அத்தியாயம் 12

தேவதை கதை கேட்ட போதெல்லாம்

நிஜம்*என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்

நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்

உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்

அந்தி மாலை மறைவதெல்லாம்

உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

என்ற பாடலுக்கு டிக் டாக் நடித்துக்கொண்டிருந்தாள் இசை…

பாடல் ஆரம்பிக்கும்போதுதே அங்கு வந்துவிட்டான் இனியன் … அவனின் தேவதையை பார்த்துக்கொண்டே இருந்தான் … அந்த பாடல் அவளுக்காகவே எழுதப்பட்டது போல உணர்ந்து ரசித்தான் ….

அண்ணி அடுத்த ரெக்கார்டிங் போலாமா என்று கேட்டனர்

தளபதி படத்தில் வரும் டயலாக்கை அகியும் மகியும் செய்தனர்

என்மேலேயே சந்தேகப்படுறியா தேவா

நட்பு னா என்னனு தெரியுமா உனக்கு

நண்பனா என்னனு தெரியுமா … என்று நடித்தனர்

தேவா என்ற வார்த்தையை கேட்டு கடுங்கோபத்துடன்

டேய் என் பைக் சாவி யாராவது பாத்திங்களா என்று இனியன் கேட்க

இல்லன்னா நாங்க பார்க்கல என்று இருவரும் மறுக்க

நேத்து நைட் இங்க தான மட்டுனோம் அப்புறம் எப்படி காணாம போச்சு ஒருவேளை மறந்து போய் வண்டியை லாக் பண்ணாம வந்துட்டேனோ … என்று வண்டியில் சாவி உள்ளதா என்று பார்த்தான் ஆனால் சாவி அங்கில்லை

நீங்க யாராவது எடுத்தீங்களா என்று மறுபடியும் அவன் கேட்க இல்லை என்று உடனே அவர்கள் மறுத்தனர்.. இவர்களின் உடனடி மறுப்பு இனியனுக்கு சந்தேகத்தை தர .டேய் ஒழுங்கா சொல்லுடா யார் எடுத்தது அவன் மிரட்டலாக கேட்க

அப்போது தோட்டத்திலிருந்து வந்த இசை இனியன் பின்னாலிருந்து சொல்லாதீங்க டா என்று கையில் செய்கை செய்ய

அதை பார்த்து நாங்க எடுக்கலைன்னா என்று இருவரும் சொல்ல தன்னை தவிர்த்து பின்னே பார்ப்பதை உணர்ந்த இனியன் தானும் திரும்பிப்பார்த்தான்
தனக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல இசை
விட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.. இவ எதுக்கு இப்ப மேல பாக்குறா ஒருவேளை இவ எடுத்துருப்பாளோ ….. என்று அவளை சந்தேகமா இனியன் பார்க்க

ஸ்ஸ் என்று இனியன் பின்னாடியிருந்து மகி சத்தம்கூடுக்க

என்ன என்று இசை மகியை பார்த்தால் … டார்லி ஓவர் ஆக்ட்டிங் மாட்டிக்கிட்ட என்று சொல்ல …
அதே நேரம்
யாழ் என் வண்டி சாவி எடுத்தியா இனியன் கேட்டான் …. இல்லை என்பதுபோல தொலைகுலைக்கி கொண்டு அவனை கடந்து சென்றால் …அவளின் கையை பிடித்து அவள் கண்ணை பார்த்து

அடியே ஒழுங்கா கொடுத்துடு இல்லைனா
நடக்குறதே வேற எல்லார் முன்னாடியும்
கிஸ் பண்ணி விடுவேன் என்று அவன் எச்சரிக்கை அதாவது மனசுக்குள்ள நினைக்க…..

முடிஞ்சா பண்ணுடா என்பது போல இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்

கொழுப்பா உனக்கு இருடி நீ தனியா மாட்டும் போது கவனிச்சிக்கிறேன் என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி அவன் சொல்ல

டேய் நான் கபடியில் ஜெயிச்சா யாரோ அந்த வண்டியை எனக்கே தர தாசொன்னாங்க… என்று இசை சொல்ல

நான் எப்ப அப்படி சொன்னேன் ஒரு ரைட் போயிட்டு வரதுக்கு வேணாம் வண்டியை தரேன்னு சொன்னேன்..

மகி உங்க அண்ண வாக்கு தவற மாட்டாரு .. வல்லவரு .உத்தமரு அப்படி இப்படின்னு ஒரேய் தடியா பில்ட்டப் பண்ண கொடுத்த வாக்கை மறந்துவிட்டாரு உங்க அண்ணன் என்று அவள் அழுத்தமாக கூற

மகி நாம எப்ப அப்படி சொன்னோம்னு இசையை புரியாத பார்வை பார்த்துவைத்தான்

என்னடா முடிவாஉங்க அண்ணா கிட்ட கேளுங்க .. நான் வேணுமா இல்ல அந்த பைக் வேணுமா எனக்கு இப்பவே முடிவு தெரிஞ்சாகணும் என் நேற்று பார்த்த சினிமா டயலாக் எடுத்துவிட

இனியன் நமட்டு சிரிப்புடன் அவளைப்பார்த்து… எனக்கு நீதான் வேணும் குல்பி இப்ப கூட ஓகே தான் என்று மனதில் நினைக்க அவன் கண்ணை பார்த்து புரிந்துகொண்ட இசைக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தது

தன் கூறியதன் அர்த்தம் அவள் உணர

ஏன் டார்லி காலெல்லாம் நடுங்குது என்று மகி கேட்க

இவன் வேற எடுத்துக் கொடுக்கிறான். வண்டி எல்லாம் கொடுக்க முடியாது இனிமே அது என் வண்டி உங்க அண்ணனை பழைய வண்டியை எடுத்துட்டு போக சொல்லு என் அவள் கால் நடுங்குவதை பொருட்படுத்தாமல் கெத்தாக கூற

மகி சொல்லைக் கேட்டு அவள் கால்களை கவனித்தான் இனியன்

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக் போல இதுதெரியாம மிஸ் பண்ணிட்டேனே என்று அவன் நினைக்க

அவன் நினைத்தது அறிந்த இசைக்கு கோபம் வந்து யாருக்கு பேஸ்மெண்ட் வீக்கு என்று நேரடியாக சண்டைக்கு வர.. முதல்முறையாக அவள் கோபத்தை கண்டு ரசித்தான்.. அவன் ரசிப்பதை கண்டு இசை வேறு புறம் திரும்பி கொண்டாள்… அவள் கால்களை ஆட்டிக்கொண்டே நிற்க.. உனக்கு வெட்கம் வந்தால் உன் கால்கள் காட்டி கொடுத்திடும் போலயே இது தெரியாம அவ முகத்தையே இத்தனை நாளா ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன் சரி மறுபடியும் டெஸ்ட் பண்ணி பாப்போம் என்று அவன் அவளை பார்க்க.. அதற்குள் தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்

இதுவரை என்னிடம் நிறைய பேர் காதலை சொல்லிருக்கார்கள் .. ஆனால் யார் கண்ணிலும் உண்மையான காதல் நான் பார்த்தது இல்லை … ஆனால் இனியனின் கண்களில் எனக்கான காதல் தெரிகிறது …நா அவரை ஏமாத்திக்கொண்டு இருக்கேன் … உண்மையை சொன்னால் இதே காதல் என்மேல் இருக்குமா … ஒருவரின் காதலுக்கு அடிமை ஆவேன் என்று நான் நினைத்துகூட பார்ததில்லையே .. இனிமேல் என்னால் இனியனை பிரிந்து போய்விட முடியுமா .. எத்தனை நாளைக்கு என்ன அவன் கண்டுபுடிக்காம இருக்கமுடியும் .. அவன் என்னை நெருங்கிவிட்டான் என்னால் இவர்களுக்கு ஏதும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டால்

தன் சூட்கேஸில் இருந்து உடைகளை எடுத்துக்கொண்டு குளியல் அறை நோக்கி சென்றாள் .. அவள் செல்லும் நேரம் அங்கு வந்த இனியன்

ஒய் குல்பி சாவிய குடுடி

குரல் கேட்டு திரும்பியவள் .. இங்கே பாரு என் வண்டில பெட்ரோல் இல்ல நாளிலிருந்து நீயே வச்சுக்கோ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இந்த வண்டியை கொடு

அப்போதும் அவள் அமைதியாக நிற்க

என்ன கோபப்படுத்தாதே நீ ஒழுங்கா சாவியைக் கொடு இல்லைனா நடக்குறதே வேற.. (அட உனக்கு இதைத் தவிர வேற டயலொக் எதுவுமே தெரியாதா என்னதான் நடக்கும் போது நானும் பாக்குறேன் என்று இசை மனசாட்சி கிண்டலடிக அது அவள் உதட்டோரம் சிறு சிரிப்பை உதிர்க்க)

இசையின் முகத்தில் தோன்றிய சிரிப்பை பார்த்த இனியனுக்கு அவளை முத்தமிடும் எண்ணம் வர .. அவன் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்த இசைக்கு தன் கணவனின் எண்ணம் புரிந்து குளியல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்.

எவ்வளவு நேரம் உள்ளேயே இருக்க முடியும் நானும் பாக்குறேன். எப்படியும் வெளில வந்துதானே ஆகணும்.. வெளியில வா அப்போ இருக்கு உனக்கு என்று அவள் காதிற்கு கேட்கும்படி கத்திவிட்டு கட்டிலில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான்

பாத்ரூம் கதவை திறந்து அவள் வெளியே வரும்போது அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் ..முழுக்கை வெள்ளை நிற ஷர்ட்டும் லைட் ப்ளூ ஜீன்சும் அணிந்து வந்தாள்..

அவள் அவனை கண்டுகொள்ளாமல் அவனை கடந்த ஹாலுக்கு சென்று அங்கிருந்த ஹெல்மெட்டை எடுத்து கொண்டு வெளியேறினாள்

அப்போது அங்கு வந்த மகி வாவ் டார்லிங் சூப்பர் என்று கை விரல்களை தூக்கி காட்ட

தேங்க்ஸ் டா என்றால் இசை…

இசை ஹாரனை அடிக்க இனியன் என்ன என்பது போல் பார்த்தான்

டேய் உங்க அண்ணன முதல எனக்கு டிரைவர் போஸ்டிங் தர சொல்லு அப்புறமாக பொண்டாட்டிக்கு போஸ்டிங் தரலாம் இப்ப வந்து வண்டியில் எற சொல்லு

என்னது இவ வண்டி ஓட்ட போறாளா

முடியாது மகி அதெல்லாம் முடியாது உங்க அண்ணிய ஒழுங்கா பின்னாடி உட்கார சொல்லு நான் வண்டி ஓட்டுறேன்..

இங்க பாரு அவருக்கு தான் வேலை இருக்கு அங்கபோகணும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நான் பாட்டுனு வண்டி எடுத்துட்டு போய்டேய் இருப்பேன் அவர் இங்க வீட்டிலேயே தான் இருக்கணும்…

அடியே இது கிராமம் நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க டி ….ஒழுங்கா இறங்கு டி நான் வண்டிய ஓட்டுறேன்

அதுஎதும் இசைக்கு கேக்காதது போல அவளிருக்க … ரொம்ப இம்சை பண்றடி

வேறு வழி இல்லாமல் இனியேனும் ஏறி அமர்ந்தான்.. இசை வண்டியை செலுத்தினாள் .. இன்டிகேட்டர் போடு , பள்ளம் பாரு, ஸ்பீட் பிரேக்கர் பாரு, லாரி வருது பாரு என்று இனியன் சொல்லிக்கொண்டே வர பைக்கை ஓரமாக நிறுத்தி இறங்குமாறு சைகை செய்தாள்

டைமாச்சு வண்டியை எதுக்கு டி நிறுத்தின … அவன் கீழே இறங்கியதும் அவனை பார்த்து முறைத்துவிட்டு அவன் ஏறுவதற்குள் மிகவேகமாக வண்டியை ஓட்டினால் .. ஐயோ வாய வச்சிட்டு சும்மா வந்துஇருக்கணும் .. இப்படி நடு ரோட்ல விட்டுட்டு போய்ட்டாளே .. சிறிது நேரத்துக்கு பின் இசை திரும்பி வருவதைப்பார்த்தான் .. அவள் கொஞ்ச கூட ஸ்பீட் குறைக்காமல் அவனை ஏற்றுவதுபோல் வந்து வண்டியை நிப்பாட்டினால் …

ராட்சசி ஒருநிமிஷம் நானே பயந்துட்டேன் என்று அவன் நினைக்க … அவன் கண்களை பார்த்த இசைக்கு சிரிப்பு வர அதை கட்டு படுத்தமுடியாமல் சிரித்துவிட்டாள் … அவளின் சிரிப்பை ரசிக்க ஆரம்பித்தான் இனியன் ..அவன் ரசிப்பதை உணர்ந்து ஹார்ன் அடித்தால் இசை அதில் அவன் நினைவுலகுக்கு வந்தான் … ஏறி உட்காரும்படி அவள் அவனை பார்க்க .. அவன் ஏறியமர்ந்து அவள் தோளில் கைவைத்து பிடித்துக்கொண்டான் .. இசை அதை கண்டு கொள்ளாமல் வண்டியை ஓட்ட ..இனியனுக்கு மீண்டும் குழப்பமே அவனால் அவளை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை

இங்கே பாரு எனக்கு வேலை முடிவதற்கு ரெண்டு மணி நேரம் ஆகும் அதுவரைக்கும் நீ என்ன பண்ணுவ …அதற்கான விடையை அவள் செய்கையில் செய்து காட்ட அதாவது பைக் ரைடு போக போவதாக அவள் சொல்ல ..இந்த ஏரியா குள்ளயே இரு வழிமாறி எங்கேயும் போயிடாதே ஜாக்கிரதை குல்பி என்றவன் சொல்ல ஓகே என்பது போல் கண்ணடித்தாள் இசை.

வாய திறந்தா கொறைஞ்சா போயிடுவிங்க.அம்மணி …இல்லை என்று அவள் தலையாட்ட .. எல்லாத்துக்கும் வாயை தொறக்காமலே இருந்தனு வை நல்லாத்தான் இருக்கும் …என்று அவன் கண் அடித்துக்கூற … இசை ஒன்று சொல்லாமல் சென்றுவிட்டாள்

இனியன் தான் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான்

இசை பைக்கில் ஊரை சுற்றிக் கொண்டு இருக்கும் போது வழியில் தேவாவின் சுமோ வருவதை பார்த்து அதன் முன்பு வண்டியை நிறுத்தினாள்.. தேவா யார் என்று தெரியாமல் அவளை பார்த்து. . டேய் யாருடா நீ .. நீ சாவுறதுக்கு என்வண்டிதான் கிடைச்சிதா என்று திட்ட ஆரம்பிக்க இசை பைக்கில் இருந்து இறங்கி ஹெல்மெட்டை கழட்டினால் .. ஐயோ தங்கச்சி நீயா மா சாரி மா .. ஆமா நீ எப்படி வந்த உன்கூட யாரும் வரலையா . இல்லனா நான் உங்ககிட்ட முக்கியமா சில விஷயம் பேசணும்

நானும்தான் மா நீ மொத சொல்லு பொறவு நா சொல்றேன் … எனக்கு
ஒரு சில விஷயம் தெரிஞ்சாகணும் .. கயல் பத்தி

கயல் பத்தி என்கிட்ட பேச என்ன இருக்குமா

அண்ணா எனக்கு தெரியும் .. நீங்களும் கயலும் லவ் பண்ணிங்கனு ..

அதுலாம் முடிஞ்சி போன விஷயம் மா .. அதப்பத்தி இனி பேசவேண்டாம்

நம்ப கவிக்கும் கயலுக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி நிச்சயதார்த்தம் பண்ண போறோம் அண்ணா

என்ன மா சொல்ற கயல் வேணாம் மா கவிக்கு அவ செட் ஆக மாட்ட என் அண்ணா அப்படி சொல்றிங்க

கயல் சின்ன வயசுல இருந்தே இனியன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பா அதுக்கப்புறம் அவன் கிட்ட காசு இல்லன்னு என்ன லவ் பண்ணா.. மறுபடியும் இனிய நல்லா சம்பாதிச்சு உடனே அவன லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தா அவ வேணாம்மா உங்க குடும்பத்துக்கு …

அண்ணா அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் … என்று இருவரும் செய்யவேண்டிய திட்டத்தை தீட்டினர்
அப்புறம்
அண்ணா உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை.. என் அவரு உங்க மேல இவ்வளவு கோவமா இருக்காரு

இனியனுக்கு முன்கோபம் ஜாஸ்தி அதே மாதிரி யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவான் புரிஞ்சிக்க மாட்டான்.. கோபத்தில் அவன் புத்திகெட்டுப்போய் என்ன அடிச்சிட்டான் .. நானும் அங்கு என்ன நடந்தது அவனுக்கு புரியவைக்காம கோவத்துல வந்துட்டேன் .. அதுக்கு அப்புறம் நிறைய தடவி பேச போன்னேன் .. அவன் பேசமாட்டேனு போய்ட்டான் மா

என்ன விட மூணு வயசு சின்னவன.ஒரு தடவ முள்ளு காட்டுக்குள்ள போய் மாட்டிக்கிட்டு அழுதுட்டு இருந்தான் எப்படி வெளியில வராதுன்னு அவனுக்கு தெரியல.. அப்போ நான் அவனை அதில இருந்து தூக்கிட்டுவந்தேன் .. அப்போ இருந்து என்பின்னாடியே சுத்துவான் … வேறயார்கூடயும் பேசமாட்டான் ..

அவன் என்ன மட்டும்தான் நண்பனா நினைச்சன் .. நானும் அப்படித்தான் மா அவனுக்காக உயிரை கூட குடுப்பேன் …..அவன் ஆசைப்பட்ட பொண்ண கல்யாண பண்ணிகிட்டான் இனிமே எல்லாம் மாறும் மா ..ஒருநாள் அவன் என்ன கண்டிப்பா புரிஞ்சிப்பான் … அவனை பத்திரமா பாத்துக்கோமா ..

அண்ணா என்னால அவர் கூட இருக்க முடியாது என்றாள்.. ஏன்னா நீங்க நினைக்கிற மாதிரி நான் மனோ அப்பா பொண்ணு இல்ல மனோ அப்பா எனக்கு சித்தப்பா அவர் காதலிச்சது என் தங்கச்சி இசைத்தென்றல் ஏன் பெயர் யாழிசை…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago