14 உயிரே என் உலகமே

0
851

அத்தியாயம் 14

காலை பொழுது அழகாக விடிய இசையும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து அந்த ஊரின் இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தாள்… அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டிற்க்கு முன் வாசல் தெளித்து கோலம் போட்டனர்.. சிக்கு கோலம், ரங்கோலி கோலம் என அனைத்தையும் ரசித்து பார்த்தால் இசை .. அன்று அங்காள அம்மன் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் அந்த ஊரே திருவிழா கோலம் பூண்டது..

இசையும் செல்வி தனக்காக வாங்கிக்குடுத்த சிவப்பு நிற தாவணியும் அதற்கு ஏற்றாற்போல் பச்சை நிற பட்டு பாவாடையும் அணிந்து எந்த ஒப்பனையும் இல்லாமல் தேவதையாக இருந்தால்..

அவர்கள் இருவரும் கோவிலுக்கு செல்லும் வழியில்ஒரு முதியவர் குல்பி வண்டியை தள்ளிட்டு வருவதை அந்த கிராமத்தில் உள்ள எல்லா சிறுவர்களும் ஏக்கமாக பார்க்க..அதை பார்த்த இசை அந்த பெரியவரிடம் சென்று

தாத்தா உங்ககிட்ட மொத்தம் எத்தனை குல்பி இருக்கு என்று கேட்டால்

என் மா எதுக்கு கேக்குற

மொத்தமா நான் வாங்கிக்குறேன் தாத்தா இந்தாங்க என்று தன் பர்சில் இருந்து 500 ரூபாய் நோட்டை கொடுத்து கொஞ்ச நேரம் நான் உங்க வண்டிய வச்சிக்கட்டுமா தாத்தா என்று கேட்டால்

அவரும் சரி என்று ஒத்துக்கொண்டார்.. எல்லாரும் வாங்க இன்னைக்கு என் பிறந்த நாள் எல்லாரும் வாங்க வந்து குல்பி எடுத்துக்கோங்க என்று இசை கத்த அங்கு உள்ள எல்லா குழந்தைகளும் குல்பி வாங்கி மகிழ்ச்சியாக அதை உண்டனர்

அப்போது அங்கு ஒரு சிறுவன் மட்டும் ஏற்கனவே இரண்டு முறை வாங்கிட்டு மறுபடியும் வாங்க வர.அவனை பார்த்து இசை அதிகமா ஐஸ் சாப்பிட்டா உடம்பு முடியாம போகிடும் ஏற்கனவே 2 சாப்பிட்ட இன்னொன்னு வேண்டாம் என்று சொல்ல

அதற்கு அந்த சிறுவன் இல்ல நான் இப்போதான் வீட்ல இருந்து வரேன் என்று தலையை குனிந்துகொண்டே சொல்ல அவனை நம்பாத பார்வை பார்த்தால் இசை.. அவன் சோகமாக இசையை பார்க்க இசையும் இதுதான் லாஸ்ட் இதுக்குமேல தரமாட்டேன் என்று சொல்லி ஒரு குல்பியை அவனிடம் குடுத்தாள்.. ‘அவனும் அதை வாங்கிக்கொண்டு அவளுக்கு அருகில் உள்ள திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுகொண்டுஇருந்தான் .. மறுபடியும் அந்த சிறுவன் வந்து ஐஸ் கேட்க டேய் இப்ப தானடா சொல்லி அனுப்புன அதுக்குள்ளயும் சாப்டியா என்று திண்ணையை பார்க்க ஒருநிமிடம் அதிர்ந்தாள்.. [அது ஒன்னும் இல்லைங்க அங்க இருந்தது நம்ப அகியும் மகியும் தான்] ஒய் நீங்க இரண்டு பெரும் ட்வின்ஸ் ஆஹ் என்று ஆச்சிரியமாக கேட்டாள் …

