பாட்டி எழுப்பி சென்றும் அவன் எழாமல் இருக்க.. அவனை எதிர்பாராமல் மகி குளித்து முடித்து விட்டு கபோர்டில் உள்ள ஒரு பர்ப்பில் வண்ண சில்க் காட்டன் புடவையை எடுத்து கட்டிக்கொண்டு ரெடி ஆனாள்…

அவனை எழுப்பலாமா வேணாமா என யோசித்தவள்… வேணாம் மகி நீ எழுப்பாத இல்ல ஊரு மேல போற மாரியாத்தா என் மேல வந்து ஏராத்தானு இந்த சிடுமூஞ்சி நம்ம மேல ஏறும் என்று மனதில் நினைத்துக்கொண்டே கீழே வந்தாள்…

அவள் கீழே வர பாலாவே மகியிடம் அவன் ரெடி ஆயிட்டானாமா என கேட்க..
அவளோ தயங்கியபடி இல்ல அண்ணா பாட்டி வந்து எழுப்புனாங்க ஆனா அவங்க எழல என்றாள் தயக்கத்துடனே.. பாலாவுக்கு மகியின் தயக்கம் புரிந்தது அதனால் மேலும் அவளை சங்கடபடுத்தாமல் அவனே அபய் ரூமுக்கு சென்று அவனை எழுப்பினான்…

விழித்து எழுந்த அபயோ கடுப்பாக என்னடா என்றான்….பாலாவோ”டேய் கோவிலுக்கு போகனுமாடா.. நீ கிளம்பி ரெடி ஆகு” என்றான்..

அபய்,”ஆமா வேண்டா வெறுப்பா நடந்த கல்யாணத்துக்கு இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் ஒரு கேடு”

பாலா,”டேய் பாட்டிக்கு தெரிஞ்சா சங்கட படுவாங்க… ஏதும் பேசாம கிளம்பு” என்று அவனை ரெடி ஆக சொல்லிவிட்டு அவனும் அங்கேயே இருந்தான்…

பாட்டியின் பெயரை சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் எழுந்து சிறு பிள்ளை போல் ரெடி ஆனான்.. சாதாரணமாக பார்மலில் அவனும் அவளை விட கொஞ்சம் லைட் கலர் சர்ட் அணிந்திருந்தான் அதை பார்த்த பாலாவோ சிரித்து கொண்டே அபயை பாக்க…அபயோ,”என்னடா என்ன சைட் அடிக்கறயா” என கேட்டான்…

பாலாவோ,” டேய் மச்சான் அது என் டிபார்ட்மென்ட் இல்ல… உனக்கு ஏற்கனவே பேன்ஸ் அதிகம்…. வேணும்னா புதுசா ஒருத்தவங்க வந்திருக்காங்க அவங்க கிட்ட சொல்லவா”என அபயை சீண்டி நாலு மொத்துக்களை பரிசாக பெற்று கொண்தான்.. அபய் ரெடி ஆகிய பின்பு இருவரும் பேசிய படியே இறங்கி வந்தனர்…

கீழே இறங்கி வந்த அபய் மகியை பாத்து கொஞ்சம் ஜெர்க் ஆகி நின்னுட்டான்.. ஒருபுறம் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்ததற்காக இன்னொரு புறம் அவளுடைய சிம்பிளான தோற்றத்தை கண்டு இந்த பட்டிக்காட்டுகுள்ள இவ்ளோ அழகா என்று பிரம்மித்து போனான்..

பாட்டியே அபய் வந்துட்டான் வாங்க போலாம் என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை முடித்து விட்டு வரும் வழியிலேயே இரவு உணவையும் முடித்துக்கொண்டு வந்தனர்…

வீட்டிற்கு வந்தவுடன் முத்து மற்றும் அன்பு தன் மகளுக்கென சேர்த்து வைத்த நகைகளை பாட்டியிடம் கொடுத்தனர்.. பாட்டியோ எங்க வீட்டு மருமகளுக்கு எங்க பரம்பரை நகைங்களே நிறைய இருக்கு… நீ வேற ஏம்பா இதெல்லாம் செய்யற என உரிமையுடன் கடிந்து கொண்டார் …

முத்துவோ,”நீங்க என்ன தான் பெரிய மனசோட வேணாம்னு சொன்னாலும் எங்க பொண்ணுக்குனு நாங்க செய்ய வேண்டியதை செஞ்சா தானே அவ கவுரமா வாழ முடியும் என்றார்..” அவன் கூறியதை ஆமோதித்த காமாட்சி அம்மாவோ, சரிப்பா அதான் நீ முடிவு பண்ணிட்டயே இதுக்கு மேலயா உன் முடிவை மாத்திக்க போற…. என்று அந்த பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டு…
அன்புவிடம் நீ போயி பேத்தியை ரெடி பண்ணுமா காலாகாலத்துல பண்ண வேண்டிய சடங்கெல்லாம் பண்ணனும்ல என்றார்..

