2 என்னவள் நீதானே

0
953

அத்தியாயம்-2

அடுத்த நாள் ஒரு முக்கியமான கவர்மெண்ட் ப்ரொஜெக்ட் டெண்டர் விஷயமா சிவா கிளம்பிக் கொண்டிருந்தான், சிவா வீட்டிற்கு ஆதவ் வந்தான்

லட்சுமி அம்மா, “வாப்பா ஆதவ் எப்படி இருக்க ரொம்ப நாளா ஆச்சு இந்த பக்கம் வந்தே ஏன்னு கேட்டாங்க “

ஆதவ்,” இல்லமா கொஞ்சம் பிஸி அதனால தான்னு சொல்லிட்டு சிவா எங்கமானு கேட்டான் ” மேல தான் இருக்கான் போய் பாருடானு சொன்னாங்க.

சிவா ரூம்க்கு போயிட்டு ஆதவ்,”ஹே சிவா இன்னுமா கிளம்பிட்டு இருக்க டைம் ஆகுதுடா மீட்டிங்கு “

சிவா ” இதோ வந்துட்டேன்டா எல்லாம் ரெடியா இருக்குல்ல”

ஆதவ், “ம்ம் இருக்குடா நம்ம போய் நம்ம டெண்டர் எடுத்தா முடிஞ்சுச்சு, எப்படியும் இது நமக்கு தான் கிடைக்கும்னு எல்லாரும் சொல்ராங்க,ஆனா??”

சிவா, ” என்னடா அந்த ருத்ரா கான்ஸ்ட்ரக்சன்ஸ் பத்தி யோசிக்கறயா”

ஆதவ் ,” ஆமாண்டா ஏற்கனவே அந்த ருத்ரா கான்ஸ்ட்ரக்சன்ஸ் M.D ருத்ராக்கு உன்ன பாத்தாலே காண்டாகும் இன்னிக்கு என்ன நடக்க போகுதோ”

சிவா ,”வாடா பாத்துக்கலாம்னு சொல்லிட்டு கீழ கெளம்பி வந்தாங்க “

அப்பா, கீழ அவங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாரு அவங்க வந்த உடனே சிவா,ஆதவ்னு கூப்டாரு” சிவாவும் ஆதவ்வும் சொல்லுங்கப்பான்னு அவர் கிட்ட போனாங்க, அப்போ அப்பா “டேய் இன்னிக்கு உங்களுக்கு முக்கியமான நாள் இவ்ளோ நாள் நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திங்களோ அதுக்கான டைம் வந்துருச்சி,இதுல நீங்க ஜெயிச்சு அந்த ருத்ரா கான்ஸ்ட்ரக்சன்ஸ் வரதராஜன்க்கு(ருத்ராவோட அப்பா) நீங்க யாருனு ப்ரூவ் பண்ணனும்டானு சொன்னாரு”

சிவா,”அப்பா இவ்ளோ நாளா அவங்க நம்ம கூட மறைமுகமா மோதிட்டு இருந்தாங்க ,இன்னிக்கு நம்ம அவங்கள டைரக்ட்டா அடிக்கபோறோம்னு முக மலர்ச்சியா சொன்னான்” ஆதவ்வும் ஆமாம்ப்பா எல்லாமே நம்ம பிளான் படி தான் போயிட்டு இருக்குனு சொன்னா.

அப்பா,”தட்ஸ் மை பாய்ஸ்னு தட்டி குடுத்தாரு, ரெண்டுபேரும் அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு மூவரும் (சிவா,ஆதவ்,அப்பா ) டைனிங்கிக்கு வந்துட்டாங்க அப்போ தான் ஜானுவும் வந்து அவங்க கூட சாப்பிட்டுட்டு இருந்தா.

சிவா,”ஜானு இன்னிக்கு நான் முக்கியமான வேலையா கிளம்பறேன்டா நீ அப்பா கூட கெளம்புனு சொன்னான்”

ஜானு,” எனக்கு தெரியும்னா இன்னிக்கு உனக்கு எவ்ளோ முக்கியமான நாள்னு,ஆல் தி பெஸ்ட்ணானு சொல்லிட்டு நான் அப்பா கூட போய்க்கிறேன்னானு சொன்னா”

சிவா ஸ்மைல் பண்ணிட்டு அவ தலைய தடவி குடுத்து ” தேங்க்ஸ்டா, பைனு சொன்னான் “

ஆதவ்,” டேய் போதும் உங்க பாச மலர் படம் முடியல, கெளம்புடான்னு சொல்லிட்டு அவ தலையில குட்டிட்டு “ஹே குட்டி பிசாசு நீயும் கிளம்புன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க…..

அங்க நம்ம ஆராதனா கேங், அதாங்க அவ ப்ரண்ட்ஸ் அஜய்,அக்சரா,அஸ்வத் இவங்க நாலு பேரும் ஒரு டீம், எங்க போனாலும் ஒண்ணா தான் இருப்பாங்க…

ஆரா,சாரி கைஸ் நாளைக்கு அப்பா ஒரு பங்க்ஷன் இருக்கு கண்டிப்பா பேமிலியா போகணும்னு சொல்லிட்டாரு அதான் நம்ம மூவிக்கு போட்ட பிளான் பிளாப் ஆயிடுச்சு நம்ம வேணாம் இந்த வீக் எண்டு போகலாம்னு கேட்டா “

எல்லாரும் “ஓகே னு சொல்லிட்டாங்க ,அப்போ ஆரா “வாங்க எல்லாரும் கேண்டீன் போகலாம்னு சொல்லிட்டுஎல்லாரையும் கூப்பிட்டு அங்க போனா”

ப்ரண்ட்ஸ், எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சிட்டு ஜாலியா இருந்தாங்க….

அப்போ அஜய்,”ஹே கைஸ் இன்னும் 2 வாரத்துல இன்டெர் காலேஜ் பங்க்சன் வருது நாம எல்லாரும் பார்ட்டிசிபேட் பண்ண போறோம் நான் இப்போ தான் நம்ம டீம் நேம் குரூப் டான்ஸ்ல குடுத்துட்டு வந்தேன்னு சொன்னான்”

ஆரா, “ஓகேடா ஒரு கலக்கு கலக்கிறலாம்”

அக்ஸா,” ஆரு,அது சரிடி நீ நாளைக்கு எந்த பங்க்ஷன்க்கு போற “

ஆரா,” ஓ அதுவா லயன்ஸ் கிளப்ல இருந்து சிறந்த பிசினஸ்மேன்க்கான விருது குடுக்க போறங்கலாமா அதுக்கான கிராண்ட் பங்க்ஷன் தான் “

இங்க தான் அவ லைப் மாற போகுதுனு தெரியாம சொல்லிட்டு இருக்காறா ஒருவேளை தெரிஞ்சிருந்தா போயிருக்கமாட்டாளோ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here