அத்தியாயம் 15
இனியனின் காதலைப்பற்றி எண்ணிக்கொண்டு பைக்கை செலுத்தினாள் இசை.
காதலிப்பது சுகம் என்றால் காதலிக்க படுவது அதைவிட சுகமானது .13 வருடங்களாக தன்னை மட்டும் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இனியன் மீது இசைக்கும் காதல் துளிர் விட ஆரம்பித்தது.
அவளிடம் இதுவரை 20 ஆண்களுக்கு மேல் தன்னை காதலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.. யாரும் அவளின் குணத்திற்காக காதலிக்கவில்லை எல்லோரும் அவளின் பணத்திற்காகவும் அழகிற்காகவும் அவளை காதலித்தனர். யாரிடம் வராத காதல் இனியன்மீது வரக்காரணம் தான் யார் என்று தெரியாமலே காதலித்தது.. காதல் என்பது எதையும் எதிர்பார்க்காமல் வருவது இனியனின் காதலும் அப்படிப்பட்டதே என்று நினைத்துக்கொண்டு இசை இனியன் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தினாள்
அங்கு இனியன் ஒருவனிடம் தனக்கு தரவேண்டிய அஞ்சு லட்சம் பணத்தை கொடுக்க சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருந்தான். இசையும் பைக்ல அமர்ந்தவாறே கன்னத்தில் கை வைத்து இனியனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
அவள் வந்ததை கவனிக்காமல் அவனிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தான் இனியன் .தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல் தோன்ற திரும்பிப்பார்க்க இசை என்பதை அறிந்தபின்
இவ எதுக்கு இப்ப என்ன இப்படி பாக்குற என்று குழம்பி என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் .அவன் அப்படி கேட்டதும் இசை ஐயோ இப்படியா பார்த்து வைப்ப போச்சு ஐயனார் கிட்ட மாட்டிக்கிட்ட என்று நினைத்து ஒன்றும் இல்லை என்று தலையை இரண்டு புறமாகவும் ஆட்டினாள் அவளின் செயலில் இனியனுக்கு சிரிப்பு வர (எங்க வந்து இப்படி பண்றா பாரு எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு இந்த ஊர்ல எல்லாத்தையும் கெடுத்துடு வா போலயே )என்று கஷ்டப்பட்டு தன்னுடைய சிரிப்பை அடக்கி கோபமாக அந்த கடைக்காரரிடம் பேச ஆரம்பித்தான்
அடியே இசை இன்னிக்கி நல்லா சோதபுற நீ ஒரு டாக்டர் அத ஞாபகம் வச்சுக்கோ இப்பதான் டீனேஜ் னு நினைப்பா உனக்கு என்று தன்னை தானே கேட்டுக்கொண்டால்
அப்போது இனியனும் வேலை முடித்துவிட்டு வர பைக்கில் பின்பக்கம் ஏற போக இசை வண்டியை விட்டு இறங்கி சாவியை இனியனிடம் கொடுத்து அவனை ஓட்டுமாறு சைகை செய்தாள்
இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு டேய் இனியா இன்னைக்கு எதுக்கு இவ இப்படி நடந்துக்கிறா வரவர அவ மாதிரி கண்ண பாத்து எனக்கும் ஓரளவு எல்லாமே புரிய ஆரம்பிச்சுருச்சு
அதே நேரம் அங்குள்ள டீக்கடை ரேடியோவில்
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
என்ற பாடல் ஒலிக்க இசையோ அந்த பாடலை கேட்டு சிச்சுவேஷன் சாங் வேற என்று மனதுக்குள் பேசுகிறோம் என்று நினைத்து சத்தமாக முணுமுணுக்க அவள் செய்யும் அனைத்தையும் கண்ணாடி வழியே பார்த் இனியனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.. பைக்கை ஸ்டார்ட் செய்து வண்டியை பறக்கவிட முன்னாடி எல்லாம் இயல்பாக இனியனைபிடித்துக் கொண்டு வந்த இசைக்கு காதல் வந்தபின் அவனைப் பிடிக்க ஏதோ ஒன்று தடுத்தது
அவள் எங்கு எப்படி பிடிப்பது என்று யோசித்துக் கொண்டே இருக்க .அவள் படும் அவஸ்தை யை கண்ணாடி வழியாக பார்த்த இனியன் மனதுக்குள் என்ன எப்படி படுத்துன இப்போ பார் என்று ஓரமாக வண்டியை நிறுத்தி வண்டியை இசை இடம் கொடுத்து
யாழ் நீ வண்டியை ஓட்டு எனக்கு கை வலிக்குது என்று சொல்ல இசையும் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள். இருடி உனக்கு இருக்கு என்று மனதில் எண்ணிக்கொண்டு வழியில் ஒரு சின்ன பள்ளம் வர இதுதான் சாக்கு என்று இனியன் இசையின் இடுப்பை பிடித்துக் கொண்டான் இசையோ அவனின் திடீர் தாக்குதலில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்த ..என்னாச்சி ஏன் வண்டிய நிறுத்திட்டு என்று ஒன்றும் தெரியாத போல இனியன் கேட்க அவனின் கல்ல தனத்தை கண்டுபிடித்துவிட்டால் இசை..
என் கிட்டே வா உங்களுக்கு இருக்கு மிஸ்டர் இனியன் என்று தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் இசை வண்டியை ஓட்ட. நல்லாதானே இருந்தா திடீர்னு என்னாச்சு இவளுக்கு என்று குழம்பிப் போனான் இனியன்
வீடு வரும்வரை தன்னுடைய கடமையே கண்ணென்று இருவரும் அவரவர் கடமையை சரியாக செய்ய அதாவது இசை வண்டியை ஓட்ட இனியன் அவளை சீண்டிக்கொண்டே வர இருவரும் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர்
வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பார்த்து கவி எங்க போயிட்டு வர்றீங்க அண்ணா என்று கேட்க.. ஒரு வேல விஷயமா போயிட்டு வந்தேன் டா ..சரி அதுக்கு எதுக்கு அண்ணிய கூட்டிட்டு போன நீ மட்டும் போக வேண்டியதுதானே எதுக்கு அந்த மாதிரி இடத்துல அண்ணியகூட்டிட்டு போனா என்று கேள்வி கேட்டு குடைய
டேய் நானா அவளை கூட்டிட்டு போனேன் அவதான் என்ன கூட்டிட்டு போனா.. என் வண்டில பெட்ரோல் இல்ல.. அதுனால அவ கூட பொன்னேன் அவ என்ன அந்த இடத்தில விட்டுட்டு ஒரு லாங் டிரைவ் போயிட்டு வரேன் னு சொல்லிட்டு போன
கவி இசை தனியாக சென்றதை அறிந்து அண்ணி எதுக்கு நீங்க தனியா போனீங்க. உங்களுக்கு சேஃப்டி ரொம்ப முக்கியம் இதெல்லாம் யோசிக்காம இனி போகாதீங்க என்று கவி சொன்ன இசை எதுவும் பேசாமல் தங்களுடைய ரூமுக்கு சென்றால். அண்ணா எனக்கு சென்னையில ஒரு சின்ன வேலை இருக்கு நான் வர எப்படியும் நாலு நாள் ஆகும் என்று சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்ப தயாரானான்
எல்லோரும் அண்ணி ய பத்திரமா பார்த்துக்கோங்க என்று அகி மகி தமிழிடம் சொல்ல
மகி கவி அண்ணா கயல் இந்த ஊரையே வித்துடுவா அவளை நாங்க பார்த்துக்கணுமா பயப்படாமல் போங்க என்று சொல்ல
டேய் நான் கயல்ல சொல்லல டா நான் இசை அண்ணி யசொல்றேன் அவங்களை எங்கேயும் தனியா போக விடாதீங்க பத்திரமா பார்த்துக்கோங்க என்று சொல்லி புறப்பட்டான்
இனியன் ரூமில் இசை துணியை மாற்றிக்கொண்டு வெளியேவர இதற்காகவே காத்திருந்தது போல இனியன் அவள் அருகில் வர இசைக்கு வெட்கத்தில் கால்கள் நடுங்க ஆரம்பித்தது அதை கவனித்த இனியன் இசையின் அருகில் வந்து என்ன குல்பி கால் நடுங்குது இசையை ஒன்றும் பேசாமல் வேறு புறம் திரும்பிக் கொள்ள இன்னும் அவளை நெருங்கி சுவற்றில் கையூன்றி எனக்கு ஒரு டவுட் டாக்டர் மேடம் என்ன என்பது போல் இனியனை பார்த்தாள்
எல்லோருக்கும் வெட்கம் வந்தால் முகம் தான் சிவக்கும் உங்களுக்கு மட்டும் எப்படி காலெல்லாம் நடுங்குது டாக்டர் என்று கேட்க.. அவன் கேட்ட தோரணையில் இசைக்கு சிரிப்பு வர அவனை தள்ளி விட்டு ஹாலுக்கு வந்தாள்
அப்போது சரியாக டிவிய பருத்தி வீரன் படத்தில் வரும் ஐய்யோ பாடலில்
அய்யனாரை பார்த்தாலே
உன் நெனப்பு தாண்டா என்ற வரிகள் ஒலிக்க மகி அண்ணி சுச்சுவேஷன் சாங் ஓடுது என்றும் சத்தமாக சொல்ல
டேய் மகி சும்மா இருடா அய்யனார் காதில விழ போகுது அப்புறம் அவர் பேய் ஆட்டம் ஆடுவாறு
இனியனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து யாரைப் பார்த்து அய்யனார் ன்னு சொல்ற என்று அவன் எகிற
இசை நிதானமாக மகியிடம் ஏண்டா உங்க அண்ணன் கண்ணாடியே பார்க்க மாட்டாரா போய் பாக்க சொல்லுங்கடா அய்யனார் மாதிரி முறுக்கு மீசை வச்சி இருந்தா அய்யனார் என்று சொல்லாமா சித்தார்த் மல்ஹோத்ரா ன சொல்ல முடியும் என்று இசை நக்கலாக கூற
மகி நானும் கேட்கணும்னு நினைச்சேன் டார்லி நீ ஏன் எங்க அண்ணன் மீசையே எப்ப பாத்தாலும் டார்கெட் பண்ற
அப்போது அங்கு வந்த அகி அது தெரியாதா உனக்கு சித்தார்த் மல்ஹோத்ரா ஒரு படத்தில மீசை இல்லாம சாக்லேட் பாய் மாதிரி அழகா இருப்பாரு அதனாலதான் நம்ப அண்ணாவையும் ஸ்வீட்டி அந்த மாதிரி கற்பனை பண்ணி சொல்றாங்க அப்படித்தானே ஸ்வீட்டி என்று கேட்க
அகி ஸ்வீட்டி என்று இசையை கூப்பிட
மகிழும் தமிழும் சண்டைக்கு வர ஆரம்பித்தனர்
நீ ஏன்டா அம்முவ ஸ்வீட்டி னு கூப்பிடுற
ஆமாண்டா ஏன் டார்லிங்க நீ எப்படி அப்படி கூப்பிடலாம்
ஏன் நீங்க மட்டும் கூப்பிடலாம் நான் கூப்பிடக் கூடாதா ஸ்வீட்டி நீயே சொல்லு என்று அகி இசையுடன் கேட்க
டார்லி அவனை அப்படி கூப்பிட வேண்டாம்னு சொல்லு
ஆமாம் அம்மு என்று தமிழும் கூற
இசை பாவமாக தலையில் கை வைத்து சோபாவில் உட்கார .அவளின் நிலையை பார்த்து இனியன் வாய் விட்டு சிரிக்க அவன் சிரிப்பில் கடுப்பான இசை டேய் மொத உங்க அண்ணன சிரிக்க வேண்டாம் சொல்லுங்க
இப்ப என்னடா உங்களுக்கு பிரச்சனை நீங்க மட்டும் என்ன கூப்பிடலாம் அவன் கூப்பிடக் கூடாதா
அதான என்று இனியன் எடுத்துக்கொடுக்க இனியனை மேலும் அவள் முறைக்க நியாயப்படி பார்த்தா நான்தான் மூணு பேர் கிட்டயும் சண்டை போடணும். அவள் காதோரம் பேச இசைக்கு அவன் செயலில் வெட்கம் வந்து கால்கள் நடுங்க ஆரம்பித்தது ..இனியன் அவள் செயலில் சிரித்துக்கொண்டே மீண்டும் அவள் காதருகில் என்ன டாக்டர் மேடம் கால் மறுபடியும் நடுங்குது என்று நக்கலாக கேட்க
மகி உனக்கு எப்படிடா டார்லி ய ஸ்வீட்டி என்று கூப்பிட தோனுச்சு என்று கேட்க உனக்கு தான் ஏற்கனவே ஆள் இருக்குல்ல அவளை போய் கூப்பிட வேண்டியது தான எதுக்கு எங்ககிட்ட போட்டிக்கு வர என்றுமகி அகியை இனியனிடம்போட்டுக் கொடுக்க
என்னடா அவன் சொல்றதெல்லாம் உண்மையா யார் அந்த பொண்ணு. அது வந்த அண்ணா அது வேறு யாருமில்லை நம்ப மலர் தான். மலர் என்று தெரிந்தவுடன் இனியனுக்கு கோபம் தலைக்கு ஏற அகி அடிப்பதற்காக கையை ஓங்ககுறுக்கே வந்த அந்த அடியை பெற்று கொண்டாள் இசை
ஏய் நீ எதுக்கு டி குறுக்க வந்த
அவன் யாரை லவ் பண்ணுறனு தெரியுமா அவளை என் பொண்ணு மாதிரி வளர்த்துட்டு இருக்கேன் ..அவளைப் போய் என்று மறுபடியும் அகியை அடிக்க வர..அவன் ஓங்கிய கையை தடுத்து நிறுத்தி..
மகி மொத உங்க அண்ணனை விசாரிக்காமல் கோவத்துல சட்டுபுட்டுனு அடிக்க வேண்டாம்னு சொல்லு இது என்ன எப்ப பார்த்தாலும் கையை நிட்ற பழக்கம் இப்படியே இருந்தார் நா அவர் கூட யாருமே இருக்க மாட்டாங்க .
இவர் மட்டும் 19 வயசுல காதலிக்கலாம் நீங்க காதலிக்கக் கூடாதா இல்ல அப்படி அவன் என்ன தப்பு பண்ணிட்டான என்று கேட்க
தப்பு தான் மலர் பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது .. தெரிஞ்ச நீ இப்படி பேசமாட் ட
எனக்கு எல்லாம் தெரியும். எனக்கு மட்டுமல்ல உங்க தம்பிக்கும் தெரியும்
இவன் காதலிக்குறது மலருக்கு தெரியுமா
இல்ல இன்னும் மலருக்கு தெரியாது அவ படித்து முடிக்கிற வரைக்கும் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சொல்லியிருக்கான் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க.. காதல் என்பது யாருக்கும் எப்ப வேணா யார் மேல வேணாலும் வரலாம் .மொதல்ல ஒருத்தங்க என்ன சொல்றாங்கன்னு நீதானம்மா கேளுங்க உங்களோட முன்கோபத்தை மட் குறைக்க ட்ரை பண்ணுங்க இதனால நீங்க உங்கவாழ்க்கையில ஒவ்வொரு நபரையாஇழந்துட்டு வரீங்க தயவுசெஞ்சு நீங்க இத பற்றியும் சிந்தித்துப் பாருங்கள் அதுக்கப்புறம் முடிவெடுங்கள் என்று நேருக்கு நேராக முதன்முறையாக இனியன் இடம் பேசினாள்
தன் தம்பியாக இருந்தாலும் தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு பையனை அடிப்பது தவறு என்று புரிந்து கொண்ட இனியன் இசை சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் யோசிக்க ஆரம்பித்தான்
அவள் மறை முகமாக யாரைக் குறிப்பிடுகிறாரள் என்பது தெரிய தேவாவிடம் கோபப்பட்டு கைநீட்டி யது தவறு என்பதை புரிந்து கொண்டான்..
இத்தனை நாள் பேசாத பொண்டாட்டி முதல் முறையாக பேசியது அவனுக்கு சந்தோஷம் தர அவளை காண சென்றான்.. இசையோ இவனை திட்டி கொண்டு இருந்தாள் .. எப்போ பார்த்தாலும் உங்க அண்ணனுக்கு வேற வேலை இல்லயாட.. அப்பப்பா என்ன அடி ..
டார்லி ரொம்ப வலிக்குதா.. என்று அப்பாவியாக மகி கேட்க..
வாடா போட்டு கொடுத்து இந்த சண்டையை தொடங்கி வச்சிட்டு இப்போ அப்பாவி மாதிரி கேக்குறத பாரு இப்ப மட்டும் என்கைல ஏதாவது மாடுச்சு செத்த டா நீ
மகி டார்லி நீ என் அவனை அடிக்கும் போது குறுக்க போன ..
பாவம் டா அகி . என்று சொல்ல
யாழ் சாரி டா .. இனிமே இப்படி பண்ண மாட்டேன் .. என்று இனியன் மனதார மன்னிப்பு கேட்க.
டேய் உங்க அண்ணாவ போக சொல்லுங்க இல்லைனா நா இந்த வீட்ட விட்டு போய்டுவெண் என்று மிரட்ட
.
உன்னால் என்ன விட்டு எங்கேயும் போகமுடியாது .. நீ எங்கே இருந்தாலும் என்கிட்ட வந்துருவ..
இனியனின் காதலை எண்ணி சந்தோஷம் கொண்டாலும் தன்னால் இந்த குடும்பத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயம் இசையை தாக்க ..
அவனா என்ன தேடி இங்க வரத்துக்குள்ள நானே அவன் கிட்ட போய்டுறேன் …
இசையின் எண்ணம் நடக்குமா நடக்க விட்டுவிடுவனா அவன்…..