மந்திரமென்ன மங்கையே ? -3

0
253

மந்திரம் -3

அதற்கு அடுத்து வந்த இருவாரங்களும் ரொம்பவும் நத்தை வேகத்தில் ஊர்வது போல இருந்தது வசீக்கு . இந்த இருவாரமும் மறந்தும் கூட அந்த தேன்மிட்டாய்க்காரியின் கண்ணில் படாமல் கவனமாக இருந்தான் .அதற்காக அவளை காணாமல் இல்லை , அவள் கண்ணில் சிக்கும் படி பார்க்கவில்லை , நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் “ஒழிந்து ஒழிந்து அவளை சைட் அடித்து கொண்டிருந்தான் ” .

வேலைக்கு சென்று திரும்பும் நேரத்தில் மட்டும் மேனேஜர் வசீகரனாக வலம் வந்தவன் , மற்ற நேரத்தில் எல்லாம் லவ்வர் பாயாக அவள் பின்னே சென்றான் . இந்த நாட்களுக்குள் , அவள் பிறந்த தேதி முதல் கடைசியாக அவள் வாங்கிய உடை முதல் அனைத்தும் அய்யாவுக்கு அத்துப்படி ஆகி இருந்தது . சிலநேரத்தில் அவனுக்கே தன்னுடைய நடவடிக்கைகள் எண்ணி சிரிப்பாக இருக்கும் .

தீடிர் தீடிர் என்று நட்டநடுராத்திரில் எல்லாம் அவள் முகம் மனக்கண்ணில் வந்து போகும் . அப்பொழுது எல்லாம் அவனது ஏக்கங்களையும் ஆசைகளையும் அந்த நோட்டில் எழுதி வைப்பான் .

அன்று திங்கள் கிழமை .வழக்கம் போல அல்லாமல் சற்று பதற்றத்தோடு கிளம்பினான் வசீ . ஏனெனில் அன்று முதல் தான் அவள் முன்பு தரிசனம் தரலாம் என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான் .

இத்தனை நாட்களாய் அவளை பற்றி அவன் அறிந்துகொண்டதை வைத்து இந்த முடிவுக்கு வந்திருந்தான் .

அவள் பெயர் துவிஜாவந்தி . படித்தது பேஷன் டெசியினிங். ஆனால் பரதம் தான் அவளுக்கு எல்லாமே . தினமும் காலையில் இரண்டு மணிநேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் குழந்தைகளுக்கு ,அவள் வீட்டின் அருகே உள்ள கலாகேந்திரா நாட்டிய பள்ளியில் நாட்டியம் கற்று தருகிறாள் . மற்ற நேரங்களில் அலுவலகம் .தோழிகள் என்று பெரிய வட்டம் இல்லை .எப்பொழுதும் அவளோடு சுற்றுபவள் சாருகேசி . இருவருமே ஒன்றாகவே பள்ளி கல்லூரி முடித்து , நாட்டியத்திலும் கை கோர்த்தவர்கள் . அவளுக்கு ஒரு மாதம் முன்பு தான் திருமணம் நடந்திருக்கிறது .

அதே போல காலையில் அந்த கடையில் தேன்மிட்டாய் வாங்குவது போலவே , மாலை அவள் வேலை செய்யும் அலுவலகம் பக்கத்தில் உள்ள தள்ளுவண்டியில் தவறாமல் காளான் சாப்பிட்டு , ஒரு பார்சல் வாங்குவதும் அவளுக்கு வழக்கம் . அவள் முக்கியமாக வாங்குவது அவள் வீட்டின் குட்டி இளவரசியான அபிநளினி . அவள் அண்ணனின் மகள் . அண்ணன் வெளிநாட்டில் வேலைசெய்ய , அண்ணியும் குழந்தையும் இங்கே .வளமான குடும்பத்தின் செல்ல மகள் .

சமைப்பதும் பாடுவதும் பொழுதுபோக்கு . அப்பப்போ ஏதாவது வரைவதும் . இந்த கால பெண்ணிற்குரிய அனைத்து இலக்கணமும் பொருந்தியவள் ஆனால் சில விஷயங்களில் கட்டுப்பெட்டி . முக்கியமாக அவளிடம் வழியும் ஆண்களுக்கு அவள் ஒரு பத்ரகாளி . முசுகமுசுக்கென்ன கோவமும் வரும் பிடிவாதமும் வரும் . ஒன்று பிடிக்காவிட்டால் , அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டாள் .

இதை எண்ணும் போதே வசீக்கு பெருமூச்சு வந்தது . இது புரியாமல் தானே , முதல் பார்வையிலேயே அவளிடம் மூக்கறுப்பட்டான் ..”கடவுளே என் விசயத்துல மட்டும் கொஞ்சம் அவளை பல்டி அடிக்க வெச்சுருப்பா ” என்று மனமார வேண்டிக்கொண்டவன் , நடையை கட்டினான் .

காலையில் வேலைக்கு போகும் அவசரத்தில் அவளை சந்திப்பது வேண்டாம் என்று முடிவு செய்தவன் , மாலை ஆபீஸில் இருந்து கிளம்பும் முன் ஒரு முறை பிரெஷ் அப் செய்து கொண்டான் .

