தன் ஆபிஸ் விட்டு வெளியே சென்ற அபய் நேராக அவன் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றிருந்தான்… அங்கு அவனுடைய நண்பன் பாலாஜியும் (இனி கதை முழுவதும் பாலா என்ற பெயரில் வருவான்) வந்திருந்தான். பாலாவும் ஊட்டியில் ஹோட்டல் பிசினஸ் பண்ணிட்டு இருக்கவன்….ரெண்டு பேரும் ஒரே கான்வென்டில் ஒன்றாக படித்தவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னனா இருவருமே பாசத்துக்காக ஏங்கி தவிச்சவங்க தான்….
பாலாவின் அம்மா அவனுடைய சிறு வயதிலேயே இறந்துவிட அவனுடைய அப்பா மறுமணம் செய்து கொண்டு ஃபாரினில் செட்டில் ஆகிவிட மகனுக்காக பணம் மட்டுமே அனுப்புவார்.. பள்ளி பருவம் முதலே பாசம் அறியாமலேயே பணத்தின் நிழலில் வாழ்ந்தவன்.
அபய் மற்றும் பாலா எப்பவுமே குடிக்க மட்டும் ஒண்ணா தான் இருப்பாங்க மத்தபடி பாலா வேற விஷயத்துல சேர மாட்டான்.
ரெண்டு பேரும் பாட்டிலை ஓபன் பண்ணி அவங்க பார்ட்டியை ஆரம்பிச்சுருந்தங்க…
அபய்,”மச்சான் இன்னிக்கி ஒரு பொண்ணு இன்டெர்வியூக்கு வந்துருந்தாடா ஒரு பட்டிக்காட்டு லுக்ல அவளை வேலையில ஜாய்ண்ட் பண்ண சொல்லிட்டேன்”
பாலா,”டேய் அது உன் பி.ஏ க்கான இன்டெர்வியூனு சொன்னல அப்பறம் எப்படி டா அவளை எடுத்த”
அபய்,”பட்டிக்காட்டு லுக்கு தான் எவ்ளோ நாள் தான் இந்த மாடர்ன் பீசுங்களை பாக்கறது அதுக்கு இது கொஞ்சம் தேவலாம்னு தான் ஒரு 3 மாசம் டா அப்பறம் போர் அடிச்சவுடனே தூக்கிறலாம்னு கண்ணடிச்சு சொல்ல”
பாலா,”ஹே இதுக்கு மேலயாச்சும் ஒழுங்கா இருடா.. பாட்டி வேற உனக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க”
அபய்,” அட போடா வாழ்க்கையை நமக்கு புடிச்ச மாதிரி வாழணும் டா….”
பாலா,”டேய் போடா உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்ன”
இருவரும் குடித்து முடித்து தள்ளாடிக்கொண்டே வெளியில் வர அவனது டிரைவர் வந்து இருவரையும் அழைத்து சென்று அவர்களது வீட்டில் விட்டான் இது இவர்களுக்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான்…
அபய்,வழக்கம் போல் காலையில் ஆபிஸ்க்கு செல்ல கிளம்பிக்கொண்டிருக்க அவனை பார்க்க வந்த பாட்டியிடம்,”பாட்டி எப்படி இருக்கிங்க என்றான்”
பாட்டி,”கண்ணா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டனா என் கட்ட நிம்மதியா வேகும் பா”னு சொல்ல
அபய்,”பாட்டி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் இப்போ ஒன்னும் அவசரமில்ல இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அர்ஜெண்ட்டா போகணும்னு சொல்லிட்டு வேகமா கிளம்பி வந்துவிட்டான்”
பாட்டி நம்ம இப்படியே கெஞ்சிக்கிட்டு இருந்தா இவன் சரிப்பட்டு வரமாட்டான்…எப்படியும் இந்த வருஷத்துல இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஒரு முடிவுக்கு வந்திருந்தாங்க…
மகி ஆபிஸ்க்கு 9 மணிக்கு வந்தவள் அபய் அறை முழுவதும் கலைஞ்சிருக்க அதை ஒழுங்காக
அடுக்கி வைத்தாள் பின் அவன் வரவுக்காக காத்திருந்தாள்..
காலை 10 மணிக்கு ஆபிஸ் வந்தவன், அவளை ஊடுருவி பாத்தான், அவளுக்கோ பக்குன்னு ஆயிடுச்சு இன்னிக்கும் இவன் கிட்ட மாட்டிகிட்டமானு பேந்த பேந்த முழிக்க..
அபயோ நக்கலாக சிரித்துவிட்டு பரவால்ல இன்னிக்கு கொஞ்சம் நல்லா தான் வந்துருக்கனு சொல்ல..
அவனின் பார்வை அவளுக்கு ஒரு வித உணர்வை தூண்ட அது என்னவென்று அறியாமல் நின்றாள் பேதை