என்னவனின் நெஞ்சுக்குழி
அணைப்பு போதும்
மனதின் ஆயிரம்
ரணங்களையும்
இமைப்பொழுதில் மறக்க
உன் ஒற்றை அணைப்பில்
என் ஒவ்வொரு அணுவும்
உன் மீது நேசம் கொள்ளுதடா
உன் ஆண்மையின் அழகு
அன்பெனும் ஆளுமையே
மங்கையவள்
பிறை நுதலில்
மன்னவனின்
அதரங்கள்
தடம் பதிக்க
அவளவனின்
இதயமும்
உரைக்காத
காதலை
மொழிந்துவிட்டே
செல்கிறது
இதழொற்றலினூடே
ஆதவின் மீது சாய்ந்து கொண்டு ஜானு ஜூஸ் குடித்து கொண்டு இருந்தாள்.. அவள் குடித்து முடித்தவுடன் க்ளாசை வாங்கி அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன் ஜானுவை தோளோடு அணைத்து அவளின் உச்சியில் இதழ் பதித்தான்… அது சில நொடிகளே என்றாலும் அவன் ஒவ்வொரு அணுவும் அவளிடம் காதலை சொன்ன தருணம்.. அதுவும் வாய்மொழி இல்லாமல் செய்கையிணூடே…
ஜானுவோ அவனின் செய்கையில் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.. அவளை விடுத்து அருகில் இருந்த கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவன்.. அவளின் கையை பற்றி ஜானு,” நான் ஒன்னு சொன்னா கேப்பியா”என்றான்..
ஜானு,”ம்ம் சொல்லுங்க”
ஆதவ்,”என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோ ஜானு… நான் ஏன் உன் காதலை வேணாம்னு சொல்றேன்னு.. எனக்கு சிவா தான் முதல்ல அவன் வாயில இருந்து ஏண்டா நீ இப்படி பண்ணனு ஒரு வார்த்தை கேட்டா என்னால தாங்கிக்க முடியாது ஜானு.. அது நட்புக்கு செய்யற கலங்கம்…
ஸ்கூல்ல இருந்தே அவனும் நானும் தான் ரொம்ப க்ளோஸ் கிட்ட தட்ட 22 வருஷ பிரண்ட்ஷிப்.. அது அவன் நம்பிக்கை வச்ச நம்மளால கெட வேணாம்… “என்றான்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஜானு,”சரி இப்போ என்ன சொல்ல வரீங்க”
ஆதவ்,”நமக்கு என்ன நடக்கும்னு இருக்கோ அது கண்டிப்பா நடக்கும்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் தான் உனக்குன்னு இருந்தா அதை யாரலையும் மாத்த முடியாது.. நீ இப்போதைக்கு உன் படிப்பை முடிக்கற வழிய பாரு..என்னை மீறி என் கல்யாணம் நடக்காது உனக்கும் படிச்சு முடிக்கற வரை டைம் இருக்கு எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத… முக்கியமா இன்னிக்கு பண்ண மாதிரி பண்ணி எனக்கு குற்ற உணர்வை வர வச்சிராத…. என் ஜானு புரிஞ்சுப்பானு நம்பறேன்…” என்று அவள் கையில் ஒரு அழுத்தத்தை கொடுத்து விடுவித்தான்..
அந்த அழுத்தமே அவளுக்கு பெரும் நம்பிக்கையை தந்தது.. ஜானு புன்முறுவலோடே என் ஆதவ்வை எப்பவும் காதலுக்கும் நட்புக்கும் நடுவுல குற்றவாளி ஆக்கிட மாட்டேன்… அண்ட் எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு அதுக்கும் மேல உங்க மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு என தவிர வேற யாரயும் உங்க லைப்ல அனுமதிக்க மாட்டீங்கன்னு.. …அதெல்லாம் விட நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று சிரித்துவிட்டாள்…
அவள் கேலி செய்கிறாள் என்று உணர்ந்த ஆதவ்வோ அவள் தலையை செல்லமாக தட்டி ,”ஹே வாலு… கொஞ்சம் தெம்பு வந்த உடனே சேட்டை ம்ம்ம்ம்… சரி ரெஸ்ட் எடு” என்று உரைத்து விட்டு சிவாவிற்கு கால் செய்வதற்காக மீண்டும் மொபைலை எடுத்தான்…
அதற்குள் சிவா உள்ளே வர நுழையும் போதே ஒரு வித பதட்டத்தோடே வந்தான்… ஆதவ் ஒன்னும் இல்லடா சாதாரண மயக்கம் தான்னு சொல்லும் போது கூட நீ பக்கத்துலயே இருடா நான் வந்தரேன்னு சொன்னவனாச்சே…. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடத்தானே செய்யும்…
உள்ளே நுழைந்தவுடன் ஜானு என்னடா ஆச்சு என்று கேட்டுக்கொண்டே சிவா வர.. ஆதவ் சிவாவை பிடித்து டேய் அவளுக்கு ஒன்னும் இல்ல சாப்பிடாம இருந்ததுனால மயங்கிட்டா இப்போ நார்மல் ஆயிட்டா நான் தான் சாப்பிட வச்சேன்.. ஆமா நீ ஏன் போன் எடுக்கல.. இனியன் உனக்கு தான் பர்ஸ்ட் போன் பண்ணிருக்கான் ஆனா நீ எடுக்கலனு தான் எனக்கு போன் பண்ணிருக்கான்….என்று கூடுதல் தகவலை தர அப்போது தான் மொபைல் எடுத்து பார்த்தான்.. ஆம் ஆதவ் போன் பண்ணும் போது கூட அட்டெண்ட் செய்து விஷயத்தை கேட்டவுடன் அப்படியே வந்து விட்டான்…
பின்பு ஜானுவை பார்த்து அருகில் அமர்ந்து அவளது தலையை வாஞ்சையாக தடவி குடுக்க அவளோ ஒன்னும் இல்ல அண்ணா.. நான் நல்லா தான் இருக்கேன் நீ பயப்படாதே… என்று சிவாவிடம் கூறிக்கொண்டிருக்க சிவாவிற்கோ தன் தங்கையை சரியாக கவனிக்க தவறிவிட்டேனோ என்ற குற்றவுணர்வு மேலோங்க அதை பார்த்த ஜானுவோ ஆதவ்வை நோக்கி கண்ணசைக்க… அதை புரிந்து கொண்ட ஆதவ்… சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு சரிடா உங்க பாசமலர் படம் ஓட்டுனதெல்லாம் போதும்…நீங்க பண்ற அலப்பறைய பாத்தா எனக்கும் தங்கச்சி இல்லயேனு பீல் ஆகுதே என்று நடிகர் திலகம் மாடுலேசனில் சொல்ல அண்ணன் தங்கை இருவரும் உடனே சிரித்து விட்டனர்…
ஆதவ் சலித்துக்கொண்டே டேய் உங்களை சிரிக்க வைக்க நான் இவ்ளோ பெர்பார்ம் பண்ண வேண்டி இருக்கே என்ன கொடுமை டா இது…என்று மேலும் அந்த சூழ்நிலையை இலகுவாக்கி விட்டிருந்தான்…
அதே நேரத்தில் இனியனும் ஜானுவின் பெற்றோருடன் வர அவள் சிரிப்பதை பார்த்தவுடன் பிரச்சனை பெரிதல்ல என்று புரிந்து கொண்டு அவளருகில் வந்த அவளது தந்தை ஏன்டா உடம்பை கூட சரியா கவனிக்காம விட்டுட்ட என்று கவலையுடன் கேட்க..
ஜானுவோ,”சாரிப்பா.. இனிமே கவனமா இருக்கேன்.. ” என்றான்..
அவள் தந்தை ஆதூரமாக அவள் தலையை தடவி கொடுக்க அவள் அன்னை அன்னை அவள் கையை பற்றி இருக்க அண்ணன் அருகில் இருக்க ஜானு தன் தந்தையின் மீதே தலை சாய்த்திருந்தாள்..
பெண்பிள்ளைகள் எத்தனை பெரியவளாயினும் தன் தந்தைக்கு இளவரசி தான் என்ற கூற்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது…
ஆதவிற்கோ இத்தனை பேரின் மொத்த அன்பையும் ஈடு செய்யும் விதமாக தன் காதல் இருக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்து கொண்டான்…
இனியன்அங்கிருந்த சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி, ஆதவ்விடம் டேய் அண்ணா என்னைக்காச்சும் எனக்கு இப்படி நீ பார்த்து இருக்கியா என்று வம்பிழுக்க… ஆதவ்வோ நீ வேணாம் மயக்கம் போட்டு காமி நான் உன்னை எப்படி எழுப்புறேன்னு பாரு என்று கையை முறுக்கி காமிக்க இனியனோ வேண்டாம் டா நல்லவனே உனக்கு தம்பியா இருந்து நான் படற பாடே போதும்.. இதுல மயக்கம் வேற போடணுமா என்ன?? என்று கேட்டதில் அனைவருமே சிரித்துவிட்டனர்…
ஆதவ் சிவாவிடம் சரி மச்சான் நான் ஏற்கனவே பில் செட்டில் பண்ணிட்டேன்.. ட்ரிப்ஸ் முடிய போகுது டாக்டரை பாத்துட்டு போலாம் என்க… இனியன் சென்று டாக்டரை அழைத்து வர அவளை பரிசோதித்த டாக்டர்.. ஷி இஸ் நார்மல்..
கொஞ்சம் ஹெல்தி புட் குடுங்க.. இந்த டேப்லெட்ஸ் 3 டேஸ் குடுங்க என்று ட்ரிப்ஸை கலட்டிவிட்டு சென்றார்…
ஆதவ் சிவாவிடம் மச்சான் நான் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று விடைபெற சிவாவின் பெற்றோர்.. ஆதவ் வீட்டுக்கு வாயேன் என்று அழைக்க… ஆதவ் இல்ல அத்தை,மாமா நான் வீட்டுக்கு போயிட்டு ஈவினிங் வரேன் அம்மாவும் ஜானுவை பாக்கணும்னு சொன்னாங்க என்றான்…
ஆதவ்,”ஹே வாலு…. உடம்பை பாத்துக்கோ…”என்று உரைத்துவிட்டு சரிடா ஈவினிங் வரேன் என்று சிவாவிடமும் அவன் பெற்றோரிடமும் விடைபெற்று மீண்டும் தன்னவளிடம் விழியால் பெற்றுவிட்டே சென்றான்….
இவர்களும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்று ஜானுவை மறுபடியும் சாப்பிட வைத்தே ரெஸ்ட் எடுக்க அவளின் அறையில் விட்டார் அவள் அன்னை….
மாலை வேளையில் ஆதவ் குடும்பத்துடன் சிவாவின் வீட்ற்கு வர…
என்ன ஜானு உடம்பை கூட பாத்துக்காம இப்படி பண்ணிட்ட என்று அங்கலாய்க்க அப்டி சொல்லுங்க அண்ணி எப்போ பாத்தாலும் ஏதாச்சும் சொல்லி சாப்பிடாம ஓடிரா என்று எடுத்து கொடுத்தார் ஜானுவின் அன்னை லட்சுமி..
ஜானு,”அம்மா போதும் ஏற்கனவே நிறைய டைம் சொல்லிட்டிங்க… இப்போ அத்தையையும் கூட சேத்துக்குறீங்க..என்னால முடியல இனிமே இதுக்காகவாச்சும் ஒழுங்கா சாப்பிடறேன்”என்று சொன்ன பிறகே அவளை விட்டனர்…
ஆதவ்,”அம்மா, அத்தை எனக்கென்னமோ அவ காலேஜ் கட் அடிக்கறதுக்காக தான் பிளான் பன்றாளோனு தோணுது” என்க.. ஜானு அண்ணா இங்க பாருங்க என்று சிவாவை அழைத்து சொல்ல…
விடுடா சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான் என்றான் ஆதவ்வும் ஆமா மேடம் நான் சின்ன பையன் என்ன மன்னிச்சுறுங்க என்று சொல்ல.. ஜானுவோ அந்த பயம் இருக்கட்டும் என்று வக்கனைத்துவிட்டு தன் அத்தையுடன் சென்று அமர்ந்தாள்…
ஆதவின் தந்தையும் அவளை நலம் விசாரித்துவிட்டு தன் நண்பனான சிவாவின் தந்தையிடம் அமர்ந்து பழங்கதைகளை பேசி கொண்டிருந்தனர்…
சிவாவும் ஆதவ்வும் இனியனும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து வெட்டி கதை பேசி கொண்டிருந்தனர்…
லட்சுமிமா அனைவருக்கும் டீ கொண்டு வந்து குடுக்க.. ஜானுக்கு மட்டும் ஹார்லிக்ஸ் தர அவள் மூஞ்சு அஷ்ட கோணாலகியது… பின்ன அவள் டீ ப்ரியை சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவாள் டீ இல்லாமல் இருக்க மாட்டாள்.. எப்பாவச்சும் காபி கூட எடுத்துக்குவா ஆனா இந்த ஹார்லிக்ஸ் எல்லாம் அவளுக்கு ஆகவே ஆகாது..
ஆதவ் அவள் மூஞ்சியை பார்த்து சிரித்துக்கொண்டே டீ குடித்து கொண்டிருந்தான்.. அவளோ ஹார்லிக்ஸ் குடிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்க ஆதவ் விழியாலே அவளை மிரட்டி குடிக்க வைத்து கொண்டிருந்தான்… ஜானு இவரு பெரிய சண்டியரு கண்ணுலையே மிரட்டராறு என்று முணுமுணுத்து கொண்டே அதை குடித்து முடித்தாள்..
ஆதவின் மனமோ,”டேய் ஆதவ் இவளை வச்சுக்கிட்டு உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்” என சொல்லிக்கொண்டிருந்தது….
ஆதவ் குடும்பமும் இரவு உணவை முடித்து கொண்டே அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாயினர்…வழக்கம் போல் தன்னவளிடம் விழியிலேயே விடைபெற்று வெளியில் வந்தான்…
அப்போது சிவா,”டேய் ஆதவ் ஆர் யூ ஆல்ரைட்.. நாளைக்கு ஆபீஸ் வருவியா???”
ஆதவ் சிவாவை அணைத்து,”ஐயம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்… கண்டிப்பாக வருவேன்” என்றான்..
அன்றைய பொழுது அவ்வாறே முடிய
படுக்கையில் இருந்த ஜானுவுக்கு ஆதவின் நினைப்பே… காதலை இறுதி வரை சொல்லாமல் செய்கையிலேயே சொன்னவன் அல்லவா… காதலை ஒருவன் இவ்வாறு கூட உரைக்க முடியுமா என்ற சிந்தனையில் லயித்திருந்தாள் அவள்…
அங்கோ ஆதவிற்கும் ஜானுவின் நினைவுகளே….
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிராய் வந்தாள்
மலையென்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றிபொட்டில் என்னை உருட்டி வைத்தாலே…
காதலில் நினைவுகள் எத்தனை சுகமோ….