ஆரா தன் காதலை தெரிவித்த பின் சிவாவின் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாததை கண்டு திடுக்கிட்டாள்.. இருந்தும் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள்…
ஆரா,”என்னங்க நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க ஏதும் சொல்லாம இருக்கீங்க…”
சிவா இறுகிய முகத்துடனே,”என்ன சொல்ல சொல்ற… என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு??? இன்னைக்கு உன் முன்னாடி இருக்க சிவா வேற… நிஜ சிவா வேற… அதுக்கும் மேல எனக்கு உன் மேல் கா..த..ல்.. இல்…. என்று அவன் கூற வருவதற்குள் அவனது இதழை தன் இதழ் கொண்டு அணைத்திருந்தாள் ஆராதனா…
அந்த இதழொற்றல் எவ்வளவு நேரம் நீடித்தது என்று அறியவில்லை இருவரும்.. இந்த நீடித்த முத்தத்தில் அவள் காதலின் ஆழம் மட்டுமே தெரிந்தது அவனுக்கு…பெண்ணவளே சுதாரித்து அவனை விடுவித்து பேச தொடங்கினாள்…
அவள் கண்களில் விரக்தி நிரம்பி இருந்தது அவன் இப்போ இருக்க சிவா வேற என்று குறிப்பிட்டதை ஆரா தவறாக புரிந்து கொண்டாள்… (அவன் பெரும் தொழிலதிபராக இருப்பதால் தான் எனக்கு அவன் மீது காதல் வந்தது என்று எண்ணிவிட்டான் என்று புரிந்துகொண்டாள்) அதே வலியுடன் ஆரா,” நீங்க என் காதலை ஏத்துகிறதும், ஏத்துகாததும் உங்க விருப்பம்… ஆனா உங்க வாயால என் மேல காதல் இல்லனு மட்டும் சொல்லாதீங்க…அதை என்னால ஏத்துக்க முடியாது.. ஏன்னா நீங்க உங்க வாயால சொல்லாத காதலை உங்க கண்ணு ஒவ்வொரு கணமும் சொல்லிக்கிட்டு தான் இருக்குது…” என்று நிறுத்தியவள் மூச்சிழுத்து தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு மேலும் பேச ஆரம்பித்தாள்…
ஆரா,”நான் உங்க மேல வச்ச காதல் நிஜம்…அது உங்க அழகை பாத்தோ இல்ல நீங்க பெரிய பிசினஸ்மேன் அப்டிங்கிறதுனாலயோ இல்ல…என்னைக்கு எனக்கு ஒன்னுங்கும்போது துடிச்சிங்களோ அன்னிக்கு உங்க கண்ணுல காதலை பாத்தேன்… அப்பறம் உங்க அணைப்பில் பாதுகாப்பா உணர்ந்தேன்.. அப்பறம் உங்களோட கண்ணியம்… இதை விட ஒரு பெண்ணுக்கு காதலிக்க வேற எதுவும் தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்…அண்ட் மோரோவர் இந்த சிவா எப்படி இருந்தாலும் இந்த ஆராதனா இதே காதலோட தான் இருப்பாள்… என்று உரைத்துவிட்டு விறுவிறுவென வெளியே வந்துவிட்டாள்….
சிவாவிற்கோ தன் வாயால் காதலிக்கவில்லை என்று கூறுவதை கூட விரும்பாத அவளின் மனமும் அவள் காதல் மேல் கொண்ட உறுதியும்.. தன் காதலை ஒரே முத்தத்தில் உணர்த்திய போது இருந்த அவளின் தவிப்பும் இவ்வளவு நாள் சிறு பெண்ணாக துறுதுறு என்று இருந்தவள் இன்று தன் மேல் கொண்ட காதலுக்காக இவ்வளவு தூரம் போய்விட்டாள் என்று நினைக்கும் போதே அவன் உடல் சில்லிட்டது…
அவன் கடந்த கால நிகழ்வுகள் மனதில் இழையோட அதில் கோபம் கொண்டவன் தன் தலையை அழுந்த கோதி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தான்….
ஆராதனா வெளியே வரும் போதே ஆதவ்வும் வந்திருந்தான்.. அவளுடைய இறுகிய தோற்றமே ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் நடந்துள்ளது என்பதை பறைசாற்ற ஆதவ் ஆராவிடம்,”எங்க மா சிவா” என்று கேட்க அவளோ,”வருவாங்க அண்ணா” என்று ஒற்றை வரியில் உரைக்க அவளது பதிலில் ஆதவின் சந்தேகம் ஊர்ஜிதமானது…
ஆதவ் அந்த ஷாப்பை விட்டு வெளியே வந்த பின்பும்.. ஜானு தான் வாங்கியத்திற்கு பில் செலுத்திவிட்டு பொறுமையாக வந்து சேர்ந்தாள்… அதற்குள் சிவாவும் வந்துவிட அவர்களின் அமைதியில் ஜானுவுக்கும் என்ன நடந்திருக்கும் என்று மேலோட்டமாக புரிந்தது…
நால்வரும் ஏதும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தனர்…. வழக்கம் போல் ஆடவர் இருவரும் முன்னால் அமர மங்கையர் இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்…
பின்னால் அமர்ந்த ஆராவின் இதயமோ கனத்துபோயிருந்தது…. தன்னவனின் கண்களில் காதலை பார்த்தவள் ஆயிற்றே இருந்தும் அவன் மறுப்பதற்கு காரணம் ஏதும் தெரியாததால் குழம்பி போய் இருக்கையில் சாய்ந்து கண்மூடினாள்…
ஆராவை பார்த்த சிவாவின் மனமும் கனக்க ஆரம்பித்திருந்தது… எதுவும் சொல்லாமல் அமைதியாக காரை ஓட்டி கொண்டிருந்தான்…
ஆராவும் கண் விழித்து தன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்… அவளின் விழிதீண்டலை முன்னால் இருந்த மிர்ரரில் அவனும் கண்டுகொண்டான்.. ஆராவின் விழி ஓரத்தில் துளித்த கண்ணீர்துளியை கண்ட சிவாவிற்கு காதலின் மேல் அவ்வளவு கோவம் வந்தது…பின்னே இவ்வளவு நாள் தெளிந்த நீரோடையாக பயணித்த வாழ்க்கையில் நொடிப்பொழுதில் சலனத்தை ஏற்படுத்திவிட்டதல்லவா…
ஆதவ்க்கோ இவர்களின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்க்கையில் ஆயாசமாக இருந்தது… முதலில் ஆதவ்வை இறக்கிவிட்ட சிவா தன் தங்கையிடம்,” நீ ஆதவ் கூட வீட்டுக்கு போ.. நான் இவளை இறக்கிவிட்டு கொஞ்சம் வேலையா வெளியே போறேன் வரதுக்கு லேட் ஆகும்னு அம்மா கிட்ட சொல்லிரு”என்றவன் ஆதவ்வை பார்க்க… ஆதவ்வோ சரி மச்சான் நான் கூப்ட்டு போயி விட்டுடறேன் நீ பாத்து போ.. என்றான்….
சிவா ஆராவுடன் தனிமையில் பயணிக்க… காரில் இசையை உயிர்பிக்க அதில்
உயிரை தொலைத்தேன் அது
உன்னில் தானோ
இது நான் காணும்
கனவோ நிஜமா
மீண்டும் உன்னை
காணும் வரமே
வேண்டும் எனக்கே
மனமே மனமே
விழியில் விழுந்தால்……
என்னில் எனதாய்
நானே இல்லை
எண்ணம் முழுதும்
நீதானே என் கண்ணே………
என்ற வரிகள் ஒலிக்க காதல் கொண்ட இதயங்கள் உள்ளே தவித்துகொண்டிருந்தது….
ஆதவ் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்தவன் அந்த நெக்லஸ் செட்டை அவளிடம் கொடுத்தவன்… கடினமான முகத்துடனே இது உனக்காக வாங்குனது தான் இந்தா வச்சுக்கோ.. என்று கையில் திணித்தான்….
ஜானுவும் அதை கையில் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க..பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அவள் அமைதியாக இருப்பதை கண்டு கோபத்தை பைக்கின் மீது காட்டியவன் அதை முறுக்க… அவன் கோபம் உணர்ந்து அமைதியாக பைக்கில் ஏறி அமர்ந்தாள் ஜானு…
இருவரும் அமைதியாக இருக்க… அவனை வேகமாக ஒரு கார் கிராஸ் செய்ய அதில் டக்கென பிரேக் பிடித்தான்… அதில் ஜானுவோ பிடிமானத்திற்காக அவன் தோலை பற்ற சட்டென அந்த கையை தட்டி விட்டிருந்தான் ஆதவ்…..அவனின் செயலில் ஜானுவுக்கு முகம் வெளிறியது
இரண்டு ஜோடிகளும் தங்களது காதலை உணர்ந்து கண்ணாமூச்சி கொண்டிருந்தனர்..
இந்த ஆட்டம் முடிவுறுமா???
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…