்டத …எடுத்து திங்காத ” என்றவர் கடிய , அவரை முறைத்துக்கொண்டு தன் அண்ணியின் அருகே சென்று அவளை கட்டிக்கொண்டாள் . அவளோ துஜாவிற்கு மறுபடியும் ஒரு பக்கோடாவை எடுத்து ஊட்ட , தன் தாய்க்கு பழிப்பு காட்டியவள் , அண்ணியின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு , தான் வாங்கி வந்தவற்றை ஒரு தட்டில் வைத்து அபிகுட்டியை காண எடுத்துச்சென்றாள் .

அவள் வெளியேறும் போதே அவள் அன்னை , “இப்படி செல்லம் குடுத்தே அவள கெடுத்துரு நீ ” என்று தன் அண்ணியை கடிந்துகொள்வது அவள் காதில் விழுந்தது . கிட்சனுக்கும் அபியின் அறைக்கும் நடுவே இருந்த ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை கடந்து அவள் செல்லும் போதே , அபி “அத்தை ” என்று அவளிடம் ஓடிவந்து தாவ …கையில் இருந்த பிளேட் நழுவி அந்த விருந்தாளி அம்மாவின் மேல் விழுந்தது .

“வட போச்சே ” என்று ஒருநொடி கேக்குக்காக வருந்திய துஜா , அதன் பின்பே அந்த அம்மாவின் ஞாபகம் வந்தவளாக ஆயிரம் சாரி கேட்டு கொண்டே அவர்கள் மேல் சிந்தியவற்றை துடைத்துவிட்டாள் .

துஜாவின் பெற்றோரோ பதட்டத்தில் இருந்தனர் . கன்றிய முகத்தோடவே “ஏதோ தெரியாம கொட்டிருச்சுங்க …பாப்பா வந்து ..” என்று அவர்களுக்கு விளக்கம் கூற முற்படும் போதே , கைநீட்டி அவர்களை தடுத்த அந்த அம்மா ” பரவாலங்க தெரியாம தான நடந்துச்சு …அதுவும் இல்லாம என் வீட்டுக்கு வரப்போற மருமக தானே …மாமியார் எப்படினு டெஸ்ட் பண்ணானு நெனச்சுக்கறேன் ” என்று இலகுவான சிரிப்போடு கூற , அதிர்ந்த நின்ற துஜாவிற்கு மயக்கமே வரும் போல இருந்தது .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here