ருத்ரா சிவாவின் ஆபிசில் இருந்து கோவமாக வெளியே சென்றவள்…. நேராக அவளது பீச் ஹவுஸ்க்கு செல்ல அவளை பின்தொடர்ந்த அந்த காரும் பீச் ஹவுஸ் சென்றது…
உள்ளே சென்ற அவள் வெறிப்பிடித்தது போல் அங்கிருந்த பொருள்களை எல்லாம் எடுத்து வீசிக்கொண்டிருந்தாள்… அங்கிருந்த நிலைகண்ணாடியில் அவளது முகம் தெரிய… நீ தோத்துட்ட.. அந்த சிவா கிட்ட நீ தோத்துட்ட என்று கத்திகொண்டே பூச்சாடியை எடுத்து கண்ணாடியின் மீது வீச போக ருத்தரா என்ற குரல் கேட்க.. குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள்.. அங்கே அந்த ஆறடி ஆண்மகன் நின்று கொண்டிருந்தான்..
ருத்ரா அந்த புதியவனை பாத்து,”நீயா???? நீ எப்படி இங்க???? என்று வினவ அவனோ அவள் தோளை பற்றி,”ருத்ரா காம் டவுன்… எஸ் நானே தான்… இப்போ நான் இங்கே வந்துருக்கரதே உனக்கு உதவி பண்ண தான்…” என்றான்…
ருத்ரா அவனை சந்தேக பார்வை பார்க்க … அவளின் பார்வை உணர்ந்தவனோ என்ன ருத்ரா என்னடா இவன் பாட்டுக்கு வந்தான்.. நமக்கு உதவி பன்றேங்கிரானு யோசிக்கரையா..
ஹ்ம்ம் இதுல எனக்கும் ஒரு ஆதாயம் இருக்கு..
நீயும் அந்த சிவாக்கு எதிரி நானும் அவனுக்கு எதிரி.. நம்ம ரெண்டு பேரும் தனித்தனியா அடிச்சா அவன் ஈஸியா அதை முறியடிச்சுடறான்..அதனால நாம ஒண்ணா சேந்து அவனை அடிக்க போறோம்… புரியுதா என்றான்..
ருத்ராவோ.. நான் ஏற்கனவே பலமுறை அவனுக்கு பெரிய அளவுல பிரச்சனைய குடுத்தேன்… ஆனா அதை அவன் ஈஸியா சமாளிச்சுட்டான்.. நான் அவன் கிட்ட தோத்துட்டேன் என்று மறுபடியும் கத்த ஆரம்பித்தாள்..
ருத்ராவை தன் பார்வையிலேயே அடக்கியவன்..
“இங்க பாரு இது நீ கோவப்படறதுக்கான நேரம் இல்லை… நீ எப்புமே ஆத்தரப்பட்டு பண்ற எல்லா விஷயமும் தப்பா தான் முடியுது…அப்டி நீ பண்ற ஒவ்வொரு விஷயத்துலயும் எதிரிக்கு ஏதாவது லூப் ஹோல் வச்சுடற அதனால தான் அந்த சிவா ஈஸியா வெளிய வந்துடறான்…
சோ.. இந்த தடவை நாம அவனை நின்னு நிதானமா அடிக்க போறோம்.. நம்ம ரெண்டு பேரோட அடியையும் அவன் தாங்காமல் துடிக்கணும்.. அதை பாத்து நான் ரசிக்கணும்.. என்று கண்ணில் வன்மம் பறக்க ருத்திராவிடம் கூறிக்கொண்டிருந்தான்…
ருத்ராவிற்கும் ஏதோ பெரிய துணை கிட்டியது போல் இருந்தது.. பின் இருவரும் சேர்ந்து
சிவாக்கு எதிராக திட்டம் தீட்ட தொடங்கினர்…
அங்கோ சிவா மற்றும் ஆதவ் டீ குடித்து கொண்டே பேசி கொண்டிருந்தனர்…அப்போ ஆதவ்,”மச்சான் உனக்கு நண்பனா இருக்கறதுல எனக்கு என்ன கிடைக்குதோ இல்லையோ.. தினமும் புதுசா ஒரு பிரச்சனை கிடைக்குதுடா…” என்றவன் ஊர்ல பத்து பதினஞ்சு பிரண்ட் வச்சுருக்கவன் எல்லாம் நல்லா இருக்கான்…ஆனா நான் ஓரே ஒரு பிரண்ட்ட வச்சுட்டு படற பாடு இருக்கே என்று சந்தானம் பாணியில் சிவாவை கலாய்க்க… அவனோ ஆதவின் வயிற்றில் குத்துவிட்டு அவனை தோளோடு அனைத்து நண்பேன்டா என்று பதிலுக்கு கலாய்த்து கொண்டிருந்தான்…
சிவா அப்போதே நினைவு வந்தவனாய்,”ஆதவ்.. அந்த முகம் தெரியாதவன் யாருன்னு நமக்கு எக்ஸாக்ட்டா தெரியலையே டா.. ராம் குடுத்த
தகவலை வச்சு பாத்தா 80% தான் அவனை நெருங்கிருக்கோம்.. அந்த 20% கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கே டா.. அதுக்கப்பறம் ராம் கிட்ட இருந்து எந்த தெளிவான எந்த தகவலும் கிடைக்கலையேடா…”என்றான் கவலையுடன்…
ஆதவ்,”ஆமாண்டா நானும் காலைல வரும் போது அதை தான் யோசிச்சேன்.. எதிரி யாருன்னு தெரிஞ்சா எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் ஈஸியா அடிக்கலாம்..ஆனா எதிரி யாருன்னே கண்டுபுடிக்காம இருக்கிறது எனக்கு கொஞ்சம் டேஞ்சர்னு தோணுது மச்சி..”
சிவா,”ஆதவ் எனக்கென்னமோ இது நம்ம பிசினஸ் டேக் ஓவர் பண்ணதுக்கு அப்பறம் வந்த பிரச்னைன்னு தோணல.. ஒரு வேலை நம்ம அப்பாங்க காலத்துல இருந்தே தொடர பிரச்சனையா கூட இருக்கலாம்.. இது என் யூகம் தான்.. ஏன்னா நம்ம குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி ஒரே எடத்துல தான் இவ்ளோ நாளா போகஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்… இனிமே கொஞ்சம் வெளியவும் பாக்கணும்..” என்று கூற… ஆதவ்வும் சரிடா அப்போ இன்னிக்கே அப்பாகிட்ட போயி கொஞ்சம் பேசுவோம் என்றான்…
அன்னைக்கு சாயங்காலமே தங்களது தந்தைகள் இருவரையுமே அருகில் உள்ள ரெஸ்டாரண்ட்டுக்கு வர வைத்தனர்.. சிவாவும் ஆதவ்வும் ரெஸ்டாரண்ட் உள்ளே காத்திருக்க
தந்தைகள் இருவரும் உள்ளே வந்தனர்…
உள்ளே நுழையும் போதே சிவா அப்பா,”என்ன ராமா(ஆதவ் அப்பா) பசங்க எதுக்கு நம்மள வர சொல்லிருக்காங்க”.. எனக்கும் தெரியல வா அவங்களையே கேப்போம்னு உள்ளே அழைத்து சென்றார்… இவர்களும் பால்யகால நண்பர்களே சிறுவயது முதலே ஒன்றாக தொழில் செய்தவர்கள் இன்று மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வில் உள்ளனர்….
ஆதவ்வும் சிவாவும் தங்களது தந்தைகளிடம் அவர்களுக்கு தேவையான தகவல்களையும் மற்றும் கடந்த காலத்தில் ஏதேனும் தொழில் ரீதியான எதிரிகள் உள்ளனரா என்பதையும் கேட்டு குறித்துக்கொண்டனர்.. பெற்றோர் இருவரும் பொதுவான அறிவுரைகளை கூற அதையும் கேட்டுக்கொண்டே இருவரும் அவரவர் தந்தையுடன் சென்றனர்..
நாட்களும் ஓடிக்கொண்டிருக்க.. ஆராவும் சிவாவுடன் மொபைல் சாட்டிங் மற்றும் அவ்வப்போது கால் என்று கொஞ்சம் பேச தொடங்கியிருந்தனர்..இதை ஆதவ்வும் ஜானுவும் கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்…. ஒரு நாள் ஆரா தான் சிவாவிடம் எப்போ டின்னருக்கு வெளியே கூப்பிட்டு போவீங்க என்று மெசேஜ் அனுப்பி இருந்தாள்…
அதை பார்த்துவிட்டு சிவாவும் அவளுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டது…
சிவா,”காலேஜ்ல இருந்தா கூட மொபைல் யூஸ் பண்ணிட்டே தான் இருப்பாயா??”
ஆரா,”இல்ல ஸ்டாப் யாரும் வரல அதனால தான்”
சிவா,”எனக்கென்னமோ இப்படியே போனா நீ டாக்டர் ஆக மாட்டியோனு தோணுது…ஒழுங்கா சேட்டையை கொரச்சிட்டு படிக்கர வேலலைய பாரு” என அதட்டினான்…
ஆரா,” அதெல்லாம் ஒழுங்கா தான் படிக்கறோம்” என்று முனகியபடியே சொல்ல சிவாவோ, “என்ன” என்றான்..
ஆரா,” ஒன்னுமில்ல இப்போ என்னை திட்றதுக்கு தான் போன் பண்ணிங்களா???” என கேட்டாள்..
சிவா,”இப்போ தான் உன் மெசேஜ் பாத்தேன்.. இவ்ளோ நாள் கொஞ்சம் ஒர்க் அதிகம் அதான் டின்னர் போக முடியல.. இந்த வீக் எண்ட் போலாமா???” என்று கேட்டான்..
ஆரா,”எனக்கு ஓகே.. அண்ணாகிட்டயும் ஜானு கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க…”
சிவா,” அன்னைக்கு சொன்ன மாதிரி நானே உன்னை வீட்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.. இப்போ போயி ஒழுங்கா படி” என்று சொல்ல.. அவளோ, “மம்க்கும் போடா ஹிட்லர்”என்று மனதில் திட்டிக்கொண்டே சரி என்க.. சிவாவும் தட்ஸ் குட்.. பாய்.. என்று அவளது அழைப்பை துண்டித்துவிட்டு கூடவே ஆதவ்க்கும்.. ஜானுவுக்கும் தகவலை கூற.. இனியன் அவன் பிரண்ட்ஸ் கூட வெளியே போறானாம்… நேத்து தான் என் கிட்ட சொன்னான் என்று ஆதவ் சொல்ல.. சரி நம்ம 4 பேரு மட்டும் போவோம் என்றான் சிவா..
அந்த வார இறுதியில் ஈவினிங் போலவே கிளம்பினர் பீச் ரெசார்ட்க்கு… மாலை வேலையில் பீச்சில் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு சாப்பிடலாம் என்று திட்டம் போட்டிருந்தனர்…
ஆராவிடம் கூறியது போலே இவர்கள் மூவரும் கிளம்பி ஆராவின் வீட்டிற்க்கு செல்ல.. அங்கோ ஏற்கனவே ஆரா தன் பெற்றோர்களிடம் இதை பற்றி தெரிவித்திருந்தாள்.. அவர்களுக்கும் ஆரா முன்பே சிவாவை பற்றி கூறியிருந்ததால் அவனை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம்.. தன் மகளை ஆபத்தில் இருந்து காப்பற்றியவன் என்பதால் அவனுக்கு நன்றியையும் தெரிவிக்க வேண்டும் என்று ஆவலாக காத்திருந்தனர்…
அவர்களது நம்பிக்கையை பொய்யாக்காமல் அடுத்த 10 வது நிமிடத்தில் அவர்களும் வந்து சேர்ந்தனர்… வந்தவர்களை வரவேற்ற ஆராவின் பெற்றோர் சிவாவிற்கு நன்றியை தெரிவிக்க…
அவனும் ஆடவர்கள் இருவரும் ஆராவின் தந்தையுடன் தொழில் ரீதியான விஷயங்களை பரிமாறிகொள்ள.. பெண்கள் இருவரும் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க.. ஆராவின் அம்மா அனைவருக்கும் டீ கொண்டு வந்து குடுக்க அனைவரும் குடித்துவிட்டு அவர்களிடம் விடைபெற்று கிளம்பினர்…
ஆதவ் காரை ட்ரைவ் செய்ய முன்னிருக்கையில் சிவாவும்… பின்னிருக்கையில் மங்கையர் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டே வர.. இடையிடையே ஆராவின் பார்வை சிவாவை தீண்டி செல்ல… ஆதவ் ட்ரைவிங்கில் கவனமாய் இருக்க… ஜானு அதை கண்டுகொண்டாள்… கூடவே சிவாவும் தன் கடைக்கண் பார்வையால் ஆராவை கண்டுகொண்டான்…
ரெசார்ட் வந்துவிட அவர்களை இறக்கிவிட்டு காரை பார்க் செய்ய சென்றிருந்தான் ஆதவ்.. அவனுக்காக மூவரும் காத்திருக்க காரை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவர்களை அழைத்து கொண்டு பீச்சிற்கு செல்ல… கடலை பார்த்தவுடன் ஆரா துள்ளி குதிச்சு ஓட சிவவோ ஆதவ்விடம் என்னடா உன் தங்கச்சி இன்னைக்கு தான் கடலையே பாக்கறாளா என்ன?? இப்படி ஒடுரா என்றான்…
ஆதவ்,”ஹே என் தங்கச்சி சின்ன புள்ள அப்டி தான் இருப்பா.. நீ என் தங்கச்சியை ஏதாவது சொன்ன அப்பறம் நான் உன் தங்கச்சியை சொல்லுவேன் பாத்துக்கோ” என்றான்…
ஜானுவோ தன் அண்ணனை பின்னுக்கு தள்ளி ஆதவின் முன்பு வந்து இடுப்பில் கைவைத்து முறைத்துக்கொண்டே..”எங்க சொல்லி தான் பாருங்களேன்”என்றாள்..
ஆதவ்,”அம்மா தாயே… சும்மா உள்ளுளாய்க்கு… உன்ன ஏதாச்சும் சொல்ல முடியுமா?? என்று ஜகா வாங்கினான்..
சிவா,” உனக்கிதெல்லாம் தேவையா???சரி வா போவோம்…அங்க உன் தங்கச்சி கூட வந்தவங்களை விட்டு ஆட்டம் போட்டுட்டுருக்கா” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றான்…
இவர்களை கண்டவுடன் ஆரா.. ஹே இங்க வாங்க… என்று கை நீட்டி அழைக்க… மூவரும் அவளை நோக்கி சென்றனர்.. ஜானு ஹே கூட வந்தவங்க வராங்களோ இல்லயோனு கூட தெரியாம தண்ணிய பாத்த உடனே பாஞ்சுட்டு.. இப்போ வாங்க வாங்கனு கூப்பிடரையா என்று கேட்டாள்…
ஆரா,”எனக்கு பீச் ரொம்ப புடிக்கும்… அதான் பாத்த உடனே உங்களை மறந்து ஓடி வந்துட்டேன் என்றாள்…
இதை கேட்ட சிவவோ தலையில் அடித்துக்கொள்ள.. அவளோ ம்க்கும் என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.. சரி வாங்க நம்மளும் விளையாடுவோம் என்று ஆதவ் அழைக்க அனைவரும் கொஞ்ச நேரம் கடலலையுடன் உறவாடிக்கொண்டிருந்தனர்..
ஆராவோ அலை வரும் போது துள்ளி குதிக்கவும் போகும் போது.. அலையோடு கொஞ்ச தூரம் செல்வதுமாக இருந்தாள்… அங்கயே நின்று கொண்டு அவளின் சேட்டைகளை சிவா ரசித்துக்கொண்டிருந்தான்..
சற்றே பெரிய அலை வர துள்ளிகுதித்தவள் தடுமாறி விழ போக.. அவளின் இடையை பற்றி அவளை பூக்குவியலாக தங்கினான் சிவா…
இருவரது கண்களும் காதலை பரிமாறிகொள்ள துடித்து கொண்டிருந்தன..
இருவரும் தங்களது காதலை உணர்வார்களா???