அத்தியாயம் 8
கவி மரகதத்தின் வீட்டிற்கு சென்றான்
வாப்பா கவி எப்படிப்பா இருக்க நல்லா இருக்கியா ..
நான் நல்லா இருக்கேன் அத்தை
என்னை எதுக்கு அவசரமா வர சொன்னிங்க
அது வந்து கவி நம்ப காயலுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்.. அதுக்கு எதுக்கு என்ன வர சொன்னிங்க… ஏம்பா உங்க ஆச்சி விஷயத்தை சொல்லலையா. உனக்கு தான் நம்ப கயல்ல கட்டி குடுக்கலாம்னு இருக்கேன்
அத்தை இதை நீங்க என்கிட்ட பேசக்கூடாது.. வீட்ல அண்ணன்கிட்டயும் அண்ணி கிட்டயும் பேசுங்க அவங்களுக்கு சமதம்னா எனக்கு சம்மதம்தான்… மரகதம் பல்லைக் கடித்துக் கொண்டு இங்க பாரு கவி உன் அண்ணா கிட்ட வேணும்னா பேசுறேன் ஆனா நேத்து வந்த அந்த சிறுக்கி கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது…
அத்தை அவங்க எனக்கு அம்மா மாதிரி என் வாழ்க்கையில இனி எந்த முடிவுநாளும் அது என் அண்ணனும் அண்ணியும் சேர்ந்து எடுத்த தான் இருக்கணும்
இவன்கிட்ட கோவப்பட்டு வேலைக்காகாது மொதல்ல இவன் தலையில கயலகட்டி வைக்கணும் அப்புறம் இருக்கு உங்களுக்கெல்லாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே
சரிப்பா கயல் எங்கேயோ வெளியே போகணும்னு சொல்லுச்சு கொஞ்சம் கூட்டிட்டு போறியா என்று பேச்சை மாற்றினர் மரகதம்
இல்ல அத்தை எனக்கு வேலை இருக்கு நான் நாளைக்கு கூட்டிட்டு போறேன்
இரவு இசை இனியன் ரூமில் கீழே படுத்துக்கொண்டு அடிக்கடி எழுந்து கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.. அவளின் செயலை தூங்குவதுபோல் ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டிருந்தான் இனியன்
மணி 11 : 45 காட்டியதும் அவள் எழுந்து அவன் அருகில் வந்து அவன் தூங்குகிறான என்று தன் கைகளை அவன் முகத்தின் முன் ஆட்டி செக் செய்தால் அவளின் அருகாமை அவனை ஏதேதோ செய்ய கட்டி அணைக்க சொல்லி தூண்டிய தன் மனதை மிகச் சிரமப்பட்டு அடக்கினான்..
அவள் மெதுவாக மெல்ல மெல்ல பூனை போல அந்த அறையை விட்டு வெளியே சென்று தமிழை எழுப்பினாள்
டேய் தமிழ் எந்திரிடா போ போயி உங்க கவி அண்ணனை எழுப்பு.. அப்படியே போய் கேக் எடுத்துட்டு வா நான் போய் மகி அகி ய எழுப்புறேன்
அனைவரும் எழுந்து கேக் எடுத்துக்கொண்டு இனியன் ரூமுக்கு வர இசை கேண்டில் ஏற்றினாள்
டேய் யாராவது உங்க அண்ணன் எழுப்புங்க டா
இதை அனைத்தும் தூங்குவதுபோல் கேட்டுக்கொண்டிருந்தான் இனியன்
மகி ஏன் அண்ணி நீங்க எழுப்புறது…
ஏன்டா என் உனக்கு இந்த கொலவெறி இன்னும் என்ன ரெண்டடி அடிக்கிறதுக்கு பிளான் போடுறிய நீ…
கவி அண்ணா அண்ணா என்று அவனை எழுப்ப அவன் அப்போது தான் தூங்கி எழுவது போல கண்ணை கசக்கி பார்த்தான்.. அந்த மெழுகுவர்த்தி ஒளியில் வானத்து நிலவை போன்று ஜொலித்தாள் இசை ..மெய் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அண்ணா என்று அனைவரும் அழுத்தி கத்த
ஹான் சொல்லுங்கடா….
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என்று அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க சந்தோஷத்தில் மிதந்தான் இனியன்
13 வருடங்களுக்கு பிறகு அவன் கொண்டாடும் பிறந்தநாள் இது ..சிறுவயதில் அவனின் பெற்றோர்
அவன் பிறந்தநாளை ஊர் முழுவதும் கூட்டி விழா போல கொண்டாடுவார்கள்.. அவர்கள் இறந்த பிறகு எந்த வருடமும் அவன் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை.. இன்று இசை வந்த பிறகுதான் அவன் இந்த பிறந்த நாளை கொண்டாடுகிறான்
அண்ணா இந்தா என்று கத்தியே அகி நீட்ட
அதை வாங்கி கட் செய்து முதல் துண்டை எடுத்து தமிழுக்கு ஊட்ட வர
முதல்ல அம்முக்கு ஊடுங்க
டேய் இங்க இருக்குறதுல நீதான் சின்ன பையன் சோ உனக்கு தான் பஸ்ட் ஊட்டனும்
இனியனும் முதலில் தமிழ் அகி மகி கவி அனைவருக்கும் ஊட்டிவிட
இப்போ அண்ணனிக்கு ஊட்டி விடுங்க அண்ணா என்றும் மகி சொல்ல
கேக் துண்டை இசையின் உதட்டருகே கொண்டு சென்றான் அதை கொஞ்சமாக புட்டு முதலில் இனியனுக்கு ஊட்டி விட்டாள் இசை…..
அந்த சின்ன செயலில் .. அவன் மனம் ரக்கை கட்டி விண்ணிற்கும் மண்ணிற்கும் குதித்தது…
பின் ஒரு துண்டு கேக்கை எடுத்து தமிழுக்கு ஊட்டிவிட.. அண்ணி எனக்கு எனக்கு என்று அகியும் மகியும் கேட்க…
இங்கே வாங்க டா என் செல்லக்குட்டிங்களா என்று இசை கூப்பிட இருவரும் போட்டி போட்டுகொண்டு வர இருவர் முகத்திலும் கேக் ஐ புசிவிட்டு ஓட அண்ணி என்று அகியும் மகியும்.. அவள் முகத்தில் பூச அவளை பின் தொடர …..
அவர்கள் கையில் சிக்காமல் வீடு முழுவதும் ஓடினாள் இசை …. அவர்களையே பார்த்துக் கொண்டு ஓடி வந்த இசைக்கு முன்னாடி வந்த இனியனை கவனிக்கவில்லை… அவன்மீது மோதினால்… அவள் வந்து மோதியதில் பிரீஸ் ஆகி ஒன்றும் புரியாமல் நின்றான் இனியன்
அய்யனார் அய்யனார் என்று முனகிக்கொண்டே தலையை பிடித்துக்கொண்டு இசை நிற்க.. அதற்குள் அகி மகி இசையின் முகத்தில் கேக்கை பூசிட…
தமிழ் என்னாச்சு அம்மு என் தலையை தேச்சுட்டு வர
நான் ஓடிட்டு இருக்கும் போது உங்க அண்ண ஐயனார் சிலை மேல மோதிட்டேன் டா… உடம்பா டா அது இரும்பு மாதிரி இருக்கு..என்று தலையை தேய்த்து கொண்டே இசை சொல்ல
அவள் பின்னால் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த இனியனுக்கு உதட்டில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது
கவி அவன் அண்ணனுக்கு ஒரு உடையை பரிசாக அளிக்க அதை பிரித்துப் பார்த்த இனியன் இந்த மாதிரி கோர்ட்டு சூட்டலாம் நான் போட மாட்டேன் டா நீ வேணும்னா போட்டுக்கோ… அண்ணா இதெல்லாம் உனக்கு பியூச்சர்ல்ல யூஸ் ஆகும் இப்போ போடலைன்னாலும் எடுத்து வை
அகி அவன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஒரு மோதிரத்தை பரிசாக தர …..
டேய் ஐயனாருக்கு தான பர்த்டே எனக்கு எதுக்கு இந்த அங்கி மோதிரம் வாங்கினான் தெரியலையே மங்கி என்று சந்தடி கேப்பில் இரு வரையும் இசை அங்கி மங்கி என்று சொல்ல..
இருவரும் ஒருசேர அண்ணி என்று கத்த
என்ன ஆச்சு என்று இனியன் கேட்டான்
ஒன்னும் இல்லன்னா
இசையும் கேஷுவலாக இனியனுக்கு மோதிரத்தை போட்டுவிட்டாள்… இனியனும் இசையின் கையில் மோதிரத்தை அணிவித்தான்..
மகி இனியனை வீட்டுக்கு வெளியே அழைத்து சென்று அவன் கையிலுள்ள ஒரு கீயை அவனிடம் கொடுத்தான். ஐ என்ற டாலர் போட்ட கீ செயின் பார்த்தவுடன்.
மகி அவன் அண்ணனுக்காக வடிவமைத்த யமஹா ஆர் எக்ஸ் 100 பைக் கைகாட்ட இனியனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது அவன் ஆசை ஆசையாக வாங்கிய வண்டி அதைப் பார்த்தவுடன் 20 வயது இளைஞனாக மாறி அதை தடவிப் பார்த்தான் இனியன்
தன் அண்ணனின் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்த உயிர்ப்பு கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
இசையால் இனியனின் மனநிலையை புரிந்துகொள்ள முடிந்தது அவள் கண்களுக்கு சிறு குழந்தையாகவே தெரிந்தான் அந்த 32 வயது இனியன்..
அண்ணி நீங்க அண்ணனுக்கு வாங்கின கிப்ட் கொடுங்க என்று அகிலன் சொல்ல
நான் எதுவும் வாங்கவில்லை என்று சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி
அதெல்லாம் இங்கே கொடுக்க முடியாது.. உங்க அண்ணன் கிட்ட அதை நான் தனியா கொடுத்துப்பேன் என்று இசை சொல்ல
ஓ ஓ ஓ ஓ என்று அனைவரும் கோரசாக கத்த
இப்ப நான் என்ன சொல்லிவிட்டேன் இவனுங்க இப்படி கத்துறாங்க என்று இசை இனியனை பார்க்க அவனும் அவளையே நமட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்…. அவள் திருதிருவென முழிப்பதை பார்த்த இனியன் என்ன என்று புருவத்தை தூக்கி கேட்க முதல் முறையாக இசை அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் வேறு புறம் திரும்பி கொண்டால்
அவள் முகத்தை உற்று கவனித்தான் அவள் முகம் வெட்கத்தால் சிவந்து இருக்கா என்று பார்த்தால் அப்படி எதுவும் அவனுக்கு தெரியவில்லை… ( இனியா உன்பாடு ரொம்ப கஷ்டம் போல டா என்று அவன் மனசாட்சி கேலி செய்தது)
அதன்பிறகு அனைவரும் அவர்கள் ரூமுக்கு சென்று உறங்கிவிட இசையும் அவளிடத்தில் கீழே படுத்து உறங்க தயாரானாள் ..இனியன் இசையை பார்த்து தேங்க்ஸ் ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லி அவள் முகத்தைப் பார்த்தான் அவளின் இரு கண்களும் மூடித் தூங்கிக் கொண்டிருக்க அதாவது தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தால் இசை
ச்சா தூங்கிட்டா சரி காலையில பேசிக்கலாம் என்று இனியேனும் நிம்மதியாக தூங்கினான்
காலையில் எழுந்த இசை அவளுடைய சூட்கேஸில் இருந்து துணியை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள்
இதை கவனித்த இனியனுக்கு குழப்பமாக இருந்தது ஏன் இவளுடைய பொருட்களை பீரோவில் அடுக்காமல்.. அந்த சூட்கேசைல வைத்து இருக்கிறாள் ..ஒரு வேல அன்னைக்கு நான் பேசுனதுனால் இப்படி நடந்துகொள்கிறாளோ என்று சிந்தித்தான்…
ஒருவேளை அவன் அந்த சூட்கேசை உற்று
நோக்கி இருந்தாள் பின்னால் வரப்போகும் ஆபத்தில் இருந்து தப்பியிருக்கலாம் விதி யாரை விட்டது
அவள் குளித்து முடித்துக் ஆலிவ் நிற புடவையும் அதற்கு மேட்சாக ஆரஞ்சு கலர் முழு கை பிளவுசும் அணிந்து தலையை துவட்டி கொண்டே வெளியே வந்தாள்… தன்னையே ஒருவன் பார்த்து கொண்டு இருப்பதை கவனிக்காமல் கண்ணாடியில் ஒட்டிருந்த பொட்டை எடுத்து வைத்து கொண்டால் …திடீரென தன் பின்னால் கேட்ட சத்தத்தில் தூக்கிவாரி போட்டு திரும்பி பார்த்தாள் அங்கு இனியன் தான் நின்றுகொண்டிருந்தான்…
என்னோட கிப்ட் எங்க.. .. இசை அதிர்ச்சியாக அவனை பார்த்தால் உன் கிட்ட தான் கேட்கிறேன்…
அவள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக நிற்க
ஏண்டி என் கூட பேசவே மாட்ற நான் என்ன பண்ணனும் சொல்லு 13 வருஷமா உன்னை காதலிக்கிறேன் டி என்னை ஏன் புரிஞ்சிக்க மாட்ற… உன்னை கேக்காம உன் கழுத்துல தாலி கட்டுனது தப்புதான் ஆனால் நீ மட்டும் அன்னைக்கு என்ன அப்படி பேசாமல் இருந்திருந்தால் உன் சம்மதம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டி இருக்க மாட்டேண்டி
மௌனமாகவே இருக்க
சரி சரி அதை விடு நீ தான் நேத்து நைட்டு சொன்னியே.. நம்ப தனியா இருக்கும்போது எனக்கு கிப்ட் தரேன்னு…
இப்ப இங்கே யாரும் இல்லை இப்போ தா
அவன் சொல்வது எதுவும் புரியாமல் இசை அவனையே பார்த்துக் கொண்டு நிற்க
ஒருவேளை வெட்கப்படுற போல என்று நினைத்து கொண்டு
சரி நான் கண்ணை முடிக்கிறேன் நீதா என்று இனியன் தன் கண்களை மூடிக் கொண்டு நின்றான்.. இசைக்கு அவன் சொல்வது எதுவும் புரியவில்லை.. அவன் கண்ணை மூடிய உடனே அந்த ரூமை விட்டு வெளியே சென்றாள்
காலை உணவுக்காக கிச்சனில் தோசை ஊத்திக்கொண்டே இருந்தால் இசை மேடையின் மீது மகியும் அகியும்அமர்ந்து ஒவ்வொரு தோசையாக வயித்துக்குள் போட்டு கொண்டிருந்தன….
அம்மு அவனுங்களுக்கு எத்தனை தோசை ஊத்தி தருவ எனக்கு ஒன்னுதா என்று தமிழ் கேட்க அவனுக்கு ஒரு தோசை சுட்டு கொடுத்தால் இசை..
சாப்பிட்டு முடித்து தமிழ் முதலில் இசையின் புடவை முந்தானையில் தன் கையே தொடைக்க அதன்பின் மகியும் கையை துடைக்க
டேய் இதுவே உங்களுக்கு தினமும் வேலையா போச்சுடா…
இன்னைக்கு மாட்டுநீங்க என்கிட்ட
என்று தோசை கரண்டி எடுத்து இருவரின் துரத்த
இருவரும் வெவ்வேறு திசையில் தூரமாக போய் நின்று இசையை திரும்பிப் பார்த்தனர்
இசை யாரை முதலில் பிடிப்பது என்று இருவரையும் பார்த்தாள்..
அப்போது கிணற்றின் மேல் ஒரு பாம்பு தமிழுக்கு மிக அருகில் இருக்க அதைக் கண்டு இசை
தமிழ் நகராம அப்படியே இரு நான் சொல்றதை கேளு நகராத
அம்மு கிட்ட வராதீங்க .. என்று ஒரு ஸ்டெப் பின்னால் நகர.
நான் சொல்றதை கேளு நகராத என்று அவள் முன்னாள் வர
தமிழ் அம்மு என்னை அடிக்காத பிலீஸ
நா சொல்றத பயப்படமா கேளு
உன் பின்னாடி பாம்பு இருக்கு
ஐயோ பாம்பு என்று தமிழ் பயப்பட
பயப்படாத தமிழ் இங்கே பாரு என் கண்ண பாரு தமிழ் என்று சொல்லிக்கொண்டே அவனை கிட்டே வர…
தமிழ் பாம்பு என்ற அலறியதில் அனைவரும் தோட்டத்திற்கு வர
இனியன் கம்பு எடுத்துக்கொண்டு வருவதற்குள் இசை அந்தப் பாம்பை கையால் கிணற்றுக்குள் தள்ளி விட்டாள்
அவளின் செயலை பார்த்து கோவம் தலைக்கு ஏறி அவளை அடிக்க இனியன் வர
அதைத் தடுத்த கவி அண்ணா பொறுமையா இரு
அறிவு இருக்காடி உனக்கு நீ பாட்டு கையால பாம்பை புடிச்சி தள்ளுர நான்தான் குச்சி எடுத்துட்டு வரேன்ல..
அதுவரைக்கும் பொறுக்க முடியாதா உனக்கு
கொத்தி இருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா
என்ன ஒரே ஒரு தடவை மட்டும் உயிர் போயிருக்கும் என்று தோளைக் குலுக்கி சொல்ல
அப்படியே அரஞ்சன பல்லு
எல்லாம் கொட்டிடும்… என்று மறுபடியும் அடிக்க கை ஒங்க
டேய் உங்க அண்ணா மட்டும் மறுபடி என்ன அடிச்சருன்னு
வச்சுக்கோ இந்த வீட்டை விட்டு போய்டுவேன் என்று விரல் நீட்டி எச்சரிக்க
கால உடச்சிடுவேன் டி .. நீ எங்கேயும் போகமுடியாது நீ எங்கப்போனாலும் உண்ண தூக்கிட்டு வந்துடுவேன்..
இனியன் சொல்ல
யாராலும் கண்டு பிடிக்க முடியாத இடத்துக்கு போய்டுவேணு சொல்லி வை டா உங்க அண்ணா கிட்ட
அப்படி எங்க போவீங்க அண்ணி என்று அகிலன் கேட்க
அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ
நம்பர் 44 ஹைதராபாத் ரோடு ஐதராபாத் குறுக்கு சந்து.. ஹைதராபாத் என்று இசை சொல்ல
ஹான் என்று அகி முழிக்க
மகி கவி தமிழ் அனைவரும் சிரிக்க இனியேனும் வாலு என்று செல்லமாக அவள் தலையில் தட்டி விட்டு சென்றான்
அனைவரும் கதை பேசியபடியே உள்ளே நுழைய .. அப்போது டிவியில் பிரபல மியூசிக் டைரக்டர் சலீம் இன்று காலை ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்..
இசை தான் கண்டது கேட்டது உண்மைதானா என்று உறுதிசெய்ய சேனலை மாற்றி பார்த்தாள் அதிலும் ஹெட்லைன்ஸ் ஆக இதே நியூஸ் வர உண்மைதான் என்று நம்பி அப்போ அவன் செத்துட்டான். இனி என்ன நடக்கும் …
பார்ப்போம்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…