9.கண்ணாளனின் கண்மணியே!!!

0
541

கோபத்தின் உச்சியில் இருந்த அபயை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற பாலா அவனை சோபாவில் அமர்த்திவிட்டு அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து குடுத்தான்..

ஜுஸை வாங்கிக்கொண்டு அபய் பாலாவை முறைக்க அவனோ மனதில் இவனுக்கு என்ன நடந்தாலும் என்ன தான் முறைப்பான் சரி விடுடா பாலா உணக்கென்ன இது புதுசா என்ன என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு…”மச்சான் இங்க பாருடா இப்போ எதுக்கு கோவப்படற நீதானே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன இப்போ என்ன?” என்றான்..

அபய்,”ஆமா நான் தான் சம்மதம் சொன்னேன் ஆனா நானா சொல்லல… எனக்கு ஒரே ஒரு ஆப்ஷன் குடுத்து செலக்ட் பண்ண வச்சிங்க”என்று கத்தினான்..

பாலா,”சரிடா எவ்ளோ நாள் தான்டா இப்படியே பப்,கெஸ்ட்ஹவுஸ்னு சுத்திட்டு இருப்ப.. இப்போ வேணாம் இது சரியா படலாம்… ஆனா வாழ்க்கைக்கு இது ஒத்து வராது.. என்னைக்கா இருந்தாலும் நீ குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தான் ஆகணும்” என்றான்..

அபய்,”எனக்கு தனிமை ஒன்னும் புதுசில்லையே நான் இப்படியே இருந்துட்டு போறேனே”

பாலா,” இளமையில் தனிமை வரம் … முதுமையில் தனிமை சாபம் டா… எவ்ளோ தான் காசு பணம் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல பாசமா பாத்துக்க ஆளு வேணும் டா..புரிஞ்சுக்க…” என்று மென்மையாக தொடங்கி கடுமையாக முடித்தான்…

அபய்,”நான் பப்க்கு போகணும் ரிலாக்ஸ் ஆக”என்றான்…

பாலா,”எப்படியும் அங்க போயி குடிக்க தானே போற… நீ இங்கேயே குடி என் வீடு தான்”என்று பிரிட்ஜில் வைத்திருந்த பாட்டில்களை கொண்டு வந்து வைத்தான்.. அபயின் மன நிலைக்கு அவன் வெளியே சென்றால் பிரச்னையுடன் தான் வருவான் என்று அறிந்ததனாலே வீட்டிலேயே இருக்கும்படி செய்தான்..

அபய் பாட்டிலை திறந்து ஆரம்பிக்க சம்பிரதாயத்துக்காக கொஞ்சமே குடித்தான் பாலா.. அபயே முழு பாட்டிலையும் காலி செய்தவன் போதையில் சரிய பாலவே அவனை தூக்கி பெட் ரூமில் படுக்க வைத்தான்..

அடுத்தடுத்த நாட்களில் திருமணத்திற்கான வேலைகள் மும்மரமாக நடக்க இன்னும் 3 தினங்களில் கல்யாணம்… கல்யாணத்திற்கு வேட்டி சட்டை வாங்க வேண்டும் என்று அபயை அழைத்தான் பாலா… அபய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க பாலாவோ பொண்ணு வீட்டுக்காரங்களும் வராங்க வாடா என்று அழைக்க… அபயோ ஏன்டா இதுக்கு கூட கூட்டமா தான் போகனுமா…தனியா போக கூடாதோ அவங்கள தனியா போக சொல்லு நானும் நீயும் தனியா போயிக்கலாம் என்றான்…

பாலா,” ஏன்டா கல்யாணத்துக்கு அப்பறம் தனித்தனியாவா இருக்க போறீங்க… ஒண்ணா தானே இருக்க போற இப்போ இருந்தே பழகிக்கோ சொந்த பந்தங்களோட இருக்க என்றான்.. பின்பே நினைவு வந்தவனாய் ஆமா பொண்ணு போட்டோ பாத்தியா அதுலையே அந்த பொண்ணோட போன் நம்பர் இருக்காம்…பொண்ண உனக்கு புடிச்சுருக்கா…. நீ பண்ண அக்கப்போருல நான் பொண்ணு போட்டோவையே பாக்கல,உன் பின்னாடி சுத்தவே எனக்கு நேரம் சரியா இருந்துச்சு”என்று குறை பட்டுக்கொண்டான்…

அபயோ கூலாக,”இப்போ போன் பண்ணி பேசறது தான் ரொம்ப முக்கியம் அதுமில்லாம அன்னிக்கு இருந்த கோவத்துல அந்த கவரை தூக்கி எரிஞ்சுட்டேன் …அதுக்கு அப்பறம் எனக்கு அதை பாக்கவே தோணல இப்போ வரைக்கும்.. அது எங்கே இருக்குனும் தெரியல” என்றான்..

பாலவோ,”டேய் கல்யாணம் உனக்கு தான் நீ என்னவோ வேற யாருக்கோ மாதிரி பேசற.. உன் கூட வாழ போறது ஒரு பொண்ணுடா உணர்வுள்ள மனுஷி… விருப்பம் இல்லாம வாழ முடியாது” என்று கூறினான்..

அபய்,”எனக்கும் இது எல்லாம் தெரியும் மச்சான்… பாட்டிக்காக இந்த கல்யாணம் பண்ணிக்க போறேன்… ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்பறம் புடிக்கலனா டிவோர்ஸ் பண்ணிட வேண்டியது தான்…” என்றான்..

பாலவோ இவன் என்ன வாழ்க்கையை தொடங்கறதுக்கு முன்னாடியே பிரியரதை பத்தி பேசிட்டு இருக்கான்…
கடவுளே இவன் வாழ்க்கையை காப்பாத்து என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு,… சரி மச்சான் அதெல்லாம் அப்பறம் பாக்கலாம் இப்போ வா ட்ரஸ் எடுக்க போலாம் என்று அவனை இழுக்காத குறையாக அழைத்து சென்றான்…

பாட்டி அபய்க்கு போன் செய்து பொண்ணு வீட்டிலிருந்து கெளம்பிட்டாங்க கண்ணா…. நீயும் சீக்கிரம் வா என்று தகவலை கூறிவிட்டு வைத்து விட்டார்…

ட்ரஸ் எடுப்பதற்காக பாட்டியே மகியின் வீட்டிற்கு சென்று முத்து குடும்பத்தை அழைக்க மகியோ பாட்டி நீங்க அப்பா, அம்மா தம்பியை கூப்பிட்டு போங்க.. நான் ஆபீஸ் போயிட்டு லீவு சொல்லிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடறேன் என்க பாட்டியும் சரிமா சீக்கிரம் வந்துரு என் பேரனும் அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கூடுதல் தகவலையும் தந்து அனுப்பினார்…

ஆபீஸ் விரைந்தவளுக்கு 1 மாதம் விடுப்பு எடுப்பதால் கொஞ்சம் பாக்க வேண்டிய வேலையும் இருக்க அபயும் ஊரில் இல்லாதலால் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருந்தது… வேலை அனைத்தையும் முடித்து விட்டு 1 மாதம் மெடிக்கல் லீவ் அப்ளை செய்துவிட்டு அபய்க்கும் சங்கருக்கும் மெயில் அனுப்பிவிட்டு கிளம்புகையில் 3 மணி நேரம் ஆகி இருந்தது….

அங்கோ அபய் முத்து அன்பு மற்றும் பிரபுவிடம் ஸ்நேகமாக புன்னகைத்துவிட்டு அவனுக்கான துணிமணிகளை எடுக்க சென்று விட பாலா பிரபு(மகியின் தம்பி)யையும் அழைத்து சென்றான்… வாழ்க்கை தான் தனக்கு பிடித்த மாதிரி அமையவில்லை அதனால ட்ரஸ் ஆச்சும் புடிச்ச மாதிரி இருக்கட்டும்னு செலக்ட் பண்ணிக்கிட்டு இருந்தான்…

பாட்டி முன்பே கூறியிருந்தது போல் கல்யாணத்திற்கும் மற்றும் ரிசப்ஷன்க்கும் சேந்தே எடுத்தான்…. இதற்கிடையில் பாட்டி பொண்ணு வர தாமதமாகும் என்றும் ரிசப்ஷனுக்கு உனக்கு ஏத்த மாதிரி அவளுக்கும் மேட்ச்சா ட்ரஸ் எடுத்துரு பட்டு புடவை நாங்க எடுத்துக்கிறோம் என்று கூறிவிட்டு அபயின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டார்…

அபயக்கோ கோபம் அவளுக்காக நான் வேலை செய்யணுமா அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா என்று…. இருந்தும் பாட்டியின் பேச்சை மீறாமல் எடுத்தான்.. ரிசப்ஷன்ங்கிறதுனால பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்கன்னு சோ கொஞ்சம் மெனக்கெட்டே எடுத்தான் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு தேடி பிடித்து எடுத்தான் எந்த சூழ்நிலையிலும் அவனுடைய ஸ்டேட்டஸ்க்கு ஏதும் ஆகிட கூடாது என்பதற்காகவே… எடுத்து முடித்தவன் பில் செட்டில் செய்துவிட்டு பாட்டி மற்றும் முத்து குடும்பத்தினரிடம் பார்மலாக சொல்லிவிட்டு கிளம்பினான்…

இன்று நடந்த சில விஷயங்களை அபயால் ஏற்று கொள்ள முடியவில்லை… எனக்கு இந்த கல்யாணம் விருப்பமில்லாம தான் நடக்குதுனாலும் நான் ஏன் அந்த பொண்ணோட உறவுகளுக்கு மரியாதையை தரேன் என்று குழம்பிக்கொண்டிருந்தான்.. அவனுக்கு புரியவில்லை இந்த திருமணம் என்னும் பந்தத்தில் சில உறவுகளை அவனால் புறக்கணிக்க முடியாது என்பது…

அபய் கிளம்பிய சற்று நேரத்தில் மகி வந்து விட அவளுக்கான துணி மணிகளை அவளிடம் காட்டினர்…முக்கியமாக அபய் செலக்சனையும் சேர்ந்தே காட்டினார்கள்…

அதை பார்த்த மகி தன்னையும் அறியாமல் பரவால்லையே இவ்ளோ அழகா செலக்ட் பண்ணி இருக்காங்க கண்டிப்பா ரசனையான ஆளா தான் இருக்கணும் என்று மனதார தன்னவனை புகழ்ந்து கொண்டிருந்தாள்…

வேலைபழுவின் காரணமாகவும் கல்யாண அலைச்சல் காரணமாகவும் மகி கொஞ்சம் சோர்ந்தே காணப்பட்டாள்… இதற்கிடையில் அபய் மற்றும் மகி இருவருக்குமே ஒருவரையொருவர் பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை…

இது தான் விதியின் விளையாட்டோ???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here