9.கிணற்று தவளை

0
129

தன் உயிரில் பாதியாய் நினைத்தவன், தன்னுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தோள் கொடுப்பான் என்று நினைத்தவன், இன்று தன் எதிரியோடு கைகோர்த்து வரும்போது அவளது இதயம் சுக்கு நூறாக உடைந்தது போல் உணர்ந்தாள். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் மேலும் அவளை நெருங்கி இருந்தான்.

நித்யன்,” ஹாய் டார்லிங் நீ என்ன இவ்வளவு சீக்கிரம் இங்க வந்து இருக்க? என்ன பார்க்க அவ்வளவு ஆசையா?

நிர்பயா,” இந்தக் கேஸ் என்னாச்சு?

நித்யன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவள் சட்டென அவன் சட்டையை பற்றினாள்.

நிர்பயா,” இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா? நம்ப வெச்சு கழுத்தறுக்குறது உங்களுக்கு ரொம்ப பிடிச்சமான விஷயமா? இந்த கேஸ் எங்க ஊருக்கு சாதகமா முடிச்சு தரேன்னு சொல்லிட்டு இப்போ இவரோட கை கோர்த்து கிட்டு வரீங்க. இந்தக் கேஸ் முடிஞ்சு போச்சு அப்படினு உங்களுக்கு தெரியுமா?தெரியாதா? அப்படி தெரியும்னா எப்ப தெரியும்? வாய திறந்து ஏதாவது பேசுங்க மிஸ்டர்.நித்யன்.

நித்யன்,” நிர்பயா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. இந்த கேஸ் எப்படி முடிந்ததுனு நான் சொல்றேன். அதுக்கு நீ கொஞ்சம் அமைதியாய் இரு.

தசரதன்,” ஆமாம்மா அவர் சொல்றதை கொஞ்சம் கேளு அப்பதான் உனக்கு புரியும்.

தசரதன் இவ்வாறு பேசியதும் அவரை தீயென முறைத்தாள்.

நிர்பயா,” நீங்க எதுக்கு சர் என்கிட்ட பேசுறீங்க? எனக்கு பதில் சொல்ல வேண்டியது இதோ நிக்குறாரே இவர் தான். நீங்க இல்ல சோ ப்ளீஸ் நீங்க அமைதியா இருங்க.

நித்யன்,” நிர்பயா, சட் அப் வாட் இஸ் திஸ்? வயசுல பெரியவர் அவர் கிட்ட போய் இப்படி பேசுற?

நிர்பயா, “ஓஓ!! உங்களுக்கு ஏன் சர் இவ்வளவு கோபம் வருது.?நான் அவர் கிட்ட பேசின வார்த்தையில ஒர் வார்த்தை அவர மரியாதை இல்லாம பேசினேன்னு சொல்லுங்க பார்ப்போம். இத்தனை நாளா நீங்க தானே சர் அவர துருவி துருவி கேள்வி கேட்டீங்க. இப்ப என்னவோ புதுசா பாசம் பொங்குது. எவ்வளவு குடுத்து உங்கள விலைக்கு வாங்கினார்? என்றதும் அவன் கோபம் அடக்கமட்டாமல் வந்தது. ஆனாலும் அதை அடக்க பெரும்பாடு பட்டு கொண்டிருந்தான்.

நித்யன், “போதும், இதுக்கு மேல பேசாத நீ வீட்டுக்கு கிளம்பு நான் அங்க வந்து பேசுறேன்.

நிர்பயா,” எதுக்கு என்ன விரட்டுவதிலையே குறியா இருக்கீங்க? நான் இங்க இருந்தா உங்க குட்டு உடைஞ்சிடும்னு பயமா இல்ல இன்னும் வேற யாரையாவது நம்ப வச்சி ஏதாத்த திட்டமா? இல்ல வாங்க வேண்டிய காசு ஏதாவது பேலன்ஸ் இருக்கா சொல்லுங்க? என்றதும் அவன் ஐவிரலும் அவள் பட்டு கண்ணத்தில் பதிந்தது.

