மின்னல் கீற்றாய் வந்த
உன் நயணபார்வை
மறத்து போன என்
இதயத்தையும்
இடியென தாக்குதடி
கள்ளியே உன் விழியின்
மொழியில் ஆயிரம் அர்த்தங்கள்
அறிந்தேனடி நான்..

உன் விழியால் என்னை
களவாடி சென்ற
கள்வனே
உன்னை சிறைபிடிக்க
வேண்டுமென்றால்
ஆயுள்முழுதும்
சிறைபிடிப்பேன்
என் இதயக்கூட்டில்…

இருவரும் விழியோடு காதலை பரிமாற்றம் செய்ய…சற்றே சுதாரித்த சிவா அவளை விடுவித்துவிட்டு நின்றான்… அவளுக்கும் வெட்கம் பிடுங்கி திங்க தயங்கியவாறே சாரி.. என்றுரைத்துவிட்டு நகர அவளை சீண்ட வேண்டுமென்றெண்ணியே,”அது என்ன எப்ப பாரு என் மேலேயே விழற…” என்றான்…
அவளும் வம்படியாய் ம்ம்ம்ம் ஆசை அதான் என்றாள்…அவனும் அதை கேட்டுக்கொண்டு அமைதியாக செல்ல பென்னவளுக்கோ தன்னவனின் மனமாற்றம் புரிந்தாலும் அவனிடம் தன் காதலை எவ்வாறு சொல்வது என்ற யோசனையில் இருந்தாள்…

அவர்களை கவனித்த ஆதவ்வும் ஜானுவும் சரி வாங்க சாப்பிட போவோம் என்று அழைக்க அப்போது தான் ஆரா தன் நினைவில் இருந்து மீண்டாள்…

நால்வரும் சேர்ந்தவாறு புக் செய்த டேபிளுக்கு சென்று அமர்ந்தனர்..அவரவர் தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தனர்…அனைவரும் பேசியவாறே சாப்பிட்டு முடிக்க முதலில் முடித்த ஆராவோ… “நான் டெஸர்ட் ஆர்டர் பண்ண போறேன் உங்களுக்கென்ன வேணும் என்று சிவாவை கேட்க”… ஜானுவோ வேண்டுமென்றே எங்களுக்கும் கூட ஆடர் பண்ணலாம் நாங்களும் சாப்பிடுவோம் என்று நக்கலாக கூற…ஆராவோ அவளைத் தட்டி விட்டு ‘போடி’ என்று செல்லமாக சிணுங்கினாள்…

ஆராவின் மனதில் காதல் துளிர்விட்டு கொண்டிருப்பதை அவள் உள்பட அனைவருமே அறிந்திருந்தனர்…சிவாவிற்கு இதை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பமே மிஞ்சி இருக்க… ஆதவிற்கும் ஜானுவிற்கும் இனி சிவாவின் வாழ்வில் வசந்தமே என்று நினைத்திருந்தனர் பின்னால் வரப்போகும் சூழல்களை அறியாமல்….

பின்பு அனைவருக்கும் பொதுவாக டெஸர்ட்டை சிவாவே ஆர்டர் செய்தான்…ஜானுவின் சீண்டலுக்கு பின் வெட்கம் மேலிட தலைகுனிந்தவாறே அவன் ஆர்டர் செய்ததை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ஆரா..

இருவருக்கும் தனிமை கிடைத்தால் மனம் திறந்து பேச வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணிய ஜானுவோ ஆதவ்விடம் கண்ணை காமிக்க ஆதவ் சிவாவிடம், “மச்சான் இந்த ரெசார்ட்ல புதுசா ஒரு எத்தனிக் ஷாப் போட்டுருக்காங்கலாமா நான் போயி பாத்துட்டு வரேன்”என்று சொல்ல.. ஜானுவும் அண்ணா நானும் போயி எனக்கு பிடிச்சதை வாங்கிட்டு வரேன்… ஆரா என்று அழைத்தவள் இன்னும் சாப்பிடாமல் இருக்க சரி அண்ணா ஆரா சாப்பிட்ட உடனே அவளையும் கூப்ட்டு வா… என்று வேண்டுமென்றே ஆராவை சிவாவிடம் விட்டுவிட்டு சென்றாள் பின்னே இதெல்லாம் அவள் போட்ட பிளான் தானே அதனால் தான் ஆரா இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை என்று தெரிந்து கொண்டே இருவரும் அவளை அவனுடன் விட்டுவிட்டு சென்றனர்…

ஆராவும் கடமையே கண்ணாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. இவனும் அவளிடம் பேச தொடங்குவதற்காகவே மம்க்கும் என்று தொண்டையாவ் செறுமினான்.. அவன் நினைத்தது போலவே அவள் அவனை ஏறிட்டு பார்க்க சிவவோ,”முடிஞ்சுதா கெளம்பலாமா..”என்றான்…

ஆராவிற்கோ எப்படியாவது தன்னவனிடம் காதலை சொல்ல வேண்டும் என்று அவளது காதல் மனம் படபடக்க.. இன்று விட்டால் அவனை பார்ப்பதே அரிதாகிவிடும் பின்பு எவ்வாறு காதலை கூறுவது என்று யோசித்தவள்… சிவாவிடம் எனக்கு கடலை ரசிக்கணும் போல இருக்கு என்ன அங்க
கூப்ட்டு போறீங்களா என்று கேட்க.. அவள் கேட்ட திசையை பார்த்தான்…

அது பீச் ரெசார்ட்டில் இருந்து கடலுக்கு செல்லும் வழி பொதுவாக இரவு நேரத்தில் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் ஆனால் கடலை ரசிப்பதற்கு ஏதுவாக இருக்கைகள், சாய்வு நாற்காலிகள் போன்றவை போடப்பட்டிருக்கும் அந்த இடத்தை பார்த்துக்கொண்டே சரி போகலாம் வா என்று சிவா அவளை அழைத்தான்….

அதே நேரத்தில் ஆதவும் ஜானுவும் அந்த கடைக்குள் நுழைந்து சிலவற்றை பார்த்துக்கொண்டிருக்க… ஆதவ் ஒரு அழகான நெக்லஸ் செட்டை எடுத்துக்கொண்டு அவளிடம் குடுத்து,”இது எப்படி இருக்கு”என்றான்…

ஜானு,”நல்லா இருக்கு… உங்களுக்கு இவ்ளோ நல்லா செலக்ட் பண்ண தெரியுமா”என்ன என்று அவனை கலாய்க்க…அவன் ஆமா எனக்கு ரொம்ப வேண்டபட்ட பொண்ணுக்காக வாங்குனேன் அதான் என்றான்… உண்மையில் அதை ஜானுவுக்காக தான் வாங்கியிருந்தான் அவன்.. அதை ஆசையுடன் காட்ட வரும்போது இவள் சீண்டவும் அவனும் அதுக்கு பதிலுக்கு பேசினான்..

ஜானு கொலைவெறி கொண்டு அவனை பார்க்க அவன் அதை கவனிக்காமல் சென்றுவிட்டான்..அவளோ அவன் இன்னொரு பெண்ணிடம் பேசுவதை கூட விரும்பாதவள் அவன் இன்னொருதிக்காக பரிசு கொடுக்கும் அளவுக்கு செல்வான் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்து வெம்பிக்கொண்டிருந்தது…

ஆராவும் சிவாவும் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்க பௌர்ணமி இரவின் கடலலையின் ஓசையும் அதனுடன் வீசிய ஈரக்காத்தும் பென்னவள் மேனியை சிலிர்க்க செய்ய…அதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதில் இதை விட ரம்மியமான சூழல் தன் காதலை சொல்ல அமையாது என்றெண்ணிய நொடி இயற்கை அன்னையை சாட்சியாக வைத்துக்கொண்டு..
தன்னவனை பார்க்க அவனோ விழி வழியாக புருவம் உயர்த்தி என்னெவென்று வினவ… அதற்கே காத்திருந்தவள் போல் அவனிடம் பேச தொடங்கினாள்…

ஆரா சிவாவிடம்,” என்னங்க இதைவிட அழகான சூழல் கிடைக்குமானு தெரியல அதனால என் மனசுல பட்டதை இப்போவே உங்ககிட்ட சொல்றேன் இந்த இயற்கையை சாட்சியா வச்சு… “உங்க கூட நான் இருக்க இந்த நொடி வாழ்நாள் முழுவதும் தொடரணும்னு விரும்பறேன்… ஐ லவ் யூ…” என்று உரைத்தாள்…

சிவாவோ முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் இருக்க பென்னவளின் மனமோ படப்படத்துக்கொண்டிருந்தது…

சிவா ஆராவின் காதலை ஏற்பானா????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago