அவனின் பார்வையில் மங்கை அவள் வித்தியாசத்தை உணர, அபயோ அதை கண்டுகொள்லாமல் இவளுக்கு முன்
பி.ஏ வாக வேலை பாத்த சங்கரை அழைத்து அவள் செய்ய வேண்டிய வேலை பற்றி சொல்லுமாறு கூறியவன்… வேறு அலுவல் விஷயமாக வெளியே சென்றுவிட்டான்…
மகியிடம் வந்த சங்கர் அவனை அறிமுகப்படுத்திக்கொண்டு தான் வேறு கிளைகளை பாக்க போவதாகவும் அதனால கொஞ்சம் சீக்கிரமா கத்துக்கோங்கனு அவள் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி கூறியவன் சில பைலை குடுத்து வேலையை செய்ய சொல்லியவன் அதை கண்காணித்து சில அலுவல் விஷயங்களையும் கற்று குடுத்தான்….
மகி சங்கரிடம்,” நான் உங்களை பேர் சொல்லி கூப்பிடட்டுமா”னு கேட்டாள்.
சங்கர் சிரித்துவிட்டு நண்பனுக்கே உரித்தான முறையில்,”சரி மகி நான் உன்னை என் பிரண்ட்டா தான் பாக்குறேன் நீ எப்படி கூப்பிட்டாலும் ஓகே தான்”…
மத்தபடி சங்கர் அவளுக்கு சில அறிவுரைகளையும் வேலைக்கு தேவையானவற்றையும் கூறியவன்,
“உனக்கு எந்த சந்தேகம்னாலும் என்ன கேளுனு” தன் மொபைல் நம்பர் கொடுத்தவன்… “மகி பாஸ்க்கு வேலை விஷயத்துல பெர்பக்ட்டா இருக்கணும் சோ கொஞ்சம் கவனமா வேலை பாரு” என்று பொதுவான அறிவுரையை கூறிவிட்டு தன் அலுவல் வேலையை பாக்க சென்றான்…
மகிக்கோ இந்த புது வேலையில் ஒரே நிம்மதி.. இந்த சங்கருடனான நட்பு மட்டுமே அவ்வளவு நெருக்கம் இல்லாவிடினும் ஒரு உண்மையான உறவு உள்ளது போல் ஒரு உணர்வு அவளுள்…
வெளியில் சென்ற அபய் திரும்ப வந்தவுடன்..
அவளை அழைத்து ,”எனக்கு வேலைன்னு வந்துட்டா எல்லாமே சரியா இருக்கணும் எந்த சாக்கும் சொல்ல கூடாது… இது நானா கட்டுன சாம்ராஜ்ஜியம் இதுல எந்த தப்பு நடந்தாலும் நான் பொறுத்துக்க மாட்டேன்” என்றான் பாஸ்க்கே உண்டான தோரணையில் ….
அவளும் மனதில் சங்கர் கூறியதை நினைத்து கொண்டாள்…
மகி அபயிடம்,”ஓகே சார் இந்தாங்க இது இன்னிக்கி நீங்க பாக்க வேண்டிய பைல்ஸ் அண்ட் இது நீங்க குடுத்திருக்க அப்பாயின்மெண்ட்” என்றாள்..
பைலை பார்த்த அபய் அவளின் ஆர்வத்தை முதல் நாளிலே தெரிந்து கொண்டான்…
மகியிடம்,”ஓகே நான் இந்த பைலை சைன் பண்ணி தரேன் அதை ஆடிட்டர் ஆபிஸ்க்கு அனுப்பிரு அப்பறம் நாளைக்கு காலையில எக்ஸ்போர்ட் ஆர்டர் டீடைல் வேணும்”னு சொல்ல அவளோ சரிங்க சார் என தனது வேளையில் மூழ்கி விட்டாள்…
அவள் வேலையை முடித்து விட்டு கிளம்பும் போது மணி ஆறு ஆகியிருக்க அவனிடம் உரைத்துவிட்டு சென்றாள்..
அங்கோ அபயின் மனதில்,”ச்ச என்ன பொண்ணுடா இவ இது வரைக்கும் நம்ம பாத்ததுலயே வித்யாசமான ஆளா தெரியறா… அவளுக்குள்ள இருக்க திறமை.. யாரையும் சார்ந்து இருக்க கூடாதுங்கிற எண்ணம் இப்படி வைராக்யமான ஒரு பொண்ணா என்று அவனுக்கு தெரிஞ்ச பொண்ணுங்க கூட ஒப்பிட்டு பாத்து கொண்டான்…
அவனின் மனசாட்சியோ ஏன்டா உன் கூட இருக்கவளுங்க எல்லாம் உன் பணத்துக்காக இருக்காங்க அவளுக கூடவா இவள கம்பேர் பண்றனு அவனிடம் வாதித்தது.. தன் மனசாட்சியின் கூற்று உண்மை என்றே உணர்ந்தவன் சிறு புன்னகையை சிந்திவிட்டு
காரை கிளப்பிக்கொண்டு தனக்கு வழக்கமான குடியுடன் உறவாட சென்று விட்டான்…
வீட்டிற்கு சென்ற மகியோ தனது முதல் நாள் அனுபவத்தை தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு… உணவருந்தி விட்டு தனதறைக்கு
சென்று படுத்தவள்..முதல் நாள் அனுபவ தித்திப்பில் உறங்க சென்றாள்…
அவளின் வைராக்கியம் அசைக்கப்படுவது தெரியாமல் துயில் கொண்டிருக்கிறாள் மகி….