12. உனக்காக நான் இருப்பேன்

0
329

அன்று:

வசந்த் வந்தான் ரூபிணியை தேடி.

அவனை கண்டதும் முதலில் அதிர்ந்தாலும் அடுத்து அவனை இன்முகமாக வரவேற்றாள்.

“ உன்னோட தோழிக்கு என்ன பிரச்சனை ரூபிணி? ஏன் இப்படி நடந்துக்குறா?” என்று அவன் நேரடியவே கேட்க அவள் தான் பதில் கூற திணறினாள்.

“ சீனியர், எனக்கு என்ன தெரியும்?” என்று அவள் சமாளிக்க அவன் மௌனம் காத்தான்.

சிறிது நேரத்திற்கு பின் அவனே தொடங்கினான்.

“ உன்னை என் கூட பிறந்த தங்கையா தான் பாக்குறேன் ரூபி… மாலினியை நான் எந்த அளவுக்கு விரும்புறேன்னு எனக்கு சொல்ல தெரியல. ஆனா அவ இல்லாத வாழ்க்கை வெறும் நிர்மலம். அவ கிட்ட பேச எவ்வளோ ட்ரை பண்ணேன். ஆனா அவ முகம் கொடுத்து பேசல… வீட்ல அம்மா என்னோட கல்யாண பேச்சை ஜாடையாக பேசிட்டு இருந்தாங்க. இப்போ நேரடியவே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் என்ன பண்ண சொல்லு?” என்று கூறுபவனுக்கு அவள் என்ன சொல்லி ஆறுதல் சொல்ல… அவள் அமைதியாக

“ நான் வரேன் ரூபி” என்று அவன் கூறவும் அவள் பதில் சொல்ல நா எழவில்லை.

‘இவர்கள் இருவரில் யருக்காய் இரக்கப்பட’ என்று தன்னையே கேட்டும் கொண்டாள்.

               ***

வசந்தின் வீட்டில் அவன் நுழைய அவனை பதிலுக்காக எதிர்கொண்டார் வாணி.

“ தம்பி….”
அவரின் அழைப்புக்கு நின்றவன் ‘ என்ன?’ என்று கேட்கவில்லை அது அவனுக்கு தெரிந்த விஷயம் தானே…

“ என்னப்பா? நானு எவ்ளோ நாள் தான் கேட்டே இருப்பேன். எனக்கு உடம்பு முடியும் போதே உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும் ஆசை படுறது குத்தமா?”ஒரு உண்மையான தாயாக அவர் அவனின் நலம் நாடி கேட்க
அவனும் நீண்ட நெடிய மூச்சோடு கூறினான்

“ உங்க இஷ்டம் எதுவோ? அதையே செயங்கமா” என்று.

அந்த நொடி அவர் பட்ட சந்தோஷம்…
தன் மகனின் எதிர்காலம் இனி பிரகாசம்…. என்று பொலிவு
அது ஏற்படுத்திய உற்சாகம் அவரை கடகடவென அடுத்த கட்ட வேலைகளில் இறங்க செய்தது.

ராகவியின் வீட்டில் அவரே சென்று பேச கணேஷ் லட்சுமி அவர்களுக்கும் இதில் மனம் ஒப்ப கடகடவென கல்யாண வேலைகள் நடந்து முடிந்தது.
வசந்த் ராகவியின் கணவனானான்.
***

இன்று:

மதுவிடம் போனில் நளினி கூறிவற்றை ஒன்று விடாமல் கூறி முடித்தான் கதிர்.

கேட்டு கொண்டிருந்த மதுவின் மனநிலை ஒரு நிலையில் இல்லை.

இந்த கதையின் க்ளைமாக்ஸ் அவளிடமே உள்ளதால் அவளின் சிந்தனையை நாம் கலைக்காமல் கதிர் மதுவின் திருமண வேலைக்கான ஆயத்தத்தை தொடங்குவோம்.

கதிரின் வீட்டில் தன் மூன்று வயது மகளுக்கு உணவு ஊட்டி விட்டபடி கல்யாணியிடம் பேச்சை தொடங்கினாள் நளினி.

“ அம்மா, கதிருக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சுல?” என்று.

அடுப்பில் கிளறி கொண்டிருந்தவர் திரும்பி அவளை முறைத்தார்.

“ ஏன் கதிருக்கு மட்டும் தான் கல்யாண வயசு வந்துடுச்சா… உன் தங்கைக்கு இல்லியா? இந்த வீட்ல யாருக்காவது என் கஷ்டம் புரியுதா?” என்று அவர் கூற மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த மாலினி,

“ நடக்காத விஷயத்தை பத்தி எதுக்கு வீணா பேசணும்? என்றபடி.

அதற்கும் திரும்பி நளினியை முறைத்தார் அவர்.

“ என்னை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கிறதை விட கதிர் விரும்புற பொண்ணை அவனுக்கு கட்டி வச்சா கஷ்டத்துல பாதியாவது குறையும்” என்று பேப்பரை எடுத்து கொண்டு சோபாவில் அமர்ந்த படி கூறினாள்.

அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த கதிரின் காதில் அக்காவின் பேச்சு விழ மீண்டும் அறைக்குள் அடைந்து கொண்டு தலையை மட்டும் நீட்டி பார்த்தான்.

மாலினியின் அருகில் இருந்த கந்தன் மெல்ல சிரிப்பை அடக்க அவரை பார்த்தவள்,

“ என்னப்பா சிரிக்குறீங்க?” என்றாள்.

அதில் கொஞ்சம் சத்தமாக சிரித்தவர்,
“ ஒன்னுமில்லமா… இப்போ ஒரு கரடி குகையை விட்டு வெளியே வந்துச்சா… நடக்கிற நடவு சரியில்ல… வந்தா அதோட தோலை உரிச்சி உப்புகண்டம் போட்டுருவாங்களோன்னு பயந்து போய் திரும்பியும் குகைக்குள்ள போய் ஒளிஞ்சுகிட்டு” என்று கூறினார்.

சில நொடிகளுக்கு பின்பே அவர் சொன்னது விளங்க மாலினியும் அவரோடு சேர்ந்து சிரித்தார்.

“குடும்பத்துக்கே என்னை பார்த்தா சிரிப்பா இருக்கு இல்ல..” என்று காபி தட்டை மேசையில் நங்கென்று வைத்து விட்டு கணவரை முறைத்தார் கல்யாணி.

“ அய்யோ கல்யாணி, நாங்க உன்னை பார்த்து சிரிக்கலை.. அது என்னன்னா??” என்று அவர் பேச தொடங்க அவரை அடக்கிய மாலினி,

“ அப்பா, நீங்க சும்மா இருங்க… அம்மா இப்போ உன் பிரச்சினை என்ன? நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லைனு சொல்லிட்டேன்ல… திருப்பி திருப்பி அதை பேசுறத விட்டு அவனோட வாழ்க்கையை பத்தி மட்டும் யோசி… அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தான். அவளோட வீட்ல கூட ஒத்துக்குவாங்க… நீயும் அப்பாவும் போய் முறையா பேசிட்டு வாங்க” என்று கூறினாள்.

“ அது சரி, எல்லா முடிவும் மஹாராணியே எடுத்தா… பெத்தவங்க நாங்க கைய கட்டி வாய பொத்தி சரினு தலையாட்டனுமா?” கல்யாணி ஏகத்தில் குதிக்க

“ ம்மா, உன் முகத்துக்கு வில்லி இமேஜ் செட் ஆகலை… நீ காதலுக்கு எதிர்ப்பு சொல்றவ கிடையாது… இப்போ உன்னோட பிரச்சனை வேற… அது மட்டும் எப்போமே நடக்காது” என்று இவளும் ஏக ஸ்தாதியில் கத்தினாள்.

“ எனக்கு அதுலாம் தெரியாது… இப்போ நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா நான் அவனோட கல்யாணத்துக்கு சம்மதிக்குறேன்” என்று அவர் வீம்பிட

“ சோ சேட்… நீ சம்மதிக்கவே வேணாம்… என்ன என்னோட சேர்த்து உன் பையனும் இப்டியே காலம் பூரா இருந்துட்டு போகட்டும்” என்று தோளை குலுக்கினாள்.

முசமுசுவென மூண்ட கோபத்தில் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

‘ ஒரு தாயாய் தான் என்ன கேட்டோம்? தன் மகள் திருமணம் செய்து சிறக்க வாழ வேண்டி தானே’ அதற்கும் வழி கொடுக்காமல் வீண் வாதம் செய்பவள் மேல் அத்தனை கோபம் வந்தது.

இருவருக்குள்ளும் எப்போதும் நடக்கும் விவாதம் என்பதால் மற்றவர்கள் இதில் வெறும் பார்வையாளர்களாக மாறி வேடிக்கை பார்த்தனர்.

வழக்கம் போலவே வாத வெற்றி மாலினியின் கைக்கு செல்ல கல்யாணி ஏதும் செய்ய முடியாதவராய் அடங்கி போனார்.
***

மதுவின் வீடு:

தன் விருப்பத்தை பெற்றோர்களிடம் கூறி இருந்தாள் மது.

அவர்கள் பெரிதாக எதிர்க்கவில்லை என்றாலும் கதிரின் விபரம் கேட்டு அறிந்து கொண்டனர்.

அவர்களிடம் மாலினி வசந்த் பற்றிய தகவல்களை மது கூற இருவரும் அதிர்ந்தனர்.

“ என்னமா சொல்ற? நீ சொல்றது நிஜமா?” என கணேஷ் கேட்க

நம்ப முடியாமல் பார்த்த தாயையும் தந்தையும் பேசி நம்ப வைத்து இருந்தாள்.

“ இப்போ என்னமா பண்ண போற?” கணேஷ் கேட்க

“ உங்களுக்கு எங்க கல்யாணத்துல…” என்று மது இழுக்க

“ ரெண்டு பேருக்கும் முழு சம்மதம்” என்று கூறினர்.

“ அப்போ அந்த வீட்டு மருமகளா மாலினியை மீட்ட வேண்டியது என் பொறுப்பு அப்பா” என்று கூறும் இளைய மகளை வாஞ்சையுடன் தலை வருடினார் லட்சுமி.

எப்போதும் தோணும் எண்ணம் அப்போதும் தோன்றியது.

‘உன்னை மாறி அவளும் மத்தவங்களோட உணர்வை புரிஞ்சி நடக்குறவளா பிறந்து இருக்க கூடாதா?’ என்று .

    இரு வீட்டு பெரியவர்களும் ஒருமுறை கலந்து பேசி சிறியவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அடுத்து வந்த ஓர் நல்ல முகூர்த்தத்தில் கதிர் மதுவின் திருமணத்தை நடத்தினர். 

‘மதுவின் திருமணம் என்றால்??? அவளின் கூட பிறந்த அக்கா ராகவியும் வசந்த்தும் வர கூடுமே’ என்று பயந்த நளினிக்கு நிம்மதி கிடைத்திருக்கும்.

கல்யாண வீட்டில் பெண் வீட்டாருள் பேசப்பட்ட பேச்சு
“ ராகவி அமெரிக்கால செட்டில் ஆகிட்டாளாம்.. இப்போ வேலை லீவு கிடைக்கல அதனால கல்யாணத்துல கலந்துக்க முடியாதுன்னும் கூட பொறந்த தங்கைக்கே என்னமோ பூ கொடுத்துவிட்டு வாழ்த்து சொன்னதாவும்…” என்று அவர்கள் பேசி கொண்டே போக

அவளுக்கு அதிலெல்லாம் கவலையே இல்லை.

ஏன்? மதுவின் பெற்றோர்களே அதில் கவலை கொண்டதாய் தெரியவில்லை… பாவம் சொந்தங்கள் தான் அவளை பிரிந்து கவலையாகி போனர்.

ஆனால் அப்படி கவலை கொண்டவர்கள், விஷேசத்தில் கலந்து கொண்ட மற்றொருவரின் குடும்ப கதையை கிளறி அதில் அதீத கவலை கொண்டவராய் தடம் மாறி செல்லவும் தான் செய்தனர்.

அது அவர்களின் போக்கு என்பதால் எப்போதும் போலவே நாம் அதை பெரிது படுத்தாமல் நம் வேலையை பார்க்க செல்வோம்.

திருமண சடங்குகள் என நாட்கள் இறக்கை கட்டி மாதம் ஒன்றை தொட
கதிரின் வீட்டில் நன்கு ஒட்டி கொண்டாள் மது.

அன்று:

சமையல் அறையில் இருந்த மதுவின் செல் அழைக்கவே எடுத்து பார்த்தவள் கல்யாணியிடம்,

“ அத்தை, என் பிரண்ட் தான்” என்க

“ சரிமா, நீ போய் பேசிட்டு வா… நான் மிச்சத்தை முடிக்கிறேன்” என்று அவர் கூறவும் தன் அறைக்கு வந்தாள்.

“ சொல்லுடா?”

“ ஏன் அட்டென்ட் பண்ணா எப்டி இருக்கனு கேட்குற பழக்கம் இல்லையா உனக்கு?” என்றது மறுமுனை.

“ டேய், கடுப்பேத்தமா நா கேட்ட விஷயம் என்ன ஆச்சு? சரியா பண்ணியா இல்ல இதையும் வழக்கம் போல சொதப்பிட்டியா? அதை சொல்லு..” என்று காட்டமாக கேட்டாள்.

“ இந்த மன்மதன் நினைச்சா எந்த காரியமும் சொதப்பாது. அதுவும் நீ என்னோட பெஸ்டி… நீ கேட்டு செய்யாம இருப்பேனா? கால் கட் பண்ண அடுத்த நிமிஷம் நீ கேட்ட ஃபுல் டீடைல் உன் வாட்ஸப்ல இருக்கும்”

“ டேய், நிஜமாவா? கிடைச்சுட்டா? என்னால நம்பவே முடியலடா!!! அய்யோ சத்தியமா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று ஆனந்த கூச்சலுடன் அது தந்த சந்தோஷத்துடன் அவனிடம் மேலும் சில நேரம் பேசி விட்டு வைத்தாள்.

ஏதோ ஒரு உணர்வு தோன்ற திரும்பியவள் அறையின் வாசலில் கைகளை குறுக்கே கட்டி கொண்டு இவளையே பார்த்த வண்ணம் கதிர்.

“வா கதிர், எப்போ வந்த?” என்று அவனிடமும் அதே குதூகலத்தில் கேட்டாள்.

“ அப்போவே வந்துட்டேன்.. நீ போன்ல ரொம்ப சந்தோஷமா பேசிட்டு இருக்கியே டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு அமைதியா இருந்தேன். என்ன கேட்டது கிடைச்சுட்டு போல?” என்று அவளிடம் புருவம் உயர்த்தி கேட்டான்.

“ ஆமா கதிர், அதான் ரொம்ப ஹேப்பி….” என்று அவள் கூறி கொண்டிருக்கும் போதே அவளின் செல்லில் குறுஞ்செய்தி வர அதை அவனிடமே காட்டினாள்.

“ இதோ…” என்று.

“ சந்தோஷம் மது… ஆனா இது நடக்கும்னு நீ நம்புறியா?” என்று அவன் கேட்கவும் ஒரு கணம் முகம் சுணங்க

“ஏன் கதிர், இதுல உனக்கு விருப்பம் இல்லையா?” என்றாள் தொங்கிய முகத்துடன்.

அவளின் முகத்தை நிமிர்த்தியவன்,
“இது மட்டும் நடந்தா இந்த உலகத்துல நான் தான் அதிகமா சந்தோஷப்படுவேன்.. தவிர நாம கல்யாணம் ஆகியும் தனித்தனியா வாழ்ந்துட்டு வரோம்னு நமக்கு மட்டும் தான் தெரியும். இது நடக்குறதால நம்மளோட குற்ற உணர்ச்சி கூட குறையலாம்” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்தபடி அவன் கூற

“ அப்புறம் என்ன? என் கிட்ட விடு நான் பாத்துக்கிறேன்” என்று காலரை தூக்கி விட்டு கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில்,

“ அய்யோ மாலினிக்கா வர டைம் ஆகிட்டு… நா அவங்களுக்கு ஸ்னாக்ஸ் ரெடி பண்ணனும்” என்று அடுக்களைக்குள் ஓடினாள்.

அது அந்த ஒரு மாதமாக அந்த வீட்டில் நடக்கும் வாடிக்கை.

ஏனோ? நளினியை ‘அண்ணி’ என்று அழைக்க பழகியவள் மாலினியை மட்டும் ‘அக்கா’ என்றே அழைத்து வந்தாள்.

முதலில் அவளை தவிர்க்க மாலினி முயற்சித்தாலும் மதுவின் சீக்கிரம் எல்லாரிடமும் ஒட்டும் அந்த குணம் அவளை தவிர்க்க வழியில்லாமல் செய்தது.

அவளின் அந்த அழைப்பு கூட அவளுக்கு பிடித்தமாகி போனது தான் விந்தை.

எப்போதும் போலவே மாலினி அருந்த காபியும் ஸ்னாக்ஸ் சகிதம் அவளின் அறைக்குள் சென்றாள் மது.

அப்போது தான் ரிஃப்ரஷ் ஆகி வந்த மாலினி அவளை கண்டு ஸ்நேகமாய் சிரித்தாள்.

“ என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷ அலை முகத்துல தாண்டவம் ஆடுது” என்று மாலினி கேட்க அமர்த்தலாய் ஒரு சிரிப்பை சிந்தி சிறிது நேரம் அவளோடு கழித்து விட்டு மாலினி தன் லேப்டாப்போடு அமரவே அவளுக்கு தனிமை கொடுத்து வெளி வந்தாள் மது.

அடுத்து வந்த நாட்களில் விரைவாக செயல்பட தொடங்கி இருந்தாள்.

அதன்படி அவர்களின் தேன்நிலவிற்கு ஏற்காடு செல்ல திட்டமிட்டு இருப்பதாய் இருவரும் கூறவே அனைவரும் சந்தோஷத்தோடு அனுப்பி வைத்தனர்.

வசந்தின் பூர்விக இருப்பிடமான ஏற்காடு அவர்களை அழகாய் வரவேற்றது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here