முதல் சந்திப்பு…..

0
127

@Rajalakshmi_N உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்திடேன் டா….

முதல் சந்திப்பு…….

நேற்று இரவுசொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..
@Madhumathibharath க்கா
Note the point ur honor…..
PROJECT COMPLETED……

கல்வி கூ(மு)டம்

அந்த பள்ளி நகரின் மிக பிரசித்தமானது. அங்கே ஒரு நடுத்தர வர்க்கத்தின குழந்தைக்கு இடம் கிடைப்பது குதிரை கொம்பென்ன அதற்கும் மேல், கொசுப்பல்.

எல்லா ஆண்டும் 100% தேர்ச்சி பெரும் பெருமையுடைய பள்ளி.. அதற்காகவென்று விருதுகளும் வாங்கிய பள்ளி. அப்பேற்பட்ட பள்ளியில் போராடி தன் மகனை சேர்த்தாள் சௌந்தர்யா.

கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்கள் தான் எனினும் நடுத்தர குடும்பம் தான்.

விரலுக்கேத்த வீக்கம் வேணும் என்ற தன் அம்மாவின் பொலம்பல்களை புறம்தள்ளினாள்.

ஏனென்றால், இது போன்ற தரமான பள்ளியில் தனக்கு கல்வி கிட்டியிருந்தால் தனக்கு வளமான வாழ்க்கை கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம்.

அருண் 2 வயது இருக்கும்போதே தொடங்கியது தான் இந்த பள்ளி வேட்டை. அதில் அவள் கடைந்து கண்டெடுத்த பள்ளி இது.

பணம் கட்ட கஷ்டபடும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவால் அவனுக்கு கிடைக்கப்போகும் அந்தஸ்தையும், புகழ், பெருமை பணம் என்று என்னெல்லாமோ எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

அருணும் அவள் ஆசைக்கேற்ப படிப்பில் படு சுட்டியாக இருந்தான். எல்லா தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களில் மட்டுமே இருந்தான்.

அம்மாவுக்கு மட்டும் எப்போதுமே இந்த பெரிய பள்ளி என்ற மாயையில் சௌந்தர்யா அலைவது பிடித்தம் இல்லை. கிடைத்த சாக்கில் எல்லாம் சொல்லிப்பார்த்தார். நாங்களாம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிச்சோம். ஏன் நீ கூட அங்க தான் படிச்ச என்ன கெட்டு போச்சு இப்ப . படிப்புங்கறது நாம படிக்கறது தானே ஒழிய பள்ளிகூடத்துல என்ன இருக்கு என்று.

அம்மா வாயை திறந்தாலே சௌந்தர்யா அக்னி மலையாவாள். ஆமா படிச்சேன். அதனால தான் இப்படி இருக்கேன். என் கூட ஆஃபிஸ் வந்து பார் தெரியும். நாலு வார்த்த சேத்தாப்ல இங்கலீஷ்ல பேசினா எனக்கு கண்ண கட்டுது.

அருணுக்கு பாரு இப்பவே நல்லா படிக்க வருது. ஒன்னும் புரியாம பேசாதம்மா என்று காய்ந்து விட்டு போவாள்.

ஆமா ஆமா அந்த காலத்துல இருந்தவங்கலாம் இப்படி மூட்ட சுமந்துட்டு பெத்த பேரு படச்ச ஸ்கூலுக்கு போய் படிச்சா வாழ்ந்தாங்க. சூரியன பாத்தே மணி சொல்லல..? வந்துடா பெருசா பேசிட்டு என்று தனக்குள் முனகி கொள்வாள் அம்மா.

