ஜானு தன் அண்ணன் சொன்ன மாதிரி ஆராவை அழைத்துக்கொண்டு அவளுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்…
இனியனும்,ஜானுவும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு அவளை ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திருப்பிருந்தனர்…
ஆரா என்ன தான் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாலும் சிவாவின் கோர்ட்டை அவளுடனே வைத்திருந்தாள் அதில் அவளுக்கு தன்னவனுடன் இருப்பது போன்ற உணர்வு… அவளின் மன ஓட்டத்தை அறிந்த ஜானுவோ தன் அண்ணனின் மனநிலை குறித்து ஆதவிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள்..
ஆராவை பத்திரமாக அவளது வீட்டில் விட்டவள்..அவளிடம் மொபைல் நம்பர் வாங்கிட்டு தன்னுடைய எண்ணை அவளிடம் குடுத்துட்டு வீட்டுக்கு கெளம்பி விட்டாள்..
காரில் போகும் போதே ஜானு தன் அண்ணனிடம் ஆரா அவள் வீட்டுக்கு பத்திரமா போயிட்டான்னு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்து படுக்கையில் வீழ்ந்தவளுக்கு தன் அண்ணனின் கடந்த கால நிகழ்வும்,தற்போதைய நிகழ்வும் கண்முன்னே தோன்றி மறைந்தன…
அங்கோ ஆராதனாவோ வாடிய முல்லைகொடியாய் வீட்டினுள் நுழைய அவளின் தோற்றத்தை கண்டு பதறிய அவளின் அப்பா அம்மா அவளிடம் சென்று அவளை அருகில் அமர்த்தினர்..
ஆராவின் அப்பா,”என்னடா என்ன ஆச்சு?ஏன் ஒரு மாதிரி இருக்க??.. சொல்லுடா”என்று அவளின் கையை பற்ற..அவளின் அம்மாவும் அவளை அணைத்து என்னவென்று கேட்க… தன் அன்னையை கட்டிப்பிடித்து அழுதுகொண்டே நடந்தவற்றை விவரிக்க தொடங்கியிருந்தாள்…
ஆரா சொன்னதை கேட்டவர்களுக்கு இந்த கலியுகத்தில் பெண் பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்திருந்தாலும் தன் மகள் இதிலிருந்து தப்பி விட்டாள் என்ற ஒரு சிறு நிம்மதி அவர்களிடத்தில்..அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் மகளை காப்பற்றியவர் மீது மரியாதை எழுந்தது…
தன் மகளின் மன வேதனையை மாற்றும் பொருட்டு ஒரு தந்தையாக அவளுக்கு இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை தந்து கொண்டிருந்தார்.. தந்தை ஆயிற்றே தன் மகளை வலி நடத்தும் கடமை அவருக்கு… அவளின் மனமும் தெளிவாக தொடங்கியதும், கோழிக்குஞ்சு தன் தாயின் சிறகில் தன்னை பாதுகாத்து கொள்வது போல ஆராவும் சிவா கோர்ட்டை அணிந்தபடியே தன் தாய் மடியிலேயே படுத்து.. நீண்ட சிந்தனைக்கு பிறகு கண்ணுறங்கினாள்….
மறுநாள் விடியலுக்காக ஏங்கி இருந்த ஜானு.. இரவே, ‘நாளை காலை அவசரமாக உங்களை சந்திக்க வேண்டும்’ என்ற குறுஞ்செய்தி ஒன்றை ஆதவிற்கு அனுப்பிவிட்டு தான் உறங்கினாள்… தன் அண்ணன் வாழ்வில் நல்லது நடக்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு…. நாளை அவனை சந்திக்கும் போது நடக்க இருக்கும் விபரீதம் அறியாமலேயே…
மறுநாள் விடிந்ததும் சீக்கிரம் கிளம்பி ஆதவ்வை சந்திக்க சென்றாள்…
ஆதவ்வும் அவளுக்காக அவள் வர சொன்ன இடத்தில் அவளுக்கு முன்பாகவே வந்து காத்திருந்தான்..
ஜானு ஆதவ்வை பார்த்த பின்பு அவன் இருக்கற இடத்துக்கு போயி அவன் பக்கத்தில உக்காந்து அவன் முகம் நோக்கினாள்..
அவள் பார்வையை உணர்ந்தவனோ…. ஏதும் தெரியாதது போல் அவளிடம் பேச தொடங்கினான்..
ஆதவ்,”என்ன ஏன் இவ்ளோ அவசரமா பாக்கணும்னு சொன்ன..”
ஜானு,”ஏன் எதுக்கு வர சொன்னேன்னு தெரியாதா?”
ஆதவ்க்கு அவளின் பார்வை புரிந்திருந்தாலும்
அவளை சீண்டும் பொருட்டு…
வாயை திறக்காம கூட பேச முடியுமா இது எனக்கு எப்படின்னு தெர்லயேனு சொல்ல…
ஏற்கனவே அவன் எப்படா கிடைப்பான்னு காத்துகிட்ட இருந்த ஜானு..,”ஆமா உங்களுக்கு ஏதும் தெரியாது இத்தனை வருசமா கூட இருந்த நண்பனுக்கு நல்லது பண்ணவும் தெரியாது… உண்மையா நேசிச்சு பைத்தியகாரி ஆகிட்டு இருக்கவள பத்தியும் தெரியாது”..
ஜானு,” நானா உங்க பின்னாடி வரதுனால ஒரு வேளை என்ன ப்ராஸ்….. னு “
அவள் சொல்லி முடிக்கும் முன் இடி என்ற அறையை அவள் கன்னத்தில் இறக்கினான் ஆதவ்…
ச்ச… என்ன வார்த்தை சொல்லிட்டா… என் ஆருயிர் நண்பனோட தங்கச்சி.. சின்ன வயசுல இருந்தே நான் பாத்து வளந்தவ… என் ஜானு எப்படி என்ன புரிஞ்சுக்காம இப்படி பேசிட்டாலேங்கிற ஆதங்கம் அவனுள்…
ஜானுவோ அச்சச்சோ இவனை வேற கோவப்படுத்திட்டோம் எப்படி சமாளிக்க போரமோனு முழி பிதுங்க யோசனையில் இருந்தாள்… இருக்காதா பின்ன எப்பயும் பொறுமையா இருக்கறவன இன்னிக்கு இவ்ளோ கோவத்துல பாத்துருக்காளே…
அவனோ ஏதும் பேசாமல் அமைதியாய் அமர்திருக்க சூழ்நிலையை சமாதனமாக்கும் பொருட்டு ஜானுவே அவனிடம் வந்து அவன் கையை பற்றி சாரி…. நான் தெரியாம சொல்லிட்டேன்…. என்றாள்…
ஆதவ்,”அறிவில்லையாடி உனக்கு… நான் எப்படி உன்ன அந்த மாதிரி நினைப்பேன்… இதான் நீ என்ன லவ் பண்ண லட்சணமா…. பாத்துக்கோ நீ எவ்ளோ அழகா என்ன புரிஞ்சு வச்சுருக்கணு..” என்று விரக்தியாய் சொன்னான்…
அவனின் மனம் அறிந்த பேதை தன்னவனை கஷ்டப்படுத்திவிட்டுமோ அவன் நிஜமாவே என்ன வெறுத்துடுவானோ??? என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள்…
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…