தேடி வந்த சொர்க்கம் _11

0
422

விடாது கேட்ட அலாரம் சத்தத்தில் கண் விழித்தார் தன சேகர். எழுந்தவர் வந்து அலாரத்தை நிறுத்தியபடி நேரம் பார்க்க ஆறு மணியை தொட்டுக் கொண்டு இருந்தது. குரு எழுந்ததற்கு அடையாளமாய் பாத்ரூமில் கேட்ட நீரின் சத்தம் காதில் விழுந்தது.

இவனுக்கு இதே வேலையா போச்சு. அலாரம் வைக்க வேண்டியது. அடிக்கறதுக்கு முன்னாடியே எழுந்திற வேண்டியது. அடுத்த ஐந்தாவது நிமிடம் இடுப்பில் கட்டிய துண்டோடு ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்தான் குரு.

அது தான் சரியா எழுந்துடுறயே. அப்புறம் எதுக்கு அலாரம். இது ஒரு பக்கம் சத்தம் போடுது .

அது அப்படியே பழகிடுச்சி தனா . ஸாரி தனா. எழுப்பி விட்டுடனா. அது அடிக்கறதுக்குல்ல வெளியில் வந்துடணும்ன்னு நினைச்சிட்டு போனேன்.

ஏன் இன்றைக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கிளம்பற.

மெட்டீரியல் கொஞ்சம் வருது. அப்புறம் ஆர்டர் கொடுத்து இருந்தத எடுத்துட்டு போக வராங்க. அதான் சீக்கிரமே போறேன்.

ம்… என்ற வார்த்தை சுரத்தே இல்லாமல் அவர் பதில் சொல்ல…

தனா. நீ சொன்னத நானும் யோசித்தேன். நீ சொல்லறதும் சரி தான். நானும் ரொம்ப நாள் அங்கே வேலைக்கு போற ஐடியா இல்ல. இப்படி சோகமா பதில் சொல்லாத. கஷ்டமா இருக்குல்ல. நீ சொன்னன்னு நானும்
ரயில்வே, பேங்க்ன்னு எல்லா பக்கமும்
வேலைக்கு அப்லே பண்ணினேன் தான. வேலை கிடைக்கல நான் என்ன செய்ய. …

டேய்… எழுதி போட்டேன்னு சொல்லு. அங்கே போய் எக்ஸேம ஒழுங்கா அட்டன் செஞ்சயா…

தனா…. நீ இன்னும் அந்த காலத்திலேயே இருக்கற. இப்ப எல்லாம் பணம் இல்லாம எந்த இடத்திலேயேயும் வேலை நடக்காது. அதனால விடு. இப்ப கிளம்பறேன். சாயங்காலம் வந்து பேசிக்கலாம். கிளம்பியவனையே
விடாது பார்த்தவர் எழுந்து தோட்டத்தை பார்க்க பின் புறம் சென்றார்.

ஆறரை மணிக்கு வேலைக்கு நடக்கும் இடத்துக்கு செல்ல அந்த காலை வேலையிலும் சுறுசுறுப்பாக வேலைக்கு செய்து கொண்டு இருந்தனர். ஏற்ற கூடிய ஆர்டர்களை சரி பார்த்தவன் பார்த்து ஏற்றி விட ….
சிறிது நேரத்திலேயே இறக்க கூடிய மரங்கள் வந்து இருக்க அந்த வேலையில் ஐக்கியமாகி இருந்தான்.

மணி எட்டு முப்பதை தொட வயிறு பசிக்க ஆரம்பித்தது. மெதுவாக குடோனை விட்டு வெளியேறினான். மெயின் வாசலுக்கு வர எதிரில் இருந்த உணவகத்தோடு கூடிய சிறிய டீக்கடையை நோக்கி ரோட்டை தாண்டி நடக்கும் ஆரம்பித்தான்.

இவனை பார்த்ததும் இவனுக்கு தேவையானதை எடுத்து கொண்டு வந்திருந்தார் அந்த முதியவர். இந்தாங்க தம்பி. வேற எதுவும் வேணுமா….

சாப்பிட்டு முடிஞ்சதும் வழக்கம்போல இஞ்சி டீ. அப்புறம் அண்ணா எப்படி இருக்கறிங்க…

நல்லா இருக்கறேன்பா. மணி ஓன்பது ஆக போகுதே…

ஆமாண்ணா. வேலை செய்யறவங்க லைனா வர ஆரம்பிச்சுடுவாங்க…போகணும். சாப்பிட்டவன் பில் தொகையை தந்தபடி வந்திருந்த டீ யை குடித்தான். வழக்கம் போல டீ சூப்பர்ணா. இதை சொல்லும் போது கேட்டவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தோடு கூடிய புன்னகை….

அங்கிருந்து கிளம்பியவன் எதிர் முனையில் இருந்த அலுவலகத்தை நோக்கி நடந்தான். ஆண்கள் பெண்கள் என கிட்டத்தட்ட நானூறு பேர் அங்கு வேலைக்கு செய்தனர்.
மர வேலைக்கு தனியாக ஆண்கள் ஒரு புறம் செய்ய முன் புறத்தில் பெண்கள் கிட்டத்தட்ட நூறு பேர் வரை
வேலைக்கு அமர்த்தி இருந்தனர். சிறு சிறு மர பொருட்களுக்கு வார்னீஸ் அடிக்க பாலீஸ் செய்ய என்ன அமர்ந்த படி வேலைக்கு செய்தனர்.

இதை தவிர ஆபீஸ் வேலைக்கு தனியாக பத்து பேர் அமர்த்தப்பட்டு இருந்தனர். மொத்தத்தில் அணைத்தையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் குரு இருந்தான். இரண்டு முதலாளிகள் இருக்க இருவருக்குமே இவனை அவ்வளவு பிடித்தது. வாரம் ஒரு முறை யாராவது ஓருவர் கணக்கு வழக்குகளை பார்த்து செல்வர்.

நேராக வந்தவன் குடோனை நோக்கி செல்ல அடுத்த ஆர்டரை செய்ய சொல்லியவன் வேலை நடப்பதை பார்த்தபடி இருந்தான். பதினோரு மணியை நெருங்கிய போது ஆபீஸ் ரூம்பில் இருந்து வந்த அட்டென்டர் சார் உங்கள பார்க்க சின்ன முதலாளி வந்து இருக்கறாங்க என்ற தகவலோடு வந்து நின்றான்.

இடைபட்ட நாட்களில் வருவது இல்லை தான். ஆனாலும் என்னவாக இருக்கும் என யோசித்தபடி அலுவலக அறைக்குள் நுழைந்தவன். தனது அறையை நோக்கி நகர அங்கே அவனது இருக்கையை ஆக்கிரமித்தபடி ராகவ் அமர்ந்து இருந்தான்.

என்ன குரு அப்படி பார்க்கிற… இந்த இடத்தில் அதுவும் உனக்கு பாஸா உன்னோட சீட்ல இவ்வளவு சீக்கிரம் என்ன எதிர் பார்க்கல்லல்ல குரு… என்ற கேள்வியோடு…

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here