மறுநாள் காலைலயே கோவிலுக்கு வருவதாக காமாட்சி அம்மாளிடம் தகவலை தெரிவித்தனர் முத்துக்குமார் தம்பதியினர்… அதற்கிணங்க பாட்டியம் கோவிலுக்கு சென்று பிரகரத்தினுள் நுழையம் போதே அதற்காகவே காத்திருந்த முத்துவும் அன்புவும் மகிழ்ச்சியுடன் தங்களது சம்மதத்தை தெரிவித்தனர் கூடவே தங்களது மகளின் புகைப்படத்தையும் அவரிடம் தந்தனர்.. பாட்டியும் பதிலுக்கு அபயின் புகைப்படத்தை தர அதை பெற்று கொண்டவர்கள் மூவருமாக உள்ளே சென்று இருவருக்கும் நல்ல படியாக திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் ஒன்றை வைத்து விட்டு தத்தமது இல்லத்திற்கு சென்றனர்…
காலை 11.30 மணி…அபய் கோவை விமான நிலையம் வந்திறங்கிய உடன் பாலாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டான் அந்த குறுஞ்செய்தியில் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாகவும் வழக்கம் போல் மைண்ட் ரெபிரேஷிங்காக வெளியே போகலாம் என்றும் எழுதி இருந்தான்…
அதை பார்த்த உடனே பாலா அபய்க்கு கால் பண்ணி பாட்டியின் உடல் நிலை குறித்து சொல்ல அபயோ ஏன்டா இதை முன்னாடியே சொல்லல என்று பாலாவை கடிந்து கொண்டான்…
பாலாவோ எனக்கே நேத்து தான் தெரியும் அதுலயும் பாட்டி உன் கிட்ட சொல்ல கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க… இப்போ நல்லா தான் இருக்காங்க சீக்கிரம் வாடா என்று உரைத்து விட்டு கால் கட் செய்தவன் நேராக அபயின் வீட்டிற்கு சென்று பாட்டியை சந்தித்து அபய் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான் என்ற தகவலை தெரிவித்தான்….
பாட்டியோ சரிப்பா… நீ இங்கேயே இரு நான் வரேன் என்று தன் அறைக்குள் நுழைந்து தன் திட்டப்படி அபயின் திருமணத்தை நடத்துவதற்காக தன் உடல் நிலை குறித்து தகவலை அவனுக்கு தர அபயின் குடும்ப மருத்துவரான வாணி அவர்களை வர வைத்தார்..
வாணிக்கும் அந்த குடும்ப சூழ்நிலை குறித்து தெரியும் என்பதாலும் காமாட்சி அம்மாளின் கட்டாயத்தினாலும் கடவுளின் மேல் பாரத்தை போட்டு பொய் சொல்வதற்கு முன் வந்தார் அவர்…
பாலா போனை வைத்த 90 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் அபய்…
வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அபய் பாட்டியை சந்திக்க சென்றான்..
அபய் படுத்திருந்த பாட்டியின் கையை பிடித்து கொண்டு,”பாட்டி எப்படி இருக்கீங்க… ஏன் உங்களுக்கு உடம்புக்கு முடியலனு முன்னாடியே சொல்லல…”என்று கேட்டான்..
பாட்டி,” எனக்கு ஒன்னும் இல்ல கண்ணா… நான் என்ன குழந்தையா எனக்கும் வயசாயிடுச்சுல அதான்…” என்றவர் விடாப்பிடியாக,’கண்ணா நான் ஒன்னு சொன்னா கேப்பல’ என்றார்..
அபய்,”சொல்லுங்க பாட்டி”
பாட்டி,”நீ இப்போவே கல்யாணம் பண்ணிக்கணும்.. உனக்கு நான் பொண்ணு கூட பாத்துட்டேன்” என்று குண்டை தூக்கி போட்டார்..
அபய் அதிர்ச்சியுடன்,”வாட்… என்ன பாட்டி சொல்றிங்க.. உங்களை நான் பாரின் கூப்பிட்டு போயி ட்ரீட்மெண்ட் பாக்றேன் உங்களுக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்லும் போதே.. நீ எங்கே கூப்பிட்டு போனாலும் அவங்க உடல்நிலை இது தான் என்று வாசலில் இருந்து குரல் கேட்க… குரல் வந்த திசையை நோக்கி அபயும் பாலாவும் பாக்க அங்கே டாக்டர் வாணி நின்று கொண்டிருந்தார்…
வாணியை பாத்தவுடன் வாங்க டாக்டர் பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு ?? நீங்க ஏன் அப்படி சொல்றிங்க… எவ்ளோ செலவானாலும் பரவால்ல.. அவங்கள சரி பண்ணனும் என்று அவன் பாட்டுக்கு பேசி கொண்டிருக்க….
அவனை இடைமறித்த வாணி இங்க பாரு அபய் அவங்களுக்கு வந்து இருக்கிறது மைல்டு அட்டாக் இன்னொரு தடவை வந்தா சூழ்நிலை ரொம்ப மோசமயிடும்… இதுக்கு நீ எங்கே போயி ட்ரீட்மெண்ட் பாத்தாலும்
ஒரு இம்ப்ரூமெண்ட்டும் இருக்காது..