அதை கேட்ட அபய் மற்றும் மகிக்கு தூக்கி வாரி போட்டது அபய் அதை கண்டும் காணாமல் மேலே செல்லஅவன் பின்னே சென்ற பாலாவோ டேய் மச்சான் உன் ரூமை டெக்ரெட் பண்ணிட்டு இருக்காங்க நீ வேற ரூம்க்கு போ என்றான்…

பாலவையும் சேத்து தர தரவென இழுத்துக்கொண்டு அருகில் உள்ள ரூமிற்கு சென்றான்…

பாலாவோ,”டேய் மச்சான் நான் அவன் இல்லடா என்ன விடுடா” என கத்த… அபயோ, ஆமா உன் மூஞ்சிக்கி அது ஒன்னு தான் கேடு…. போடங்ங்ங்……. என்று அவனை வசை பாடிவிட்டு டேய் நீ எனக்கு பிரண்ட் தானே என்றான்…

பாலாவோ என்ன மச்சான் என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட …
ஐயகோ இதை கேட்டு என் நெஞ்சே வெடிக்கிறதே என பெர்பார்மன்ஸ் பண்ணிக்கொண்டு இருந்தான்…

அபய்,”டேய் ஸீன் போடாம கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கியா…”

பாலா,”சரி சொல்லுடா… என்ன உன் பிரச்சனை”

அபய்,”உனக்கே தெரியும்ல நானே இந்த கல்யாணம் பாட்டிக்காக தான் பண்ணிக்கிட்டேன்னு… அப்பறம் ஏன் இந்த சடங்கெல்லாம்… நீயும் ஏதும் தெரியாத மாதிரி பாட்டி கூட சேந்து இதெல்லாம் பண்ற…”

பாலாவோ நக்கலாக எந்த சடங்கு மச்சான் என கேட்க….. அபய், ம்ம்ம் இப்போ எதுக்கு டெக்ரேட் பன்றிங்க பர்ஸ்ட் நைட்டுக்கு தானே என கேட்டான்…

பாலா ஆமாடா ஆனா இதெல்லாம் உனக்கொன்னும் புதுசில்லையே நீ ஏன் பயபட்ற.. என்ன மாதிரி கன்னிப்பையன் பயப்பட்டா கூட பரவால்ல… நீ தான் இதுல பெரிய ஆளாச்சே அப்பறம் என்ன….

அபய்,” ஆமாண்டா எனக்கொன்னும் இது புதிசில்ல தான்… உனக்கே தெரியும்ல இந்த அபய் விருப்பம் இல்லாம எதையும் செய்ய மாட்டான்… அதே மாதிரி என்ன விரும்பாதவங்களையும் நான் நெருங்க மாட்டேன்… எனக்குன்னு ஒரு பாலிசி இருக்கு… என்றான் கோப முகத்தோடு…

பாலா,” சரிடா.. நீ ஏன் இந்த வாழ்க்கையை ஏத்துக்க கூடாது… அதான் கல்யாணமும் ஆயிடுச்சுல அப்பறம் என்ன தயக்கம்…”

அபய்,” டேய் நான் ஏற்கனவே உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல ஒரு பட்டிக்காடு என் கிட்ட பி.ஏ வா இருக்குனு… அது இவ தான்”என்றான்…. கடுப்புடன்

பாலா அதிர்ச்சியுடன்,” வாட்… ” என கேட்க…அபய் ஆமாண்டா இவ தான் பாட்டி போட்டோ குடுத்தப்ப கோவத்துல எங்க தூக்கி போட்டேன்னு தெரியல… அதுக்கப்பறம் நம்மளே இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணலேயே அப்புறம் எதுக்கு போட்டோ எல்லாம் பாத்துகிட்டுனு விட்டுட்டேன்… ஆனா இப்போ தான் தெரியுது அது எவ்ளோ
பெரிய முட்டாள்தனம்னு என்றான்…

ஒரு நண்பனாக அபயின் நிலைமை பாலாக்கு புரிந்தது.. அபயை சமாதான படுத்தும் பொருட்டு பாலா சரி மச்சான் எல்லாம் சரி ஆயிடும் இதையும் பாட்டிக்காக பொறுத்துக்கோ என்று அவனை ஆறுதல் படுத்திவிட்டு… அபயை தயார் படுத்தி அவனது அறையில் விட்டுவிட்டு தனக்கான ரூமிற்கு சென்று விட்டான்…

அங்கோ மகிக்கு அலங்காரம் செய்து கொண்டே அன்பு அறிவுரையை தொடங்கினாள்… மகி இங்க பாருமா நீ புகுந்த வீட்டுல நல்ல பேரை எடுக்கனும்.. யாரு எப்படின்னு புரிஞ்சு நடக்கணும் கணவன் மனைவி உறவுல புரிதல் ரொம்ப முக்கியம்… நீயா நானானு ஆரம்பிச்சா வாழ்க்கை உரு தெரியாம போய்டும்… ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் கல்யாணம்ங்கிறது ஒரு மரத்தை அதோட எடத்துல இருந்து வேரோடு புடுங்கி இன்னொரு எடத்துல நடற மாதிரி தான்… அந்த மரம் எப்படி புது சூழலை ஏத்துகிட்டு வாழ கஷ்டப்படுதோ அதே மாதிரி தான் பொண்ணுங்களுக்கும்….

