அவளின் சிற்றத்தை கண்டவன், என்ன திமிர் இவளுக்கு? எவ்வளவு நேரம் ஒர் ஆண் கெஞ்சுவான்? நான் உண்மையை மறைத்தற்கான காரணத்தை சொல்லிய பிறகும் இவள் தன்னை நம்பாமல் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? உண்மையாக காதலிப்பது ஒரு தப்பா? பொய் சொல்வது தப்புதான் அதற்காக இப்படியா? என் தந்தை சில விஷயங்களில் நியாய தர்மம் பார்க்க மாட்டார் தான், ஆனால் முழுவதும் கெட்டவர் இல்லையே!! ஆரம்பத்திலிருந்தே ஏனோ இந்த கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி நடத்துவதில் அவ்வளவு ஆர்வம் ஏனெனில் வருடம் முழுவதும் அதிக லாபம் இருக்கும். பணம் ஒன்றே குறியாக இருக்கும் என் தந்தையைப் போன்ற சிலருக்கு இது தான் பிரதானம். இதற்கு எவ்விதத்தில் நான் காரணமாவேன்.? இன்னும் ஒரு தடவை பேசிப் பார்க்கிறேன் என்று அவரிடம் பேச முயன்றான்.
நித்யன்,” நிர்பயா என்னை நம்பு கண்டிப்பா உங்களுக்கு அந்த கம்பெனியே வர விடமாட்டேன். நான் இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்தாதே. நீன்னா எனக்கு அவ்வளவு இஷ்டம்.
நிர்பயா,” எப்படி? கல்யாணமான பிறகு என்ன செய்ய முடியும் அப்படின்னு ஒரு எண்ணமா? இவ்வளவு நாளும் என்னை ஏமாற்றியது பத்தாதா? மறுபடியும் பேசிப்பேசி ஏமாத்த நினைச்சா அது முடியாது. உங்களால முடிஞ்சா இந்த கேஸ என்கிட்ட மோதி ஜெயித்துக் காட்டுங்க. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமானு நான் முடிவு பண்ணிக்கிறேன்.
அதில் கோபமடைந்தவன் அவளிடம் இங்க பாரு நிர்பயா என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற. இது உனக்கு நல்லதல்ல. அப்புறம் என்ன சொன்ன? இந்த கேஸ்ல ஜெயிச்சு அதுக்கப்புறம் இந்த கல்யாணத்தை பற்றி முடிவு பண்ணுவியா? முடிஞ்சா என்ன ஜெயிச்சு பாரு!! இப்ப சொல்றேன் இந்த ஊருக்கு உன்னால ஒரு நல்லது நடக்க விடமாட்டேன் என்று கர்ஜித்து விட்டு அங்கிருந்த சேரின் மேல் அவன் கோபத்தை காட்டி விட்டுச் சென்றான்.
அவன் கோபமாய் செல்வதை பார்த்ததும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பேச்சற்று நின்றனர் நிரஞ்சனா உட்பட. பெரியவர்களின் வற்புறுத்தலால் நிரஞ்சனா, நிர்பயாவிடம் பேச சென்றாள்.
நிரஞ்சனா, ” நிர்பயா என்ன பிரச்சினை உங்க இரண்டு பேருக்கும்? எதுக்காக வந்ததலிருந்து இப்படி எல்லார் மேலையும் உன்னோட கோபத்தை காட்டுற? இப்ப நீ சொல்ல போறீயா இல்லையா?
நிர்பயா,” இதுக்கு மேல் மறைத்து பிரயோஜனம் இல்லை என்று நினைத்து காலையில் நடந்தது முதல் தற்போது நடந்தது வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
நீ சொல்லு நான் சொன்னது, பேசினது ஏதாவது தப்பா?
நிரஞ்சனா,” இங்க பாரு நிர்பயா ஊர் உலகத்தை பொறுத்த வரை நீ பேசினது தப்பு தான். ஆனா நான் என்ன பொறுத்த வரை சரி தான். அவர் பண்ணது உண்மையா? பொய்யானு எனக்கு தெரியாது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆன பிறகு இந்த கம்பெனி இங்க வராதுன்னு என்ன நிச்சயம்? ஜட்ஜ் கிட்ட பேச போன போது அவருக்கே தெரியாம வீடியோ ஆதாரத்தை சேர்த்து வச்சிட்டாருனு நித்யன் சொன்னது எந்த அளவுக்கு உண்மைனு நமக்கு தெரியாதே. லீடிங் லாயர், பிசினஸ் மேன் இந்த சின்ன விசியத்துல ஏமாந்தாருனு சொன்னா நம்பறா மாதிரியா இருக்கு?
நிர்பயா, “கரெக்ட் அக்கா நானும் இதையே தான் யோசிச்சேன். எனக்கே தெரியாம வீட்டுக்கு வந்து, அவர பத்தின அடையாளத்தை என்கிட்ட மறைச்சி என்ன நிச்சயம் பண்ண என்ன அவசியம் இருக்கு? ஒரு வேல இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் என்னையும் நம்ம குடும்பத்தையும் நிறுத்தினா, நான் மேற்கொண்டு வேற முயற்சி செய்ய மாட்டேன்னு நினைச்சி இருப்பாங்களா? எது எப்படியோ எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகனும். இந்த விசயத்த கடைசி ஆயுதமா பயன்படுத்த நினைச்சேன். ஆனா இது தான் என் பிரம்மாஸ்திரம். நாளைக்கு நம்ம ஊர் பழைய லைப்ரரிக்கு போகனும் ரெடியா இரு என்று விசம புன்னகையை சிந்தினாள்.
மறுநாள் லைப்ரரி நோக்கி சென்றவர்களுக்கு அவர்கள் தேடி வந்த பொக்கிஷம் கிடைத்தது. போராடி பார்ப்போம் இல்லையெனில் அவன் வழியே என் வழி என்று சூளுரைத்து கொண்டாள்.
மறுநாள் முதல் வேலையாக அப்பீலுக்கு தாக்கல் செய்தாள். முதலில் ஏற்க மறுத்த நீதிபதி பின்னர் இந்த முறை எந்த தவறும் நடக்காது என்று வாக்குறுதி அளித்த பின்னரே ஏற்றுக்கொண்டார்.
இரண்டு நாட்கள் கழித்து இந்த கேஸ் மறுபடியும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இரண்டு நாட்களாக ஊர் மக்களிடம் முடிந்த வரை பேசி பேசி அதில் இருக்கும் ஆபத்துக்களை சொல்லி புரிய வைத்தார்கள் நிர்பயாவும் நிரஞ்சனாவும். கோர்ட்டுக்கு வந்து தனக்கு சாதகமாக பதில் சொல்லு மாறும் கேட்டுக்கொண்டாள். ஆனால் அவர்களோ இந்த கம்பெனி இங்க வருவதனால் பெரும் நன்மை இருக்கு. உனக்கு என்ன நீ பாட்டுக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடுவ நாங்க வேலைவெட்டிக்கு ஊருக்கு வர சுத்திக்கிட்டு இருக்கனுமா? ஏதோ நம்ம ஊரிலேயே இருந்தா வசதியாயிருக்கும்னு தான் தசரதன் ஐயா காசு கொடுத்து இதை சொல்ல சொன்னபோது நாங்க செஞ்சோம். மத்தபடி உன் மேல எந்த கோபமும் எங்களுக்கு இல்லை. ஆனால் நீ சொல்ற மாதிரி உனக்கு சாதகமா பேசணும் அப்படின்னா நீயும் அவங்கள மாதிரி ஏதாவது கொஞ்சம் கொடுத்தா நல்லா இருக்கும் என்று அசடு வழிந்தார் ஊரு பெரியவர்களில் ஒருவர்.
நிர்பயா,” நீங்க கேட்கிற மாதிரி நான் கொடுக்கிறேன் ஆனால் அங்க வந்து மாற்றி பேச மாட்டிங்ன்னு என்ன நிச்சயம்?
அவர்களோ அப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்ன இருந்தாலும் நீ எந்த ஊர் பொண்ணு.
நிர்பயா,” அப்படின்னா நாளைக்கு காலையில 10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்துடுங்க.
அனைத்தையும் பேசி முடித்த பின்னர் நிரஞ்சனா விடும் என்ன அக்கா ஓகேவா என்றாள்.
நிரஞ்சனா,” எல்லாம் ஓகே தான்.
காலை 10 மணி நீதிபதி அவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க எதிரெதிர் துருவமாக நித்யனும் நிர்பயாவும். கடந்த வாரம் காதல் பறவைகளாய் பறந்தவர்களா இவர்கள்? என்று யோசிக்கத் தூண்டும் அளவிற்கு முறைத்துக் கொண்டு நின்றார்கள் இருவரும்.
நித்யன்,” யுவர் ஆனர் இதோ இருக்கும் என் கட்சிக்காரர் ஆகிய தசரதன் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அவர் மேல் இருக்கும் முன் பகையின் காரணமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு உடன் இங்கே வந்து நிற்கிறார் நமது எதிர்த்தரப்பு வக்கீல்.
நிர்பயா,” அவனைப் பார்த்து ஒரு கேலி புன்னகை உதித்தவள், கனம் கோர்ட்டார் அவர்களே!! இதோ இங்கு குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் தசரதனை விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.
நீதிபதி,” பர்மிஷன் கிரண்டட்.
நிர்பயா,” இந்த கூல்ட்ரிங்ஸ் கம்பெனி அங்கே நிறுவ முறையாக அனுமதி பெற்று இருக்கிறீர்களா?
தசரதன்,” இது என்ன முட்டாள் தனமான கேள்வி அனுமதி பெறாமலா நான் அங்க வந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தேன். இதற்கு உங்கள் ஊர் ஆட்களே சாட்சி.
நிர்பயா,” கேட்ட கேள்விக்கு பதில் ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்கவும்.
தசரதன்,” நான் முறையாக அனுமதி பெற்று தான் இந்த கம்பெனியை தொடங்க முற்பட்டேன். அது சில காரணங்களுக்காக கிடப்பில் இருக்கிறது.
நித்யன்,” யுவர் ஆனர் இதோ கம்பெனி நிறுவுவதற்காக அனுமதி அளித்த சான்றிதழ் உங்கள் பார்வைக்கு.
அதை ஆராய்ந்து பார்த்த நீதிபதி எல்லாம் சரியாக இருப்பதாக கூறினார். அதைப்பார்த்து தசரதனும் நித்யனும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
நிர்பயா,” கம்பெனி ஆரம்பிக்க மட்டுமே உங்களுக்கு அந்த சான்றிதழில் அனுமதி வழங்கப்பட்டது ஊர் ஏரிக்கு அல்ல.சரியா?
தசரதன்,” அதற்கு தான் உங்கள் ஊர் மக்களிடம் முறையாக அனுமதி பெற்று இருக்கிறேனே. அவர்கள் சம்மதித்து தானே கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்.
நிர்பயா, “பொய், முற்றிலும் பொய். அவர்களுக்கு முறையாக எதுவும் சொல்லாமல் ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறீர்கள். அது மட்டும் இல்லாமல் கையெழுத்து இட்ட பத்திரத்தின் ஒரு பிரதி அவர்களுக்கு வழங்கபடவே இல்லை. அது ஏன்?
தசரதன்,” அது அது வந்து.. அவர்கள் தான் சொன்னார்கள் எங்களுக்கு இது தேவையில்லை உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது எடுத்து செல்லுங்கள் என்று.
அதை கேட்டு பலமாக சிரித்தாள் நிர்பயா.
நிர்பயா,” அவர்கள் வேண்டாமென சொன்னால் நீங்கள் எடுத்து வந்து விடுவீர்கள் அப்படி தானே? சரி அப்படி என்றால் நீங்கள் ஒரு பிசினஸ் டீல் செய்து கொள்ள ஒப்பந்தம் செய்திருப்பதாக வைத்து கொள்ளுங்கள். அவர் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் வேறு. அப்படி இருக்க அதில் இரு தரப்பினரும் கையெழுத்து இட வேண்டும் இல்லையா? அப்படி கையெழுத்து போட்ட பத்திரத்தை உங்களுடன் பிசினஸ் செய்யப்போகும் அவர், தானே வைத்து கொள்வதாக சொன்னால் நீங்கள் சரி என்று விட்டு வருவீர்களா? இல்லை வாங்கி கொண்டு வருவீர்களா? சரி பரவாயில்லை எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று அவரிடமே குடுத்து விட்டு வந்து விடுவீர்களா?
தசரதன், “அது எப்படி கொடுத்துவிட்டு வருவேன். நம்பிக்கை வேற பிஸ்னஸ் வேற. பிற்காலத்தில் அவரால் எனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அந்தப் பாத்திரத்தை வைத்து என்னால் பிரச்சினையை தீர்க்க இயலும். இரு தரப்பினரும் கையெழுத்திட்டால் அவரவர் பத்திரம் அவர்களிடமே இருப்பது உத்தமம்.
நிர்பயா,” அப்ப நீங்க கையெழுத்து வாங்கின உங்க கூல் ட்ரிங்ஸ் கம்பெனி சம்மந்தமான பத்திரத்தை நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்.? உங்கள் வாதப்படி அவரவர் பத்திரம் அவர்களிடமே இருப்பது தானே சரி? நீங்கள் அவர்களை ஏமாற்றும் நோக்கோடு பத்திரத்தை ஒப்படைக்காமல் நீங்களே வைத்திருக்கிறீர்கள். அந்த ஊரில் உள்ள தலைவர்களில் அநேகம் பேர் தமிழைத் தவிர வேறு மொழி அறியாதவர் அப்படி இருக்க உங்கள் பத்திரத்தில் தமிழே இல்லையே? ஏன்?
நித்யன்,” அப்ஜக்ஷன் யுவர் ஆனர். இவர் வழக்குக்கு தேவையில்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நீதிபதி,” அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு.
நீதிபதி அவனின் ஆட்சேபனையை நிராகரித்ததும் அவனைக் கண்டு ஏளனமாய் சிரித்துவிட்டு மறுபடியும் தசரதன் பக்கம் திரும்பினாள்.
இம்முறை தசரதன் தனக்குள் பேசிக் கொண்டனர் என்னவாக இருந்தாலும் இவளிடம் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளக் கூடாது என்று. பாவம் அவர் அறியவில்லை, அவரின் எண்ணம் ஈடேறாது என்று.
தொடரும்..
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…