வேகமாக… கீழே வந்த சுரேஷ்.. கயல்விழிய தேடினான் .எங்கேயும் இல்லை னு தெரிந்ததும்… அம்மாவை தேடி போனான்… அம்மா…!!
என்னடா ….
.
கயல் எங்க மா னு கேட்டான்..
அவ பிரண்ட்டா பாக்க போயிருக்க டா ….
யாரு சந்தியா வீட்டுக்கா
போயிருக்கா….
ஆமா டா..
சரிமா நா கொஞ்சம்
வெளியே போய்ட்டு வரேன்…
டேய்ய்.. வீட்டுல ஒழுங்கு படுத்தனும் உன் அண்ணா வேற வண்டி வந்துடும் எல்லாம் எடுத்து வையுங்க னு சொல்லிட்டு போறான்… நீ பாட்டுக்கு வெளியே போறனு சொல்லுற … நா ஒத்த மனுஷி எப்படி டா செய்ய முடியும்…
ஏன்.. அண்ணா
இருக்காருல அவர பண்ணச்சொல்ல வேண்டிதானே.. எல்லாமே ….. நா பாத்துக்கிறேனு சொன்னார் ல வந்து பாக்க சொல்லு…. நக்கலா … சொன்னான்…
…டேய்ய் அவனும் எவளோ தான் பாப்பான் சொல்லு.. உனக்கு வேண்டியது, கயல்க்கு ஸ்கூல் ரெடி பன்ணனும்.. ..அதுக்கே அலைஞ்சிட்டு இருக்கான் டா.. அதான் நானே முடிஞ்ச அளவு பாத்துக்கிறேன்…
ஆமாமா… ரொம்ப கரிசனம் தான்போ உன் மகன் மேல…..
ஹாஹா… போடா .. என் மகன் மேல நான் தான் அக்கறைபடனும்…..
சுரேஷ் மனதில் நினைத்தான்.. உங்க மகன் பண்ணிருக்கற காரியம்… தெரிஞ்ச நீங்க இப்படி பேச மாட்டிங்க மா உங்க வளர்ப்பு பொய்யா போச்சே னு உயிர கூட விட்டு விடுவிங்க .. மனசு வலித்தது.. அவனுக்கு
நீங்க எதுவும் செய்யாதீங்க… நான் போய்ட்டு சீக்கிரமா வந்துறேன் .. நா பாத்துக்கிறேன் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க..னு சொல்லி அனுப்பினான்….. மாத்திரை போட்டீங்களா…
ஓ… மறந்துட்டேன் டா…
ஹ்ம்…. போங்கமா போய் போட்டு ரெஸ்ட் எடு மா வந்துறேன்…..
சரிடா…
அவங்க போனதும் சுரேஷ் வெளியே வந்தான்…. நேர சந்தியா வீட்டுக்கு சென்றான்…
கயல் கயல்..னு கூப்பிட்டான் …
சந்தியாவோட அம்மா வெளியே வந்தார்கள்… அடேடே… வாப்பா சுரேஷ்.. ஏன் வெளியே நிக்குற உள்ள வா னு கூப்பிட்டார்கள்… அவனுக்கு ஒருமாதிரி இருந்தது.. இதுவரை யார்வீட்டுக்கும் போனது இல்லை காலேஜ் விட்டா ஹாஸ்டல்… ஹாஸ்டல் விட்டா வீடு.. இருந்தவன்..
திலகம் கூப்பிட்டதும் தயக்கம் வந்ததது அவனுக்கு..
அட என்ன பா இப்படி யோசிக்கிற உள்ள வர இதுவும் உன் வீடு மாதிரி நெனைச்சிக்க பா வா…
இவளோ தூரம்கூப்பிடுறாங்க மதிக்கலனா … அவங்க மனசு கஷ்டபடும்… வரேன் ஆண்ட்டி…. எப்படியோ உள்ளே வந்துட்டான்…
உக்காரு பா நா போய் காபி எடுத்துட்டு வரேன்..
அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி … ப்ளீஸ் கயல் எங்க ஆண்ட்டி….
நீ சொன்ன கேக்க
மாட்ட இரு…….
.. உள்ளே போய்விட்டாள்… ஆண்ட்டி….??
எங்க அவன் கத்துனது காத்தோட போனது தான் மிச்சம் .
. வீட்டை சுத்தி பார்வை ஓட விட்டான் சுவற்றில் மாட்டிருந்த போட்டோவை கண்டதும்..விழி அகல பார்த்தான்.. அது கயல் சந்தியா இருவரும் இருக்கும் படம்..கயல்விழியின் முகத்தில் இருக்கும் புன்னகை …வசீகரித்தது மனது விட்டு சிரித்து இருக்கிறாள்…. இப்படி ஒரு நாள்கூட இவள் சிரித்து பார்த்தது இல்லையே….
ஹுக்கும்….. சிரிக்குறமாதிரியா நீயும்..உன் அண்ணனும் நடந்துக்கிட்டிங்க .?(அவனுடைய மனசாட்சி கேள்வி கேட்டது..) குற்றஉணர்வு ஏற்பட்டது… பக்கத்தில் இருக்கும் சந்தியாவை பார்த்தான்…. தோளோடு தோள் அணைத்துபடி இருந்தாள்.. இவள் தான் என் தங்கைக்கு எல்லாமும்மாக இருந்துஇருக்கிறாள்…..நாங்க உதாசீனம் படுத்தின நாட்கள் எல்லாம் என் தங்கையை நட்புனும் அன்பை காட்டி அரவணைத்துக்கொண்டவள் …. அதை நினைக்கும் போதே சுரேஷ்க்கு சந்தியாவை பிடித்து விட்டது……சந்தியாவையே பார்த்துக்கொண்டிருந்தான்….
திலகம் வர அரவம் கேட்கவும் போட்டோவை அதனிடத்தில் .. மாட்டிவிட்டு சமத்தா போய் உக்காந்து கொண்டான்…(.மனசாட்சி ..அடப்பாவி கொஞ்சநேரத்துமுன்ன இந்த வீட்டுக்குள்ள வர அப்படி யோசிச்சவன நீ .. இப்போ என்னடான இந்த வீட்டுப்பொண்ண ஜொள்ளு விடற உனக்குலாம் எதுக்கு டா இந்த வெட்டி வீராப்பு..அவனுடைய மனசாட்சி கிண்டல் பண்ணியது ) அடங்கு….
சரிங்க ஆண்ட்டி… கயல் எங்க போயிருக்கா…?
பக்கத்துல தான் பா
கோவில் வரை போயிருக்காங்க….
ஓ….!
நீங்கல்லாம் ஊரை விட்டு போறீங்கனு கயல் சொல்லி அழுதுட்டு இருந்தா…
மனசுக்கு கஸ்ட்மா இருந்ததது… எப்படியோ பேசி சந்தியா கூட கோவில் போய்ட்டுவானு அனுப்பி வச்சேன்….
ஹ்ம்… சரிங்க ஆண்ட்டி நான் போகிற வழியில் பாத்துக்கிறேன்…. கிளம்பறேன் ஆண்ட்டி…
சரிப்பா… அம்மாவையும் கயல்யும் நல்லா பாத்துக்கோங்க பா.. இங்க இருந்தாலாவது ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்… நீங்கல்லாம் தூரமா போறீங்க.. கண்கலங்க சொன்னால்……
அவனுக்குமே.. கண்கள் கலங்கிவிட்டது… அதை மறைத்து பரவாயில்ல ஆண்ட்டி… சென்னைக்கு வரனும் நீங்க எல்லாரும் சரியா ….
வருவோம் பா கயலும் என் பொண்ணுமாதிரிதான் கண்டிப்பா வருவோம்…
அப்போ சரிங்க
ஆண்ட்டி நா கிளம்பறேன் அங்கிள்ல சரவணன கேட்டதா சொல்லுங்க…
சரவணனும் கூட தான் போயிருக்கான் பா…
ஓ….. !!
ஓகே பை… ஆண்ட்டி .
சரிப்பா…….
கோவில்ல கூட்டம் அவ்வளவா இல்லை.. சுரேஷ் உள்ளே வந்ததும் பார்வையை சுழலவிட்டான்… எங்கே காணமே….. சுத்தி பார்த்துட்டே வந்துகொண்டிருந்தான்.
அதோ. அங்கே இருகாங்க கிட்ட போகையில்..
சரவணனின் தோளில் கயல்விழி சாய்ந்து அமர்ந்துபடி இருந்தாள்… சரவணன் கையை பிடித்துக் கொண்டிருந்தான் சரவணன்.
அதை பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் சுரேஷ்.
........ வளரும்.