14. கண்ணாளனின் கண்மணியே!!!

0
641

ஈவினிங் ரிசப்ஷன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது… வீட்டில் இருந்தபடியே மணமக்களுக்கும் அலங்கார ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது…. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹெங்காவில் அப்சரஸாக வந்திரங்கினாள் மகி …

அபய்க்கோ அவளை பார்க்கும் ஒவ்வொரு தருணமும்,”ச்ச அவளை நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..” என்று எண்ணி கொண்டிருந்தான் பாவம் அபய் அறியவில்லை அவனை அறியாமலேயே அவன் மனம் அவள் பின்னால் செல்வதை…. ஒவ்வொரு கணம் அவளை பாக்கும் போதும் அவளை நோக்கி செல்லும் மனதை அடக்குவதே இவன் வேலை ஆயிற்று…

இருவரும் ஒரு சேர காரில் அருகருகில் அமர்ந்திருந்தனர் அவன் அவளை பாக்காமல் இருக்க மொபைலில் மூழ்கினான்…

மகியோ,”இவரு காலையில யாரு கிட்ட என்ன பத்தி இவ என் பொண்டாட்டி அப்படி உரிமையா பேசிக்கிட்டு இருந்தாரு.. ஆனா நேர்ல நம்மள பாத்தா எரிஞ்சு விழராறு…நம்ம அப்பா அம்மா கிட்ட எந்த பிரச்சினையும் பண்ணல பாசமா தான் பேசாரரு.. கடவுளே இவரு எப்படிபட்டவருனு புரியவே மாட்டேங்குதே இவரு
அந்நியனா.. அம்பியா.. ரெமோவா… என்று மனதினுள் குழம்பி தவித்தாள்…

அந்த நகரத்தின் முக்கிய பிரமுகர்கள், பெரும் புள்ளிகள் அனைவரும் பிரம்மாண்டமான அந்த 5 நட்சத்திர ஹோட்டலில் அரேஞ்ச் பண்ணி இருந்த ரிசப்ஷன் ஹாலில் அமர்ந்திருந்தனர்…
ஒருபுறம் பலவகை உணவுகள் அடங்கிய பப்பே குழந்தைகளுக்கென பார்க், மெல்லிய மேற்கத்திய இசை போன்ற அரஞ்சுமென்டுகள் அமைத்திருந்தனர்…

ரிசப்ஷனும் தொடங்க ஒவ்வொருவரும் வந்து பரிசு கொடுத்து வாழ்த்திவிட்டு பப்பே ஹாலுக்குள் நுழைந்தனர்…

அங்கே பாட்டியும் முத்துக்குமார் தம்பதியினர்களும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர்… பாலாவோ முக்கியமான அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு அனைத்து உபசரிப்புகளையும் பண்ணிகொண்டிருந்தான்…

அழையா விருந்தாளியாக வந்திருந்தாள் கீர்த்தி… அவளை பார்த்தவுடனே பாலாவுக்கும் அபயுக்கும் இவள் ஏதோ திட்டத்துடன் வந்து இருக்கிறாள் என்று புரிந்தது….

கீர்த்தியும் அவர்களது எண்ணத்தை பொய்யாக்காமல் மேடை மீது ஏறி மைக்கை பற்றி பேசத் தொடங்கினாள்..
ஹாய்… வெல்கம் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்…. தி கிரேட் பிஸ்னஸ்மேன் அபய்க்கு,
திருமண வாழ்த்துக்கள்….என்ன இருந்தாலும் அபய் மாதிரி ஒரு பெரிய மனசு யாருக்கும் வராது ஏன்னா தனக்கு பி.ஏ வா இருக்கர ஒரு பொண்ணையே கல்யாணம் பண்ணியிருக்கராரு…

இல்ல இப்படி எத்தனை பாஸ் தனக்கு கீழே வேலை பார்க்கிறவங்கள கல்யாணம் பண்ணிக்க முடியும் அந்த விஷயத்துல அபய் உனக்கு, “ஹேட்ஸ் ஆப் டு யூ… “என்றாள்…

எனக்குத் தெரிஞ்சு மே பி இது லவ் மேரேஜா கூட இருக்கலாம்… எனிவே என்ன இருந்தாலும் என் நண்பனுக்கு வாழ்த்துக்கள்… என்ற கீர்த்தி அதோடு நில்லாமல் மேலும் இந்த விழாவை சிறப்பிப்பதற்காக புதுமண தம்பதியினர்கள் தங்கள் முன் டான்ஸ் ஆடுவார்கள் என்ற அறிவிப்பையும் சேர்த்தே வழங்கினாள்… அந்த அறிவிப்பை கேட்ட பின்பு அந்த அரங்கத்தில் ஒரு சலசலப்பு…..அவனுடைய ஆபிசில்
உள்ளவர்களுக்கும் அதே குழப்பம் தான்… ஆனால் அபயின் குணம் அறிந்தே அமைதியாக நின்றனர்…

கீர்த்தி எதிர்பார்த்ததும் அதே தான்.. அதை பொய்யாக்க எண்ணிய அபய் பாலாவை பார்த்து கண்ணசைத்தான்…. அதை புரிந்து கொண்ட பாலா சென்று மேற்கத்திய இசையை போட…. அபய்,மகியை கூட்டிக்கொண்டு டான்ஸ் ப்ளோரை நோக்கி சென்றான்… அவன் கைப்பற்றி இழுத்து சென்றதிலேயே மகி அதிர்ச்சி விலகாமல் அவனை பார்த்தபடியே சென்று கொண்டிருந்தாள்…. அவன் கீழே இறங்கி வரும்போதே சலசலப்பு குறைந்திருந்தது…

அவர்கள் டான்ஸ் ப்ளோர் சென்றதும்.. அவளின் மெல்லிடையை இடது கையாலும் அவளுடைய வலது கையை தன் கையிலும் கோர்த்துக்கொண்டு அபய் அவளை பார்க்க அந்த பார்வையை உணர்ந்தவளோ அவன் இடையை தன்னுடைய மற்றொரு கையால் பற்றி இருந்தாள்… அவனின் அசைவுக்கு ஏற்ப இவளும் ஆடிக்கொண்டிருந்தாள்… அதை பார்போருக்கே அவர்களுக்குள் அழகிய கெமிஸ்ட்ரி உள்ளது என்பது அப்பட்டமாய் தெரிந்தது… அந்த மேற்கத்திய இசை முடியும் வரை அவளுடன் ஆடியவன்… பின்பு அவளை தன் கை வளைவில் நிறுத்தி மைக்கை பற்றி பேச ஆரம்பித்தான்அபய்….

ஹாய் எவேரிஒன்….. இங்க கீர்த்தி சொன்னது உண்மைதான் நான் ஏன் பி.ஏ வை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்… நான் வசதியையோ வேறு எந்த ஸ்டேட்டஸ்யும் பார்த்து கல்யாணம் பண்ணிக்கல… என் மனசுக்கு எது புடிச்சிருக்கோ,அதை நான் கண்டிப்பா செய்வேன்…. அந்த மாதிரி தான் என் மனசுக்கு புடிச்ச வாழ்க்கையையும் நான் தேர்ந்து எடுத்து இருக்கேன்… இதுக்கு மேலயும் உங்க யாருக்காச்சும் ஏதாவது சந்தேகம்னா நீங்க என்கிட்ட கேட்டுக்கலாம் என்க அரங்கத்தில் ஒரே அமைதி….. பின்பு அபயே பேச ஆரம்பித்தான்…. ஐ ஹெவ் டு தேன்க் கீர்த்தி பார் கிரியேட்டிங் திஸ் ஆபோர்ச்சுனிட்டி என்று உரையை முடித்தான்…..

பேசி முடித்த அபய் மகியுடன் கை கோர்த்துக்கொண்டே வர… ஏற்கனவே கருத்திருந்த கீர்த்தியின் முகம் மேலும் கருக்க தொடங்கியது அவளுள் இவர்கள் இருவரையும் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது…..
அவர்கள் இருவரையும் அந்நியோநியத்துடன் பார்க்கையில் இரு குடும்பத்தினருக்கும் கண்கொள்ளா ஆனந்தம்..

பாலாவும்,முத்து தம்பதியினரும் அவர்களது இல்லத்திற்கு சென்றனர்…
பாட்டி,மகி,அபய் ரிசப்ஷனை வெகு விமரிசையாக முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்க்கையில் மணி 11 ஐ காட்டியது….

சோர்வுடனே பாட்டியும் அபயும் ரூமுக்கு செல்ல மகி மட்டுமே இருவருக்கும் பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு பாட்டியிடம் கொடுத்து விட்டு அவனுக்கும் குடுக்க சென்றாள்… அவனிடம் நெருங்கி பால் டம்ளரை குடுக்க அவன் மறுப்பேதும் சொல்லாமல் குடித்துவிட்டு அவளை பார்த்தவன்… என்ன நான் எப்படி பட்டவனு தெரியாம குழம்பி போயிருக்கையா??? இன்னிக்கு நீ பாத்ததெல்லாம் நாடகம் அவ அந்த கீர்த்தி என்ன பப்ளிக்ல அசிங்கப்படுத்தணும்னு நினைச்சதுக்கு நான் குடுத்த பதிலடி….
இதையெல்லாம் அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு என் கிட்ட நெருங்க ட்ரை பண்ணாத புரியுதா என்றான் மிரட்டும் தொனியுடன்…..
அவளும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நீங்க பேசுனத வச்சு நான் கூட நீங்க நல்லவங்கன்னு நினைச்சுட்டேன்…. ஹோ அப்போ உங்களுக்கு தேவைப்படும்போது தேவைபட்ர எடத்துல உங்க பொண்டாட்டியா நடிக்க எனக்கு எவ்ளோ விலை குடுத்து வாங்க சொன்னிங்க உங்க பாட்டி கிட்ட… உங்களை சொல்லி ஒன்னும் குத்தமில்லை உங்களுக்காக என்ன கேட்டங்கள உங்க பாட்டி அவங்கள சொல்லணும்… அவங்களோட வளர்ப்பு தானே நீங்க அப்பறம் அப்படி தான் இருப்பிங்க என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேச தொடங்க…
அவளது பஞ்சு போன்ற கன்னத்தை பதம் பார்த்தது அவனது வலிய கரங்கள்…..

ரிசப்ஷனில் அவளை பற்றி ஆடியவன் கண்களில் அத்தனை காதலை பார்த்தவள்… அது அத்தனையும் நடிப்பு என்று சொல்லும் போது அவனிடம் காதலை எதிர்பார்த்த மனசு ரணமாகி வார்த்தைகளை முள்ளாய் கொட்டியது… அதற்கு பரிசாகவே அவனிடம் அறையை வாங்கி இருந்தாள்…

அபய்,”என்ன கொஞ்ச இடம் குடுத்த உடனே இவ்ளோ பேசரையா???? நீ இந்த சொகுசு வாழ்க்கை வாழரதே என் பாட்டியால தான் ஆனா அவங்கலேயே தப்பா பேசரையா…. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன கொன்னுடுவேன்…..என் கண்ணு முன்னாடியே நிக்காத போ…”என்றான்…

துக்கம் தாளாது குளியலைறைக்குள் சென்ற அவள் சவரை திறந்துவிட்டு நின்றாள்… ஷவரில் இருந்து வரும் தண்ணீரோடு கண்களில் இருந்து வலியும் கண்ணீரும் இணைந்திருந்தது…. இந்த வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களில் இதுவும் வழக்கமான ஒன்றாக ஆனது….

வழக்கம் போல் கவலையை மறக்க கண்ணீரோடு உறவாடியவள் வந்து அவன் குடுத்த போர்வையை விரித்து தரையில் படுத்து கொண்டாள் மகி….

அவளிடம் கவலையை விட குழப்பமே மேலோங்கி இருந்தது.. அவன் கண்கள் பொய் சொல்லவில்லை… இருந்தும் ஏன் இந்த நாடகம் என்ற குழப்பமே அவளை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது என்ன இருந்தாலும் இவனுடன் தான் வாழ வேண்டும் என முடிவு எடுத்தவள் அப்படியே உறங்கி போனாள்…..

இரண்டு நாள் உடல் சோர்வும் மனசோர்வும் அவளை பாடாய் படுத்த எழுந்து குளித்து முடித்து கீழே வந்தவள்… தன் கணவனுக்கு காபியை எடுத்துக்கொண்டு சென்றாள்.. அங்கு அவன் எழாமல் இருக்க இவளே அவனை தட்டி எழுப்பினாள்… எழுந்து கண்விழித்தவன் அவளது சோர்ந்த முகத்தை பார்த்து நேத்து இவ கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டமோ என்று ஒரு நிமிடம் யோசித்தவன்… இவ பேசின பேச்சுக்கு இது தேவை தான் என்று நினைத்துக்கொண்டு காபியை வாங்கி பருகியவன் அவளை பார்க்காது விர்ரென்று சென்று விட்டான்…

அவளின் கலையிழந்த முகத்தை பார்த்த பாட்டிக்கோ… இது பிறந்த வீட்டை பிரிந்திருந்த சோகம் போல என எண்ணியவர்….கூடிய சீக்கிரம் இவர்களை மறுவீடு அனுப்ப வேண்டும் என எண்ணினார்…

அபய் தோட்டத்தில் கொஞ்சம் காலாற நடந்தவனுக்கு பல சிந்தனைகள்… எனக்கு அவ மேல அப்படி என்ன கோவம் என யோசிக்க தொடங்கினான்…

ஆரம்பத்தில் அவளை பாக்கும் போதே கொஞ்சம் வித்யாசமான தோற்றம் அது நல்லா தான் இருந்துச்சு.. அப்பறம் எப்பவும் என்ன கொஞ்சம் பீதியோட பாக்கற கண்கள், அவ எதிர்பாக்கற சுய மரியாதை இதெல்லாம் எனக்கு புடிச்சு தானே இருந்துச்சு அப்பறமும் ஏன் என்னால அவளை மனைவியா ஏத்துக்க முடியல…என்று யோசித்தவனுக்கு கிடைத்த பதில் ஆமா அவ என்ன ஏமாத்தி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா கேட்டா நான் உங்க போட்டோவே பாக்கலனு சத்தியம் பண்ணுவா.. சரி அதை கூட நம்புவோம் ஆன என்ன பத்தின டீடெயில்ஸ் கூடவா தெரியாம இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தான் அபய்….

யோசித்துக்கொண்டே ரூமிற்குள் வந்து ஆபிஸ்க்கு ரெடி ஆகி கொண்டிருந்தவனிடம் தயங்கியபடியே
அருகில் வந்து நின்றாள் மகி… அவளை பார்த்தவன் என்ன என்று புருவம் உயர்த்தி வினவ நான் ஆபிஸ்க்கு வரலாமா என்றாள்…

அவனோ அவளை பார்க்காமல் எந்த ஆபீஸ்க்கு என்றான்…

மகி,”நான் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஆபீஸ்ல தானே வேலை பாத்தேன்…அதை அப்படியே கண்டிநியூ பண்ணலாம்னு நினைக்குறேன்.. அதுவும் இல்லாமே நான் என் சொந்த காலுல நிக்கணும்னு ஆசைப்படறேன்…” என்றாள்….

அபய்,” ஏன் இங்க யாரும் உனக்கு சோறு போட மாட்டோம்னு சொல்லலேயே… அதனால உனக்கு சொந்த காலிலே நிக்க வேண்டிய அவசியம் இல்ல… நீ எப்பவுமே எனக்கு அடிமை தான் அண்ட் ஒன் மோர் திங்.. உன்ன வேலையை விட்டு தூக்கியாச்சு…உன்ன இங்க இருக்கற டைம் நான் பாத்து டென்ஷன் ஆகறது பத்தாதுன்னு வேலை செய்யற இடத்துலயும் டென்ஷன் ஆகனுமா??” என்றான்..

மகி,”நான் வேற வேலைக்கு ட்ரை பண்ணவா???…”

அபய்,” நீ குட்டிகரணமே அடிச்சாலும் என்ன தாண்டி உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது… இப்போ வழிய விடு என்று கீழே இறங்கியவன் அவசரமாக சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆபீஸ் சென்றான்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here