காரில் ஏறிய ஜானுவும் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க சிவா காரை ஆதவ் வீட்டின் முன் நிறுத்தியவுடன் ஜானுவுக்கு ஆதவ்வை பாக்க போறோம் என்றவுடன் மகிழ்ச்சி வர அது ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை அடுத்த வந்த தகவலை கேட்டவுடன்….
ஆம் சிவா தான் ஆதவ் வீட்டுல அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு பாக்கராங்க அவனை கண்விண்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணறதுக்கு சம்மதம் வாங்க தான் வந்தேன்…
நீ இனியன் கூட காலேஜ் போயிடரையா டா… என சிவா ஜானுவை கேட்க வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாக தந்தாள்…
இருவரும் ஒரு சேர ஆதவ் வீட்டினுள் உள்ளே வரும் போதே விஷயத்தை கூறியிருந்தான் சிவா… அதை கேட்ட ஜானுவிற்கோ அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பில் விழுந்த புழு போல் துடித்துக்கொண்டிருந்தாள்…
ஆதவ் அம்மா,”ஜானு,சிவா வாங்கடா… இந்தாங்க காபி குடிங்க”என்று அவர்களிடம் குடுத்து விட்டு சிவாவிடம் ஆதவ் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டீங்கறான் என்று நடந்தவை அனைத்தையும் கூறிவிட்டு நீ தான் சிவா அவனை சம்மதிக்க வைக்கணும் வந்துருக்க வரன் ரொம்ப நல்ல இடம் பா… ஆதவ்க்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் என்று பொண்ணோட புகைப்படத்தையும் குடுக்க,உள்ளுக்குள் நொறுங்கியே போனாள் ஜானு…
ஜானுவுக்கு அந்த சூழ்நிலையில் தன்னை மீட்டெடுப்பதே பெரும் கஷ்டமாகி போனது..கண்ணுக்குள் இருந்த கண்ணீர் வெளிவர ஆயத்தமாக அதை கட்டுப்படுத்தியவள்… அண்ணா நேரமாச்சு நான் கெளம்பனும் எனும் போதே இனியன் கீழே வர அவனை அழைத்து கொண்டு கல்லூரிக்கு சென்றுவிட்டாள்.. இனியன் முன்பும் வந்த கண்ணீரை அடக்குவதற்கு பெரும் பாடுபட்டு காலேஜ் வந்து சேர்ந்தாள் ஜானு..
கல்லூரிக்குள் நுழைந்து ரெஸ்ட்ரூம் சென்றவள் எவ்வளவு நேரம் அழுது கரைந்தாள் என்பதே தெரியாமல் நிற்க காலேஜ் பெல் சத்தத்தில் தன்னை மீட்டவள் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி தன்னை சமன்படுத்தியிருக்க இருந்தும் தன்னை மீறி வரும் கண்ணீரையும் துடைத்து கொண்டு தான் இருந்தாள்..
இங்கோ ஆதவ்விடம் சிவா பேச ஆரம்பித்திருந்தான்.. “மச்சான் இப்போ என்னடா பிரச்சனை உனக்கு ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிற அம்மா ரொம்ப பீல். பண்ராங்க டா” என்றான்..
ஆதவ்,”இல்லடா எனக்கு விருப்பம் இல்ல இன்னும் ஒரு வருஷம் போகட்டும் என்றான்” ஜானுவின் படிப்பை எண்ணியே இவ்வாறு கூறியிருந்தான் என்பதை அவனே உணரவில்லை…
சிவா,”மச்சான் இவ்ளோ வருஷம் உன் கூட இருக்கேன்.. உன் முகத்துல இருக்க வெறுமை நீ ஏதோ என் கிட்ட மறைக்கிறனு சொல்லுதே டா”என்று பட்டென கேட்டுவிட்டான்…
ஆதவ் என்ன சொல்வதென்பது அறியாமல் மேலோட்டமாக,”மச்சான் என்ன சொல்றதுன்னு தெர்ல.. என்னால யாரும் காயப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. அதனால இப்போதைக்கி இந்த கல்யாண பேச்சு வேணாம்.. நேரம் வரும் போது எல்லாத்தயும் உனக்கு சொல்றேன் ஆனா???” என்று நிறுத்தினான் ஆதவ்..
சிவா,”டேய் என் ஆதவ்வை பத்தி எனக்கு தெரியும் அவன் காரணம் இல்லாம ஏதும் பண்ணமாட்டானு என் கிட்ட கூட சொல்ல முடியாத பிரச்சனை அப்டிங்கும் போதே உன் மனசு எவ்ளோ வலிக்கும்னு எனக்கு புரியுது..
நான் உன்ன ஏதும் கேக்க மாட்டேன் அதே சமயத்துல எப்பவும் நான் உன் கூட இருப்பேங்கிறதையும் மறந்துராத…” என்றான்.
ஆதவ்வும் புன்னகைத்துவிட்டு சிவாவை கட்டிக்கொண்டு தேங்க்ஸ் மச்சான் எங்க நீயும் அம்மா மாதிரி புரிஞ்சுக்காம போய்டுவயோனு நினைச்சேன் என்றவன்.. ஆமா நீ எப்படி இவ்ளோ காலைல இங்க வந்த அம்மா என் கிட்டையே இப்போ தான் சொன்னாங்க அதுக்குள்ள நீ எப்படி என்று புருவம் தூக்கி வினவ சிவா தான் ஜானுவுடன் வந்த அனைத்து கதையும் சொல்லி முடித்தான்…
ஜானுவும் வந்தாள் என்றவுடன் அவளின் நிலை அறிந்து பெட்டில் விரக்தியாக அமர்ந்தவன் சிவாவை பாத்து,” மச்சான் நான் இன்னிக்கு ஆபீஸ் வரல மூட் அப்செட்டா இருக்கு நீ பாத்துகிறாயா”என்றான்..
சிவா,”எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடா..எவரிதிங் வில் பி ஆல்ரைட் டேக் கேர்டா நான் கெளம்பறேன் பை…”என்று வெளியே வந்தான்…
வந்தவன் நேராக ஆதவ் அம்மாவிடம் சென்று,”அத்தை அவனுக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. அவன் மனசுல ஏதோ இருக்கு அது என்னனு தெரிஞ்சுட்டு தான் அடுத்த முடிவு எடுக்க முடியும்.. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லாத்தையும் நான் பாத்துகிறேன்” என்று ஆறுதல் அளித்துவிட்டு ஆபீஸ் சென்றுவிட்டான்…
ஆபிசில் நுழைந்தவனுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்க ஆதவ்வும் இல்லாமல் போக ஒரே ஆளாக எல்லாத்தையும் முடிக்க பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்…இதற்கிடையில் எதிரிகளையும் ராம் பிரகாஷ் மூலம் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான் என்பது அவன் எதிரிகளே அறியாதது…
இதற்கிடையில் காலேஜில் ஜானுவும் அழுது அழுது சோர்ந்து போய் இருந்தாள்..
காலையில் கடமைக்கென சாப்பிட்டு இருந்தவள் அதன் பின் பச்சைதண்ணி கூட அவள் அருந்தவில்லை அதில் மொத்தமும் சோர்ந்தவள் மதியம் போல் கல்லூரியிலேயே மயங்கி விழுந்தாள்..
இனியன் வந்து அவளை எழுப்பி பார்த்தவன் அவள் எழாமல் போக அவளை தாங்கி வந்து அமர வைத்தவன் சிவாவிற்கு கால் செய்ய வேலை பளு அதிகமாக இருந்ததனால் அவனால் எடுக்க முடியவில்லை…
இனியனும் தாமதிக்காமல் ஆதவிற்கு தகவல் தர மறுபுறம் ஜானு மயங்கிவிட்டால் என்பதுமே காரை புயல் வேகத்தில் கெளப்பிக்கொண்டு கல்லூரியை அடைந்து அவள் இருக்கும் இடத்திற்கு அருகில் காரை நிறுத்திவிட்டு ஓடி வந்தான்…
அவளின் சோர்ந்த தோற்றம் இவனுக்கு தாருமாறான சிந்தனையை தூண்ட பயத்துடன் அவளை தூக்கியவன் இனியா நீ காரை ஸ்டார்ட் பண்ணு என்று கட்டளையை பிறப்பித்தவன் பின்னாலேயே அவளை அள்ளி தூக்கிக்கொண்டு ஓடினான்..முன்னிருக்கையில்
இனியன் காரை ஸ்டார்ட் பண்ண பின்னிருக்கையில் ஆதவ் ஜானுவுடன் அமர்ந்தான்…
அடுத்த 15 வது நிமிடத்தில் கார் மருத்துவமனையை அடைய ஜானுவை அட்மிட் செய்தவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்றிருந்தது ஒரு வேளை அவள் தப்பான முடிவு எடுத்துவிட்டலா என்று… சற்று நேரத்தில் டாக்டர் வெளியே வர வேகமாக எழுந்த ஆதவ்,”டாக்டர் ஜானுவுக்கு என்னாச்சு.. இப்போ எப்படி இருக்கா அவளுக்கு ஒன்னுமில்லையே”என்று அடுத்தடுத்து கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தான்
டாக்டர்,”காம் டவுன் ஆதவ்.. அவங்க ஒரு வாரமா பெருசா ஒன்னும் சாப்பிடல.. அவங்க இன்டேக் ரொம்ப கம்மி அதான் டீஹைட்ரேட் ஆயிடுச்சு.. ரொம்ப வீக் ஆயிட்டாங்க அதான் முகத்துல தண்ணி தெளிச்சும் கூட எழுந்திரிக்க முடியல.. இப்போ ட்ரிப்ஸ் போட்டிருக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவாங்க டேக் கேர்”என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..
இப்போது தான் ஆதவிற்கு மூச்சே சீராக வந்தது.. உள்ளே சென்று அவளருகில் அமர்ந்தவனுக்கு எந்த சிந்தனையும் ஓடவில்லை அவள் கண் விழிப்பதற்காக மட்டுமே காத்து இருந்தான்..
அடுத்த கால் மணி நேரத்தில் கண் விழித்தவள் அருகில் ஆதவ்வை கண்ட உடன் விழியில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.. அந்த நேரம் உள்ளே வந்த இனியனை பார்த்து டேய் அவ ஒழுங்கா சாப்பிடாம இருந்ததால் தான் மயங்கிட்டாலாமா நீ போய் அவளுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு அப்டியே ஜூஸும் வாங்கிட்டு வா என்று அனுப்பி வைத்தான்..
ஆதவ் இனியனை அனுப்பி விட்டு அவள் கைகளை பற்றியவன்,” ஏண்டி இப்படி இருக்க என்று கேக்க அவள் கண்ணீரை மட்டுமே பதிலாக தர அவள் கண்ணீரை உணர்ந்தவன்.. நான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் போதுமா?? என்ன மீறி ஏதும் நடக்காது தேவை இல்லாம ஏதும் போட்டு குழப்பிக்காத உனக்கு நான் தான்னு யாராலும் அதை மாத்த முடியாது புரியுதா”என்றான்..
கையில் உணவுடன் வந்த இனியனிடம் அதை வாங்கி வைத்தவன் ,”டேய் அவளை நான் சாப்பிட வைக்கறேன் நீ போய் அத்தை மாமாவை கூப்பிட்டுவா போன் பண்ணா ரொம்ப பதரிடுவாங்க அதனால தான் உன்ன போக சொல்றேன் நான் சிவாவை வர சொல்றேன்” என்று அவனை அனுப்பினான்..
ஆதவ் ஜானுவை தூக்கி சாய்வாக அமர வைத்தவன் அவளிடம் சாப்பிட சொல்ல அவளோ மறுப்பாக தலையசைத்தாள் பின்னே அவன் பேசியது அனைத்தும் அவளை சமாதானபடுத்த தான் என்று நினைதிருந்தாள்.. இவனோ கோபமாக ஏண்டி என்றான்.. அவன் முகத்தை பார்க்காமலேயே பசிக்கல என்றாள்..
ஆதவ்,”ஜானு ஏண்டி நீ இப்படியே இருந்து என்ன உயிரோட கொல்ற.. என்றவன் அவனே பிரித்து வைத்திருந்த உணவை ஊட்ட ஆரம்பித்தான்.. அவனின் மிரட்டலில் குழந்தை போல் அவன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. சாப்பாடு ஊட்டியவன் கூடவே ஜூஸை தர இல்லைங்க வேணாம் என்றவளை தன் மீதே சாய்த்து ஜூஸையும் குடிக்க வைத்தான்..
ஆதவ் அவளை பாத்து புன்னகைத்து விட்டு எப்படி இருந்த உன்ன இந்த மாதிரி ஆகிட்டேன்ல என்றான் குற்றஉணர்வுடன்… அவனின் மன ஓட்டத்தை அறிந்த அவள் நான் உங்களுக்கு தான் என் வவீட்டு ஆளுங்க சம்மதத்தோட உங்களை கல்யாணம் பண்ணி காட்டறேன் என்றாள்.. ஆதவோ சிரித்த முகமாகவே அவளை
பார்த்து கொண்டிருந்தான்..பழைய ஜானு திரும்பி கொண்டிருக்கிறாள் என்பதே அவனுக்கு பெரும் நம்பிக்கையை தந்தது.
ஜானுவின் கல்யாண கனவு ஈடேறுமா??
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…