நாட்கள் நகர அருண் 7ஆம் வகுப்பு வந்து விட்டான். பள்ளியில் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டு, கவிதை,கட்டுரை,பொது
அறிவு, பாடல், ஆடல், வினாடிவினா, என பலவகை போட்டிகள் நடத்தப்பட்டன. அருண் அதிக போட்டிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்கள் பிடித்தான். மேடையில் அவன் பெயரே அதிகம் ஏலம் விடப்பட்டது.சௌந்தர்யா பூரிப்பின் விளிம்பில் இருந்தாள். வீட்டிற்கு வந்ததும் தன் ஆசை மகனை கட்டி தழுவி, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

பாத்தியா மா, எப்ப பாரு குறை சொல்வியே அந்த ஸ்கூல பத்தி, இப்ப பாரு என்றாள் பெருமை பொங்க. என்ன இருந்தாலும் தன் பேரன் பரிசுகளை குவித்ததில் பாட்டிக்கும் பெருமை தான். அருணின் முகத்தை வழித்து நெட்டி முறித்து, முகவாயை பிடித்து கொஞ்சியவள். இந்த கோப்பை, சர்டிஃபிகேட் எல்லாம் பத்திரமா அலமாரில வை ராசா என்க, அருணோ அட அங்க இல்ல பாட்டி இங்க வெக்கனும் என்று சொல்லி பரணையில் வைத்தான். ஆச்சர்யமும், குழப்பமுமாய் அத ஏன் டா அங்க வைக்கிற என்று சௌந்தர்யா கேட்க அருண் சொன்ன பதிலில், சௌந்தர்யாவிற்கு சர்வமும் ஆடிப்போனது. பாட்டி மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள சௌந்தர்யாவின் கணவர் வெளிப்படையாகவே தலையிலடித்து கொண்டார்…

அப்டி என்ன சொன்னான்???? அதானே கேட்குறீங்க…. சொல்றேன், சொல்றேன்…..

அருண் சொன்னான், அம்மா இந்த பரிச குடுத்த சீஃப் கெஸ்ட் சொன்னாரு.

வெரி குட் அருண் ” கீப் இட் அப்” ( keep it up) னு

நம்ம வீட்ல ஒசரமான எடம் பரணை தான அதான் அங்க வச்சேன்.. ??

கொஞ்ச பேர் சிரிக்கிறிங்க, கொஞ்ச பேர் முறைக்கிறாங்கன்னு தெரியுது…..

பட் இதுல ஒரு ஆழமான கருத்து இருக்கு

Change to SERIOUS MODE??..

அறிவுங்கறது படிக்கற புக்லையோ, ஸ்கூல்லயோ, வாங்குற மார்குலயோ இல்லங்க….

அறிவுங்கறது படிக்கறத அறிந்து, புரிந்து, உணர்ந்து படிக்கனும்..
பசங்கல மார்க் மெஷின்னு நினைச்சு அவங்களோட சின்ன சின்ன தனி அறிவ/திறமைய அழிச்சிட கூடாது.

அவனபாரு எவ்ளோ மார்க் வாங்கிருக்கான், இவள பாரு எவ்வளோ மார்க் வாங்கிருகான்னு கம்பேர் பண்ணி பண்ணி நம்ம குழந்தைகளோட சுய உருவத்த நாமலே சிதைக்க கூடாது.

குழந்தைங்க வீட்டுசெடி போல, அவங்கல இயல்பா அதுபோக்குல வளரவிடனும். பார்குல உள்ள குரோட்டான்ஸ் போல அவங்களுக்கு செயற்கை உருவம் திணிக்க கூடாது..

இதுக்கு திருவள்ளுவர் ஏதோ ஒரு குறல் சொல்லிருக்காரு….. ஆனா எவ்ளோ யோசிச்சும் எனக்கு நியாபகத்துக்கு வரல.

யாருக்கு தெரியுமோ கொஞ்சம் சொல்லுங்க பா ப்ளீஸ்ஸ்ஸ்…….,??? தூங்க போகும் முன் வந்த அந்த தொலைபேசியில் கேட்ட செய்தியால் தொற்றிகொண்ட பரபரப்பு, காலையில் நேரம் போக போக அதிகரிக்கிறதே ஒழிய குறையவில்லை.

என்ன உடுப்பது, எப்படி பேசுவது என வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் குதிப்பது என்ன என்றே புரியவில்லை.

பலநாளாய் எதிர்பார்த்தது தான் இருந்தாலும் எதிர்பாராமல் முடிவானதால் ஒருவித ஆனந்த அலுப்பு….

தேடி துருவி கண்ணை உருத்தாத ஒரு இளவெயில் நிற சல்வார் அணிந்து கண்ணாடி முன் நின்ற போதுதான் வந்தது அந்த சந்தேகம்….

நான் ரொம்ப குண்டா இருக்கேனோ, அவனுக்கு என்ன புடிக்குமா??

இந்த ட்ரெஸ்ல தான் குண்டா தெரிறமோ, ஆனால் மாற்ற இஷ்டமில்லை.

இந்த சந்திப்பிற்காகவென்றே பிரத்தியேகமாக வாங்கியதாயிற்றே…

இந்த டாங்களர் ட்ரெஸ்க்கு பொருந்துதா?? ஜிமிக்கி மாத்திக்கலாமா??

இப்படி ஆயிரம் ஆராய்ச்சிக்கு இடையில் தயாராகி புறப்படும் கடைசி நிமிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாத்தபோதும் திருப்தி இல்லை.

வந்து சேர்ந்தாயிற்று, அவசரபட்டு முன்னாடியே வந்து விட்டோமோ என்று தான் தோன்றியது.

எப்படி அறிமுகம் செய்துகொள்வது யோசித்தேன்…

ஹலோ செழியன், நான் அஞ்சலி… ??(இதென்ன போர்ட் மீட்டிங்கா) வேணாம்

ஹாய் செழியன், நான் தான் அஞ்சலி, நீங்கனா எனக்கு ரொம்ப புடிக்கும், உங்கள நேர்ல பாக்கனும் னு எனக்கு ரொம்ப ஆசை ?? ( ஆக்டர்ஸ் கிட்ட வழியற ஃபேன் போல தோனுமோ) ஹ்ஹூம் இதும் வேணாம்

பேசாம நேரா ஹாய் செழியன் னு போய் கட்டிக்கலாமா… ( நான் மொரட்டு சிங்கிள், எப்டி என்ன கட்டிபுடிப்ப னு சொல்லி கழுத்த கடிச்சிடா என்ன பண்ணறது) ??

ஹய்யோஒஒஒஒ ஒன்னுமே வரலியே…

எப்படி பேச தொடங்க வேண்டும், என்ன பேச வேண்டும் என 10 முறை ஒத்திகை பார்த்ததெல்லாம் மறந்து போய் நான் நகம் தாண்டி விரல் கடிக்க தொடங்கியபோது, அரவம் கேட்க ஆவலாய் திரும்பி பார்த்தேன்..

கண்கள் நிலை குத்தி போனது அவன் மேல்…

அவன் செழியன்…… ?

கம்பீரத்தின் முழு உருவம், அழகின் அர்த்தம், தொய்வில்லாத வேகமான ஆனால் நிதானமான நடை, சூழலை அளக்கும் பார்வை, கண்களா அது, ஜொலிக்கும் சூரியன், ( என்ன கண்ணு டா சாமி?? சுழலாய் என்ன சொழட்டுதே )

அவன் என்னை நெருங்க நெருங்க நான் நிதானமிழப்பது புரிந்தது….
இப்படியே பின் வழியே ஓடிவிட்டால் என்ன என்று கூட தோன்றியது.

ஆனால், எத்தனை நாள் கனவு, எவ்வளவு ஆசையாக எதிர்பார்த்த தருணம்….

இதோ வந்து விட்டான்…
என் அருகில் அவன்,
அவன் அருகில் நான்..

மற்றதெல்லாம் மங்கி போனது, அவன் என்னை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து சிந்திய ஒரு மென் புன்னகையில்…. ( Me Total Flat)

ஆறடிக்கும் மேலான உயரம், நிமிர்ந்து நின்றால் எத்தனை அடி உயரம் வருமோ தெரியாது அலைகளாய் கேசம், பாய்ந்து அடிக்க ஒரு நொடியே அதிகம், பூமியில் பதியும் திடமான நான்கு கால்கள் (மனுஷனுக்கு ஏது 4 கால் னு யோசிக்கிறிங்க அதானே. சொல்றேன்). கூரான நகங்கள், என்னை ஆச்சரிய படுத்தியது அவனின் ஆளுமையே…

யார் முடிவெடுத்தது, காட்டிற்கு சிங்கம் தான் ராஜா என்று???