ஒரு துள்ளலோடே ஒரு கடலை பாக்கட்டையும் தேன்மிட்டாய் பாக்கெட்டையும் வாங்கி கொண்டு கலாகேந்திராவுக்குள் நுழைந்தான் . நேராக துவிஜா சொல்லிக்கொடுக்கும் இடத்திற்கு நேர் எதிரே இருந்த மரத்தடி பெஞ்சில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டவன் , அவளை வேடிக்கை பார்க்க தொடங்கினான் .

முதலில் துவிஜாவும் அவனை கண்டுகொள்ளவில்லை . தினமும் அவள் பின்னே சுற்றும் நாலு பேரில் ஒருவனாக அவனை எண்ணியவள் , அவனும் கண்டும் காணாதவள் போல அலட்சியமாக இருந்தாள் .

கொஞ்சநாள் கண்டுகொள்ளாமல் விட்டால் தானாகவே விலகி விடுவார்கள் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவள் , இப்பொழுதும் அதையே பின்பற்றினாள் . ஆனால் அப்படி விலகவா வசீ இத்தனை நாள் அவளை பின்தொடர்ந்தான் ?

பத்து நாட்கள் ஆன போதும் , வசீயின் வருகை நிற்காததை கண்ட துஜாவிற்கு உள்ளே எரிமலையாக குமுறியது .

அடுத்த நாள் மாலை ,

“தக்க திம்மி தா… தா.. “

‘சிருஷ்டி ஜதிக்கு ஏத்த மாரி தாளம் தப்பாம ஒழுங்கா ஆடு’, என துவிஜாவந்தி அவளிடம் ஆறாவது முறையாக திருத்தம் சொல்ல, அங்கே வந்தான் வசீகரன்.

வழக்கம் போல ஒரு கையில் வேர்க்கடலை பாக்கெட்டும், மற்றொரு கையில் தேன்மிட்டாய் பாக்கெட்டையும் சகிதம் வந்து, துஜா எதிரே அமர்ந்தவன், வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

தனது நட்டுவாங்கத்தை நிறுத்திவிட்டு வேகமாக அவனருகே சென்ற துஜா “ஹலோ மிஸ்டர், உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இங்க என்ன சினிமா ஷோவா கட்டறோம்… டெய்லி டைம்க்கு வந்து ஒக்காந்து வேடிக்க பார்க்க ” என்றவள் வெடிக்க,

” ஏய் சும்மா இரு டி துஜா ” என்றவள் தோழி சாரு, அவளை தடுத்தாள்.

அதற்குள் எழுந்து விட்ட வசியும், ” ஒஹ்ஹஹ் துஜா வா உங்க பேரு, முழு பேரு என்ன மா? ” என்று சாதுவாக கேட்க, துஜாவிற்கு பிரஷர் எகிறியது.

“பாரு டி.. இந்த ஆள ” என்றவள் மீண்டும் எகிற,
” சாரி என் பேரு ஆளு இல்ல வசீகரன்.. நீங்க அப்படியே கூப்பிடலாம் ” என்று மீண்டும் புன்னகையோடு கூறி, அவள் கோவத்திற்கு தீனி போட்டான் வசி.

ஆத்திரத்தில் வார்த்தை வராமல், துஜா பல்லை கடிக்க,

” கோவம் வேணாம் கண்மணி, உன் காதல் போதும் ” என்று வசி வசனம் பேசினேன்.

கடைபிடித்த மரியாதையை எல்லாம் தூக்கி வீசிய துஜா ” டேய்ய்… உன்ன ” என்றவனை அறைய கை ஓங்க, ஓங்கிய கையை பற்றிய வசி, அவள் விரல்களில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு, அடுத்த கணமே அங்கிருந்து ஜூட் விட்டான்.

இப்படி எல்லாம் அவளிடம் பேசவேண்டும் என்றவன் நினைக்கவில்லை . உண்மையில் அவளிடம் இப்படி நடந்து கொண்டதற்கு அவனுக்கு வருத்தம் தான் . ஆனால் தீடிரென்று துஜா அவனிடம் பேசவும் , அவனுக்கு அவளை வம்பிழுக்க வேண்டும் என்று தான் தோன்றியது . ” அய்யோ வசீ , இப்படி சொதப்பீட்டு வந்துட்டியே டா … அவ ஏற்கனவே உன்ன பத்தி ரொம்ப நல்லா நெனச்சுருக்க …நீ மறுபடியும் இப்படி வம்பிடியா அவகிட்ட நடந்துகிட்டு வந்துட்டியே …இனி என்ன பண்ண ?” என்று தன்னையே அவன் கடிந்துகொள்ள ,

துஜாவும் அப்போது கோவம் தணியாமல் மண்டை சூடேற கடுப்புடன் அமர்ந்திருந்தாள் . அவளுக்கு வந்த கோவத்திற்கு அவனை துரத்தி கொண்டு ஓடி இருப்பாள் தான் …அதற்குள் அவள் தோழி சாரு அவளை பிடித்து நிறுத்திவிட்டாள் . கொஞ்ச நேரம் தரையில் போட்ட மீன் போல் துள்ளியவள் , பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாக தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள் .

அதன்படி அடுத்த நாள் மாலை , வசீயின் வரவுக்காக ஆவலாக காத்திருந்தாள் துஜா .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here