வழக்கிற்கான தீர்ப்பு நாளை என்பதால் மிகவும் கலக்கமுற்று இருந்தாள் நிர்பயா. அனைத்து பக்கமும் தசரதனுக்கு தடையாக இருந்தது. ஆனாலும் ஒரு சிறு பயம், ஒருவேளை இதற்கு முன்னர் செய்தது போல் ஏதாவது ஏமாற்று வேலை செய்தால் என்ன செய்வது? அதற்கு விடமாட்டேன் நேரே நீதிபதி வீட்டிற்கு அருகில் சென்று யாரேனும் சந்தேகப்படும்படி வருகிறார்களா என்று பார்ப்போம். அப்ப தான் திருப்தியா இருக்கும் என்று நீதிபதியின் வீட்டை நோக்கி விரைந்தாள்.
கிளம்பிய சிறிது நேரத்தில் அவர் வீட்டிற்கு அருகாமையில் தன்னுடைய காரை நிறுத்தி அவள் நோட்டம் விட ஆரம்பித்தாள்.சந்தேகப்படும்படி எவரேனும் வந்தால் துவம்சம் செய்து வரும் எண்ணத்தில் தான் அவள் இருந்தாள். நேரம் ஆக ஆக அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு உறங்க தயாராகிக் கொண்டிருந்தனர் அவர்கள் வீட்டில். அந்த நேரம் நிரஞ்சனா நிர்பயா விற்கு கால் செய்தாள்.
நிர்பயா,” சொல்லு அக்கா என்ன விஷயம்?
நிரஞ்சனா,” நீ எங்க இருக்க வீட்டுல ஆள காணோம்?
நிர்பயா,” நான் பிரியங்கா வீடு வரைக்கும் வந்து இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.
நிரஞ்சனா,” இப்ப நீ எதுக்கு அங்க போன? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க நீ ஏதோ காசு கொடுத்து தீர்ப்ப மாத்தி எழுத சொல்றா மாதிரி ஆகி விடாதா?
நிர்பயா, “அந்த மாதிரி ஏதுவும் நடக்க கூடாதுன்னு தான் நான் இங்க வந்தேன்.. நீ என்ன பண்ற நம்ம வீட்டு தோட்டகார அண்ணாவ இங்க அனுப்பி வை.. அவர் இங்க கண்காணிக்கட்டும்.. நாளைக்கு நம்மளுக்கு சாதகமா தான் முடியும் ஒரு வேளை நான் தோற்று போனா கூட உன் மூலமா போட்ட கேஸ் என கண்டிப்பா ஜெயிக்கும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..
நிரஞ்சனா, “சரி அது நாளைக்கு தானே.. இப்ப நீ அங்க இருந்து கிளம்பி வா..
நிர்பயா,” இதோ கிளம்பிட்டேன்.
மறுநாள் காலை நிர்பயாவிற்கு மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவருக்கும் கலக்கமாய் உணர்ந்தனர்.. கீழே கிளம்பி வந்தவளை வழி மறித்தார் கர்ணன்.
கர்ணன், ” நிர்பயா குட்டி நில்லு.. நாங்க உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.
நிர்பயா, “சொல்லுங்க அப்பா.. என்ன பேசனும்?
கர்ணன், “நிச்சயம் முடிஞ்சி போச்சி, உன்கிட்ட சமாதானம் பேச வந்த மாப்பிள்ளை கிட்ட இந்த கேஸ் முடிஞ்சா தான் கல்யாணத்தை பத்தி பேசுவேன்னு சொல்லிட்ட.. அவரும் உன்மேல கோபமா இருக்காரு.. நீ இந்த கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்து இருக்க?
நிர்பயா,” அதை இன்னைக்கு சாயந்திரம் சொல்றேன் அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க என்று சொல்லிவிட்டு நிரஞ்சனாவிடம் சொல்லிக் கொண்டு சென்றுவிட்டாள்.
கோர்ட்டு வளாகம், அனைவர் முகத்திலும் ஒரு பதட்டம் நிச்சயமாக தசரதனுக்கு தெரிந்துவிட்டது அந்த இடம் தனக்கில்லை என்று இருந்தாலும் இன்னொரு மனது நீ ஏன் முடிவு பண்ற இன்னும் தான் தீர்ப்பு வரலையே என்றது. நிர்பயாவிற்கும் அதே நிலைதான் என்னதான் உரிய ஆதாரங்களை கொடுத்திருந்தாலும் சாட்சிகளை கொடுத்திருந்தாலும் நீதிபதியின் தீர்ப்பு இறுதியானது. எதுவாக இருந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்று ஒரு தெளிவிற்கு வந்திருந்தாள். நித்யனோ அவளிடம் தோற்க மனமில்லாததை போல் இருந்தான்.
நீதிபதி வந்து இருக்கையில் அமர்ந்ததும் அனைவருக்கும் உள்ளூர பயம் தொற்றிக் கொண்டது.
நீதிபதி,” அனைத்து தரப்பு வாதங்களையும் சாட்சிகளையும் ஆதாரங்களையும் வைத்துப் பார்க்கும்போது தசரதன் மீது தவறு இருப்பது உறுதியாகிறது. அவர் என்னதான் அனுமதி பெற்று குளிர்பானம் நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்திருந்தாலும் ஊர் மக்களுக்கு குடிநீர் எடுக்க உரிமை இல்லை என்று ஏமாற்றி கையெழுத்து வாங்கியது கண்டிக்கத்தக்க ஒன்று. நீர் அனைவருக்கும் பொதுவானது அதை எப்படி சொந்தம் கொண்டாட முடியும். நம் உள்ளங்கையில் இருக்கும் நீர் கூட சில நொடிகளில் மண்ணில் விழுந்து விடும் அப்படியிருக்க அதை எப்படி தனதாக்கிக்கொள்ள முயன்றார் என்று நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது. அம்மக்களை ஏமாற்றி கையெழுத்து போட வைத்தது சட்டப்படி குற்றம். அதனால் நீதிமன்றம் அவருக்கு ஐ. பி. சி செக்ஷன் 465 ன் படி பத்து லட்சம் அபராதம்.. அதை கட்ட தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற வேண்டும் என்றார்.. மேலும் அரசு தொல்லியல் துறை மூலமாக தொடரப்பட்ட வழக்கில் அது அரசு தரப்பிற்கே சாதகமாக முடிகிறது.. மேலும் அரசிடமிருந்து அவர்கள் கொடுக்கும் பணமாகவோ அல்லது அவர்கள் தரும் நிலமாகவோ பெற்று கொள்ளலாம், அதன்படி அவரது குளிர்பான நிறுவனத்தை வேறு ஊரில் நிறுவுமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பளித்தார்.
தசரதனுக்கு தான் கோபம் எல்லையில்லாமல் வந்தது.. தன்னை அவமானப்படுத்திய நிர்பயாவை பழி வாங்க எண்ணினார்.. அதனால் தன் மகனிடம் இவள் உன்னையும் என்னையும் அசிங்கப்படுத்தி இருக்கிறாள். அதனால் அவளை மறந்து விடு இந்த கல்யாணம் வேண்டாம் என்றார்.
நித்யன், ” அப்படிப் பார்த்தா நான் கூட தான் அவ கூட சேர்ந்து உங்கள அசிங்கப்படுத்தி இருக்கேன். எனக்கு என்ன தண்டனை?
தசரதன் அவனை புரியாமல் பார்க்கவும் சிரித்தபடி அங்கு வந்து நின்றாள் நிர்பயா.
நிர்பயா,” என்ன மாமா என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்களா? கோபம் வரணும் அப்பதான் உங்களோட மனசு ஆறும்.
தசரதன்,” யாருக்கு யார் மாமா? உங்க கல்யாணம் நடக்காது.. நடந்தா தானே இந்த மாதிரி உன்னால கூப்பிட முடியும். புகுந்த வீட்டுக்கு வரர்த்துக்கு முன்னாடியே இவ்வளவு பிரச்சனை பண்ணி வச்சி இருக்க.. என் கம்பெனிய அங்க திறக்க விடாம பண்ணுது மட்டும் இல்லாம அந்த இடத்தை அரசு எடுததுக்கிறா மாதிரி பண்ணிட்ட. அது மட்டும் இல்ல அபராதம் கட்டலன்னா ஜெயிலுக்கு போறா மாதிரி பண்ணி வச்சி இருக்க.. அப்புறம் உன் மேல கோபம் வராம வேற எப்படி இருக்கும்? மொதல்ல இங்க இருந்து கிளம்பு.. என் பையன் உன்ன ஏத்துக்க மாட்டான்..
நித்யன், ” அப்பா, அதை நீங்க சொல்லாதீங்க.. இது என் வாழ்க்கை.. நான் தான் முடிவு பண்ணுவேன்.. இந்த ஜென்மத்தில் இவ தான் என் மனைவி..
தசரதன்,” ஏய் இவ நம்மள அசிங்கப்படுத்தி இருக்கா.. நம்ம கம்பெனி மேல கேஸ் போட்டு இருக்கா.. என்ன கோர்ட் படி ஏற வச்சி இருக்கா.. இதெல்லாம் உனக்கு பெருசா தெரியல இல்லை? நேத்து வந்த இந்த பொண்ணுக்காக என்னை எதிர்த்து பேசுறல.
நித்யன்,” ஏது? அசிங்கமா? ஏன் நீங்க இதுக்கு முன்னாடி கோர்டுக்கு வந்ததே இல்லையா? என்னவோ புதுசா வரா மாதிரி பேசுறீங்க!!
தசரதன்,” நீ முடிவா என்ன சொல்ற? இவள விட்டுட்டு என் பையனா வந்தா வா.. இல்லைன்னா இந்த சொத்து எல்லாத்தையும் மறந்துடு..
நித்யன், “அய்யோ அப்பா அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நான் என்ன பண்ணுவேன்.. இவ எனக்கு வேண்டாம்பா.
அதை கேட்ட தசரதன் மகிழ்ச்சி அடைந்த அடுத்த நொடி..
அப்படி எல்லாம் சொல்லுவேன்னு கனவு கூட காணாதீங்க.. உங்க சொத்து இல்லன்னா எனக்கு சம்பாரிக்க தெரியாதா? அது இல்லாம என் தாத்தா அவரோட மொத்த சொத்தையும் என் பேர்ல தான் எழுதி வச்சி இருக்காரு.. நான் வேலைக்கே போகாம இருந்தா கூட நடு தெருவுக்கு வர மாட்டேன்.. முடிவா சொல்றேன் கேளுங்க.
அவள சமாதானம் பண்ணிட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நம்ம வீட்டுக்கு வருவேன்.. நீங்க வந்தா சந்தோஷம்.. நீங்க வரமாட்டேன் அப்படின்னு சொன்னா கூட பரவாயில்லை.. யாருக்காகவும் எதுக்காவும் நான் இந்த கல்யாணத்த நிறுத்த மாட்டேன் புரியுதா.. என்ன டார்லிங் என்றான் நிர்பயாவை பார்த்து..
அதை கேட்டதும் கோபத்துடன் தனது காரில் ஏறி சென்று விட்டார் தசரதன்.
அவளோ வெற்றியின் பூரிப்பில் இருந்தாள்.. நிரஞ்சனாவும் கோர்ட் பார்மாலீடிஸ் முடித்து விட்டு வெளியே வந்து அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டு இருந்தாள்.. அந்த நேரம் நித்யன் இவளை பார்த்து கேட்கவும் இவள் முகத்தை சுருக்கி கொண்டு ஓடி விட்டாள்..
நிரஞ்சனா, “நித்யன் அவளுக்கு உங்க மேல கோபம் இல்ல வருத்தம் தான்..அவள பொறுத்த வரைக்கும் இந்த கேஸ் ஜெயிச்சு ஊருக்கு நல்லது பண்றது மட்டும் தான்.. அது அன்னைக்கு அவளுக்கு சின்ன கோபம் அவ ஏமாந்துடாளே அப்படின்ற ஒரு ஏக்கம்.. அதனுடைய வெளிப்பாடு தான் உங்கள ஜெயிக்கனும் அப்படின்றது.. நீங்க அவள தப்பா நினைச்சிக்காதீங்க..
நித்யன், ” நான் ஏன் அவள தப்பா நினைக்கனும்? அவள நான் எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சேனோ அப்பவே அவள என் மனைவியா என்னில் பாதியா பார்க்க ஆரம்பிச்சிடேன்.. அப்படி இருக்கும் போது அவ ஜெயிச்சா நான் ஜெயிச்சா மாதிரி தானே? இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?
நிரஞ்சனா,” இருந்தாலும் நாங்க உங்களுக்கு எதிரா கேஸ் போட்டு உங்க அப்பா சொன்னா மாதிரி இது ஒரு பெரிய சங்கடம் தானே?
நித்யன்,” உங்களுக்கு ஒரு சீக்ரட் சொல்லவா?
நிரஞ்சனா, “சொல்லுங்க..
நித்யன்,” இந்த கேஸ் ஆப்பீல் போக சொன்னதே நான் தான்…
நிரஞ்சனா, “என்னது? இது என்ன புது கதையா இருக்கு?
நித்யன், “ஒரு சின்ன ப்ளாஷ்பேக் சொல்லனும்.. வாங்க நாம சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்று பக்கத்தில் இருந்த ரெஸ்டாரென்ட்க்கு அழைத்து சென்றான்..
அங்கே அவர்களுக்கு முன்னரே சிரித்தபடி காத்திருந்தாள் நிர்பயா..
நிரஞ்சனா, “இங்க என்ன நடக்குது? கோர்ட் எலியும் பூனையுமா இருந்தீங்க இப்ப இங்க ஈஈஈஈன்னு இளிச்சிக்கிட்டு இருக்க? ஏதாவது சொல்லி தொலைங்க.
நிர்பயா,” அக்கா கூல், நான் சொல்றேன்.. அதுக்கு நீ மேல பாக்கனும்.
நிரஞ்சனா, “என்ன ப்ளாஷ்பேகா?
நிர்பயா,” ஆமாம், அன்னைக்கு நித்யன் நம்ம வீட்டுக்கு வந்தார்ல நான் கூட கத்திக்கிட்டு இருந்தேனே.!!
நிரஞ்சனா,” ஆமாம், வந்தாரு அதுக்கு என்ன? முழுசா சொல்லு பிரேக் போடாத.
நிர்பயா,” நான் கத்திக்கிட்டு இருந்தப்ப தான் அவர் எல்லாத்தையும் சொன்னாரு, அவர் அப்பாக்கு எதிரா அப்பீல் போக சொன்னாரு அதுக்கு அவர் உதவி பண்றதாகவும் சொன்னாரு.. முதல்ல நான் நம்மல அதுக்காக தான் நான் உன்ன கூட்டிக்கிட்டு லைப்ரரிக்கு போய் நம்ம ஊரோட ஈஸ்டிரி இருக்கான்னு பார்த்தேன் நான் எதிர்பார்த்தா மாதிரி அந்த இடத்துல ஒரு கோவில் இருந்ததா கண்டுபிடிச்சது.. அதுக்கு அப்புறம் பழைய மேப், டாகுமெண்ட்ஸ் இதெல்லாம் எடுத்தோம்ன்றது உனக்கு தெரியும் இல்லையா.. பட் அன்னைக்கு நைட் என்ன இந்த ரெஸ்டாரென்ட்க்கு வர சொல்லி அவரோட பேக் டாகுமெண்ட்ஸ் அண்ட் ஊர்காரங்கள அவங்க அப்பாக்கு எதிரா எப்படி பேச சொல்லனும்னு சொன்னாரு.. இன்பேக்ட் அவங்களுக்கு பணம் கொடுத்ததும் அவர் தான்..
நிரஞ்சனா, “சரி நித்யன் தான் உனக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணிடாரே அப்பறம் என்னை ஏன் எங்க டிபார்ட்மென்ட் சார்பா கேஸ் போட சொன்ன?
நிர்பயா,” ஒரு டவுட் தான்.. தி கிரேட் பிசினஸ் மேன் தசரதன் லீடிங் லாயர் நித்யனையே ஒரு செகண்ட்ல ஏமாத்தினாரு.. நம்மளாம் எந்த மூலைக்கு? ஒரு வேளை ஏதாவது ஏமாத்து வேலை செஞ்சு கேஸ் அவருக்கு சாதகமாக போயிட்டா அதுக்காக தான் உன்னை ஒரு மூவ் பண்ணேன்..
நித்யன்,” அப்கோர்ஸ் இந்த ஸ்டெப் நான் எதிர்பார்க்கவே இல்லை.. பாவம் என் அப்பா எல்லா பக்கமும் செக் வைச்சா என்ன தான் பண்ணுவாரு.. அவர் ஆர்கியூமெண்ட் நடந்த அந்த நைட்,” நீ ஏன் ஒழுங்கா பேசல? அவங்களுக்கு சப்போர்ட் பண்றீயான்னு கேட்டாரு..
நிர்பயா, “நீங்க என்ன சொன்னீங்க?
நித்யன், “ஆமா தப்பு எல்லாம் உங்க மேல வச்சிக்கிட்டு என்னை குற்றம் சொல்லாதீங்க.. நீங்க கையெழுத்து வாங்க அனுப்பிச்ச ஆளுங்க அப்படி.. நான் என்ன செய்ய முடியும்? நீங்க அந்த ப்ராஜெக்ட மறந்திட வேண்டியது தான்னு சொன்னேன்..
அதை கேட்டு இருவரும் சிரித்தனர்..
நிரஞ்சனா,” நித்யன், நான் உங்கள ஒண்ணு கேக்கனும்.. நீங்க எப்படி உங்க அப்பாக்கு எதிரா செயல்பட்டிங்க? இது தப்பில்லையா?
நித்யன்,” எது தப்பு..? சொந்த புள்ளய ஏமாத்தினாரே அது தப்பு இல்லையா? அதுவும் எனக்கு என்னை ஏமாத்தினா புடிக்காதுன்னு தெரிஞ்ச பிறகும்.. சில நேரத்துல நம்மள ஏமாத்தினவங்கள நம்ம ஏமாத்தினா தப்பு இல்ல அதுவும் அதுல ஒரு நல்லது நடக்கும்னா..
நிர்பயா,” என்ன சொன்னீங்க? உங்களுக்கு ஏமாத்தினா புடிக்காதா? அப்ப என்னை ஏன் ஏமாத்தினீங்க? என்று முறைத்தாள்
நித்யன்,” அது தான் சொன்னேனே பேபி.. ஒரு நல்லது நடக்கும்ன்னா ஏமாத்தினா தப்பு இல்ல.. இது தான் என்னோட கருத்து என்று கண்ணடித்தான்.
இவ்வாறு சந்தோஷமாய் நாட்கள் கழிய.. அவர்கள் திருமண நாளும் வந்தது.. ஆனால் தசரதன் அங்கு வரவில்லை..
நித்யன், நிர்பயா மற்றும் அவர்கள் குடும்பத்தோடு தசரதனை பார்க்க சென்றனர்.
