ஷர்மிளா, “அண்ணா உக்காருங்க. அரைமணி நேரத்தில சாப்பாடு செஞ்சுடுவோம். நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என்றார்.

“பரவாயில்லைங்க. நிச்சயம் பண்ணின அப்புறம் ஒருநாள் குடும்பத்தோடு வர்றேன். அதுவும் இல்லாம இப்போ தான் சாப்பிட்டு வந்தோம்” என்றார் சிவநாதன்.

“அதெல்லாம் முடியாதுங்க மாமா. நீங்க சாப்டுட்டு தான் போகனும். நானே போயி சமைக்கிறேன். உங்க வருங்கால மருமக கைப்பக்குவம் பாருங்க” என சொல்லிக்கொண்டே சமையலறைக்கு செல்ல எத்தனித்தாள் வித்யுதா.

“நில்லுமா. நீ என் வீட்டுக்கு தானே வர போற. அப்போ உன்னோட கை பக்குவத்தை நாங்க பாத்துக்குறோம். இப்ப நீ போய் தண்ணி மட்டும் கொண்டு வா” பார்வதி சொல்ல அப்போதுதான் ஷர்மிளாவுக்கும் சந்திரசேகருக்கும் ஞாபகம் வந்தது வந்தவர்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை என்று.

கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்ட சந்தோசத்தில் துள்ளிக்குதித்து ஓடிய வித்யுதா தண்ணீரைக் கொண்டுவந்து சிவன்நாதனிடம் கொடுத்தாள். தண்ணீரை வாங்கி குடிக்க மனமில்லை என்றாலும் வேறு வழியின்றி அருந்தினார்.

“சரிங்க நாங்க போயிட்டு வர்றோம். நல்ல நாள் பார்த்து சொல்றோம்” என்றார்.

“முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்கீங்க. அதுவும் நல்ல விஷயத்தோட. நீங்க சாப்பிடாம போறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா சூழல் என்னென்னு எனக்கு புரியுதுங்க. கட்டாயம் அடுத்த முறை சந்தோஷமான சூழ்நிலை அமையும்னு நம்புறோம்” என சொல்லி கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்தார் சந்திரசேகர்.

காரில் அமர்ந்தவுடன்,” என்ன பார்வதி இப்போ உனக்கு சந்தோஷம்தானே. நீ ஆசைப்பட்ட மாதிரி உன் பையன் ஆசைபட்ட மாதிரி நான் இறங்கி வந்து பேசிட்டேன். ஆனா இப்போ ஒரு கேள்வி வரும் இதே மாதிரி அன்னைக்கு ஏன் அப்பா எனக்கு பண்ணலனு உன்னோட பெரிய பையன் கேட்பான். அப்போ என்னோட மானம் மரியாதையோட முகத்தை எங்க கொண்டுபோய் வச்சுப்பேன்” என்ற சிவநாதனின் முகத்தில் அப்படி ஒரு வலியை பார்க்க நேர்ந்தது.

“ரெண்டு பேரும் நம்ம பசங்க தான். எனக்கு மட்டும் என்ன விருப்பமா? ஆசையாய் வளர்த்த பையன். அவனும் அண்ணன் மாதிரி ஆயிட்டா என்னால வாழ முடியாது…. உங்களாலையும்தான்….” பார்வதியின் பேச்சில் அர்த்தம் இருந்தது.

கார் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

“என்னடி இப்போ உனக்கு சந்தோஷம்தானே. இனிமேலாவது குறும்பு தனத்தை மாத்திக்க. அது பொறந்த வீடு இல்லை புரிஞ்சுதா! நம்ம இஷ்டத்துக்கு இருக்க முடியாது” என்றாள் ஷர்மிளா.

