சிவா மற்றும் ஆதவ் யோசனையை கலைக்கும் வண்ணம் ஆராவின் நண்பர்கள் அக்ஸா மற்றும் அஸ்வத் வந்திருந்தனர்.
அவர்களை கண்ட ஆரா,”ஹே எருமைங்களா எவ்ளோ நேரம் உங்களுக்காக வெய்ட் பண்றது”
அஸ்வத்,”அதை ஏன் கேக்கறே இவளை போயி கூப்பிட்டுவான்னு அனுப்புனையே உன்ன தான் தேடிட்டு இருந்தேன் வா நீயே வந்துட்ட”னு சொல்லும் போதே ஆரா, சிவா மற்றும் ஆதவ்வை பார்த்தாள்.
ஆதவ் மறுபடியும் ஒரு முறை நன்றி உரைத்துவிட்டு செல்ல அவளோ ஆதவிடம் மெல்லிய புன்னகை ஒன்றை உதித்துவிட்டு சிவாவை நோக்க அவனோ உர்ரென்ற முகத்துடன் ஆதவ்வை நோக்கி வாடா போலாம்னு அவனை அழைத்து சென்றான்.
உள்ளே சென்ற சிவா ஆதவ்வை தனியாக நிறுத்தி அந்த போன் மிரட்டலை பத்தி சொல்ல அங்கு ஆதவ்வோ நீ ஏன் இத முன்னாடியே ஏன் என் கிட்ட சொல்லலனு திட்டி கொண்டிருந்தான்.
சிவா,”சரி விடுடா இப்போ ப்ரோப்ளம் நான் சொல்லாததை பத்தி இல்ல, இதை யாரு செய்யராங்கங்கிறதை பத்தி தான் அதை நம்ம கண்டுபுடிக்கணும் டா”
ஆதவ்,” அதுவும் சரி தான் ஒரு வேலை அந்த ருத்ரா வேலயடா இது? இல்ல வேற யாரோவா டா”
சிவா,”எனக்கும் அந்த யோசனை இருக்கு சரி யாரா வேணாம் இருக்கட்டும் ஆனா அவங்கள நம்ம சீக்கிரம் கண்டுபுடிக்கணும் அதுவரைக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்”னு அவனுக்கு எச்சரிக்கை செய்ய
ஆதவ்,”சரி, இப்போ நம்ம போலாம் டா ஜானுவும் இனியனும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்கனு உள்ள போனவங்க ஜஸ்ட் கால் அதான் லேட் னு அவங்க ரென்டு பேரையும்(ஜானு&இனியன்) கூப்பிட்டு போனாங்க”
அதே நேரத்துல ஆரா ஆதவ்க்கு நடந்ததை பத்தி அவ பிரண்ட்ஸ் கிட்ட சொல்ல, அந்த நட்பு வட்டத்துக்கு கொஞ்சம் ஷாக் தான் இதென்ன சினிமால வர மாதிரில இருக்கு னு சொல்லிட்டு இருந்தாங்க ஆரா கேங்….. அப்போ தான் அஜய் கேட்டான்அவர்களை யாரென்று அறியாமல், “அவங்க என்ன அவ்ளோ பெரிய ஆளுங்களா என்ன இந்த மாதிரி பெரிய லெவல்ல எதிரிங்க எல்லாம் இருக்கறதுக்கு”னு..
அப்போ தான் ஆரா அந்த பங்சன்ஸ்ல நடந்தத பத்தி சொல்ல அவங்களுக்கு இப்போ சிவா அண்ட் ஆதவ் பத்தி தெரிஞ்சிருந்தது, முன்னாடியே அவங்கள பத்தி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போ தான் நேர்ல பாக்கராங்க.
அக்ஸா,”ஓ அதான் அவரு(சிவா) உன்ன மொராச்சுட்டு போனாரோ”(இடிச்சு மேல விழுந்து வாங்கி கட்டிகிட்டதை வச்சு கேட்டா)
ஆரா,”ஹே இப்போ இது உனக்கு ரொம்ப முக்கியம்,ஆமா அஸ்வத் நீ சொல்லு இவ என்ன பண்ணா ஏன் லேட்?”
அஸ்வத்,”இவ மேக்கப் போட்டு ரெடி ஆகி வரதுக்குல ஒரு தேரே அசஞ்சு வந்துரும் போல இருக்கு அவ்ளோ நேரம் ரெடி ஆகரா நீயே சொல்லு இந்த மூஞ்சிக்கி இதெல்லாம் தேவையா”னு அவன் அவளை வம்பிழுக்க
கொஞ்ச நேரத்துல அவங்க சேட்டை எப்பவும் போல தொடங்க சண்டை போட்டுகிட்டே சினிமா பாக்க உள்ளே சென்றனர்.
சிவா,ஆதவ்,ஜானு,மற்றும் இனியன் படம் பாத்து முடித்து விட்டு அன்றைய பொழுதை பிளான் பண்ண படியே முடிச்சுட்டு ஈவினிங் தத்தமது இல்லங்களுக்கு சென்றனர்.
ஆராவும் அவர்களது கேங்கிட்ட இனிமே நம்ம காம்பெடிஷன் முடிச்சுட்டு தான் அவுட்டிங்லாம் போக முடியும் இன்னும் 10 நாள் தான் இருக்கு நாளைக்கு இருந்து ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணனும் அதனால எல்லாரும் அதுக்கு ரெடியா வாங்க, சரி நாளைக்கு பாக்கலாம்னு அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு வீட்டிற்க்கு சென்றாள்.
சிவா,வெளியில் சென்று வந்ததன் காரணமாக டயர்டா இருக்கு சாப்பாடு வேண்டாம் என்று லட்சுமிமா விடம் கூறி விட்டு தனதறைக்கு சென்றவன் பலத்த யோசனையில் இருக்க ஆதவ்விடம் இருந்து போன் வர அதை அட்டெண்ட் செய்தவன், கான்ப்ரன்ஸ் காலில் உள்ள இன்னொருவரின் குரலை கேட்டவுடன் தெளிவடைந்தான். இருக்காத பின்ன சிவா மனதில் நினைத்திருந்ததை ஆதவ் முடித்திருந்தான்.(இவனுங்க ரென்டு பேர்க்குள்ளேயும் இவ்ளோ கெமிஸ்ட்ரி இருக்கறதுனாலேயே இன்னும் சிங்கிளாவே இருக்காணுங்க).
ஆமாம், சிவா அப்போ தான் அவனோட ஸ்கூல் பிரண்ட் ராம் பிரகாஷ் கிட்ட உதவி கேக்கலாம்னு நினைச்சிருக்க ஆதவ் அதை முடித்திருந்தான்.
ராம் பிரகாஷ் இப்போ சி பி ஐ ல பெரிய பதவில இருக்கான், இதுவரைக்கும் அவன் கிட்ட ரொம்ப க்ளோஸ்ல இல்லனாலும் நார்மலா தேவைப்படும் போது பேசிக்கிட்டு தான் இருப்பாங்க, சோ அவன் கிட்ட உதவி கேட்டா கொஞ்சம் நம்பிக்கையாவும், பர்சனலாவும் இருக்கும்னு ரெண்டு பேரும் ராமை நாடி இருந்தர்கள்.
ராமிடம் இதுவரை நடந்த அத்தனை விஷயங்களையும் தெளிவுபடுத்தி சில முடிவுகளையும் எடுத்திருந்தார்கள்.
ராம்,”எப்பவும் ஒண்ணாவே இருந்தா எதிரி பலமா தாக்குதல் நடத்துவான் அதுல நமக்கும் சேதாரம் அதிகமா இருக்கும்,அதனால அவனை அலட்சிய படுத்தர மாதிரி நீங்க உங்க வேலைய தனித்தனியா பாருங்க அப்போ எதிரி கொஞ்சம் வெளியில வருவான் நம்ம அவனை சுலபமா நெருங்கிறலாம்”னு சொன்னான்.
அதை ஆமோதித்தவர்கள் செயல்படுத்த தொடங்கிருந்தார்கள்,எக்காரணம் கொண்டும் வீட்ல இருக்கவங்களுக்கு இந்த விஷயம் தெரியாம பாத்துக்கணும் அவங்களுக்கு பயத்தை உண்டு பண்ண கூடாதுனு நினைச்சிருந்தான் சிவா…. மறு நாள் காலை காலை உணவுக்காக வந்தவன் டைனிங்கில் உள்ள அப்பாவிடம் சகஜமாக பேசியவன் தனது தந்தையிடம் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜானுவை கல்லூரிக்கு அழைத்து செல்லுமாறு கூறியவன் தனது புது ப்ரொஜெக்ட்க்காக வேலை கொஞ்சம் அதிகமா இருக்குனு சொல்லியிருந்தான்… அதனால ஜானுவும் நான் அப்பா கூடயே போயிக்குறேன் னா நீங்க வேலைய பாருங்கன்னு சொல்லிட்டா…
ஆரா,அவளோட பிரண்ட்ஸ் கூட ப்ராக்டிஸ்ல இருந்தா கொஞ்ச நேரம் ப்ராக்டிஸ் பண்ணவங்க இடையில பிரேக் விட்டுருந்தாங்க….. எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க ஆரா கொஞ்சம் வெளியில வந்தா.
அப்போ அங்க வந்த அவ காலேஜ்ல படிக்கிற சீனியர் மாணவன் கண்ணன் ஆராவை நெருங்கி,”என்னமா கண்ணு இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க,நீ இன்னிக்கு மட்டும் இல்ல எப்பவுமே என் கண்ணுக்கு அழகு தான் நான் உன்னை லவ் பன்றேன் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்”னு சொல்லிட்டு
நீ ஒரு நல்ல முடிவை சொல்லுனு உத்தரவை பிறப்பித்துவிட்டு நின்றிருந்தான்.
கடுப்படைந்த ஆரா,”சீனியர் உங்களை பாத்தா எனக்கு எந்த பீலிங்கும் வரல இனிமே என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க”னு சொல்லிட்டு போயிட்டா…
கண்ணன் பேருக்கு ஏத்த மாதிரி பெண்கள் சூழ தான் இருப்பான் இப்போ ஆராகிட்ட நல்லவன் மாதிரி பேசறது கூட அவ அழகை அடையனும்னு தான் ஆரா இவனை அலட்சியப்படுத்த அவனது வெறி பல மடங்கு ஏறியது……
இந்த கழுகின் பார்வையில் இருந்து இவள் தப்புவாளா??