நான் சொல்வேன் புலி தான் காட்டிற்கு ராஜாவாக இருக்கவேண்டும். அதுவும் இவனாக தான் இருக்க முடியும் என்று….

ஆம், செழியன் ஒரு தெய்வாம்சம் நிறைந்த புலி, ( நீங்க Boyfriend னு நெனச்சிங்களா, இல்ல இவன் பத்து டன் ஃப்ரண்டு) பாய்ந்து குதறுபவன் இல்லை, பார்வையிலேயே பந்தாடுபவன்…. (வாகை மாளிகை படித்தவர்களுக்கு தெரியும்) காளியின் நிழல், போத்திராஜின் உற்ற நண்பன்….

பயம் தரக்கூடிய உருவம் தான் இருந்தும் நேர்மாறாக பாசமும், பக்தியும், ஆசையுமே வருகிறது…..

என்னை அறியாமல் கண்கள் கலங்கியது, தொண்டை அடைத்து மூச்சு வாங்க ஆரம்பித்தது….

ஊமையாகி நின்ற என் நிலை உணர்ந்தானோ ஆர்பாட்டமே இல்லாமல் அருகில் வந்து ஆதரவாய் என் தோளில் கைப்போட்டான்…

கட்டுபாடுகள் உடைய அவனை கட்டிக்கொண்டு கதற தொடங்கினேன்…
தயவு பண்ணி என்ன உன்னோட கூட்டிட்டு போய்டு, போதும் எல்லாம். என்னால இங்க தாங்க முடியல என்று….

காலம் காலமாய் யாரிடமும் சொல்ல முடியாமல் உள்ளே உரைந்து கிடந்த எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அழுதேன்.

என் கண்ணீரிலும், அவன் கையணைப்பிலும் ஆறாத ரணமான என் காயங்கள் கறையக்கண்டேன்…

அசையாமல் என்னை தாங்கினான்
( நாம வெய்ட்டா இல்லயோ) என் உணர்வலைகள் அடங்கும் வரை…

பிறகும் விலகாது அருகே அமர்த்திக்கொண்டு சொன்னான்,

உன்னை உருக்கி நீ வார்க்கும் எதுவும் உனக்கு உதவாது, கடந்து போ, பற்றற்று இருக்க பழகு. உறவோ உணர்வோ, உரிமையோ எதுவும் உன் சொந்தம் இல்லை.

எல்லாவற்றையும் கடந்தால் காளியை அடைய முடியும்..

நீ இன்று என்னை சந்திப்பது என்றோ முடிவானது, அதுபோல் தான் எல்லாமும்…

புரியாது பார்த்தேன்,

அவன் கேட்டான் நான் யார் உனக்கு என்று??

என்ன சொல்ல?? சொல்லில் அடைக்க முடியா உணர்வில் கோர்த்த உறவது என்று எப்படி சொல்ல,

மலங்க விழித்த என் கண்ணம் தட்டி சொன்னான்,

இழந்தவைகளை ஈடு கட்ட நினைக்காதே… நடப்பு நரகமாகும்…

உன்னை நான் அறிவேன். உன் இயல்பின் மாற்றம் நீ அறவாய்..

மாறியது உன் பதவி மட்டும் தான். பாதை மாறவில்லை… மறக்காதே…

முன் போல எல்லாம் அவள் பொருப்பென்று எதையும் தள்ளி நின்று வேடிக்கை பார் குறைந்தபட்சம் உன் நிம்மதி நிலைக்கும் என்று …

எத்தனையோ கேள்விகள் தயார் செய்து கொண்டு வந்தேன் கதை பேசி சிரிக்க. எல்லாம் மறந்து போனது.

அவன் புறப்பட எத்தனிக்கையில் அதிர்ந்து போய் கேட்டேன், நாம் மீண்டும் சந்திப்பது எப்போது என்று???

திரும்பி நின்று அதே மோகன புன்னகையுடன்……

கேட்டானே ஒரு கேள்வி…..

மறுபடி ராஜிகிட்ட மாட்டி டாஸ்க்கு பண்ண ஆசையா உனக்கு????

மை மைன்ட் வாய்ஸு: ஆஹா மண்ட மேல உள்ள கொண்டய மறந்துட்டனே…..???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here