நம்ம வீட்ல இருந்த சூழ்நிலைக்கும் இங்க இருக்கற சூழ்நிலைக்கும் நிறைய வித்யாசம் இருக்கும் அதனால அதெல்லாம் ஏத்துகிட்டு பக்குவமா வாழ பழகு.. இனிமே இது தான் உன் குடும்பம்… நீ இங்க வாழற வாழ்க்கை தான் எங்களுக்கு சந்தோஷத்தை தரும்.. நீ இங்க நல்லா வாழ்ந்து எங்க பேர காப்பாத்தனும்…எந்த சூழ்நிலையிலும் உங்க அப்பாவும் நானும் தலை குனியர மாதிரி நடந்துராதே.. என்றாள்..

மகியும் சரிம்மா உங்க வளர்ப்பு வீண் போகாது நான் பாத்துகிறேன் என்றாள்.. ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது அவள் அறியவில்லை…

மகியிடம் பால் சொம்பை குடுத்து வழி அனுப்பி விட்டாள் அன்பு… அதை வாங்கி கொண்டே ஒரு வித பயத்துடன் நடுங்கி கொண்டே அத்தனை இஷ்ட தெய்வங்களையும் வழிப்பட்டுக்கொண்டே முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்….

அபயோ இதை ஏதும் ஏற்கும் மன நிலையில் இல்லாமல்… அவனது புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்திக்கொண்டிருந்தான்.. அவள் ரூமில் நுழைந்தது கூட அறியாமல்…

ரூமிற்குள் நுழைந்த மகிக்கோ சிகெரெட் புகையினால் இருமல் வர அந்த இருமல் சத்தம் கேட்டே திரும்பினான் அபய்…

திரும்பி அவளை பார்த்தவன் சிகெரெட் பிடித்துகொண்டே அவளருகில் வந்து வேணுமென்றே புகையை அவள் மீதே ஊதினான்..

அவளோ இருமிக்கொண்டே அவனை பார்க்க அபய் அவள் கையில் இருந்த சொம்பை காட்டி இது என்ன என்றான்.. அவளோ அமைதியாக இருக்க,”இது என்னனு கேக்கறேன்ல” என்று கத்திவிட்டான் அபய்..

அவளோ பயந்து கொண்டே பால் என்று அவனிடம் அந்த சொம்பை நீட்ட அதை விசிரி அடித்தான் அபய்…

அதிரிச்சியில் திடுக்கிட்டு நின்ற அவளை சொடக்கிட்டு நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தவன், ஹே இங்க பாருடி… இந்த பால் குடுக்கறது அப்பறம் பாயசம் குடுக்கறது இதெல்லாம் இந்த அபய் கிட்ட செல்லாது புரியுதா…

அபய்,”எனக்கு இந்த கல்யாணமே புடிக்கல இந்த லட்சணத்துல நாளைக்கு ரிசப்ஷன் வேற…அதுல நம்ம கம்பெனில இருக்க ஆளுங்க அண்ட் நிறைய பிசினஸ் மேன்லாம் வேற வருவாங்க.. அவங்க முன்னாடி நீ எனக்கு சரிசமமா என் கூட ஜோடியா நிக்க போறியா?? உன் தகுதி என்னனு தெரியுமா?? என்று மேலும் அவளை நோக்கி கேள்விகளை தொடுத்தான்..

அவளோ தன் அன்னை கூறியதை மனதில் நினைத்துக்கொண்டு பொறுமையாக இருந்தாள்..

ஒரு போர்வையை தூக்கி அவள் மேல் எறிந்தவன் இனிமே நீ இங்க தரையில தான் தூங்கனும் இது தான் உன் தகுதி..

இந்த அபய் அவனுக்கு புடிச்ச மாதிரி தான் வாழ்க்கையை வாழ்வான் இன்ங்களுடிங் கேர்ள்ஸ் அண்ட் ட்ரிங்க்ஸ் என்றான்… கூடிய சீக்கிரம் உண்ண டிவேர்ஸ் பண்ற போறேன் அதுவரைக்கும் உனக்கு இந்த நரகம் தான் என்று சுடுசொற்களை வீசிவிட்டு பெட்டில் படுத்து உறங்கிவிட்டான் அபய்…

மகியோ அவன் குடுத்த போர்வையை தரையில் விரித்து படுத்து கொண்டு தன் மண வாழ்க்கையை எண்ணி அழுது கரைந்து கொண்டிருந்தாள்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago