அத்தியாயம் 6

தாயே கருமாரி

எங்கள் தாயே கருமாரி

தேவி கருமாரி

துணை நீயே மகமாயி…..

திருவிழாவுக்காக கட்டப்பட்டிருந்த மைக் செடில் திடீரென பாடல் ஒலிக்க அந்த திடீர் சத்தத்தால் இசைக்கு தலைவலி அதிகமாகி இரு கைகளால் தலையை பிடித்துக்கொண்டாள் ..
தலையில் ஏதோ ஓடுவது போல தோன்ற என்ன செய்வது என்று தெரியாமல் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது தன் எதிரில் இருப்பவர்களை பார்த்தால். அனைவரும் மங்கலாக தெரிய மறுபடியும் கண்ணை கசக்கி பார்க்க முயற்சி செய்தாள் அவளால் முடியவில்லை அவள் உடம்பு முழுவதும் வேர்க்க ஆரம்பித்தது… யார் முன்னும் தன் நிலை தெரியக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை .. ரொம்ப நேரம் போராடி பார்த்தால் அவள் மூளை வேல செய்ய மறுத்தது..
மயங்கி சரிந்தாள்

இவளின் நடவடிக்கையை தூரத்தில் இருந்து கவனித்த இனியன். அவளை தன் மடிமீது தாங்கினான்

ஏய் என்ன ஆச்சு எந்திரி என்று கத்த அனைவரும் அங்கு வந்தனர்

மகி ஓடிச்சென்று தண்ணி எடுத்துட்டு வர அதை இனியன் இடம் கொடுத்து

அண்ணா இத மொத தெளி
என்று தண்ணி பாட்டிலை நீட்டினான்

அதை வாங்கி தெள்ளித்தான் இனியன் தண்ணீர் மேலே படவும் கொஞ்சம் கொஞ்சமாக கண் திறந்து பார்த்தால் இசை என்ன நடக்குது எங்க இருக்ககோம் என்று தெரியவில்லை அவளுக்கு. அவள் மூளை வேலை செய்ய மறுத்தது ஏதோ ஒன்றை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்

ஏய் என்ன ஆச்சு உடம்பு ஏதும் சரியில்லையா என்று இனியன் கேட்க

மகி அண்ணி தண்ணி குடிக்கிறீங்களா என்று கேட்க

கமலம் ராஜாத்தி என்னம்மா ஆச்சு வீட்டுக்கு போறியா

எதற்கும் இசை பதில் கூறாமல் இருக்க

தமிழ் பதறி இசையின் அருகில் வந்து அம்மும்மா எந்திரமா என்றுகூற

பதற்றத்தில் தமிழ் கூறிய வார்த்தைகளை அங்கே இருக்கும் யாரும் கவனிக்கவில்லை

இவர்கள் கூறும் எதுவும் இசையின் செவிகளை சென்றடையவில்லை

கமலம் இனியா இசைய நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ நாங்க எல்லாரும் அப்புறமா வறோம் என்று சொல்ல
இனியன் இசையை அழகாக தூக்கிக்கொண்டு கார் நோக்கி செல்ல பாதி தூரத்தில் கல் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்..

அதில் சுயநினைவு பெற்ற இசை. ஆஆஆஆஆ என்று கத்தினாள்

நீ எதுக்குடி கத்துற

அகி மகி தமிழ் கவி என்று பெயர் சொல்லி மறுபடியும் கத்தினால் இசை

ஏய் இப்ப எதுக்கு அவனுகள கூப்பிடுற அதற்குள்

என்னாச்சு அண்ணி என்று கேட்டு நல்லவர் ஓடி வர

உங்க அண்ணன் என்னை கீழே தள்ளி விட்டுட்டாரு யாராவது ஒருத்தன் கையை கொடுங்கடா..

அய்யோ அண்ணி தள்ளி விடல.. நீங்க மயக்கம் போட்டு விழுந்திகளாஅதுனால அண்ணா உங்கள தூக்கிட்டு காருக்கு வந்தாரு அவரு எப்படி உங்கள தள்ளிவிட முடியும் சொல்லுங்க

ஆமாமா இவர் பெரிய சித்தார்த் மல்ஹோத்ரா பாரு நான் விழுந்த உடனே தூக்கிட்டு போறதுக்கு என்று ரகசியமாக மகி காதில் பேசினால் இசை

அண்ணி எங்க அண்ணே இந்த ஊரு விஜய்சேதுபதியாக்கும் என்று மகி சொல்ல

டேய் என்னடா நீங்க ரெண்டு பேரும் ஏதோ தனியா பேசிட்டு இருக்கீங்க இனியன் மிரட்ட

அது வந்தா அண்ணா நீங்க சித்தார்த் மல்ஹோத்ரா என்று சொல்ல வருவதற்குள் அவன் வாயை பொத்தினாள் இசை

டேய் ஒழுங்கா சொல்லுடா

சொன்ன பைக் மேட்டர் சொல்லிடுவேன் என்று அவனை இசை மிரட்ட

இப்போது நீ சொல்லல அவ்ளோதான்

கவி ப்ளீஸ் எங்க 2
இரண்டு பேரும் எப்படியாவது காப்பபாத்து என்று இசை சொல்ல

கவி இவர்கள் இருவரையும் காப்பாற்ற அண்ணா நீ மொதல்ல அண்ணிய கூட்டிட்டு வீட்டுக்கு போ என்று சொல்ல

( அட இவன் காப்பாற்றுவான் என்று பார்த்தா அய்யனார் கிட்ட தனியா மாட்டி விட்டுடான் ஏதாவது செய் இசை)

தமிழ் நாளைக்கு உனக்கு எக்ஸாம் இருக்குல வா வீட்டுக்கு போலாம்

எனக்கு எக்ஸாம் முடிஞ்சிருச்சு

ஏன்டா எக்ஸாம் இருந்தா மட்டும் தான் படிக்கனுமா டெய்லி படிச்சாதான் நிறைய மார்க் எடுக்க முடியும் என்று இசை சொல்ல

இப்ப எதுக்கு இவ அவன கூப்பிடுறா என்று குழம்பினான் இனியன்

நான் வரல நீங்க போங்க என்று தமிழ் சொல்ல

உடனே மகி அகியை நோக்கி அவள் பார்வையை செலுத்த

அவர்கள் இருவரும் தலைமீது கைகளை தூக்கி ஆள விடு தாயே என்றுகூற

ஐயோ எல்லாம் என் கெட்ட நேரம் என்று தலையிலடித்துக் கொண்டு இனியன் உடன் சென்றாள் இசை

வீட்டிற்கு வந்தவுடன் இனியன் ரூமுக்கு சென்று அவள் கைப்பையில் உள்ளதை இனியனுக்கு தெரியாமல் மறைத்து மறைத்து எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றாள்

இருபது நிமிடம் ஆகியும் அவள் கதவை திறக்காததால் இனியன் கதவை தட்ட அதற்கும் அவள் எந்த பதிலும் கூறாமல் இருக்க பதறிப்போய் கதவை உடைக்கும் போது கதவைத் திறந்தால் இசை .. அப்போதும் கையில் உள்ளதை மறைக்க போராடினால் ஆனால் அவள் கண் அதை காட்டிக் கொடுத்தது

இவ எதுக்கு இப்படி திருதிருன்னு முழிச்சிட் இருக்கா என்ன ஆச்சு இவளுக்கு என்று அவன் யோசிக்கும் கேப்பிள் தோட்டத்தை நோக்கி சென்றாள்..

அவள் கையில் வைத்திருந்த அந்த பொருளை யாருக்கும் தெரியாமல் மண்ணை தோண்டி புதைத்தாள் மறுபடியும் ஒருமுறை யாராவது பார்க்கிறார்களா என்று அவள் திரும்பிப் பார்க்க அப்போது அங்கு வீட்டு வாசற்படியில் தன் இரு கைகளை கட்டிக்கொண்டு இவலையே பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்

ஐயோ போச்சே செம்மையா மாட்டிக்கிட்டேன் போயும் போயும் இந்த அய்யனார் கிட்டயா மாட்டிக்கணும் எல்லாம் என் விதி என்றுசொல்லி தன்னைத்தானே நொந்து கொண்டால் இசை

ஒன்றும் தெரியாது போல அவனை கடந்து உள்ளே செல்ல போக
ஏய் நில்லு என்று கையை நீட்டி தடுத்தான் இனியன்

அங்க என்ன பண்ணிட்டு இருந்த

அச்சச்சோ பார்த்துட்டான் போலயே சமாளி இசை

அவன் நீட்டி இருந்த கைகளை தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே போக முயன்றாள் இசை

கையை பிடித்து இழுத்து அவளை செவரோடு சேர்ந்து அணைகட்டி அவள் அருகில் குனிந்து இப்போ சொல்லு என்று கேட்க எந்த பதிலும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து நேராகப் பார்த்தால் இசைக்கி

கொஞ்சமாவது பயப்படுறலா பாரு

கோயில்ல அவன் கூட உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு

இனி இன்னொரு தடவை அவன் கூட பேசின உன்னை கொன்னே போட்டுடுவேன்
என்ன சொன்னான் அந்த தேவா

அவள் மௌனமாகவே இருக்க நான் பாட்டு கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லவே மாட்டுற

அவள் மௌனமாக அவனைப் பார்க்க ஓ அப்ப நீ பேசமாட்ட அப்படித்தானே

நான் ஒண்ணுல இருந்து பத்து வரைக்கும் எண்ணுவேன் நீயா போயிட்டா உனக்கு நல்லது இங்கேயே இருந்தனு வச்சிக்கோ அப்றம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது

( லூசாடா நீ நானா போக மாட்டேன்ன சொல்றேன் நீதான போறவள பிடிச்சு வச்சுட்டு .பேசுற பேச்சை பாரு என்று திட்டினால்
இசை)

ஒண்ணு ரெண்டு மூணு என்று சொல்லும்போதே விட்டால் போதும் என்று கிச்சனுக்குள் சென்றாள் இசை

அங்கு மலர் ஏன் இசை அக்கா மதியம் நீங்க சாப்பிடல என்று கேட்க
இவ எப்படி கண்டுபிடிச்சா என்று யோசித்தால் இசை

மலர் நீ பார்த்தியா நான் சாப்பிடாதத

இல்லக்கா நான் மதியம் பார்த்த அதே அளவு சாப்பாடு அப்படியே இருக்கு

அதான் கேட்டேன்

நான் சாப்பிட்டேன் மலர் நீ சரியா பார்த்திருக்க மாட்ட

நைட்டுக்கு சப்பாத்தியும் குருமாவும் பண்ணலாமா.. என்று சொல்லி இருவரும் செய்ய ஆரம்பித்தனர்

மலர் குருமாவில் உப்பு கரெக்டா இருக்கா பாரேன்

எதர்ச்சியாக இதைக்கேட்ட இனியன்.. ஏன் மலர் உங்க அக்கா உப்பு கரெக்டா இருக்கானு பார்க்க மாட்டாளா

அது எப்படி மலர் முடியும். முதலாளி சாப்பிடாம வேலைக்காரி நான் முதல்ல சாப்பிட முடியுமா..

அவள் நடவடிக்கையில் அவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது

அனைவரும் சாப்பிட அமர
மகிழன் இசையை பார்த்து

அண்ணி நீங்களும் வாங்க எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்

இல்ல மகி நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன்

இப்ப எதுக்கு இவ பொய் சொல்கிறா என்று இனியன் குழம்ப..
அவளை பார்த்தான்

இப்ப தான் மலர் கிட்ட டேஸ்ட்க்கு கூட தொட மாட்டேன்னு சொன்னா இப்ப ஏன் திடீர்னு இப்படி சொல்றா என்று பார்த்தான்

அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்ல இசை மட்டும் ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு இனியன் ரூமுக்கு உடைமாற்ற சென்றாள்

அவளுடைய சூட்கேசை இருந்து இரவு உடை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்கு சென்றாள்

வெள்ளைக் கலர் முழுக்கை குர்தா அணிந்து கொண்டு வந்தாள் எந்த ஒப்பனையும் இல்லாமல் முடியை கொண்டை போட்டுக் கொண்டே வெளியே செல்ல போனவளை இனியனின் குரல் தடுத்து நிறுத்தியது

எங்க போற இங்கேயே படு என்று கட்டிலை நோக்கி கையை காட்டினான்

அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் தரையில் பாய் விரித்து சுவற்றின் மேல் இரு கால்களை உயர தூக்கி வைத்துக்கொண்டு படுத்தால் படுத்தவுடன் அவள் தூங்கிவிட இனியனால் தூங்க முடியவில்லை அவளயே பார்த்து அதிகாலையில் தூங்கிப் போனான்

காலை 5 மணிக்கு எழுந்த இசை கிச்சனுக்கு சென்று காலை உணவு செய்ய தயாரானாள்
காபி கலந்து கொண்ட அனைவரும் எழுப்ப சென்றாள்..

கவி எப்போதும்போல காலை பண்ணைக்கு சென்றுவிட.. தமிழ் ஹாலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் அகியும் மகிழயும் போர்வையை இழுத்துப்போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

தமிழுக்கு முதலில் காபியை கொடுக்க அங்குவந்த கவியும் அதை எடுத்துக்கொண்டு தமிழுக்கு சமூக அறிவியல்பாடங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்

கவி உனக்கு எப்படி எல்லா ஹிஸ்டரியும் கரெக்டா தெரியுது

அது வந்து அண்ணி நான் பிஎஸ்சி ஹிஸ்டரி படிச்சேன் அதான்

இனியனின் ரூமுக்கு சென்றாள் அப்போதும் அவன் உறங்கிக் கொண்டு இருக்க.. அவனை எப்படி எழுப்புவது என்று யோசித்து.. பின் ஒரு முடிவுக்கு வந்தது

கவி உங்க அண்ணனை காபி எடுத்துக்க சொல்லு என்று கத்த.. பதறியடித்துக்கொண்டு எழுந்தான் இனியன்

அவன் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க அவன் செய்யும் பாவனையை கண்டு சிரிப்பு வர அதை அடக்க மிகவும் சிரமப்பட்டு அவன்முன் காபியை நீட்டினாள்

மேடம் என்கிட்ட டைரக்டடா பேச மாட்டாளோ
உன்னை எப்படி பேச வைக்கிறேன் பாரடி என்று சபதம் போட்டுக்கொண்டான் இனியன்

அடுத்து அகி மகி ரூமுக்கு காபி எடுத்துக்கொண்டு சென்றால்
அப்போது மகி மட்டும் தூங்கிக் கொண்டிருக்க அகி தன் லேப்டாப்பில் பாடல் கேட்டுக் கொண்டு இருந்தான்

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

வாவ் சூப்பர் செம சாங்.. யார் நடிச்ச படம் இது

அண்ணி சூர்யாவும் சமீரா ரெட்டி நடித்த வாரணம் ஆயிரம் படம் எண்ணி

சமீரா என்ற வார்த்தையை கேட்டு இசையின் முகம் இருண்டது.. இதுவே மகியாக இருந்தால் அவளின் முக மாற்றத்தை கண்டு கொண்டிருப்பான் ஆனால் அகி இதுவரை இசையிடம் கண்களை பார்த்து பேச மாட்டான்

சமீரா சமீரா என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்… செமி உன்னை எப்படி நான் மறந்தேன் அவனால உனக்கு ஏதாவது ஆபத்து வந்துருமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு செமி.கடவுளே எப்படியாவது அந்த சின்ன பொண்ண காப்பாத்து

தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளை கமலமின் குரல் நிறுத்தியது.. ராசாத்தி அம்மா அப்பா நியாபகம் வந்திருச்சா

இல்ல அப்பத்தா சும்மாதான் சுத்தி பார்த்துட்டு இருந்தேன்

அம்மாடி உன் கிட்ட ஒரு சேதி சொல்ல தான் வந்தேன்
நம்ப கவிய மரகதம் அவ பொண்ணுக்கு
கல்யாணம் பண்ணி வைக்கணும் கேட்கிறா.. எனக்கு இதுல விருப்பமில்லை நீதான் இனியன் கிட்டபேசணும் அவன் உங்க அத்தை எது சொன்னாலும் கேட்பான் கவிக்கு அந்த பொண்ணு வேணாம் கண்ணு என்று சொன்னார் கமலம்

இசை கயல் பற்றி சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் .கவி அவளை விரும்புகிறான் நான் இப்போது என்ன செய்வது என்று யோசித்தாள்

எனக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் ஏன் என்னால் ஒதுங்கி இருக்க முடியவில்லை இவர்கள் காட்டும் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்வது. கயல் பற்றி தெரிந்தும் அதை முழுவதுமாக கவியிடம் என்னால் சொல்ல முடியவில்லையே இப்போது நான் என்ன செய்வது. சிறிது நேர யோசனைக்கு பிறகு இதற்கு ஒரே தீர்வு தேவாஅண்ணா தான் என்று தன் திட்டங்களை மகி அகி தமிழிடம் கூறினாள்

தமிழ் நீங்க ரிஸ்க் எடுக்கறீங்க

அகி வேணா அண்ணி அண்ணனுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும்

மகி ஆமா அண்ணி அகிசொல்றது தான் கரெக்ட்

அப்போ கயல் உங்களுக்கு அண்ணியா வந்தா ஓகேவா

ஐயையோ என்று மூவரும் ஒரே சேர கத்த

நீங்க தாண்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும் நான் போட்ட பிளான் கரெக்ட்டா ஒர்க்கவுட் ஆகும்
ப்ளீஸ்டா

அண்ணி இனியன் அண்ணாக்கும் உங்களுக்கும் இதை வைத்து பெரிய பிரச்சனை வரும் அண்ணனுக்கு முன்கோபம் ஜாஸ்தி எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க …

மரகதம் வீட்டில்

இங்க பாருடி அந்த இனியன் சும்மா டம்மி பீசு .. பாக்க தான் அவன் எல்லாத்தையும் பண்ற மாதிரி இருக்கும் ஆனா எல்லாமே கவி கைல தான் இருக்கு அவன் வெறும் அடியால் மாதிரிதான்.. கவி கிட்ட தான் எல்லா சொத்து விவரம் எல்லாமே இருக்கு ஒழுங்கா அழுவதை நிறுத்தி அவனை கல்யாணம் பண்ணிக்கிற வழியை பாரு மரகதம் திட்டிக்கொண்டே இருந்தாள்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago