இரண்டு ஜோடிகளும் காதலை உணர்ந்தும் அதை ஏற்காமல் ஆடும் கண்ணாமூச்சியில்
வலி தான் நிறைந்து இருந்தது நால்வருக்கும்..
காதல் இத்தனை கொடுமையானதா என்று எண்ணுமளவிற்கு..
சிவவோ கடந்த காலத்தை
நினைத்து காதலை ஏற்க மறுக்க.. ஆதவ்வோ ஜானு நாளுக்கு நாள் அவனிடம் உரிமையில் முன்னேற ஆதவ் காதலை தன் நண்பனுக்காக துறக்க முடிவு செய்துள்ளான்..
காரிலே பயணம் செய்து கொண்டிருந்த ஆராவும் சிவாவும் ஒரு வித அமைதியிலே பயணிக்க ஆராவோ இருக்கையில் சாய்ந்து கண்மூடி இருக்க விழி ஓரம் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது…அதை பார்த்து கொண்டிருந்த சிவாவோ பொறுமை இழந்து காரை சடன் பிரேக் அடித்து நிறுத்திவிட்டு அவளை பார்க்க… கண்களில் கோபமும் காதலும் ஒரு சேர அவளை பார்த்துக்கொண்டிருந்தான்…
இதை அறியும் நிலையில் பெண்ணவள் இல்லை..
சிவா,”ப்ச்ச்… இப்போ ஏன் இப்படி அழுத்துட்டு இருக்க”
ஆரா அவன் குரல் கேட்ட பின்பே கண்விழித்து அவனை பார்க்க அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்…
சிவா அவளின் நிலை அறிந்து இம்முறை பொறுமையாகவே,” கீழ கொஞ்சம் இறங்கு.. உன்கிட்ட பேசணும் என்றான்..”
அவளும் வாய்திறவாமலேயே காரை விட்டு இறங்கி நிற்க அவள் அருகில் வந்த சிவா பேச தொடங்கினான்..
சிவா,”தனு… இங்க பாரு ஏன் இப்படி அழுதுட்டு இருக்க..”
ஆரா அவன் தனு என்று அழைத்ததை கவனிக்காமல்,”ஒன்னுமில்ல நான் நார்மலா தான் இருக்கேன்.. அங்க இருந்து கிளம்பும் போது கண்ணுல ஏதோ பட்டுருச்சு அதான் கண்ணுல இருந்து தண்ணி வருது மத்தபடி ஒன்னுமில்ல..”என்றாள்.. எங்கே நான் உன்மேல் கொண்ட காதல் தான் என்றால் தன்னவன் மனம் வருத்துமோ என்றெண்ணி பொய்யுரைத்திருந்தாள்…
அவளின் மனம் அறிந்தவனோ,”லுக் தனு… காதல்ங்கிறது மனசுல இருந்து வரணும்… கட்டாயப்படுத்தி வர வைக்கிறது இல்ல.. நீ இப்படியே அழுத்துட்டே இருக்கறதுனால எதுவும் மாற போறதில்லை… உன்ன இந்த மாதிரி பாக்கும் போதெல்லாம் நல்லா துறு துறுன்னு இருந்தவள இப்படி ஆகிட்டேனோங்கிற மாதிரி எனக்கும் கில்டியா பீல் ஆகும்”
ஆராவும் தன்னவன் எந்த சூழ்நிலையிலும் வருத்தபட கூடாது என்று எண்ணுபவள்.. அவன் தன்னால் வருத்த படுவதை விரும்புவாளா?? அதற்காகவே தன் வலியை மறந்து புன்முறுவலிட்டாள் அதிலும் அவளின் வலி தெரிந்தது..
சிவாவோ, தனு சின்ன பொண்ணு… இந்த மாதிரி விஷயத்தை எப்படி ஹேண்டில் பண்ணுவா.. ஒரு வேளை எமோசனலா ஏதாவது முடிவு எடுத்துட்டா என்ன பண்றது…என்று குழம்பியவன் அவளிடம் பேசுவதற்காகவே வண்டியை நிறுத்தினான்…. அவன் கூறியதற்காகவே அவள் சிரித்ததை பார்த்து அவனுக்கோ இவள் எந்த மாதிரியான பெண்.. காதலில் பலவேறு பரிணாமங்களை ஒன்றாக காட்டுகிறாளே என்று இருந்தது அவனுக்கு…
சிவா,”தனு… நீ சின்ன பொண்ணு இந்த வயசுல எல்லாருக்கும் தோணுற மாதிரி தான் உனக்கும் வந்துருக்கு..” என அவன் கூற அதற்குள் அவள் முறைக்க… சிவவோ சரி சரி… நீ உண்மையாவே கூட என்ன காதலிக்கலாம்… ஆனா எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல.. ஒரு வேளை எனக்கும் உன் மேல காதல் வந்துச்சுனா அப்போ பாப்போம் பட் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும் முடியுமா??? “என கேட்க… அவள் பதிலுரைக்க தொடங்கியிருந்தாள்…
ஆரா சலனமற்ற முகத்துடன்,” என்ன… நான் சூசைட் பண்ணிக்குவேனோன்னு பயப்படுறீங்களா???…. நீங்க இங்க இருக்கீங்க என்று தன் இதயத்தை தொட்டு காண்பித்தவள்… நான் எதாச்சும் பண்ணா எனக்குள்ள இருக்க உங்களையும் சேத்து தான் பாதிக்கும்… நான் எப்பவுமே உங்களுக்கு ஒண்ணுனா தாங்கிக்க மாட்டேன்… அண்ட் மோரோவர் நான் இந்த சிவா கூட ஜென்மத்துக்கும் வாழனும்னு தான் ஆசைப்படறேனே தவிர அவரை விட்டுட்டு சாவறதிக்கில்ல…” என்றாள் அவள் குரலில் அத்தனை தெளிவு…
ஒருகணம் அவள் காதல் மேல் கொண்ட உறுதியில் ஸ்தம்பித்து போனான் சிவா… அவனின் மனதில் ஒரு பெண் ஆணை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா என்று வியந்து கொண்டிருக்க… ஆராவுக்கோ இப்போது கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது அவனின் தனு என்ற பிரத்யேக அழைப்பும் காதல் வரலாம் என்று அவன் வாயால் கூறியதும் அவளுக்கு போதுமென்றிருந்தது …
மெல்ல மூச்சிழுத்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்ட சிவா பேச ஆரம்பித்தான்..,” வெல் தனு… அப்பறம் உனக்கொரு கண்டிஷன் நீ படிச்சு முடிக்கற வரை என்ன பாக்க கூடாது… நானும் உன்ன பாக்க மாட்டேன்… உன்னால முடியும்ல என்று புருவம் உயர்த்தி வினவ…
அவளுக்கோ இன்னும் இரண்டரை வருடம் எப்படி பாக்காமல் இருப்பது என்று உள்ளம் கலங்கினாலும் உதட்டில் புன்னகையை வரவழைத்து கொண்டு தன்னவன் வைக்கும் காதல் பரீட்சைக்கு தயாரானாள்…
ஆரா,”சரி உங்களோட இந்த கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கிறேன்.. இந்த பரீட்சையில் ஜெயிக்க ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க”என்றாள்…
சிவா,”ஆல் தி பெஸ்ட்… மே யுவர் ட்ரீம்ஸ் கம் இன் டு ரியல்…” என வாழ்த்தியவன் சரி கிளம்பலாமா? என்க.. அவளும் சரி என்று காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்….
சிவாவின் அருகில் அமர்ந்தவள் சிவாவை நோக்கி இதுக்கு அப்பறம் நம்ம பாக்க முடியாதில்ல என்க அவனும் அதை ஆமோதிப்பதாய் தலை அசைக்க… அவன் சற்றும் சுதாரிக்கும் முன் அவன் கையோடு அவள் கை கோர்த்து அவன் தோல் மீது சலுகையாய் சாய்ந்து கொண்டாள்…
அவளின் ஒவ்வொரு செயலிலும் நீ எனக்கானவன் என்பதை சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தாள்… அவனும் அவளை பார்த்து ஒரு மென்னகையை சிந்திவிட்டு ஒரு கையாலையே டிரைவ் செய்ய ஆரம்பித்திருந்தான்….
தோளில் குழந்தை போல் சாய்ந்து இருக்கும் தன்னவள்.. காரில் ஏ. ஆர்.ரஹ்மான் இசையில்
மின்னல் ஒரு கோடி எந்தன்
உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள்
ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
துளி தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி
நீ என் காதல் தேவதையே…..
பாடல் ஒலிக்க முதன் முதலாக அவன் ரசித்த பயணம் இன்னும் சற்று நேரத்தில் முடிய போவதை மறந்து லயித்தனர்…
நேரம் செல்ல செல்ல அவள் வீடும் நெருங்க இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத தவிப்பு…
அதற்குள் அவள் வீட்டின்
பெரிய கேட் மூடியிருக்க காரை அவன் வெளியிலேயே நிறுத்த… சற்றும் தாமதிக்காமல் அவனை இறுக்கி அணைத்து நெற்றியில் தன் இதழை பதித்து தவிப்பை உணர்த்தினாள் ஆரா….
நிமிடத்தில் தன்னை மீட்டவள்… தன் மன்னவனை நோக்கி…”அவர் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… ஆல் தி பெஸ்ட் பை….”என்று உரைத்துவிட்டு விழியோரம் துளிர்த்த நீரை கட்டுப்படுத்திக்கொண்டு சிறிய கேட்டின் வழியாக உள்ளே சென்றாள்…..
அதே நேரத்தில் ஆதவ்வும் ஜானுவை வீட்டில் இறக்கிவிட.. அவள் ஹாண்ட் பேக்கில் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து அவன் கையை பிடுங்கி அதில் வலுக்கட்டாயமாக போட்டவள்.. இதுவும் நான் உங்களுக்காக வாங்குனது தான்… இனிமே காதலங்கிர பேர்ல உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன்… உங்களுக்கா எப்போ என் காதல் புரியுதோ அப்போ வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போக முயல… சிவாவின் அப்பா பைக் சத்தம் கேட்டு வெளியே வந்தவர் ஆதவை பார்த்து என்னப்பா வெளியவே நின்னுட்ட உள்ள வா.. என்க… இல்லப்பா ஜானுவை ட்ராப் பண்ண தான் வந்தேன் கெளம்பறேன்…சிவாவுக்கு கொஞ்சம் வேலை இருக்காம் லேட்டா தான் வருவான் என்று தகவலையும் கூறிவிட்டு விரைந்தான்…
சிவவோ தன் கெஸ்ட் ஹவுஸ் சென்று தனிமையில் தன்னவள் நினைவில் மூழ்க…
ஆதவ் வீட்ற்கு சென்று தன் அறையில் ஜானு போட்டு விட்ட மோதிரத்தையே பார்த்துக்கொண்டித்தான்…
காதல் என்னும் கண்ணாமூச்சியில் நால்வரும்….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…