12. கிணற்று தவளை

0
147

தசரதன் தனக்குள் பேசிக் கொண்டிருந்தார்.. அது அவளிடம் கவனித்து பேச வேண்டும் என்று.

நிர்பயா, “சொல்லுங்க மிஸ்டர்.தசரதன் நீங்க ஏன் தமிழிலையும் ஏன் ஒரு பத்திரம் தயார் பண்ணல? அதுவும் இல்லாம பணம் கொடுத்து உங்களுக்கு சாதகமாக பேசி சொல்லி இருக்கீங்க.. அது ஏன்? உங்க கிட்ட உண்மை இருந்தா ஏன் இந்த வேலை? நியாயமா போராடி இருக்கலாமே?

தசரதன்,” பொய், பொய் நான் யாருக்கும் பணம் குடுக்கல. நான் நியாயமா எல்லாத்தையும் செய்யும் போது நான் எதுக்கு இப்பிடி செய்யனும்? அதுவும் இல்லாம நான் முறையா கோர்ட் மூலமா இந்த கம்பெனிக்கு ஆப்ரூவல் வாங்கி இருக்கேன். ஏரியிலிருந்து நீர் எடுக்க கூட கையெழுத்து வாங்கி இருக்கேன். அவங்க எல்லாரும் மனப்பூர்வமாக தான் கையெழுத்து போட்டு கொடுத்தாங்க.

நிர்பயா, ” கையெழுத்தா? அது அந்த கையெழுத்தே பொய் தானே? நீங்க சொல்ற ஆளுங்க கையெழுத்து அது இல்லையே? இதுல பாதி பேர் கைரேகை ஒத்து போகவே இல்லையே? அப்ப நீங்களே ஆட்களை தயார்படுத்தி கையெழுத்து போட வச்சிங்க அப்படி தானே?

தசரதன்,” நோ, இது முற்றிலும் பொய். அவர்கள் கையெழுத்து இடும் போது நான் வீடியோ கால் மூலமாக பார்த்து கொண்டு தானே இருந்தேன்.

நிர்பயா,” அது அவர்கள் கையெழுத்து தான் என்பதற்கு என்ன சாட்சி?

தசரதன், “அது அது வந்து.. நான்

நிர்பயா,” சொல்லுங்க மிஸ்டர் தசரதன் ஏன் தயங்கிறீங்க? இங்க பாருங்க நீங்க தயார் செய்த பத்திரத்தில் இருக்கும் கையெழுத்து ஒன்று கூட அவர்கள் உண்மையான கையெழுத்தோடு ஒத்து போகவில்லை.

நித்யன் , “இல்லை இது முற்றிலும் பொய். இவர் பொய்யான ஆதாரங்கள் மூலமாக வழக்கை திசை திருப்ப பார்க்கிறார் மை லார்ட்.

நிர்பயா,” நோ மை லார்ட், இதற்கான தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதோ அதற்கான ஆதாரங்கள் உங்கள் முன்னிலையில் என்று அவர்கள் கையெழுத்து இட்ட பத்திரம் மற்றும் கையெழுத்திட்டவர்களின் அரசு சம்மந்தமான ஆதாரங்கள் என அனைத்தையும் சமர்ப்பித்தாள்.

அனைத்தையும் ஆராய்ந்த நீதிபதி இதில் இருக்கும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவில்லை.

நிர்பயா, ” மை லார்ட் இதோ இவர் பணம் கொடுத்து தனக்கு சாதகமாக பேச வைத்தவர்களின் வாக்குமூலம் என்று ஒரு சிடியை சமர்ப்பித்தாள்.

அதையும் ஆராய்ந்து பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார் ஏனெனில் தசரதன் மற்றும் நித்யன் காண்பித்த வீடியோவில் இவர்கள் அனைவரும் தசரதனுக்கு ஆதரவாக பேசி இருந்தனர். இன்று மாற்றி பேசி இருக்கின்றனர். வீடியோ முடிந்ததும் நீதிபதி நித்யனை பார்த்தார்.”நீங்கள் குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறீர்களா?

நித்யன்,” எஸ் யூவர் ஆனர், இதில் பேசி இருக்கும் அனைவரையும் விசாரிக்க விரும்புகிறேன்.

நீதிபதி, “பர்மிஷன் கிராண்ட்டு.

அனைவரும் கூண்டில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர்.

நித்யன்,” இதோ நிற்கிறாரே இவரை உங்களுக்கு தெரியுமா?

அனைவரும் ஒருசேர தெரியும் என்றனர்.

நித்யன், “எப்படி தெரியும்?

ஊர் மக்கள்,” இவர் எங்களுக்கு காசு கொடுத்து எங்க ஊர்ல கம்பெனி வரர்த்துக்கு சம்மதம்னும் அப்பறம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்க சம்மதம்னும் சொல்ல சொன்னாரு. அது மட்டும் இல்ல இதோ நிக்குதே இந்த நிர்பயா மனசு சரியில்லாமல் இதெல்லாம் பண்றா, ஊருக்கு நல்லது நடக்கறது பிடிக்கல அதுவும் இல்லாம இவர் மேல சொந்த பகை இருக்கறதாகவும் சொல்ல சொன்னார். நாங்க ஏன்னு கேட்டதுக்கு, அந்த பொண்ணுக்கு நீங்களாம் எப்பவும் கஷ்டப்பட்டுட்டு இருக்கனும் என்ற எண்ணம். அவளுக்கு என்ன எங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டா இந்த ஊர் பக்கம் வருவாளா? அதுவும் இல்லாம அவங்க அப்பா என்ன உங்கள மாதிரி மாச சம்பளத்துக்கா நிக்க போறாரு? இப்படி என்ன என்னவோ பேசி எங்கள சம்மதிக்க வச்சாரு.

நித்யன், “சரி அப்ப பணம் வாங்கிட்டு பொய் சொன்னீங்கனு சொல்றீங்க.. இல்லையா? சரி உங்க வழிக்கே வரேன். இப்ப நீங்க சொல்றது எப்படி உண்மைன்னு நான் நம்பறது? இதோ இவங்க பணம் கொடுத்து இந்த மாதிரி சொல்ல சொல்லன்றதுக்கு என்ன ஆதாரம்? நீங்க ஏன் அப்போ கையெழுத்த மாத்தி போட்டிங்க? அப்ப நீங்க போர்ஜெர்ரி பண்ணி இருக்கீங்க அப்படி தானே? இதுக்க என்ன தண்டனை தெரியுமா?

அவர்களோ சர் யார பாத்து தப்பு பண்ணோம்னு சொல்றீங்க? கையெழுத்து போட்டது நாங்க இல்ல.. எங்களுக்கு எங்க பேர இங்கிலிஷ்ல எழுத தெரியாது.. நீங்களே நல்லா அவர் சொன்ன வீடியோவ பாருங்க எங்க கைய புடிச்சி அவங்க ஆளுங்க தான் கையெழுத்து போட வச்சி இருப்பாங்க.. நாங்க கேட்டதுக்கு இதுல தமிழ்ல கையெழுத்து போட கூடாதுனு சொல்லி தான் அப்படி பண்ணாங்க. நாங்க படிக்காதவங்க தான் அதுக்காக ஒண்ணும் தெரியாதவங்க இல்ல.

அப்பறம் என்ன கேட்டீங்க இந்த பொண்ணு காசு கொடுத்து எங்கள பேச சொன்னாங்களானு கேட்டீங்க இல்லையா? சர் யாராவது சொந்த மண்ணுக்கு துரோகம் நினைப்பாங்களா? நாங்க விவரம் தெரியாம புத்தி கெட்டுப் போய் அந்த மாதிரி பண்ணிட்டோம் அதுக்காக எப்பவும் அப்படியே இருக்கனுமா என்ன? நீதிபதியை பார்த்து ஊர் மக்கள், ஐயா நாங்க பண்ண தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நாங்க ஏத்துக்கிறோம். தயவு செய்து எங்க ஊருக்கு இந்த பேக்டரியை வர விடாதீங்க.

நீதிபதி, “நித்யன் இன்னும் ஏதாவது கேள்விகள் கேட்கனுமா?

நித்யன்,” நோ யூவர் ஆனர்.

அனைத்து தரப்பு விவாதங்களையும் ஆராய்ந்தவர் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்றார்.

அதன்பிறகு அடுத்த வழக்கு அதுவும் அந்த கம்பெனிக்கு எதிராக அதுவும் அரசு தரப்பில்..

தசரதன்,” என்ன கொடுமை இது, இந்த கம்பெனி ஆரம்பிச்ச நேரமே சரி இல்ல போல என்று தன்னையே நொந்து கொண்டார்.

இம்முறை அவர் விசாரணை கூண்டில் நிற்கப்படவில்லை, நித்யனுக்கும் இது அதிர்ச்சி தான், காரணம் இம்முறை நிரஞ்சனா தொல்லியல் துறை சார்ப்பாக வழக்கு தொடுத்திருந்தாள்.

நீதிபதி, “அரசு தரப்பு வக்கீல் உங்கள் வாதத்தை ஆரம்பிக்கலாம்.

வக்கீல்,” தொல்லியல் துறை மூலமாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதன்படி தசரதன் மற்றும் சக்கரவர்த்தி இருவருக்கும் சொந்தமான இடத்தில் பல நூறு வருடங்களுக்கு முன்பாக ஒரு கோவில் இருந்ததாகவும் காலப்போக்கில் அக்கோவிலின் சிலைகளும், அதில் இருந்த சில அற்பத படைப்புகளும் மண்ணோடு புதைந்திருப்பதாகவும் சான்றுகள் கூறுகின்றனர்.. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் அதில் இருந்த பஞ்சலோக சிலைகள் அவ்விடத்தின் ரகசிய வழியில் வைத்து பாதுக்காத்தாகவும் குறிப்புகள் இருக்கின்றன. அந்த ரகசிய வழி இவர்கள் தற்போது கூல்டிரிங்ஸ் கம்பெனி ஆரம்பிக்க போகும் அந்த இடத்தில் தான் ஆரம்பிக்கிறது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. ஆகவே யூவர் ஆனர் அங்கே வர போகும் குளிர்பான நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்து, பல அரிய பொக்கிஷங்களை கண்டெடுக்க தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

நீதிபதி, “தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் உள்ள அனைத்து சாட்சியங்களும் ஆங்கில ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இதில் அந்த கோவில் இருந்ததற்கான குறிப்புகளும் இருக்கின்றது.. மேலும் அந்த சமயம் தீவானாக இருந்த சக்கரபாணி என்பவர் சிலைகள் இருக்கும் வரைப்படத்தை வரைந்து வைத்துள்ளார். இதற்கு முன்னர் இருந்த வழக்கிலும் குளிர்பான நிறுவனத்தின் அனுமதி மறுக்கவே தொடரப்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் தசரதன் மற்றும் அவர் நிறுவனத்திற்கு தொடர்புள்ளது. இரண்டிற்குமான இறுதி தீர்ப்பு நாளை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும்.

தீர்ப்பு என்னவாகும்? தசரதன் என்ன செய்வார்? நிர்பயா வழக்கில் வெற்றி பெறுவாளா?

தொடரும்..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here