நித்யன், “என்ன விட்டா ஓவரா பேசிகிட்டு போற? யாருக்கு யார் பணம் குடுக்குறது? இந்த கேஸ்ல என்ன பிரச்சினை இருக்கு சொல்லு? உங்க ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கையெழுத்து போட்டு குடுத்து இருக்காங்க. அது இல்லாம ஒருத்தர் கூட உனக்கு சாதகமா இல்ல. அப்படி இருக்கும் போது பொய் சாட்சி சொல்வாவது ஆள் வருவாங்களா? சொல்லு. ஊரே சேர்ந்து உன்ன திட்டிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்காக நீ ஏன் இவ்வளவு மெனகெடுற? நம்மளுக்குனு லைப் இருக்கு. அத பாக்க வேண்டாமா? கல்யாணம் ஆன பிறகு நீ என்ன உங்க ஊருக்குள்ளயேவா இருக்க போற? இல்லையே, என் கூட நம்ம வீட்டுல தானே இருக்க போற? அப்புறம் என்ன அங்க கம்பெனி வந்தா என்ன? வரலன்னா என்ன? பேசாம வீட்டுக்கு போ நிர்பயா.

நிர்பயா, “என்ன பேசுறீங்க நித்யன், இத நான் உங்க கிட்ட எதிர்ப்பார்க்கல! எப்படி உங்களாள இப்படி பேச முடியுது. கல்யாணம் ஆகிட்டா பொறந்து, வளர்ந்த இடம் எங்களுக்கு இல்லாம போயிடுமா? அந்த ஊர் எப்படி போனா எனக்கேன்னனு இருக்க முடியுமா? பொறந்த இடம் அம்மா மாதிரி, அப்ப உங்க அம்மாக்கு ஒரு பிரச்சினைன்னா கூட இப்படி தான் பேசுவீங்களா? நீ வேற ஊர்ல இருந்துக்கிட்டு உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லைனா நாம தான் அங்க இல்லையே, அப்பா எப்படி போனா என்னனு இருப்பீங்களா? என்றதும் அவன் மறுபடியும் கை ஓங்க இம்முறை அதை லாவகமாக தடுத்தாள்.,”ஹலோ சர் என்ன கோபம் வருதா? நடக்காத ஒரு விசியத்தை பத்தி பேசும் போதே உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்தா என் கண் முன்னே எங்க ஊர் நாசமாகறத பார்த்துக்கிட்டு நான் எப்படி சும்மா இருப்பேன்.

நித்யன்,” இப்ப என்ன பண்ண போற? உன்னால எதுவும் பண்ண முடியாது என்றான் எரிச்சலுடன்.

நிர்பயா,” ஏன் முடியாது? கண்டிப்பா முடியும். இந்த கேஸ் அப்பீல் போக போறேன். சாகறதுக்கு ஒரு நிமிசம் முன்னாடி கூட இந்த கம்பெனி ஊருக்கு வர முடியாத அளவுக்கு செஞ்சிட்டு தான் சாவேன்.

நித்யன்,” என்ன எதிர்க்க போறீயா? வீணா தோத்து போகாத என்றான் ஏளனமாய்.

நிர்பயா, “சூப்பர் அப்ப சர் தான் இனி இவருக்கு வக்கீலா? இப்ப தான் எனக்கு இன்னும் ஆர்வமா இருக்கு. ஒரு சோப்ளாங்கி கூட சண்டை போட்டு ஜெயிக்கறதுல என்ன இருக்கு? உங்கள மாதிரி பலமான ஒருத்தர் கூட மோதி ஜெயிக்குறது தான் சந்தோஷமே. இனி இந்த நிர்பயா யாருன்னு நீங்க தெரிஞ்சிப்பீங்க என்று பெண் புலியாய் கர்ஜித்தவளை கண்டு ஒரு நொடி அரண்டு தான் போயினர் நித்யனும், தசரதனும்.

நிர்பயா, “பாய் மிஸ்டர் நித்யன் வீல் மீட் இன் ஆர்குயூமெண்ட் பிளேஸ்.

அந்த நேரம் நீதிபதி அங்கு வரவே சற்று அமைதியானாள். அவர் இவளைக் கண்டு என்ன நிர்பயா நீ இன்னும் வீட்டுக்கு போகலையா?என்றார்.

நிர்பயா,” இல்ல சார் அது வந்து என்று இழுத்தாள்.

நீதிபதி,” எப்பவும் போல அப்பா கூப்பிடுமா.

நீதிபதி பிரியங்காவின் தந்தை பிரியங்கா யார் என்று ஞாபகம் இருக்கிறதா? நிர்பயாவின் நெருங்கிய தோழி. கோர்ட் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவள் அவரை அப்பா என்று அழைப்பாள். அவர் வீட்டில் சகஜமாக உலா வருவாள். அதனால் தான் இந்த கேஸ் தள்ளுபடியானது பற்றி சொல்லி விட்டார் இல்லையெனில் அவள் உள்ளே சென்று விசாரித்த பிறகே தெரிந்திருக்கும்.

நிர்பயா,” ஒன்னும் இல்ல அப்பா. இந்த கேஸ் தள்ளுபடியானது கொஞ்சம் வருத்தம் அதனால் மறுபடியும் அப்பீல் போகப்போறேன்.

நீதிபதி,” உன்னோட எதிர்த்தரப்பு வக்கீல் யார் என்று பார்த்தியா? உன்னால அவங்க கூட போராட முடியும் என்று நினைக்கிறாயா? நித்யனிடம் திரும்பியவர் என்ன மிஸ்டர் சக்கரவர்த்தி இத்தனை நாளு உங்களுக்கு எதிரா நீங்களே வாதாடிக்கிட்டு இருந்தீங்க. இவ்வளவு நாள் நீங்கதான் சக்கரவர்த்தியின் ஏன் மறைச்சீங்கன்னு நீ என்கிட்ட ரீசன் ன்னு சொல்லிட்டீங்க. இவளுக்கு சொல்ல வேண்டியது தானே. குழம்பிப் போய் இருக்கா. நீங்க ரெண்டு பேரும் பேசுங்க நான் உங்க அப்பா கிட்ட கொஞ்சம் பேசணும் யூ கண்டினியூ.( என்னது இவன்தான் சக்கரவர்த்தியா?? அடப்பாவி ஏற்கனவே பேய் வந்தா மாதிரி ஆடிக்கிட்டு இருக்கா இப்ப எதுவும் தெரிஞ்சு போச்சா நீ அவ்வளவு தான்.)

நித்தியன் மைண்ட் வாய்ஸ் ,” இப்ப இவனை யார் என்று கூப்பிட்டது? வந்ததுக்கு நல்ல பத்த வைத்து விட்டு போறாரு. ஏற்கனவே கேஸ் டிஸ்மிஸ் ஆனது வச்சிகிட்டு என்னை கிழி கிழினு கிழிச்சுக்கிட்டு இருக்கா. இதுல நான் தான் சக்கரவர்த்தினு தெரிஞ்சு போச்சு. அய்யோ பார்வையே சரியில்லையே இங்கேயே அடிச்சு விடுவாளோ? சமாளி நித்யன் சமாளி என்று எண்ணிக் கொண்டிருந்த நேரம் நிர்பயா வேறு சிந்தனைகளில் மூழ்கியிருந்தாள்.

நிர்பயாவுக்கு அவள் இதயமே சுக்கு நூறாக உடைந்ததை போல் உணர்ந்தாள். நம்பிக்கை துரோகம் அதுவும் தன் உயிரில் பாதியாய் நினைப்பவன் என்னுடைய உண்மையான பெயரை கூட சொல்லாமல் ஏமாற்றியிருக்கிறான். இல்லை இல்லை நான் தான் ஏமாந்து இருக்கிறேன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறேன்.? இப்படி இருந்தால் நான் எப்படி நியாயம் வாங்கித் தருவேன். சாதாரணமாக ஏமாற்றி விட்டானே, அவ்வளவு மோசமாகவா இருந்து இருக்கிறேன். இவன் கண்களில் நான் பொய்யை காணவில்லையே உண்மையாக தானே என்னை விரும்பினான். அவன் வார்த்தைகளிலும் பொய்யை உணரவில்லையே!! இது எப்படி சாத்தியம்? எதுவாக இருப்பினும் நம்பிக்கை துரோகம் மிகவும் கொடியது அதுவும் நான் நேசிக்கின்றவரே தன் முதுகில் குத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு கண்ணீர் வரவா வேண்டாமா என்று இமைகளில் தேங்கி நின்றது அழுதாள் அவள் நிர்பயா இல்லையே. ஒரு முடிவுடன் அவனை நோக்கினாள் அந்தப் பார்வையின் வீரியம் அவனை பஸ்பமாக்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நிர்பயா,” உங்க பேரு என்ன? எதுக்காக என்ன விரும்புறேன்னு சொல்லி ஏமாத்துனீங்க? இந்த கேஸ் ஜெயிக்க உங்களுக்கு ஒரு பெண் மனம் தான் கிடைத்ததா? ஏமாத்த நினைச்சது கூட கேஸ் விஷயமாக என்று எடுத்துக் கொண்டாலும் ஊரைக் கூட்டி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது ஏன்? என்று அவன் சட்டையை கொத்தாக பற்றினாள்.

நித்யன்,” ஸ்டாப் இட், நிர்பயா நான் ஒன்னும் உன்னை ஏமாத்தல என் காதலும் பொய்யில்லை. என்னுடைய உண்மையான அடையாளத்தை நான் மறைத்தேன் தான் ஆனால் அதற்கான காரணத்தை நான் சொல்றேன் ஆனா நீ பொறுமையா கேளு.

நிர்பயா,” இன்னும் உங்களோட பெயரை சொல்லல.

நித்யன்,” ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு ஐ அம் நித்யன் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தி குரூப் ஆப் கம்பெனிஸ் ஓட சி.இ.ஓ. லீடிங் யங் பிஸ்னஸ் மேன் பிளஸ் லீடிங் லாயர். பிசினஸ் என்னோட பேஷன் வக்கீல் தொழில் என்னுடைய பிரப்ஷன். என்னுடைய அப்பா பேரு தசரதன். நான் எதுக்காக இத்தனை நாள் உன்கிட்ட இத மறைப்பததற்கு ஒரு காரணம் இருக்கு என்று சொல்லி அவனை கையை உயர்த்தி அமைதியாக இருக்க சொன்னாள்.

நிர்பயா,” சோ இத்தனை நாளா இரட்டை வேஷம் போட்டுக்கிட்டு என் கூட இருந்து இருக்கீங்க. இந்த நிமிஷம் சொல்றேன் கேட்டுக்கோங்க மிஸ்டர். சக்கரவர்த்தி. நமக்கு நிச்சயம் ஆனத மறந்திடுங்க இந்த கல்யாணம் நடக்காது.உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னுடைய ஊருக்கு நான் உங்கள மாறி நம்பிக்கை துரோகம் பண்ண விரும்பல என்று சொல்லும் போது ஒரு அழுத்தம் இருந்தது அவளிடம்.

நித்யன்,” என்ன பேசுற நிர்பயா நீ? என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? இந்த கேசுக்கும் அவளுடைய கல்யாணத்திற்கும் என்ன சம்மந்தம்? எதுக்காக முடியாதுன்னு சொல்ற? நான் என்னுடைய அடையாளத்தை மறைத்தது தப்புதான் அதுக்காக என்ன விட்டுட்டு போறேன்னு சொல்லாத ப்ளீஸ் என்று அவன் கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

அவள் இவனை சட்டை செய்யாமல் சென்று கொண்டிருந்தாள். நித்யனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. இவளுக்காக தானே இத்தனை வருடம் பேசாமல் இருந்தேன் தந்தையிடம் பேச ஆரம்பித்தேன் இவள் ஒருத்திக்காக தானே அதையே புரிந்துகொள்ளாமல் செல்லும் இவளை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

தசரதன்,” தம்பி என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? கவலைப்படாதீங்க எல்லாம் சரியாயிடும். ஆனா இந்த கல்யாணத்துக்கு மட்டுமே சம்மதித்தேனே தவிர இந்த கம்பெனி கண்டிப்பா அந்த ஊர்ல வந்தே ஆகனும் என்று அவரும் இவனை சங்கடப்படுத்திவிட்டு சென்றார்.இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான் நித்யன்.

இவர்கள் இருவரும் சேருவார்களா? நித்யனை அவள் ஜெயிப்பாளா? பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்..

தொடரும்..images|690x353

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here