அதனால அவங்களோட ஆசையை நிறைவேத்து ஒரு பேமிலி டாக்டரா என்னால இதை தான் சொல்ல முடியும்…இதுக்கு மேல உன் இஷ்டம்
என்று பொதுவான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்று விட்டார்…
அபய் யோசனையுடன் அமர்ந்திருக்க பாலா தான் ஆரம்பித்தான்.. ,”மச்சான் உனக்குன்னு இருக்கிறது பாட்டி மட்டும் தான்… அவங்க எது சொன்னாலும் உன்
நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும் …
அவங்களோட ஆசையை நிறைவேத்து டா” என்று உடைந்த குரலில் கூற அபயும் உடைந்தே விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…
அபயே கொஞ்சம் சுதாரித்து கொண்டு பேச ஆரம்பித்தான்..
பாட்டியின் கையை பிடித்துக்கொண்டே,”பாட்டி நான் அப்பா அம்மா கூட இருந்தத விடவே உங்க கூடவும் தாத்தா கூடவும் தான் அதிகமா இருந்திருக்கேன்.. உங்களுக்கே தெரியும் தாத்தானா எனக்கு உயிர்னு ஆனா அவர் கூடவும் என்னால ரொம்ப நாள் இருக்க முடியல.. எல்லாரும் போனதுக்கு அப்பறமும் நீங்க ஒத்த ஆளா எனக்கு எல்லா இடத்துலயும் துணையா இருந்தீங்க.. எனக்குன்னு இருக்க ஒரே சொந்தம் நீங்க மட்டும் தான் பாட்டி … உங்களுக்காக நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் என்று தன் சம்மதத்தை பட்டும் படாமல் கூறினான்..
பாட்டிக்கு அவனின் சம்மதம் வற்புறுத்தலின் பேரில் தான் கிடைத்தது என்றாலும் இப்போதைக்கு இதுவே போதும் என்றிருந்தது…
பாட்டியும் அவனிடம் கண்ணா இந்த பாட்டி இவ்ளோ நாள் இந்த உயிரை கையில புடிச்சுகிட்டு இருந்ததே உனக்காக தான் உனக்கொரு நல்லத பண்ணி பாக்காம என் கட்ட வேகாதுபா… உனக்கு நான் பாத்திருக்க பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுப்பா அவ இருக்க இடத்துல சந்தோசம் தானா வரும் பா… அவங்க மிடில் கிளாஸ் பேமிலி தான் உங்க அப்பாவோட நெருங்கிய நண்பனோட பொண்ணு என்று போதுமான தகவலை உரைத்தவர்… பாலாவை அழைத்து அந்த கபோர்டில் இருக்கும் கவரை எடுக்குமாறு கூற அவனும் கவரை எடுத்து பாட்டியிடம் குடுக்க…
அதை வாங்கியவரோ அபயிடம் குடுத்து இதுல பொண்ணு போட்டோ இருக்கு பாரு… அப்பறம் வர முகூர்த்தத்தில் உனக்கு கல்யாணம் நான் இதை முடிவு பண்ணிட்டேன் என்று தீர்க்கமாக உரைத்தார்…
இதற்க்கு மேல் தன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று அறிந்தவன்.. அந்த கவரை வாங்கி கொண்டு சரிங்க பாட்டி நீங்க ரெஸ்ட் எடுங்க நான் அப்பறம் வந்து பாக்றேன் என்று சொல்லிவிட்டி வந்து தன் அறையில் நுழைந்துகொண்டான்…
அதற்கிடையில் பாட்டி பாலாவை அழைத்து கல்யாணத்திற்கு தேவையான வேலைகளை பட்டியலிட்டு கொடுத்தார்…
இங்கோ தன் ரூமிற்குள் நுழைந்தவன் அந்த கவரை வீசி எறிந்துவிட்டு… கையில் கிடைக்கும் பொருளை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தான்…
பாட்டியின் அறையில் இருந்து வெளியே வந்த பாலவோ சத்தம் கேட்டு அபயின் அறைக்குள் நுழைய அங்கே என்ன நடக்கும் என்று அவன் கணித்திருந்தானோ அதுவே நடந்திருந்தது… உயிர் நண்பனுக்கு தெரியாத என்ன அவனின் மனம் பற்றி… அபயை சமாதானப்படுத்தி அவனுடைய இல்லத்திற்கு அழைத்து சென்றான பாலா…
முத்துவின் வீட்டிலும் மகியிடம் அபயின் போட்டோ குடுக்க அவளும் வேண்டா வெறுப்பாக வாங்கிகொண்டு பார்க்க விருப்பமில்லாமல் தன் அலமாரியில் வைத்துவிட்டாள்…
இருவரும் போட்டோவை பாக்கவில்லை… ஒரு வேளை பின் விளைவு தெரிந்திருந்தால் பார்திருப்பார்களோ….