நிஷாந்தின் போன் தொடந்து அழைத்து கொண்டே இருக்க “டேமிட்”என்று சுவரில் தூக்கியடிக்க ஐபோன் சில்லுசில்லாக நொறுங்கியது..
அவனின் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க லண்டனில் இருந்த இருவர் சென்னையை நோக்கி பயணப்பட்டனர்..
ஆபிஸில் சிவா நிஷாந்த்துடன் பேசி முடித்துவிட்டு அமர ஆதவ் கையில் இரு டீ கப் உடன் வந்தவன் சிவாவிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு அவனருகில் அமர்ந்தான்.
சிவா,” ஏன்டா நீ இதெல்லாம் எடுத்துட்டுவர” என சலித்துக்கொண்டான்..
ஆதவ்,”இதுல என்னடா இருக்கு.. ஏன் மச்சானுக்கு நான் எடுத்துட்டு வரேன்”
சிவா,”ஆமா ஆமா உன் தங்கச்சியை நான் தான கட்ட போறேன் அப்போ நீ தான் என்ன விழுந்து விழுந்து கவனிக்கணும்” இதை கூறும் போதே அவனின் முகத்தில் வெட்கத்தின் சாயல்…
ஆதவ் அவனை தோளோடு அணைத்தவன்,
“சூப்பர் மச்சி.. பட் அவ கிடைக்க நீ ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்.. உனக்குள்ள இருக்க காயத்துக்கு மருந்தே அவ தான் டா”
அதை ஆமோதித்த சிவாவின் கண்களில் வலியின் சாயல்,”இப்பவும் என்னால தான்டா இப்படி படுத்துருக்கா அவ எப்போ கண் முழிப்பானு இருக்குடா”என்ற சிவா தன் தோளை பற்றியிருந்த ஆதவின் கரங்களின் மீது தலை சாய்த்தான்..
இவ்வளவு நேரம் வெறி கொண்ட வேங்கையாய் வேட்டையாடியவன்,சட்டென்று குழந்தையாய் மாறி கண் கலங்க ஆதவ் தான் அவனை தைரியப்படுத்தினான்..
ஆதவ்,”சரி வா கிளம்பலாம் ஆராவை பாக்க.. அப்டியே அம்மா அப்பா கிட்ட சொல்லவா??”
சிவா, “ம்ம் அப்டியே ஜானுகிட்ட சொல்லி அவளையும் வர சொல்லு”
ஆதவ் அவன் பெற்றோருக்கும் சிவாவின் பெற்றோருக்கும் தகவலை சொல்லிவிட்டு ஜானுக்கு அழைத்தான்..
காலை அட்டன்ட் செய்த மறுமுனையில் அமைதி அன்றைய ஹாஸ்பிடல் நிகழ்வுக்கு பிறகு அவர்களுக்குள் போனில் பேச்சுவார்த்தை இல்லை அவனின் அத்தனை அட்வைசுக்கு பிறகு ஜானுவும் விலகியே இருந்தாள்.. நேரில் பார்த்துக்கொண்டால் மட்டுமே பெயரளவில் பேசிக்கொள்வார்கள் அதுவும் ஓரிரு முறைதான். பெரும்பாலும் அவளை சலனப்படுத்தாமல் இருப்பதற்காகவே அவளை தவிர்த்து வந்தான் ஆதவ்..
சிவாவிடம் இருந்து விலகி நின்றே பேசிக்கொண்டிருந்தான் ஆதவ்..
ஆதவ்,”ஜானு இருக்கியா???”
ஜானு,”ம்ம்..” எனும் போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது…
அதை உணர்ந்தவனாய் அவளை மேலும் யோசிக்கவிடாமல் ஆராவை பற்றிய தகவலை கூறி,”நீ காலேஜிலேயே இரு நானும் சிவாவும் வரோம்.. நம்ம மூணு பேரும் சேர்ந்து போலாம்” என்று அழைப்பை துண்டித்தான்..
சிவாவை டிரைவ் செய்ய அனுமதிக்காமல் ஆதவ் அவனை அழைத்து கொண்டு கிளம்பினான்..
சிவாவின் மனம் முழுவதும் ஆராவை பற்றிய சிந்தனையில் இருக்க ஜானுவின் கல்லூரி வந்தது கூட தெரியவில்லை ஜானு காரில் ஏறி அமரும் வரை..
அண்ணனின் முகத்தில் உள்ள கவலையை அறிந்த ஜானு,”அண்ணா நீ கவலைபடாத அவளுக்கு ஒன்னும் ஆகாது”
சிவா,”இப்போ ஹாஸ்பிடல் போனா தெரிஞ்சுரும் டா” என்றவன் மீண்டும் அமைதியானான்..
ஆதவ் கண்களால் அவளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்ய அவளும் அமைதியானாள்..மனதிலோ ஆயிரம் பிரார்த்தனைகள் ஆராதனாவுக்காக…
சிறிது நேரத்தில் மூவரும் மருத்துவமனையில் இறங்க சிவாவின் கரத்தை பற்றிக்கொண்டு ஜானு உள்ளே செல்ல ஆதவ் இரு குடும்பத்திற்காகவும் வெளியிலேயே காத்திருந்தான்..
சற்று நேரத்தில் நால்வரும் வர அவர்களையும் உள்ளே அழைத்துக்கொண்டு வந்தான் ஆதவ்..
உள்ளே சென்ற ஜானு ஐ.சி.யூ வின் வெளியே இருந்து ஆராவை பார்க்க கண்ணை கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு, அண்ணனுக்காக அமைதியாக இருந்தாள்..
சிவாவோ ஆராவின் தந்தையிடம்,”டாக்டர் என்ன சொன்னாங்க மாமா” என்றான்…
அண்ணனின் அழைப்பை வைத்தே அவனின் மனதை புரிந்தவள் இது ஒன்றே போதும் ஆரா மீண்டு வர என மனதில் நினைத்துக்கொண்டாள்..
ஆராவின் அப்பா,” இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தாங்க கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது சீக்கிரம் கண்முழிக்க வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க”
சிவா,”சரி அங்கிள் வெயிட் பண்ணுவோம்”
அதற்குள் இரு குடும்பத்தினரும் வர ஆராவின் பெற்றோருக்கு இரு குடும்பத்தினரும் உறுதுணையாக நின்றார்கள்.. ராஜாவிற்கு தொழில் ரீதியாக அவர்களுடன் முன்னமே இரு குடும்ப தலைவர்களுடன் பழக்கம் இருந்தது தான்.. பார்வதிக்கு பெண்கள் இருவரும் புதியவர்கள் தான் இருந்தும் அவர்களின் அரவணைப்பை பார்க்கும் போது பிரம்மிப்பாய் இருந்தது…
என்னதான் காசு பணம் தற்போது இருந்தாலும் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்ததினாலே பணத்தை விட பாசத்திற்கு மதிப்பு அதிகம் என்று உணர்தியிருந்தனர் பெண்கள்..
சிவாவின் பெற்றோருக்கும், ஆதவின் பெற்றோருக்கும் ஆரா இளையவர் கூட்டத்தின் பிரண்ட் என்பது மட்டுமே தெரியும் சிவாவுடனான காதல் விவகாரம் தெரியாது…
அங்கே குழுமியிருந்தவர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆராதனா கண்விழித்தாள்..
அவளை செக் செய்த டாக்டர் வெளியே இருந்தவர்களிடம்,”அவங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணாம பாத்துக்கோங்க அப்பறம் கும்பலா போகாதீங்க ஒவ்வொருத்தரா போயி பாருங்க.. அதிக பட்சம் ரெண்டு பேருக்கு மேல போகாதீங்க அவங்களுக்கு இன்பெக்சன் ஆயிடும்”
அந்த செய்தியை கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி..
முதலில் ஆராவின் பெற்றோர் உள்ளே சென்றனர்..
பாரு ஆராவின் கையை தடவிகுடுத்தவாறே,
“என்ன குட்டிமா இப்படி பயமுறுத்திட்டே”என கண்கலங்க.. ஆரா சிரமப்பட்டு பேச முற்பட ராஜா தான்,”ஸ்ட்ரெயின் பண்ணாதடா”என்றார்..
ஆரா கஷ்டப்பட்டு,”எனக்கொன்னுமில்லப்பா” என்றாள்..
ராஜா,” சரிடா நீ ரெஸ்ட் எடு ஸ்ட்ரெயின் பண்ணாத..வெளிய கொஞ்ச பேரு இருக்காங்க அவங்களும் உன்ன பார்க்க வருவாங்க” என்றவர் தன் மனைவியை. அழைத்து கொண்டு வெளியே வந்தார்..
அதற்கு பின் சிவாவின் பெற்றோர்,ஆதவின் பெற்றோர் பார்த்துவிட்டு வந்தனர் சிவா உள்ளே செல்லாமல் இருக்க ஆதவ் அவனை அழைக்க அவனோ,”நீ போ நான் அப்பறம் பாக்கறேன்” என்றவன் டாக்டரை பார்க்க சென்றான்..
அதற்குள் ஜானு உள்ளே செல்ல அவளுடன் ஆதவ்வும் உள்ளே சென்றான்..
ஜானு அவள் கரத்தை பற்றி,” வலிக்குதா” என்க
ஆரா இல்லையென தலையசைத்தாள்..
ஆராவின் கண்கள் சிவாவை தேட அதை புரிந்து கொண்ட ஆதவ்,”அவன் டாக்டரை பாக்க போயிருக்கான்டா வந்துருவான்” என்றான்..
அவள் அமைதியாக ஆதவ்வை பார்க்க அவனோ,”அவன் உனக்காக தான்டா துடிச்சு போயிருந்தான்.. இப்போ கூட அவனால தான் உனக்கு இப்படி ஆயிருச்சுன்னு குற்ற உணர்ச்சில உன்னை பாக்கவே தயங்கராண்டா இதை கூட அவனா சொல்லல நானா தான் புரிஞ்சுகிட்டேன்.. இரு நான் வெளிய போயி அவனை அனுப்பரேன்”என்றவன் ஜானுவை அழைத்துக்கொண்டு வெளியேறினான்..
அதற்குள் டாக்டரை சந்தித்த சிவா,”இஸ் ஷி ஆல்ரைட்”
டாக்டர்,”ஷி இஸ் மென்டல்லி குட்..பட் பிசிக்கல்லி நாளைக்கு ஸ்பெஷல் வார்டுக்கு மாத்ரதுக்கு முன்னாடி ஒரு கம்ப்ளீட் ஸ்கேன் பண்ணனும் அப்பறம் தான் மத்தத சொல்ல முடியும்.. பட் நத்திங் டு ஒர்ரி நாங்க நினைச்சதைவிட குயிக்கா தான் ரெகவரி ஆயிட்டு வராங்க.. அவங்க வில் பவர் கொஞ்சம் ஜாஸ்தி தான் மனசு தெம்பா இருந்தாலே உடம்பு சீக்கிரம் குணமாகிடும்” என்றார் புன்னகையுடன்..
சிவா,”தேங்க்ஸ் டாக்டர்..” என பார்மலாக கைகுலுக்கி விடைபெற்றான்…
ஆதவ் வெளியே வந்த சிவாவை பற்றி,”டேய் அவ உன்னை தான்டா தேடரா..சீக்கிரம் போயி பாரு என் தங்கச்சியை காக்க வைக்காத..”
சிவா புன்னகையுடன்,” அவ எப்பவுமே எனக்காக தான்டா காத்துருக்கா.. இப்பவே போயி பாக்கறேன்..” என்றவன் ஆதவ் பதில் கூறும் முன்னே ஐ.சி.யூ வில் நுழைந்தான்..
உள்ளே சென்றவன் அவளருகில் உள்ள சேரை இழுத்துபோட்டு அமர்ந்து அவளையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்..
ஆரா தான் பேச முயற்சித்தாள் அவள் சிரமப்படுவதை பார்த்தவன் அவள் வாய் மேல் கைவைத்து,” வேணாம் கண்ணம்மா வலிக்கும்..” என்றான்..
ஆரா,” நீங்க இருக்கும் போது வலிக்காது” என திக்கி திணறி சொன்னாள்..
சிவா,”ஏண்டி.. என்னை இவ்ளோ பயமுறுத்திட்டு இப்போ இப்படி சொல்றயா” என்றவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்து கொண்டான்..
அவன் செய்கையே அவளுக்கு உணர்த்தியது தன்னவன் தனக்காக எவ்வளவு துடித்திருப்பான் என்று..
ஆரா,”உங்களை அவ்ளோ சீக்கிரம் விட்டுட்டு போ..யிர..மா..ட்..டேன்.. “என அவள் வார்த்தையை முடிக்கும் முன்னே தன் இதழ் கொண்டு அவள் இதழை மென்மையாக அணைத்திருந்தான் அவனின் தவிப்பையும் காதலையும் அந்த இரு நிமிட இதழொற்றலில் அவளால் உணர முடிந்தது…
அவளை விட்டு நிமிர்ந்தவன் அவளை ஆழமாக பார்த்து,”இனிமே உன் வாயால அதை சொல்லாத தனு.. நான் இருக்கவரை உன்னை இங்க வச்சு பாத்துப்பேன்” என்று அவனின் இதயத்தை சுட்டிக்காட்டினான்…
விழிகளின் சங்கமிப்பும்
கரங்களின் வெம்மையும்
இதழ்களின் ஈரமும்
பறைசாற்றியது
மன்னவனின் மனதை….
மனம் மயக்கும் காதலின் அழகான தருணம்….