சிவாவின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவள்…தனது வீட்டிற்க்கு வந்தவுடன் ரூம்க்கு அமைதியாய் செல்ல முற்பட அவளுடைய அப்பா, அம்மாடி என்று அழைக்க அப்போது தான் அவள் சிவாவின் நினைவில் இருந்து மீண்டு வந்து”சொல்லுங்க அப்பா” என்றாள்.
அவளிடம் வந்த அப்பா,” ஏன்டா ஒரு மாதிரி இருக்கனு கேட்டார் “..இல்லப்பா கோவிலுக்கு போயிருந்தேன் அங்க ஒரு அம்மா மயங்கிட்டாங்க அதான் அவங்கள கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வரேன்னு சொன்னா.
ஆரா அப்பா,”இப்போ அவங்க எப்படி இருக்காங்க டா”
ஆரா,”நல்லா இருக்காங்க பா… பிபி கொஞ்சம் அதிகமயிடுச்சு அவ்ளோ தான்”,சரிப்பா எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்க போறேன்னு சொன்னவள் வந்து படுக்கையில் வீழ்ந்து அவன் நினைவில் மூழ்கிபோனாள்…
எவ்வளவு தான்,
காதல் மீது,
நம்பிக்கையில்லாமல்,
இருந்தாலும்,
கணப்பொழுதில்,
உடைத்து விடுகின்றாய்,
உன் கயல்விழிகளால்,
எனை களவாடி….!!
அங்கோ சிவாவின் மனதில் இவ யாரு எங்கிருந்து வரா,நம்ம விலகி போனாலும் அவளோட பார்வை ஏதோ சொல்ல வர மாதிரி இருக்கே நம்ம அவளை பாத்த வரைக்கும் நல்ல பொண்ணா தான் தெரியறா ஒரு வேளை இது காதலா இருக்குமோன்னு அவன் யோசிக்க அவன் கடந்த கால கசப்பான நினைவுகள் வர ஒரு வெறுப்புடன் அவளின் சிந்தனையில் இருந்து மீண்டு தன்னை கட்டுப்படுத்தி உறக்கத்திற்கு சென்று விட்டான்.
அவனது புது ப்ராஜெக்ட்காண வேலை முழு மூச்சில் சென்று கொண்டிருக்க அவனும் சைட்டிற்கு தேவையானதை பாத்து பாத்து செஞ்சுக்கிட்டு இருந்தான் எந்த தப்பும் வர கூடாதுங்கிறதுக்காக.
அவன் ஆபீஸ்ல இருந்து சைட்டிற்கு கிளம்பிட்டு இருக்க அவனுக்கு என்ஜினீயர் கிட்ட இருந்து கால் வர அதை அட்டெண்ட் பண்ணவனிடம்,” சார் சைட்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கும் போது ஒருத்தர் கீழ விழுந்து அடி பட்டுருச்சு நாங்க ஹாஸ்பிடல் அனுப்பிருக்ககேன் நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்னு சொல்ல பதறியடித்து கொண்டு சைட்டிற்கு விரைந்தான்..
காரில் செல்லும் போதே ஆதவ்க்கு கால் செய்தவன் அவனை நேராக சைட்டுக்கு வர சொல்லிவிட்டான், சிவா உள்ளே நுழையும் போதே ஆதவ்வும் வந்திருந்தான்..
சிவா மற்றும் ஆதவ் அங்குள்ள என்ஜினீயரிடம் அடிப்பட்டவரை பற்றி விசாரிக்க, “ரொம்ப நாளா ஒர்க் பண்றவரு தான் சார் ஆனா இன்னிக்கு எப்படி திடீர்னு விழுந்தார்னு தெரியல கொஞ்சம் அடி பலமா பட்ருக்குனு நினைக்கிறேன்,நம்ம அவர போயி பாக்கலாம் சார்”…. அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர்…
அங்கு வந்திருந்த அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியவன் டாக்டரை சந்தித்து அவரின் நிலையை பற்றி கேட்டவன் பயப்படற மாதிரி ஏதும் இல்லை கொஞ்சம் அடி அதிகம் அதனால இப்போதைக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் அவ்ளோ தான்னு சொல்ல, சிவாவும் சரிங்க டாக்டர் அவங்களுக்கு தேவையான எல்லா ட்ரீட்மெண்டும் பண்ணிடுங்கனு சொல்லிட்டு அடிப்பட்டவரின் குடும்பத்திடமும் கூறிவிட்டு வெளியே வந்தவனிடம் ஆதவ் சுட சுட ஒரு தகவலை தர சிவாவின் முகம் இறுகியது…
ஆம் அவனின் சந்தேகம் உறுதியானது இந்த விபத்தின் பின்னணியில் யார்ரென்று….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…