அவன் போனில் அதிர்ந்த குரலில் பேசிக்கொண்டிருக்க இங்கு இருவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..
எதிர்புறம் இருந்தது யார்?? எதற்காக இந்த அதிர்ச்சி?? என்ன நடந்தது?? இப்படியான கேள்விகள் அவர்களுக்குள்ளேயும் ஓடிக்கொண்டிருந்தது…
அதற்குள் போனை அணைத்த சிவா ஒரு வித இறுக்கத்துடனே ஆதவ்விடம் அவ பத்திரமா வீட்டுக்கு போயிட்டாளான்னு கேளு என்றவன் நெற்றியை நீவி கொண்டே யோசனையில் இருக்க அவன் புருவம் முடிச்சிட்டது..
ஆதவ் ஆரா வீட்டிற்கு சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு இவன் புறம் திரும்பி அவ பத்திரமா போயிட்டா.. இப்போ சொல்லு யார் கால் பண்ணா?? என்ன விஷயம்னு சொல்லு என்றான்…
சிவா,”ம்ம் சொல்றேன்… ஜானுவை வீட்ல விட்டுட்டு நம்ம கெஸ்ட் ஹவுஸ் போலாம் கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு” என்றான்..
சிவாவின் குரலில் இருந்த தீவிரம் இப்போது கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்றிருக்க ஆதவ்வும் சரி போலாம் என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டான்..
ஜானு,”அண்ணா ஏதாச்சும் ப்ராப்லமா??’
சிவா,”எஸ்.. கொஞ்சம் அபிசியல் வி வில் மேனேஜ்.. அப்பா கிட்ட நானே பேசிக்கறேன் நீ ஒன்னும் சொல்ல வேணாம்”
ஜானு,”சரின்னா.. பட் டேக் கேர்..”என்றவள் வீடு வந்தவுடன் கேட்க்கு வெளியே இறங்கிகொண்டாள்..
அவள் இறங்கியவுடன் காரை கிளப்பிக்கொண்டு கெஸ்ட் ஹவுஸில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன்.. சோபாவில் தொப் என்று அமர அவன் அமர்ந்த தோரனையே விஷயம் பெரிது என்று உணர்த்தியது..
ஆதவ்,” இப்போவாச்சும் சொல்லுடா.. மண்டை காயுது”
சிவா தன் தொண்டையை செருமிக்கொண்டு,”நம்ம டெக்ஸ்டைல் பிஸினசில் இன்னிக்கு ஒரு இம்போர்ட் ஷிப்மெண்ட் இருக்கே நியாபகம் இருக்கா???”
ஆதவ்,”அதான் ஷிப்மெண்ட் காலைலயே நம்ம கிட்ட இருந்து கிளம்பிடுச்சே”
சிவா,”அந்த ஷிப்மெண்ட் போன கண்டெயினரை ஆக்சிடெண்ட் பண்ணி உள்ள இருக்க மெட்டிரியல் எல்லாம் எரிச்சுருக்காங்க.. இதுல அந்த கண்டெயினரை ஊருக்கு வெளியிலே வச்சு ஓபன் பண்ணி பண்ணிருக்காங்க”
ஆதவ்,”யாருடா இதெல்லாம் பண்ணிருப்பா.. அந்த ட்ரைவர் கிட்ட கேட்டா தகவல் கிடைக்குமே”
சிவா,”டிரைவர் இஸ் மிஸ்ஸிங்…”
ஆதவ்,”சரி அதை அப்பறம் பாத்துக்கலாம்.. அந்த இம்போர்ட் ஷிப்பிங் கண்டிப்பா அவங்க சொன்ன டைக்குக்கு ரீச் ஆகணும்டா இல்லைனா பெனால்ட்டி போடுவானுங்க அதானே அவங்க அக்ரீமெண்ட்..”
சிவா,”இப்போதைக்கு எமர்ஜென்சி ஆர்டர் மட்டும் முடிச்சுட்டு பிலைட்ல தான் ஷிப்மெண்ட் பண்ணனும் இன்னும் 2 டேய்ஸ் தான் நம்ம கிட்ட இருக்கு”
ஆதவ் வேண்டியவர்களுக்கு போன் செய்து வேலையை தொடங்க சொல்லி அடுக்கடுக்கான கட்டளையை இட்டவன் சிவாவிடம் வாடா நம்ம பேக்டரிக்கு போவோம்.. இருவரும் பேக்டரி நோக்கி விரைந்தனர்…
அங்கு அந்த புதியவனின் சிரிப்பொலி அந்த அறை முழுதும் எதிரொலிக்க ருத்ரா அவனை அதிசயமாக பார்த்தாள்..
அவன்,”என்னடா இவன் வித்தியாசமா இருக்கானு பாக்குரியா.. இங்க பாரு” என தனது டேபின் தொடுதிரையை ஒளிரவிட அதில் சிவாவின் மெட்டீரியல் எரியும் காணொளி ஓடிக்கொண்டிருந்தது..
ருத்ரா,” வாவ்வ்வ்வ்.. செம்ம இது தான் நீ பண்ண பிளான் ஆ”
அவன்,”இது ஜஸ்ட் சாம்பிள் தான்.. அந்த சிவாக்கு இப்படி ஒரு எதிரி இருக்கானு தெரியணும் அதுக்காக தான்.. இதனால அவனுக்கு கொஞ்சம் தான் லாஸ்.. பட் ஹி வில் ரெகவர் இட்”
ருத்ரா,”என்னவோ போ நீ என்ன சொல்றனு கொஞ்சம் புரியற மாதிரியும் இருக்கு… புரியாத மாதிரியும் இருக்கு”
அவன்,”ருத்து பேபி இப்போதானே என் கூட சேந்து இருக்க உனக்கு புரிய இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.. ஆனா எப்படி தான் நீயெல்லாம் இவ்ளோ நாள் பிசினஸ் பண்றியோ?”
ருத்ரா,”ஹே சும்மா சும்மா அதே சொல்லாத..நான் உன் அளவுக்கு ஸ்மார்ட் இல்ல ஒத்துக்கறேன் போதுமா”என்றாள் கடுப்புடன்
அவன்,”அதான் தெரியுமே.. ஓகே ஜஸ்ட் என்ஜாய் தி மொமெண்ட்..”என்றவன் தன் அறையில் உள்ள விஸ்கி லாட்ஜை மிடறு மிடறாக பருகிக்கொண்டே கண்ணில் வெறியுடன் சிவாவின் புகைப்படைத்தை பார்த்துக்கொண்டிருந்தான்..
சிவாவும் ஆதவ்வும் டெக்ஸ்டைல் பேக்டரியில் அமர்ந்து ராப்பகலாக வேலை நடக்க அதை மும்மரமாக கவனித்து கொண்டிருந்தனர்..
அந்த ஷிப்மெண்ட்டை முழு மூச்சாய் முடித்துவிட்டே ஓய்ந்தனர்… இதற்கிடையில் இருவரும் தங்களது பெற்றோருக்கு தகவல் குடுத்து இருந்தனர்..
அந்த ஷிப்மெண்ட் முடித்துவிட்டே இருவரும் யோசனையுடன் இருக்க சிவா தான் பேச ஆரம்பித்தான்..
சிவா,”நாம கன்ஸ்ட்ரக்ஷன்க்கு குடுக்கற இம்பார்ட்டன்ஸ் இதுவரைக்கும் டெக்ஸ்டைல்க்கு குடுக்கலனு நினைக்கறேன்..அங்க எந்த பிரச்சனைனாலும் வர போற முன்னாடியே தடுக்கறோம் ஆனா இங்க இவ்ளோ வந்ததுக்கு அப்பறம் தான் நமக்கு விஷயமே தெரிஞ்சிருக்கு… ஷிட்” என்று தான் கையை மேஜையையில் குத்தினான்..
ஆதவ்,”ஹ்ம்ம் சரிடா.. ஆமா இதை செஞ்சது யாரு?? கண்டுபுடிச்சுட்டயா”
சிவா,”அதுக்கு தான் அப்பா அண்ட் மாமா ரெண்டு பேரையும் வர சொல்லிருக்கேன்”
ஆதவ் ஆமாண்டா எனக்கென்னமோ இது நம்ம தொழில் தொடங்குன அப்பறம் வந்த பிரச்சனைனு தோணல நம்ம அப்பாங்க காலத்துல இருந்து தொடர பிரச்சனையா கூட இருக்கலாம்..
சிவாவும் அவன் கூற்றை சரியென்று தலை அசைத்து ஆமோதித்திருந்தான்.. பின்னே அவர்களின் எதிரிகளின் ஒவ்வொரு அசைவும் அறிந்து வைத்திருந்தானே இருந்தும் இந்த சம்பவம் அவனை உலைகலனாய் கொதிக்க வைத்து கொண்டிருந்தது..
ஆதவ்வும் அவனின் நிலையை அறிந்தே,”டேய் பிசினஸ்னு வந்துட்டா முகமறியாத எதிரிகள் கூட நேரம் கிடைக்கும் போது அடிக்க தான் செய்வானுங்க.. அதுக்காக நீ இப்படி இருந்தா எப்படி டா.. சூன் இட் வில் பி ஆல்ரைட் சீயர் அப் மேன்..” என்றான்..
சிவா,”என்னோட எதிரிங்க தாண்டா என்னோட பலம்.. இன்னும் சொல்லபோனா நம்மள வளர்த்துவிட்டதும் அவங்க தான் ஆனால் என்னோட கவலையெல்லாம் இப்படி ஒருத்தன் இருப்பான்னு தெரிஞ்சும் அவன் யாருன்னு தெரிஞ்சுக்காம விட்டுட்டமோன்னு தான்”
ஆதவ்,”நாமளும் அவனை தேடிட்டு தான் இருக்கமேடா.. ஒருவேளை இதனால நமக்கு நஷ்டம்னு யோசிக்கரையா இருந்தாலும் அவ்ளோ ஒன்னும் பெரிய அளவுக்கு இல்லையேடா”
சிவா,”அதை பத்தி நான் யோசிக்கல இதுல இன்னொரு விஷயம் கவனிச்சையா???செய்யணும்னு நினைச்சவன் பெருசா செய்யாம சின்னதா செஞ்சுருக்கான்னா அவன் இதைவிட பெருசா ஏதோ செய்ய போரான்னு நமக்கு ஹிண்ட் குடுத்துருக்கான்”
இருவரும் தங்களது தந்தைகளை எதிர்பார்த்து காத்திருக்க அவர்களும் வந்தனர்..அவர்களுக்கு முன்பே விஷயம் அறிந்தும் பசங்க அதை சரிசெய்திருப்பார்கள் இருந்தும் வேறு விஷயத்திற்காக தங்களின் வரவு என்பதையும் யூகித்தே வந்திருந்தனர்…
ராமச்சந்திரன்(ஆதவ் அப்பா)மற்றும் மோகன்ராஜ்(சிவா அப்பா) இருவரும் உள்ளே நுழைய அவர்களுக்காகவே காத்திருந்தவன்..
உட்காருங்க அப்பா, உட்காருங்க மாமா கொஞ்சம் முக்கியமான விஷயமா தான் உங்களை வர சொன்னோம் என்று கூற அவனை தொடர்ந்து ஆதவும் அவர்கள் பேசிய விஷயத்தை கூறினான்..
சிவா,”அப்பா.. நாம தொழில் தொடங்குனப்ப இருந்து நமக்கு போட்டியா இருந்தவங்க.. இப்போ அவங்க மார்கெட்ல இருக்காங்களா இல்லையானும் சொல்லுங்க..”
ஆதவ்,”ஒருவேளை நம்ம வந்ததுக்கு அப்பறம் அவங்க தொழிலை விட்டு போயிருந்தாலும் சொல்லுங்க”
சிவாவின் அப்பா தங்களின் தொழில்முறை போட்டியாளர்கள் தங்களை மிரட்டி இந்த தொழிலுக்கு வர கூடாது என்று சொன்னவர்கள் சில பேரை கூறினார்..
சிவா
அவர்கள் கூறியதை வைத்து அவனுக்கு நெருடலாக பட்ட ஒரு பெயர் “சுப்ரமணியம் டெக்ஸ்” மனதில் அதை குறித்துக்கொண்டு அவர்களிடம் மேலும் சில தகவல்களை பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தான்..
சிவா அப்பா,” கொஞ்சம் கவனமா இருங்கப்பா.. எப்போ என்ன வேணும்னாலும் கேளுங்க.. “
ஆதவ் அப்பா,” மோகன் சொல்றது சரிதான்.. இன்னும் எங்களுக்குள்ளயும் பிசினஸ் மேன் இருக்காங்க பா”
சிவாவும் ஆதவும் சிரித்து விட்டு நீங்க வளர்த்து விட்டவங்க தான் உங்க முன்னாடி நிக்கராங்க..
எங்களால முடியாதுன்னு வந்தா உங்களுக்கு என்ன மரியாதை நாங்க பாத்துக்குறோம் என்றான் ஆதவ்.. சிவாவும் அவன் தோள் மேல் கைபோட்டு அவனை அணைக்க தந்தையர் இருவரும் புன்னகைத்துவிட்டு சென்றனர்..
அதை தொடர்ந்து ராம்க்கு அழைத்தவன் ஒரு சில இண்ட்ஸ்ட்ரிஸ் பெயர்களை கூறி அதை பற்றிய தகவல்களை சேகரிக்குமாறு கூறியவன் கூடவே சுப்ரமணியம் டெக்ஸ் பற்றி உடனே தகவல் வேண்டுமென்று அவனை பணித்தான்..
அடுத்த இரண்டு மணிநேரத்தில் சிவாக்கு அழைத்து ராம் சில தகவல்களை தர
போன் ஸ்பீக்கரில் இருக்க ஆதவ்வும் அதை கேட்டுகொண்டிருந்தான்..
அதை கேட்டடுக்கொண்ட சிவா போனை அணைத்துவிட்டு
“நிஷாந்த் ஐயம் கமிங் பார் யூ” என்றான்..
அந்த புதியவன்,”சிவா…. ஐயம் வெயிட்டிங் பார் யூ…”
இருவேறு பலம் பொருந்தியவர்கள் மோதும் போது ஜெயிக்க போவது யார்????