14.என்னவள் நீதானே

0
566

சிவா ஆராவின் நினைப்பிலேயே தன் அலுவலகத்தில் வலம் வர… ச்ச இப்படி அவ நினைப்புலயே இருக்கறதுக்கு பதிலா அவளுக்கே போன் பண்ணி எப்படி இருக்கானு கேப்போம்னு யோசிச்சவன்.. தன் அலைபேசியை எடுத்து ஆராவிற்கு அழைக்க எதிர்முனை பிஸி என்று வர மீண்டும் இருமுறை அழைக்க திரும்பவும் அதே போல் வர கடுப்புடன் மொபைலை டேபிளின் மீது எறிந்தவன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள அருகில் இருந்த கிளாசில் இருந்த தண்ணீரை எடுத்து பருக ஆரம்பித்தான்..

அந்த நேரம் அலைபேசி அடிக்க அதை எடுத்து பாக்க ஆராவின் பெயர் தெரிய..கோபத்துடன் அதை எடுத்தவன்.. எதிர்முனையில் ஆரா ஹலோ என்க.. இவனோ உடம்பு சரியில்லைனா கூட போன கீழ வைக்க மாட்டீங்களோ மேடம்… அப்டி எந்நேரமும் வெயிட்டிங் வர அளவுக்கு என்ன தான் பேசுவிங்க என்று பொரிந்து தள்ளி கொண்டிருந்தான் சிவா..

ஆராவோ அப்பப்பா நம்ம ஆளுக்கு இந்த கோவம் மட்டும் குறையாது போல என மனதினுள் நினைத்தவள்.. திட்டி முடிச்சுட்டிங்களா… இப்போ நான் பேசவா என்றவள்.. அவன் பதிலை எதிர்பாராமல்
இவ்ளோ நேரம் நானும் ஜானுவும் பேசிக்கிட்டு இருந்தோம்.. ஆமாம் இவளிடம் ஜானு நம்பர் மட்டுமே இருக்க எப்படி அவளிடம் சிவாவை பற்றி கேப்பது என தயங்கியவள் பொறுமை இழந்து அவளே ஜானுவுக்கு போன் பண்ண அதை எடுத்த ஜானுவோ அவளை பற்றி நலம் விசாரிக்க இவளும் சிறுது நேரம் பேசி பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்…

ஆரா தயங்கியவாறே ஜானுவிடம்,”எனக்கு உன் அண்ணா நம்பர் வேணும்னு” கேட்டாள்..

ஜானுவோ அப்டி வாடி வழிக்கு என்று மனதில் நினைத்துக்கொண்டு ஆரா,”அண்ணன் பிஸினஸ்மேன் அதனால நம்பர் எல்லாம் சீக்ரெட்டா தான் வச்சுறுப்பான் பெருசா யாருக்கும் தரமாட்டான்” என்று யோசைனையாய் சொல்ல.. அப்படியா சரி விடு என்று ஆரா வருத்தமாய் சொல்ல… அதை புரிந்து கொண்ட ஜானு சிரித்து கொண்டே சரி இரு சொல்றேன் என நம்பரை சொல்ல இவளோ அவன் நம்பரை மனதில் பதித்துக்கொண்டாள்..

அதனால் தான் சிவா வெயிட்டிங்கில் நம்பரை பார்த்த பின்பு தன்னவன் தான் என சந்தோசப்பட்டவள் பின்பு அவளே அழைத்து தன் நிலையை விளக்கும் முன் அவன் பொறிந்துவிட்டான்… என தன்னிலையை சிவாவிடம் விளக்கினாள் ஆரா..

இமைப்பொழுதில் தனக்காக தான் இவ ஜானுவுக்கு அழைத்திருக்கிறாள் என அறிந்த சிவாவோ சிரித்துக்கொண்டே, “சரி மேடம் எதுக்கு என் நம்பர் வாங்குனாங்க” என நக்கலாக கேட்டான்..

ஆராவோ தன் நாக்கை கடித்து விட்டு ,” ஹான் அது… அது.. வந்து உங்களுக்கு நன்றி சொல்லனும்னு தான் வாங்குனேன்” என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்..

அதை கேட்டு கடகடவென சிரித்த சிவா,”சரி சொல்லு என்றான்”

ஆரா,”ஹான்…. என்ன சொல்ல”

சிவா,”எதுக்கு என் நம்பர் கேட்டு வாங்குனியோ அதை சொல்லு” என்று அவளிடம் விடாமல் வம்படித்துக்கொண்டிருந்தான்..

ஆராவும் சிணுங்களுடனே,” ரொம்ப நன்றிங்க… என்ன காப்பதுனத்துக்கு..”என்றாள்..

சிவா,”சரி வெறும் நன்றி மட்டும் தானா… வேற ஏதும் கிடையாதா???”என கேட்டான்..

வேற என்ன என அவ கேக்க.. அவனோ ஒரு நாள் டின்னர் போலாம்.. நம்ம எல்லாரும் சரியா என்னைக்குன்னு நானே சொல்றேன் அப்பறம் போற அன்னிக்கு உங்க வீட்ல வந்து நானே உன்ன பிக்கப் பன்னிக்கறேன் என்றவன்.. அதன் பின் அவள் உடல்நிலையை கேட்டறிந்தவன் கொஞ்சம் புத்திமதியையும் கூறிவிட்டே வைத்தான்…

இதற்கிடையில் ஜானு ஆதவை அழைக்க இவ என்ன இந்த நேரத்துல போன் பண்ரா என யோசித்துக்கொண்டே எடுத்தவன்… சொல்லு ஜானு என்க.. அவளோ ஆரா தன்னிடம் தன் அண்ணனின் நம்பர் வாங்கியதை கூறிவிட்டு…
பாருங்க உங்க தங்கச்சி எவ்ளோ ஸ்பீடா இருக்கா.. நீங்களும் தான் இருக்கிங்களே என சலித்துக்கொண்டாள்..

ஆதவ்வோ அய்யோ இவ மலை ஏறதுக்குள்ள எறக்கணுமே என நினைச்சவன்… ஜானு ஆபீஸ் வந்துட்டேன் அப்பறம் கால் பண்ணவா என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் போனை அணைத்து விட ஜானுவோ மவனே நீ என்கிட்ட மாட்டற அன்னிக்கு உனக்கு இருக்கு என மனதிற்குள் அவனை அர்ச்சித்தாள்…

ஆபீஸ் வந்த ஆதவ் நேராக சிவாவின் அறைக்கு சென்றவன்.. அவனை புன்னகையுடன் எதிர் கொள்ள சிவா,”என்ன மச்சி வாயெல்லாம் பல்லா இருக்கு” என்றான்…

ஆதவ்வோ அசராமல்,”இல்ல என் மச்சானுக்கு மண்டைக்கு மேல பல்ப் எரிஞ்சுச்சாமே” என்று விடாமல் அவனை வாரினான்..

சிவா,”டேய் அதுக்குள்ள அந்த லூசு உன் கிட்ட ஒப்பிச்சுடுச்சா”

ஆதவ்,”பார் யூவர் கைண்ட் இன்பர்மஷன்.. விஷயத்தை சொன்னது என் தங்கச்சி இல்ல..
உன் தங்கச்சி” என்றான்..

சிவா ஆதவ்வை முறைத்துக்கொண்டே அதானே உங்களுக்கு தெரியாம நான் ஏதாச்சும் பண்ண முடியுமா?? ஆன மச்சான் அவ கிட்ட நான் பார்மலா தான் பேசுனேன்.. நீங்களா ஏதாச்சும் கற்பனையை வளத்துக்காதீங்க.. அப்பறம் அவளை ஒரு நாள் டின்னருக்கு கூப்பிட்டுருக்கேன் நம்ம எல்லார் கூடவும் வரதுக்கு.. என்றான்.

ஆதவ்,” சரிடா…அப்பறம் நமக்கு வந்த போன் கால்.. என்ன இடிக்க வந்தவன் அவனை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா”

சிவா,” ஆமா மச்சான்.. சொல்ல மறந்துட்டேன்.. அன்னிக்கு ஆராவுக்கு அடிபடறதுக்கு முன்னாடி ராம் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்… நம்ம கிட்ட தட்ட நெருங்கிட்டோம்…”

ஆதவ்,” அதுவா என்றான் யோசனையுடனே..”(அவர்கள் மிச்சம் வச்ச ஒன்று)சிவாவும் அதை ஆமோதிப்பவனாய் தலை அசைக்க… இருவர் முகத்திலும் கோபக்கணல்
எரிந்து கொண்டிருந்தது…

வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்களுக்கு எதிரிகள் இல்லையென்றால் தான் ஆச்சரியம்..
முகம் அறியாத எதிரி ஒரு புறம்… ருத்ராவும் அவங்க அப்பாவும் இன்னொருபுறம் என்று இவர்களும் எல்லாத்தையும் சமாளித்து கொண்டு தான் இருக்கிறான்…

அன்று சைட்டில் ஆக்சிடெண்ட் ஆனதுக்கு அப்பறம் இருந்தே ருத்ராவின் அனைத்து மூவ்களையும் கணித்தவன்.. அவர்கள் செல்லுமிடமெல்லாம் செக் வைத்திருந்தான்…தற்போது அவளின் நிலையோ சிவா மனது வைத்தால் தான் எண்ணுமளவிற்கு இருந்தது…

ருத்ராவிற்கோ கோபம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருக்க… நேராக சிவாவை தேடி அவனது அலுவலகத்திற்கு நுழைந்தாள்…
அனைவரும் தடுக்க எதையுமே கேக்காமல் விறுவிறுவென்று சிவாவின் அறைக்கு நுழைய அங்கோ ஆதவ்வும் சிவாவும் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க.. அது மேலும் ருத்தராவை எரிச்சலடைய செய்தது..

ருத்ராவோ சிவாவை பார்த்து, “ஹே” என கர்ஜிக்க.. அதை கேட்ட ஆதவ்வோ அவளை திட்ட வாயெடுக்க சிவா அவனை பிடித்துக்கொண்டான்..

சிவா ருத்ராவை பார்த்து,”என்ன மேடம் இங்க எதுக்காக வந்திருக்கீங்க” என்றான்.

ருத்ரா,”என்ன எந்த பக்கமும் போக விடாம ப்ளாக் பண்ணிட்டா.. நீ ஜெயிச்சுறுவியா???”

சிவா,”ஓஓ அப்பறம் ஏன் மேடம் இங்க வந்துருக்காங்க ஆதவ்” என்று நண்பனை பார்த்து கேக்க.. ஆதவ்வோ,” தெர்ல மச்சான் ஒரு வேளை அவங்களுக்கு தெரிஞ்சவங்க இங்க இருப்பாங்க போல அதான்” என்றான்..

ருத்ரா,”ஹே என்னங்கடா நக்கலா.. உங்கள மொத்தமா முடிச்சு காட்டறேன் டா” என்றாள்..

சிவா,” மிஸ் ருத்ரா.. நீ பண்ண ஒரு தப்புக்கே உண்ண இந்த அளவுக்கு கொண்டு வந்துருக்கோம்.. இதுக்கு மேலயும் குறுக்கு வழியில் போகனும்னு நினைச்சா.. அப்பறம் வர பின்விளைவுக்கு நான் பொறுப்பில்ல” என்றான்..

ருத்ராவோ அவர்களை தீப்பார்வை பார்த்துவிட்டு உங்களை பாத்துகிறேன் டா.. என்று உரைத்துவிட்டு கதவை அடித்து சாத்திவிட்டு வெளியேறினாள்…

ஆதவ்வோ சிவாவிடம்,”மச்சி மழை பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு.. ஏன்டா இவ எப்பவுமே இப்படி தானா??? என்க சிவவோ மச்சி இவ இப்படி தான்னு நமக்கு தெரியுமே விடு எங்க வரைக்கும் போரானு பாப்போம்.. இப்போ வா டீ குடிப்போம் என்று ஆதவை இழுத்துக்கொண்டு வெளியேறினான்…

ருத்ரா சிவாவின் அலுவலகத்தில் இருந்து வெளியேறியதை ஒரு ஜோடி கண்கள் கூர்மையுடன் பார்த்துக்கொண்டே அவளை பின் தொடந்தது…

அது யாருன்னு கெஸ் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here