நித்யன், “அப்பா.. வெளியே வாங்க.. வந்து எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க..
வெளியே வந்த தசரதனுக்கு கோபம் தலைக்கேறியது.. ஏனெனில் அவர்கள் மாலையுடன் கல்யாண கோலத்தில் நின்றிருந்தனர்..
தசரதன்,” இப்ப எதுக்கு இங்க வந்தீங்க.. நான் இல்லாம கல்யாணம் பண்ணிக்க தெரியுது.. ஆசிர்வாதம் மட்டும் எதுக்கு? என்று கண் கலங்கினார்.. ஒரே பையன் உன் கல்யாணத்த கூட பார்க்க முடியாத பாவி ஆயிட்டேனா நான்..
நிர்பயா,” மாமா இப்ப எதுக்கு கண் கலங்குறீங்க? எங்களுக்கு கல்யாணம் ஆச்சின்னு நாங்க சொன்னோமா? நீங்க இல்லாம உங்க பையன் கல்யாணம் பண்ணிப்பாரா? உங்க கோபத்தை விட்டுட்டு வாங்க மாமா.. உங்க ஆசிர்வாதமும் எங்களுக்கு வேணும்.. அப்ப தான் கல்யாணம் பண்ணிக்க முடியும்..
தசரதன்,” என்ன சொல்ற நீ? உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? என்று அப்பொழுது தான் அவர்களை கவனித்தார்.. நிர்பயாவின் கழுத்தில் பொன் தாலி இல்லை.. நெற்றி பட்டை இல்லை இருவர் நெற்றியிலும்.. அப்ப உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?
நிர்பயா,” அதை தானே சொல்லிட்டு இருக்கோம்.. வாங்க கிளம்பி டைம் ஆச்சி..
அனைவரும் ஆசிர்வாதங்களுடன் நிர்பயாவை தனதாக்கி கொண்டான் நித்யன்..
அனைவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.. தசரதனிடம் வந்தவர்கள் அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்..
தசரதன் நிர்பயாவிடம், அம்மாடி உங்களுக்கு கல்யாண பரிசா என்ன வேணும் கேளு என்றார்..
நிர்பயா, “மாமா எங்க ஊர் ஆளுங்க எல்லாம் தண்ணீர நம்பி தான் பிழைப்பு நடத்துறாங்க.. அவங்களுக்கு வேற ஊருக்கு போய் வேலை செய்தும் பிடிக்காது.. கிணற்றுல இருக்க தவளைக்கு எப்படி வெளி உலகம் தெரியாதோ அப்படி தான் இவங்களும்.. வெளி உலகம் தெரியாது, ஏமாத்த தெரியாது, பொய் சொல்ல வராது.. அதனால தான் நீங்க ஏமாத்துறது கூட தெரியாம இருந்தாங்க.. அந்த கோபத்துல தான் நான் உங்கள எதிர்த்தேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. எங்க கல்யாணத்துக்கு நீங்க ஏதாவது செய்ய நினைச்சா இந்த ஊருக்கு நிறைய நீர் நிலைகள் கொண்டு வாங்க, இவங்களுக்கு விவசாயம் பண்ண வழி பண்ணி கொடுங்க.. தண்ணீர் ரொம்ப செலவாகாத மாதிரி புட் பேக்டரி ஏதாவது ஆரம்பிச்சு இவங்களுக்கு வேலை கொடுங்க அது போதும் எனக்கு..
தசரதன், ” அம்மாடி இதெல்லாம் செய்ய வருஷ கணக்குள ஆகுமே ஓகே வா..
நிர்பயா,” டபுள் ஓகே மாமா..
அனைவரும் சந்தோஷமாக ஆரவாரம் செய்தனர்.. அவர்கள் சந்தோஷம் நிலைக்க நாமும் வேண்டி விடைபெறுவோம்..
முற்றும்..