ஆமாம் என்று இருவரும் தலையாட்ட உங்கள கண்டே புடிக்கமுடில்ல டா அச்சு அசல் ஒரே மாறியே இருக்கீங்க உங்கள கண்டுபுடிக்குறது ரொம்ப கஷ்டம் என்று சொல்ல.. அதற்கும் இருவரும் அழகாக தலை ஆட்டினார்… இசை இருவரையும் பார்த்து ஒரு அழகிய சிரிப்பை உதிர்க்க இதை தூரத்தில் இருந்து பார்த்த இனியன் அவளை ரசித்துப்பார்த்தான்.. இசையின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது .. அவள் அருகில் சென்று அவளை ஒய் குல்பி என்று அழைத்தான்.. அதை ஏதும் கண்டுக்காமல் இசை கோவிலுக்கு செல்லப்போக ஓடிப்போய் அவள் முன்னாள் நின்று வழியை மறைத்தான்.. அவள் பையா வழிய விடுங்க நான் போகணும் என்று சொல்ல அவளின் பையா என்ற வார்த்தையில் கோவம் வந்து உனக்கு எத்தனை தடவ சொல்றேன் பையானு கூப்பிடாத சொன்னா கேக்கமாட்டியா இரு டி உனக்கு இருக்கு என்று மனதில் நினைத்துக்கொண்டு

குல்பி நீ உள்ள போகணும்னா மொதல்ல அங்க இருக்கு பாரு அந்த அரச மரத்த 10 தடவ சுற்றி அதுக்கு முன்னாடி 5 தடவ கைதட்டிட்டு தான் உள்ளேபோகணும் என்று அவன் சொல்ல இசையும் அவன் சொன்னது உண்மை என்று நம்பி அந்த அரச மரத்தை சுற்றினாள். பின் அவன் சொன்னதுபோலவே அதன் முன் கைகளை தட்டினாள் அவளின் செயலை அந்தகோவில்கு வரும் அனைவரும் விசித்திரமாக பார்த்தனர் அது எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை.. அவன் சொன்னதுபோல் செய்து முடித்துவிட்டு கோவிலுக்கு சென்றால் .சாமியை கும்பிட்டு பிரசாதம் தரும் இடத்திற்கு சென்று பிரசாதத்தை வாங்கினாள்.. இசை எங்கே என்று இனியன் தேடிக்கொண்டு இருக்கும்போது தேவா அங்கு வந்து

டேய் மாப்பிள யாரடா தேடுற

ஹான் உன் தங்கச்சி தான் தேடுறேன் எங்கனே தெரில்ல டா

நீ எதுக்கு டா அவள தேடுற

என்ன மச்சான் இப்படி கேட்டுட்ட எல்லாம் உன் தங்கச்சிய கட்டிக்க தான் என்று அசராமல் அவன் சொல்ல

டேய் என்னடா சொல்ற உண்மைய தான் சொல்றியா

ஆமா டா என்று இனியன் சொல்ல

இனியா உனக்கே இது ஓவர் ஆஹ் தெரில்ல அவளுக்கும் உனக்கும் எப்படிடா செட்டாகும் ..

அதலாம் செட் ஆகும் என்று இனியன் சொல்ல

தேவாவுக்கு இனியனை பற்றி நன்றாக தெரியும் அவன் ஒருமுடிவு எடுத்தால் அதிலிருந்து மாறமாட்டான் என்று அதனால் அவனும் எதுவும் பேசாமல் இசையை தேடினான்

அப்போ இசை மறுபடி மறுபடி சென்று பிரசாதத்தை வாங்குவதை பார்த்த தேவா ஐயோ இவள கட்டிக்க போறவன் மொத்த சொத்தையும் சப்பிட்டே அழுச்சிடுவா போலயே பாவம் அவன் என்று புலம்ப

ஏன்டா உன் தங்கச்சிய நா நல்லவச்சிக்குவேன் நீ வேணும்னா பாரு என்று இனியன் சொல்ல

இசை மறுபடடியும் பிரசாதம் வாங்க டேய் இதோட 5 தடவ வாங்கிட்டா அப்படி என்னதான் அவ பண்ணுரா என்று அவளை பின் தொடர்ந்தனர் .. இசை அந்த பிரசாதத்தை அங்குள்ள பிச்சை காரர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்தால் .. தேவாவும் இனியனும் அவளிடம் சென்று என்ன பண்ற என்று கேட்க

தேவ் பையா இவுங்களாம் கோவில்குள்ள வர மாட்டங்களாம் பாவம் அதான் நான் அவுங்களுக்காக இங்க கொண்டுவந்து கொடுத்தேன் என்று சொல்லிவிட்டு அங்கு சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு சென்றால்

அங்கு தமிழ் அகி மகி மற்றும் பல சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்க அவர்கள் அருகிலுள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து தமிழ் பார்த்து ரசித்து கொண்டு இருந்தால் .. எனோ இசைக்கு தமிழை மிகவும் பிடித்துவிட்டது ..

அப்போது திடீர் என்று அங்கு மாட்டுவண்டி ஒன்று இவர்களை நோக்கி வர அந்த மாட்டுவண்டியை கட்டு படுத்த யாருமில்லாததை பார்த்த இசை அங்கு உள்ள சிறுவர்களை அங்கிருந்து ஓட சொல்லி கத்தினாள் .. அனைவரும் ஓடி விட தமிழ் மட்டும் ஒன்றும் புரியாமல் அலுத்து கொண்டுநிற்க அவன் அருகில்சென்று தமிழை தூக்கிக்கொண்டு இசை கண்முடி நின்றாள் .. அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு நின்றாள் .. கண்டிப்பாக அந்த வண்டி மோதிவிடும் என்று அவள் நினைக்க ஆனால் அதற்குள் இனியன் அந்த மாட்டுவண்டியின் கயிரைப்பிடித்து நிறுத்தினான் …

இதை பார்த்து பதறி அங்கு ஓடிவந்த சிவகாமி தமிழை தூக்கி முத்தமிட்டு இசையிடம்

அம்மாடி நீ மட்டும் இல்லைனா இன்னைக்கு என்று சொல்ல வருவதற்குள்

அத்தை விடுங்க நம்ப தம்பிக்கு ஒன்னும் ஆகல பயப்படாதீங்க என்று சொல்ல

இல்ல மா எனக்கு என்ன சொல்றதுனே தெரில்ல அந்த கடவுளா பார்த்துதான் உன்ன இங்க அனுப்பி வச்சியிருக்காரு ரொம்ப நன்றி மா என்று அவர் சொல்ல

அப்போது இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து மனோகர் இசையிடம் வந்து

இங்க என்ன பன்னிட்டு இருக்க இசை என்று குரல் உயர்த்தி கேட்க

ஒண்ணுமில்ல அப்பா என்று இசை சொல்ல .. சிவகாமிக்கு இன்ப அதிர்ச்சி .. இசை தன் தம்பியின் மகள் என்று தெரிந்தவுடன் அவளை இன்னும் சிவகாமிக்கு பிடித்துவிட்டது

மனோ நா சொல்றத கொஞ்சம் கேளுப்பா என்று அவர் ஏதோசொல்ல வருவதற்குள் அங்கு இருந்து கோவமாக இசையின் கைகளை பிடித்து இழுத்து சென்று விட்டார்

அப்போது அங்கு வந்த இனியன் யார்மா அது என்று மனோவை காட்டி கேட்க என் தம்பிடா என்று அவர் சொன்னவுடன் இனியனுக்கு கோபம் தலைக்கு ஏறியது

அம்மா இன்னோரு தடவ அப்படி சொன்ன அவ்ளோதான் பாத்துக்கோ என்று கத்த இனியா எனக்கு ஒரு சத்தியம் பண்ணுடா நீ கண்டிப்பா இசைய தான் கல்யாணம் பண்ணிக்கணும் எனக்கு தெரியும்டா நீ அந்த பொண்ண விரும்புறது நீ சாமிகிட்ட வேண்டி எப்போ அந்த மரத்துல மஞ்சள் கயிற்றை காட்டுனியோ அப்போவே அவஉனக்குத்தான் என்று சொல்லி அவர் மயங்கி அவன்மீது சரிந்தார்

அம்மா என்று அவன் கத்த …. சிவகாமியின் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது

பழைய நினைவுகளில் இருந்து தேவாவும்இசையும் வெளியே வர … பையா நீங்க எதோ என்கிட்ட சொல்லணும் சொன்னிங்களே என்று இசை கேட்க

ஆமா மா உன்ன தேடி ஒரு 4 ஹிந்தி காரா பசங்க வந்தானுங்க என்ன மா எதாவது பிரச்சனையா ..
பையா பிரச்சனைதான்

என்ன பிரச்சனை சொல்லு நான் பாத்துகுறேன்டா என்று தேவா சொல்ல

பையா எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா

சொல்லு மா

இனியனையும் அவுங்க தம்பிகளையும் எப்போதும் பத்திரமா பாத்துக்கோங்க பையா என்று சொல்லிவிட்டு

நான் கிளம்புறேன் என்று அவள் பைக்கில் ஏறி இனியனை காண சென்றால்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here