அபய் கோவமாக வீட்டை விட்டு வெளியேறி நண்பன் பாலா வீட்டிற்கு வந்தான்..
காலைலயே கோவமா வர அவனை பாத்தவன் வேகமா வந்து அவனை கூப்பிட்டு சோபாவில் அமர வைத்தவன்
தன் பணியாளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு பணித்தான்..நண்பனின் தோல் மீது கை வைத்து,”அபய் என்ன ஆச்சுடா”என்றான்.
அபய் சற்று முன் தன் வீட்டில் நடந்த அத்தனை விஷயங்களையும் பாலாவிடம் உரைக்க..
பாலா,”மச்சான் இதெல்லாம் நீ இடம் கொடுக்க போயி தானே நடந்துச்சு..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அபய் அவனை முறைக்க பாலா அவனின் நிலைமையை மனதில் கொண்டு இப்போ என்னடா பண்ணனும்ங்கிற சொல்லு செய்வோம் என்றான்.
அபய் யோசித்துவிட்டு,”டேய் மச்சான் எனக்கென்னமோ அவ என் சொத்துக்காக தான் லவ் பண்ற மாதிரி நடிக்கறாளோன்னு தோணுதுடா..ஆரம்பத்துலயே அவ பேச்சும் வழியறதும் புடிக்காம தான் எனக்கு இதுலையெல்லாம் இஷ்டம் இல்லன்னு நாசூக்கா சொல்லி அனுப்பினேன் ஆனா அவ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டா மொதல்ல அந்த MMS யாருக்கிட்ட இருந்து வந்துச்சுன்னு கண்டுபுடிக்கணும் அது தெரிஞ்சா இதுக்கெல்லாம் விடை கெடச்சுறும்” என்று தனது நீண்ட உரையை முடித்தான்…
பாலாவும் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியவன், “சரிடா எனக்கொரு மூணு நாள் டைம் குடு… அதுக்குள்ள யாருன்னு கண்டுபுடிச்சு ஆள உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறேன்”
அபய்,”சரிடா நாளைக்கு நான் சென்னைல இருக்கணும் ஒரு பிசினஸ் மீட்.. சோ நான் இப்போவே கெளம்புறேன் எனக்கு அங்க ஒரு சின்ன வேலை இருக்கு அதனால சென்னை போயிட்டு வந்து உன்னை மீட் பண்ணறேன் என்று உரைத்து விட்டு கிளம்பினான்”
இதற்கிடையில் பாட்டி அபய்க்கு தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினார்.. பார்க்கும் எந்த பெண்ணும் அவருக்கு திருப்தி இல்லாமல் போக சற்றே மனம் தளர்ந்தவராய் கோவில் சென்று தனது இஷ்ட தெய்வமான முருகனிடம் வேண்டுதல் வைத்து விட்டு மனம் அமைதியாக வேண்டி கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தார்..
அதே சமயம் மகி வேலை கிடைத்து முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் தன் அப்பா அம்மா மற்றும் தம்பியுடன் கோவிலுக்கு வந்திருந்தாள் அபய் இல்லாமல் போகவே தனது வேலையை விரைவாக முடித்து விட்டு வந்திருந்தாள்.
தரிசனம் முடித்துவிட்டு தன் தம்பியிடம் வம்பிழுத்துக்கொண்டே வந்து கொண்டிருந்தாள் மகி பெரியவர்கள் இருவரும் அதை பார்த்து சிரித்து கொண்டே அவர்களும் ஓரிடத்தில் அமர்ந்தனர், வழக்கம் போல் மகியும் அவளது தம்பி பிரபுவும் ப்ரசாதத்திற்கு அடித்து கொண்டிருந்தனர்..முத்துவோ தன் மகன் பிரபுவை அழைத்து சாமிக்கு படைக்க குடுத்துருந்த பிரசாதத்தை வாங்கிட்டு வந்து எல்லாத்துக்கும் குடு என்று கூற அதை ஆமோதித்தவனும் சரிப்பா என்று கூறிவிட்டு சென்றான்..
அந்த அழகான குடும்பத்தை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் எளிமையான குடும்ப வாழ்வு கூட சுகமே என்று தோன்றுமளவிற்கு இருந்தது..
அபயின் பாட்டியும் அந்த குடும்பத்தை பார்த்து கொண்டே,”முருகா என் பேரனுக்கும் இது போல அன்பான குடும்ப பாங்கான பொண்ணா அமைச்சு குடுத்துரு” என்று கண் மூடி வேண்டிகொண்டு விழிக்கையில் கோவில் மணி ஒலிக்க பாட்டியின் முன்பு மகி பிராசதத்துடன் நின்று கொண்டிருந்தாள்..
அவளையே பாட்டி பாத்து கொண்டிருக்க மகியோ,”பாட்டி எடுத்துக்கோங்க நான் இன்னிக்கு முதல் மாச சம்பளம் வாங்கிருக்கேன் அதான் நாங்களே பொங்கல் வச்சு எல்லாத்துக்கும் குடுக்கறோம்னு சொல்லிவிட்டு பாட்டியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்..
பாட்டி அவளை ஆசிர்வதித்து விட்டு,”உன் பேர் என்னமா”என்று வினவ அவளோ புன்னையுடன் மகிழினி என்றாள்…
பாட்டியும் அவள் கன்னத்தை தட்டி விட்டு,”பேருக்கேத்த மாதிரியே நீ இருக்க இடம் கூட மகிழ்ச்சியா தான் மா இருக்கு” என்றார்..மனதில் தன் பேரனுக்கு இவளே பொருத்தமானவள் என்று குறித்துக்கொண்டார்..
முருகனே இந்த பெண்ணை அமைத்து கொடுத்து விட்டார் என்று மன நிறைவுடன் கிளம்ப ஆயத்தமானார் காமாட்சி அம்மாள், அவரின் பின்புறம் ‘அம்மா’ என்ற குரல் கேக்க திரும்பி பார்த்தார் அங்கே மகியின் அப்பா நின்று கொண்டிருந்தார்..
முத்து பாட்டியின் அருகில் வந்து அம்மா நான் முத்து சேகரோட(அபயின் தந்தை) பால்ய சிநேகிதன் அப்போதே நினைவு வந்தவராக ஆமாம்பா சின்ன வயசுல உன்ன பாத்தது ஆமாம்மா சேகர் இருக்கற வரைக்கும் வந்தேன்..அப்போதே நினைவு வந்தவராய் முத்து,அபய் பத்தி விசாரிக்க தொடங்கினார்..
முத்து,”அம்மா சேகரோட பையன யாரு பாத்துகிறா, இந்நேரம் கல்யாணம் புள்ள குட்டினு செட்டில் ஆயிருப்பாங்களே.. எல்லாரும் நல்லா இருக்காங்களா ” என்று கேள்விகளை அடுக்கினார்.
காமாட்சி அம்மாள்(பாட்டி),”அவனை சின்ன வயசுல இருந்தே நான் தான் வளக்கறேன், இல்லப்பா அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல அவனுக்கு தான் பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன்.. பெத்தவங்களை இழந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் என் பேரன்..
அதான் கட்டிக்க போறவ அவனுக்கு எல்லாமாவும் இருக்கனும்னு பாத்துகிட்டு இருக்கேன்..”
அந்த நேரத்தில் அப்பா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. உங்களை எவ்ளோ நேரமா அம்மா தேடறாங்க என்று குரல் கொடுத்து கொண்டே வந்தாள் மகி..
முத்து,காமாட்சி அம்மாவிடம் இது மகி என் பொண்ணுமா என்க.. காமாட்சி அம்மாவோ நாங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பாத்துகிட்டோம் என்று சொன்னார்…மகியும் ஆமாப்பா என்று தலையசைத்தாள்…. முத்து நான் சொல்லுவேன்ல சேகர் என் பால்ய ஸ்நேகிதன்னு அவங்க அம்மா தான் இவங்க என்று விளக்கம் குடுத்துவிட்டு நீ போயி அம்மாவையும் கூப்பிட்டு வாடா என்று அவளை அனுப்பி வைத்தார்..
காமாட்சி தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகவே முத்துவிடம் கேட்க எண்ணி முத்து,” நான் உன் கிட்ட ஒன்னு கேக்கணும் தப்பா எடுத்துக்க மாட்டியே”
முத்து,” என்னமா சின்ன வயசுலயே என்ன உங்க புள்ள மாதிரி தான் பாத்துக்குவிங்க.. ஏழை பணக்காரன் வித்தியாசமே இல்லாம பழகுவிங்க..என் கிட்ட பேச ஏன் இவ்ளோ யோசிக்கரிங்க எதுவா இருந்தாலும் உங்க புள்ள மாதிரி நினச்சு கேளுங்க மா”..
காமாட்சி அம்மா,”என் பேரனுக்கு உன் பொண்ண கட்டி தர முடியுமா நான் நல்லா இருக்கும் போதே அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்பா”என்று முத்துவிடம் கேட்க அவரோ என்ன சொல்வது என்று அறியாமல் அமைதியாக இருந்தார் ..
மகியின் பெற்றோர் சம்மதிப்பார்களா??