“இப்படித்தான் உங்க அம்மா சொல்லுவா. ஆனா இப்ப வரைக்கும் அவ இஷ்டத்துக்கு தான் நான் இருக்கேன். அம்மா சொல்ற மாதிரி எல்லாம் இல்ல. இங்கே நீ என்ன தப்பு செஞ்சாலும் நாங்க பொறுத்துப்போம். இப்ப நீ பண்ணின மாதிரி. ஆனா அவங்க அப்படி ஏத்துக்க மாட்டாங்க. அவ்வளவுதான். மத்தபடி நீ சரியா இருந்தா உனக்கு சந்தோஷமான வாழ்க்கை அமையும்” என்ற சந்திரசேகரின் கழுத்தை பற்றிக்கொண்டு, ” அப்பா ஐ லவ் யூ அப்பா. நீங்க இல்லன்னா நான் இப்போ இவ்ளோ சந்தோஷமா இருக்க மாட்டேன்” அழுதாள்.

“நீ என் பொண்ணு. அதுக்கும் மேல நீதான்டா என்னுடைய எல்லாமே. அப்படி இருக்கும்போது உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவோம் நாங்க” என்றதும் மூவரும் கண்களிலும் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது.

“என்னங்க.. அம்ரீஷோட அப்பா அம்மா இப்படி வருவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல. எனக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு” என்றாள் ஷர்மிளா.

“எனக்கும் தான். ஆனா இதுல அவங்களுக்கு விருப்பமில்ல. பையன் ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக தான் வந்து இருக்காங்க. அது தான் எனக்கு பயமா இருக்கு. இவ வேற ஓடிப்போயி முத்தம் கொடுக்கறா. இதே மாதிரி இருந்தாலும் அங்க இன்னும் சிரமம் தான். அதைவிட முக்கியம் அவரோட மூத்த பையனும் சொந்தகாரங்களும்” சந்திரசேகர் சொல்லி முடிக்க, வித்யுதா மனதில் குறும்புத்தனத்தின் விபரீதங்கள் புரிந்தது.

“அப்பா மாமாவோட முழு சம்மதத்தோட தான் நான் அந்த வீட்டுக்குள்ள போவேன். எனக்கு ஏத்த மருமகள்னு அவர் சொல்லி கூப்பிடுவாரு. அந்த மாதிரி நடப்பேன். வீட்டுக்குள்ள என்னோட குறும்புத்தனம் உங்களுக்கு நல்லா தெரியும். அதே மாதிரி நான் எப்படி இந்த அளவுக்கு வந்து இருக்கேன்னும் தெரியும். அவர் சந்தோஷம் ரொம்ப முக்கியம் எனக்கு” என்றாள் வித்யுதா.

“மறுபடியும் ஏதாவது கிறுக்குதனம் பண்ணி வைக்காம ஒழுங்கா நடந்துக்க. போயி முதல்ல அம்ரீஷ்கிட்ட பேசு” என்றாள் ஷர்மிளா.

இவளும் வேகமாக ஓடி போன் செய்தாள். ஆனால் நல்ல உறக்கத்தில் இருந்த அவனோ போனை எடுக்கவில்லை…

“அம்ரீஷ்.. வித்யுதா வீட்ல பேசிட்டோம். அவங்களுக்கும் சந்தோசம். நல்ல நாள் பார்த்துட்டு உறுதி பண்ணிக்கலாம்னு பேசிட்டு வந்திருக்கோம்” என்றாள் பார்வதி.

“அம்மா என்ன மன்னிச்சிடும்மா. நான் வேணும்னு பண்ணல. ஏனோ அவ எனக்குள்ள வந்துட்டா. அப்பாவை கஷ்டப்படுத்தனும்னோ அசிங்கப்படுத்தனும்னோ கொஞ்சம் கூட நினைச்சதில்ல. ஆனா லவ் பண்ணிட்டேன். ரொம்ப தேங்க்ஸ்மா.ஆனா லவ் பண்ணிட்டேன். ரொம்ப தேங்க்ஸ்மா. ஆனா அப்பாவுக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல தானே!?…” என்றான்.

அவன் தலையை வருடி கொடுத்தாள் அன்னையாய் புன்வறுவலுடன்.

இரண்டு நாட்கள் கடந்தது. சிவநாதனும் எதுவும் பேசவில்லை. ஆபீஸ்க்கு கிளம்பினான் தன் பிறந்தநாள் பரிசாக அப்பா வாங்கி கொடுத்த வண்டியை எடுத்துக்கொண்டு.

அவன் தெரியும்வரை அந்த வண்டியில் செல்லும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார் சிவநாதன் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும்.

அன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங். வித்யுதாவும் வந்திருந்தாள். நாள் முழுக்க அரக்கப்பரக்க வேலைகள் ஓடிக்கொண்டு இருந்தாலும் அவ்வப்போது குறுநகையிலும் கண் சிமிட்டலிலும் பேசினார்கள்.

மீட்டிங் முடிந்தது. “இன்னைக்கு தான் உடம்பு நல்லாகி ஆபீஸ் வந்தேன். மொத்தமா வெச்சி செஞ்சுட்டானுகலே” என்று புலம்பிய அம்ரீஷ் செல்போன் ஒலித்தது.

‘ஆபீஸ் முடிஞ்சதும் நாம எப்பவும் மீட் பண்ற ரெஸ்டாரன்ட் வந்துருங்க’ என்ற குறுஞ்செய்தி வித்யுதா அனுப்பி இருந்தாள் சில ஹார்டீன் சிம்பளுடன்.

சரியாக 6.30க்கு இருவரும் சந்தித்தனர்.

“என்ன சார். கல்யாணத்துக்கு சம்மதம் ரெண்டு வீட்டிலையும் கெடைச்ச அப்புறம் உங்க கிட்ட பேச கூட முடியல. ரொம்ப தான் பிகூ பண்றீங்க”

“அப்படிலாம் இல்லடி. அப்பாவுக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல. நான் கஷ்டபடுறதையும் அவர் விரும்பல. அதான் ஓகே சொல்லிட்டாரு. அவர் மனசுக்குள்ள பெரிய வலி இருக்கு. ஒரு நல்ல மகனா நான் என்ன செய்ய போறேன்னு தெரியல” என்றான் அம்ரீஷ்.

வித்யுதா,”இது எனக்கு முன்னாடியே தெரியும்” என்றதும் கண்கள் விரிய பார்த்தான்.

“ஆமா அம்ரீஷ். எங்க அப்பா சொன்னாரு. அது என்னன்னு அப்புறம் சொல்றேன். இப்போ நாம சாப்பிடலாம். நான் முன்னாடியே ஆர்டர் பண்ணிட்டேன்” என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் கைது செய்து கொண்டனர்.மாறி மாறி ஊட்டி விட்டனர்.

“ஷ்ஷ்ஷ்ஷ்…. லூசு. உங்க வீட்டுல கறி வாங்கி போடலையா. இப்படி கைய கடிக்கற… வலிக்குதுடி..” என்றான்.

அவளோ ரசித்து முகம் மலர சிரிப்புடன், “இரண்டு நாள் சார் என்கிட்ட ஒழுங்கா பேசாம என்னைய தவிக்க விட்டீங்களே. அதுக்கு தான் இது” என்றாள்.

“அப்படின்னா நீ என் பர்த்டே அன்னைக்கு பண்ணதுக்கு உன்னைய நான் மொத்தமாக கடிக்கணும்” என்றான்.

” இப்பவே உங்களுக்கு ரொம்ப அவசரம் போல. அது கல்யாணத்துக்கு அப்புறம் தான். மூனு முடிச்சு போட்ட அப்புறம் எப்படி வேணும்னாலும் கடிங்க. அது வரைக்கும் அமைதியா இருங்க” என்றாள்.

உடனே வெட்கத்தில் சிரித்தபடி. ” உன்னைய‌ வச்சிக்கிட்டு நான் படாதபாடு படப்போறேன்டி” என அவள் தலையை பிடித்து முட்டிக்கொண்டான்.

அந்த நேரத்தில் அவன் மனதில் எந்த கவலையும் இல்லை. எதுவும் ஞாபகம் இல்லை. அந்த நிமிடம் மட்டும் மகிழ்ச்சியாக நகர்ந்தது.

“அம்ரீஷ்..” என்று அழைத்து கண்ணடித்து முத்தம் ஒன்றை காற்றில் தழுவ செய்து “ஐ லவ் யூ” என்றாள் வித்யுதா.

வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான் அம்ரீஷ். “என்னைய இப்படி பண்ணி பண்ணி தான்டி எங்க அப்பாகிட்ட இந்த அளவுக்கு பேச வச்சுட்ட. நீ வில்லிடி. ஐ டூ லவ் யூ குட்டி சாத்தான்”

“இந்த குட்டி சாத்தான் கூட தான் ஐயா வாழ்க்கை ஃபுல்லா வாழ போறீங்க..”

“என்னடி பண்றது.. அந்த அளவுக்கு என்னை நீ வசியம் பண்ணி வச்சிருக்க. மாயக்காரி..”

மாறி மாறி மீண்டும் ஊட்டிக்கொள்வதும், இடையில் கடிப்பதும், சிரிப்பதும்‌ என இரவு உணவு முடிந்தது. மணி 8ஐ தாண்ட காத்திருந்தது.

பைக்கில் ஏறினாள் வித்யுதா. அவன் சுற்றி கட்டிக்கொண்டு அம்ரீஷின் தோல் மீது தன் முகத்தை வைத்துக்கொள்ள இருவரும் ரொம்ப தூரம் பயணிக்க ஆரம்பித்தனர்.

வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்தினான்.

“இப்ப சொல்லுடி என்ன தான் மாமா சொன்னாரு. அப்பாவோட விருப்பமில்லாம நாம கல்யாணம் பண்ணாலும் சந்தோஷமா இருக்க முடியாது. முதல்ல அவருக்கு சந்தோஷம் தரணும்” என்றான் அம்ரிஷ்.

“மாமாவோட இந்த நிலைமைக்கு காரணம் உங்க அண்ணனும் சொந்தக்காரர்களும் தான். அவருடைய இந்த பையனும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணா மொத்த சொந்தமும் அவர தப்பா தான் பேசும். இதான் மாமாவோட வருத்தத்திற்கு காரணம்” என்றாள்.

“இது எனக்கும் தெரியும். ஆனா அதை எப்படி சரிசெய்யறதுன்னு தெரியல. ஏதாவது பண்ணனும். ஆனா என்ன பண்றதுன்னு தான் தெரியல” என்றாள்.

“எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. ஆனா அது ஒத்து வருமான்னு தெரியல. எதுக்கும் யோசிச்சு பாருங்க” என்றாள்.

“எதுவா இருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது அப்பா சந்தோஷமா இருக்கணும். அப்பத்தான் நாமளும் கல்யாணத்துக்கப்புறம் சந்தோஷமா இருக்க முடியும். அதுக்காக நான் எந்த அளவுக்கு வேணும்னாலும் ரிஸ்க் எடுக்க தயாரா இருக்கேன்” என்றான் ஒரு நல்ல மகனாக.

“அம்மா அப்பா சம்மதம் இல்லாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணினதால தான் மாமாக்கு அவமானம் வந்துச்சு. நாம ரிலேஷன்ஸ் எல்லாத்தையும் கூப்பிடு தான் பண்ண போறோம்.ஆனா முக்கியமான ரிலேஷன்ஸ் வரணும்ல.. அதனால நாம உங்களுடைய முக்கியமான ரிலேஷன் கிட்டயும் சம்மதம் வாங்கலாம். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். இது சரியா வருமான்னு நீங்கதான் சொல்லணும்” என்றாள்.

“சூப்பர் ஐடியா. உனக்கும் மூளை இருக்குன்னு நிரூபிச்சுட்டடி”

” ஹலோ…நான் ஒரு பெரிய கம்பெனியோட மார்க்கெட்டிங் ஹெட். நான் இல்லையினா உங்களுக்கே வேலை இல்ல. ஞாபகம் இருக்கட்டும்”

” சரி சரி… ஆனா இது ஒத்து வருமான்னு தெரியல. ஏன்னா ஏற்கனவே என்னைய ஒரு பயலும் மதிக்க மாட்டான். இதுல நானு கல்யாண விசயமா பேசின்னா இன்னும் பிரச்சினை ஆகும். அப்பாவும் கஷ்டப்படுவாரு. சரி நான் யோசிச்சு சொல்றேன்” என்றான்.

“நல்லா யோசிங்க. ஆனா‌ மாமாவோட முழு சம்மதத்தோட தான் நமக்கு கல்யாணம். அதுவரைக்கும் நம்ம லவ்வர்ஸாவே இருப்போம்” என்றாள்.

அவளின் கைகளை பற்றினான். “வித்யு… நீ ஒரு‌ நல்ல மருமகளா இருப்பன்னு எனக்கு தெரியும். ஆனா எங்க அப்பாகிட்டயும் அத புரிய வச்சு, உன்னோட கழுத்துல முடிச்சு போடுறேன்டி. நீ எனக்கு கெடைச்ச பொக்கிஷம். ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு அவள் இரு கைகளையும் இணைத்து முத்தம் கொடுத்தான்.

“ஐ லவ் யூ டூ அம்ரீஷ்” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

யாரும் இல்லாத அந்த தெருவின் மங்கிய ஒளியில் மரத்தடியில் இரண்டு உள்ளங்களும் காதலை பரிமாறி கொண்டிருந்த வேளையில் அம்ரீஷ் செல்போன் இருவரிடமும் இடைவெளியை ஏற்படுத்தியது.

“ஹலோ அம்மா. சொல்லும்மா”

“டேய் எங்கடா இருக்க. மணி 9 ஆச்சு. இன்னும் என்ன பண்ற” என்றாள் பார்வதி.

அப்போது தான் ஞாபகம் வந்தது அவனுக்கு. “அம்மா ஒரு வாரம் லீவு போட்டதுல வேலை நிறைய இருக்கும்மா.அதான்… இப்ப கிளம்பிட்டேன்‌. வந்துருவேன்… நீங்க எனக்காக சாப்பிடாம இருக்க வேண்டாம். நான் ஹோட்டலே சாப்பிட்டு வர்றேன்” என்று சொல்லி போனை துண்டித்தான்.

“அடியே… மணி ஒன்பது ஆச்சுடி வீட்டுக்கு போலாம் சீக்கிரம். உங்க வீட்லயும் தேடுவாங்க” என்றான்.

“சாருக்கு அந்த கவலை வேண்டாம். என்ன நான் எங்க வீட்ல சொல்லிட்டு தான் வந்தேன். அதனால நான் ஆட்டோ புடிச்சி போய்க்கிறேன். நீங்க மெதுவா சேஃப்டியா வீட்டுக்கு போங்க. இப்போ ஆட்டோ ஸ்டாண்ட்ல மட்டும் கொண்டு போய் விட்டா போதும்” என்றாள் வித்யுதா.

அவளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் அம்ரீஷ்.

‘அப்பாவோட கஷ்டத்துக்கு அண்ணன் ஓடிப் போனது தான் காரணம். சொந்தபந்தம் எல்லார் முன்னாடியும் அப்பாவை கௌரவமா காட்டனும். ஒருவேளை வித்யுதா சொன்ன மாதிரி செஞ்சா என்ன?’ என்ற பல கேள்விகளை மனதில் ஓடவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வண்டியை நிறுத்தியவுடன் ” ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிருந்த?” என்ற குரல் வாசலில் நின்ற சிவநாதனிடம் வந்தது.

தொடரும்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago